Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாதை தெரியாத பயணங்கள்!

Featured Replies

(பிரித்தானியாவில் அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். - நன்றி: புதினம் 17.01.2009)

"என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி.

"ஆள் "றெயினா"லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்...." என்று முந்திக்கொண்டு கூறினான் குமார்.

சந்திரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க முற்பட்டவனாய் புன்னகைக்க முயன்றான். அவனால் முடியவில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. புகையிரத நிலையத்தில் இருந்து சந்திரனை குமார்தான் அழைத்து வந்திருந்தான். சந்திரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடியிருப்புகளை விலத்தி தனியே அமைக்கப்பட்ட அகதிகளுக்கான முகாம் ஒன்றில் வசிப்பவன். ஜேர்மனிக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி ஏறக்குறைய இரண்டு வருடங்களாவது இருக்கும். ஜேர்மன் மண்ணை மிதித்த முதல்நாள்....

சோதி வீட்டுத் தொலைபேசி நள்ளிரவில் அலறியடித்து நித்திரையைக் குழப்பியது.

"ஹலோ...."

தூக்கம் கெட்ட எரிச்சலுடன் அழைத்தான் சோதி.

"சோதி அண்ணையே கதைக்கிறியள்...." என்று கேட்டுவிட்டு ஒரு இளவயது ஆணின் குரல் மறுமுனையில் அழ ஆரம்பித்தது.

"ஹலோ.... ஆரது...." என்று மீண்டும் மீண்டும் கேட்க, சில... பல நிமிடங்கள் அழுகையிலே கழிய, சோதி பலதை எண்ணிப் பயப்பட ஆரம்பித்தான். ஊரிலுள்ள சகோதரிகள்.... உறவுகள்.... வயதான பெற்றோர்கள்.... எல்லோருமே அவன் மனக்கண்ணில் வலம்வரத் தொடங்கினார்கள். அவர்களில் எவருக்காவது ஏதாவது நிகழ்ந்துவிட்ட துயரச் செய்திதான் அழுகுரலுடன் வரப்போகிறதோ? பலவாறாகச் சிந்தனைகள் சுழன்றன. அழுகை ஓய்ந்தபாடில்லை. எரிச்சல் சினமாகச் சீற முற்பட்டது.

"ஹலோ... ஆர் கதைக்கிறது..." என்று சற்று அதட்டலாகவே கேட்டான்.

"சோதியண்ணை.... அது நான்...."

"நான் எண்டால்....?"

"நான் சந்திரன்..."

"சந்திரன்....? சந்திரன் எண்டால்....?"

"மெக்கானிக் மயில்வாகனத்தாற்றை மகன்...."

தாயகத்தில் சோதி வாழ்ந்த கிராமத்தின் பிரபலமான "கார் மெக்கானிக்"தான் மயில்வாகனம்.

"ஓ.... மயில்வாகனம் அண்ணையின்ரை மேன்.... ம்.... என்ன திடீரெண்டு.... எவ்வளவு காலம் ஜேர்மனிக்கு வந்து...."

"இண்டைக்குத்தான் அண்ணை வந்தனான்...." என்று மீண்டும் அழ ஆரம்பித்தான்.

"அழாதை.... அழாதை.... வந்ததுக்குச் சந்தோசப்படுறதை விட்டுப்போட்டு இப்ப என்னத்துக்கு அழுகிறாய்...?"

"இல்லையண்ணை.... எல்லாம் புதுசாய்க் கிடக்கு..... ஆக்களும் புதுசாய்க் கிடக்கு.... எனக்குப் பயமாய்க் கிடக்கண்ணை..."

"ஊரிலைதான் பயப்பிட வேணும்.... இஞ்சை வந்துபேந்தேன் பயப்பிடுறாய்...."

"உங்களுக்கென்ன.... உங்கை இருந்துகொண்டு சொல்லுவியள்.... என்ரை நிலமை எனக்குத்தானே தெரியும்...?"

அப்பாவியாக இருந்தான். மனதில் தோன்றியதை முன்பின் சிந்தியாமல் தெரிவிப்பவனாக இருந்தான்.

"ஓ.... ஓ.... நான் இந்த நாட்டுக்குப் புதிசாய் வராமை, இஞ்சை பிறந்தவன்தானே...?!" என்று ஏளனமாகக் கேட்டான் சோதி.

"இல்லையண்ணை.... எல்லாம் புதிசாய் இருக்கு.... கண்ணைக் கட்டி மரங்களில்லாத காட்டிலை விட்டமாதிரி இருக்கு.... நீங்கள் ஒருக்கா வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போங்கோவன்...." என்று தொலைபேசியில் கெஞ்சினான்.

