Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்:ஆறு பேர் படுகொலை?

Featured Replies

இந்தியா, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அனைத்துல ஊடகமான பி.பி.சி மற்றும் இந்திய பத்திரிகையான ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் தமிழ்செய்தியில் எதிர்பாருங்கள்.........

http://www.tamilseythi.com/world/Delhi-air...2008-12-04.html

இது வெறும் வதந்தி.

Delhi airport normal despite shooting report

5 Dec 2008, 0236 hrs IST, AGENCIES

NEW DELHI: Operations appeared normal at New Delhi's international airport early on Friday, a witness at the scene said, despite an earlier report of a shootout there.

The news channels reported that two sharp sounds had sparked a security scare at the airport. But nothing was found after police swept through the terminal, and normal operations had resumed.

Police spokesman Rajan Bhagat says only that: "It was not a terrorist incident. No one was killed." He says the situation is still being investigated.

Airports in India went on high alert Thursday following fresh warnings of attacks as officials said India suspects two senior leaders of a banned Pakistani militant group orchestrated last week's deadly siege in Mumbai.

The BBC website, quoting airport officials, had earlier reported that Indian security forces had shot up to six gunmen there.

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு பீதி

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2008, 9:16

டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குவாலிஸ் காரில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டதாக பயணிகள் கூறியதால் பெரும் பீதி ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டனர்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 1.10 மணியளவில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய பயணிகள், விமான நிலையத்திற்குள் ஒரு குவாலிஸ் கார் வந்தது. அதில் இருந்த நபர்கள், காரிலிருந்தபடியே சரமாரியாக துப்பாக்கியால் சுட்டபடி சென்றனர் என்று கூறினர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டு விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வருகிற அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.

இந்த சம்பவம் குறித்து டெல்லி விமான நிலைய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை டிஐஜியான உதயன் பானர்ஜி கூறுகையில், சில பயணிகளிடமிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக எங்களுக்குப் போன் வந்தது. இது துப்பாக்கிச் சூடுதான் என்பதற்கான ஆதாரம் இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. தோட்டாக்கள் எதையும் கைப்பற்றவில்லை.

அந்த சத்தத்திற்குப் பின்னர் மத்திய தொழிலகப் படையினர், டெல்லி போலீஸார் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

தற்போது நிலைமை இயல்பாகியுள்ளது. விமானப் போக்குவரத்தில் பாதிப்பில்லை. பயணிகள் நடமாட்டமும் வழக்கம் போல உள்ளது என்றார்.

டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் கூறுகையில், நான்கு அல்லது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதில் யாரும் காயமடையவில்லை.

உண்மையிலேயே இப்படி நடந்ததா அல்லது பயணிகள் பீதியில் கூறினார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

நேற்றுதான், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை விமானத்தைக் கொண்டு தாக்கி அழித்தது போல இந்தியாவிலும் செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக விமானப்படைத் தலைமைத் தளபதி கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து டெல்லி, சென்னை, பெங்களூர் விமான நிலையங்களில் மிக பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thatstamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.