"நீ ஆம்பிளைதானே.... ஏன் பயப்பிடுறாய்... நான் இப்ப வந்து உன்னைக் கூட்டியந்தாலும், திரும்பவும் உங்கைதான் கொண்டுவந்து விடவேணும்.... அதோடை ஐநூறு கிலோ மீற்றருக்குமேலை வரவேணும்.... அதுக்கும் பாக்க நீ உங்கை கொஞ்சநாளைக்கு இருந்தியெண்டால் வேறை ஒரு இடத்துக்கு மாத்தி விடுவினம்.... அதுக்குப் பிறகு வந்து சந்திக்க முடியுமெண்டால் வாறன்...."

"அதென்ன முடியுமெண்டால் வாறன்.... முடியாதெண்டு ஒண்டு இருக்கே.... ஏதோ சாக்குப்போக்குச் சொல்லுறியள்...."உரிமையோடு கேட்டான்.

சோதிக்குச் சிரிப்பாக இருந்தது. அதேநேரத்தில் அவனைப் பிடித்தும்போனது.

"சந்திரன்.... உனக்கு இப்ப இஞ்சத்தே நிலமையள்.... சிக்கல்கள்.... என்ரை கஸ்டங்கள்.... எதுவுமே புரியாது... அப்பு ராசா.... கொஞ்சநாள் பொறு.... எல்லாம் விளங்கும்..."

"வெளிநாடு என்றால் இப்படித்தான் இருக்கும்" என்று தங்களுக்குள்ளே முடிவாகிப்போன கற்பனைகளுடன் வருகிறவர்கள், அந்தக் கற்பனைக் கோடுகளை அழித்தொழிக்கும்மட்டும் எந்த யதார்த்த உண்மைகளும் அவர்களின் உணர்வுக்கு எட்டாதென்பதுதான் உண்மை. இதற்குச் சந்திரனும் விதிவிலக்கல்ல.

"அண்ணை.... என்னவோ உங்களை நம்பித்தான் இருக்கிறன்.... எனக்கு நீங்கள்தான் உதவி செய்யவேணும்..."

மீண்டும் கெஞ்சினான். ஜேர்மனியைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழனின் அரசியல் தஞ்சக் கோரிக்கையின் ஏற்பும், நிராகரிப்பும் எந்தவிதத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன- அவன் தொடர்ந்து வாழ்வதற்கான நகரமும் குடியிருப்பும் எந்தரீதியில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது புரியாத புதிராக, ஏதோ அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பாக நிகழ்வில் நிதர்சனத்தைப் பிரதிபலிக்கும் தோற்றத்தை ஏற்படுத்துகையில், சந்திரனின் கெஞ்சுதலுக்கு எப்படி உத்தரவாதம் கொடுப்பதென்று தடுமாறினான் சோதி.

நம்பிக்கைதானே வாழ்க்கை...?!

இன்று இருப்பது நாளை எங்கோ.... நாளை வருவது இன்று நினைத்துப் பாராதது என்றாகும்போது, போவதையும் வருவதையும் எதிர்நோக்கித் தடுமாறாமல் நிதானமாக இருப்பவன் வாழ்கிறான்- மற்றவன் வாழ்வதாக எண்ணி, தனக்குள் ஏற்படும் எண்ணங்களைக் கற்பனை கலந்த புளுகுகளாக வெளியே மற்றோர் முன்னிலையில் கக்கிக் கொட்டி தனக்குத்தானே பெருமைப்பட்டு ஏமாறுகிறான் அல்லது மற்றவனுக்கு "வாழ்வு இதுதான்" என்று சொல்லிப் பலரைப் பரிகசித்துத் தானே கேலிக்குள்ளாகும் காட்சிப் பொருளாகிறான்.

"இதோ பார் சந்திரன்.... பதட்டப்படாதை.... ஊரிலை உனக்கு என்ன பிரச்சினை.... ஏன் ஜேர்மனிக்கு வந்தனீ எண்டதை ஒழுங்காய்ச் சொல்லு.... நீ இப்ப சொல்லுறதுதான் ஓரளவுக்காலும் நீ இந்த நாட்டிலை தொடர்ந்து வாழுறதுக்கு உதவி செய்யும்...."

தெரிந்தவற்றைக் கூறினான்.

"அண்ணை.... என்னெண்டு சொல்லுறது.... இன்னும் ரண்டு மூண்டு நாளிலை விசாரிப்பினமாம்..."

"ம்.... ஜேர்மனிக்கு வரத் தெரிஞ்சளவுக்கு, என்னத்துக்கு வந்ததெண்டு தெரியேலை... ஊரிலை இருந்து வெளிக்கிடேக்கை கொஞ்சமாலும் தெரிஞ்சுகொண்டு வாறேல்லையே..... தெரியாமை வந்து சிக்கலிலை மாட்டுப்பட்டுப்போட்டு.... பேந்து அவன் பிடிச்சனுப்ப வெளிக்கிடேக்கை அழுது புரளுறதிலை ஒரு பிரயோசனமும் இல்லை..."

"அண்ணை.... அனுப்புவாங்களோ....?"ஏக்கத்துடன் கேட்டான்.

"நானும் உன்னைப்போலை அகதிதான் சந்திரன்... இப்பிடி நடக்கலாம் எண்டாப்போலை நடக்கும் எண்டு எப்பிடிச் சொல்லேலும்... நீ ஊரிலை ஆமி பொலிஸாலை ஏதாலும் பிரச்சினைப்பட்டனியே....?"

"நான் கொழும்பிலை நாலைஞ்சு தரம் உள்ளுக்கை இருந்தனான்.... அதுகளைச் சொல்லட்டே...."

"அதுகளைத்தான் சொல்லவேணும்.... உன்னாலை சிறிலங்காவிலை வாழமுடியாதபடி என்ன பிரச்சினை எண்டு சொல்லவேணும்.... ஆதாரத்தோடை சொல்லவேணும்...."

"சொல்லுறன்.... என்ரை அப்பா வாகனங்களுக்குக் கீழை படுத்து, கொழுப்பு உடுப்புகளோடை வாயைக் கட்டி வயித்தைக் கட்டிக் கட்டின வீட்டையும் வளவையும் விட்டுபோட்டு வன்னிக்குப் போனதைச் சொல்லுறன்... விசாரணை எண்டு அப்பாவை "வூட்ஸ்" காலாலை உதைஞ்சு, அவரைச் சுடுகாட்டுக்கு அனுப்பின அரக்கர்களைப்பற்றிச் சொல்லுறன்.... மழையுக்கையும் வெயிலுக்கையும் பஞ்சத்தோடையும் நோயோடையும் வாழுற என்ரை தங்கச்சியளைப்பற்றி சொல்லுறன்.... கொழும்புக்கு வந்த என்னை சந்தேகத்திலை விசாரிக்கிறம் எண்டு பிடிச்சுக்கொண்டுபோய், வெலிக்கடைக்குள்ளையும் நாலாம் மாடியிலையும் வைச்சு ஆளுக்காள் அடிச்சு மிதிச்சாங்களே.... அதையும் சொல்லுறன் அண்ணை.... சொன்னால் இஞ்சை இருக்க விடுவாங்களே...."

இப்போது சோதி அழுதுவிடுவான் போலிருந்தது.

"சொல்லு.... உப்பிடியே சொல்லு.... உன்ரை வேதனை.... இயலாமை எல்லாத்தையும் சொல்லு..... அதுக்குப் பிறகு இஞ்சை இருக்கவிடுறது அவங்கடை விருப்பம்...."

"என்னண்ணை உப்பிடிச் சொல்லுறியள்...."

"உப்பிடிச் சொல்லுறதுதான் உண்மை.... அப்பிடிச் சொன்னால் அது கிடைக்கும்.... இப்பிடிச் செய்தால் இது கிடைக்கும் எண்டு சொல்லுறதெல்லாம் பொய் சந்திரன்.... சரி சரி.... உனக்குத்தான் ரெலிபோனிலை காசு போகுது.... விசாரணை முடிஞ்சு உன்னை வேறை இடத்துக்கு மாத்துவாங்கள்... அதுக்குப் பிறகு ரெலிபோன் எடு.... பயப்பிடாதை... அவையவைக்கு அளந்ததுதானே கிடைக் கும்...." என்று ஆறுதல் கூறினான் சோதி.

"சரி அண்ணை.... நான் பேந்து எடுக்கிறன்...."

சந்திரனை நினைக்கப் பாவமாக இருந்தது. ஆனால் உதவிசெய்ய முடியாத இயலாமையானது அன்னிய நாட்டின் அவல நிலையைச் சுட்டிக்காட்டி, அனுதாபத்தோடுமட்டும் மட்டுப்பட வைத்தது.

இரண்டு நாட்கள் கழிந்திருக்கும்.

மீண்டும் தொலைபேசி அலறல்.... மீண்டும் சந்திரன்....!

"அண்ணை.... நான் ஒரு நம்பர் தாறன்... அதுக்கு ரெலிபோன் எடுக்கிறியளே...."

"சொல்லு...."

கூறினான். எழுதிய சோதி அவனுடன் தொடர்புகொண்டான்.

"அண்ணை.... விசாரிச்சவங்கள்...."

"எல்லாம் சரியாய்ச் சொன்னனியே...?"

"சொன்னனான்.... "புறூவ்" கேட்டவங்கள்.... என்னட்டை எங்காலான் "புறூவ்"..."

"கொழும்பிலை உள்ளுக்கை இருந்தனெண்டாய்...."

"அந்தத் துண்டுகளையெல்லாம் கொண்டுவரேல்லை.... "ஏஜென்ஸி"க்காரன் எல்லாத்தையும் விட்டுப்போட்டு வரச் சொன்னதாலை... ஒண்டையுமே கொண்டு வரேலை.... இப்ப என்ன செய்யுறது...?"

"பேந்து எடுத்துத் தாறன் எண்டு சொல்லாதன்...."

"அப்பிடிச் சொல்லலாமே....?" என்று திருப்பிக் கேட்டவனின் அறியாமையை எண்ணித் தலையில் அடித்துக்கொண்டான் சோதி.

"என்னடாப்பா உப்பிடி விபரம் தெரியாத ஆளாய் இருக்கிறாய்.... மொழிபெயர்ப்பாளரிட்டை விபரம் கேக்காதன்...?"

"ஐயோ அண்ணை.... மொழிபெயர்ப்பாளர் சரியான பொல்லாதவன்.... ஜேர்மன்காரன் ஒரு கேள்வி கேட்டால்... இவன் ரண்டு கேள்வியெல்லே கேக்கிறான்.... பொய் சொல்லாதை.... உனக்கு அங்கை பிரச்சினை இல்லை.... இஞ்சை ஏன் வந்தனீ எண்டெல்லாம் கேட்டு வெருட்டுறவனிட்டையோ விபரம் கேக்கிறது...."

சந்திரன் அழ ஆரம்பிப்பதைக் குரல் இனங்காட்டியது.

"சரி சரி... எங்கடையள் சிலதுகள் உப்பிடிக் களிசறையளாய்த்தான் இருக்குதுகள்...."

வாழ வழியற்று வருவாய் தேடி வந்த பழைய தமிழன் ஒருவன் மொழிபெயர்ப்பாளர் என்ற பதவியை அதிகாரப் பொறுப்பாக எண்ணி, புகலிடம் தேடி வந்த புதிய தமிழனிடம் தனது "மேதாவித்தனத்தை" வெருட்டலூடாகத் தெரிவித்திருக்கிறான்.

அடுத்த மொழிபெயர்ப்புக்கான சந்தர்ப்பத்தை வரவழைக்கும் முன்னெடுப்பாகக்கூட இருக்கலாம். ஒரு தமிழனின் துரத்தலில் தமது இருப்பையும் வசதிகளையும் வாய்ப்புக்களையும் மேம்படுத்த முயலும் மொழிபெயர்ப்பாளர் கூட்டமொன்று "பிராங்பேர்ட்" விமான நிலையத்தில் உள்ளதென்ற காதில்விழும் செய்திகளுக்கு அத்தாட்சியாக ஒருவன் சந்திரனின் விசாரணையுள்ளும் புகுந்திருக்கிறான்.

"சந்திரன்.... புதுசா வாறவைக்கு ஒண்டுந் தெரியாது எண்ட நினைப்பிலை எங்கடையள் சிலது தாங்கள்தான்

"விசா" தாறாக்கள்போலை எகிறிப் பாய்வினம்.... உதுகளுக்கெல்லாம் பயப்பிடாதை.... உங்களைப்போலை புதாக்கள் வாறதாலைதான் அவைக்கு பிழைப்பே நடக்குது.... இல்லாட்டி மாடுமாதிரி வேலை செய்தால்தான் ஏதாலும் பிழைக்கலாம்...."

"உதெல்லாம் எனக்கெங்கை அண்ணை தெரியும்..... என்னவோ அண்ணை.... என்னை நம்பித்தான் ரண்டு சகோதரியள்.... நான் நல்லபடியா உழைச்சுக் கொடுப்பன் எண்ட நம்பிக்கையிலை வயசான அம்மா.... எல்லாரையும் நான்தான் பாக்கவேணும்... எல்லாத்துக்கும் நான் உங்களை நம்பித்தான் இருக்கிறன்...." என்று விக்கலெடுத்து அழ ஆரம்பித்தான்.

"ஏண்டாப்பா இப்ப அழூறாய்.... அழூதாப்போலை எல்லாம் சரி வந்தூடுமே..... நல்லது நடக்குமெண்டு நம்பு... நம்பிக்கைதானே வாழ்க்கை...."

ஆறுதல் கூறமட்டுந்தான் முடிந்தது.

ஜேர்மனியைப் பொறுத்தவரையில் அரசியல் தஞ்சக் கோரிக்கையுடன் உட்புகுந்த தமிழர்கள் யாவருமே "அகதிகள்" என்றானபோது, அதற்குள் சிலர் தமது முயற்சியால் முன்னேற்றம் கண்டு முதலாளிகளாகவும், ஜேர்மன் பிரசைகளாகவும், சில சில்லறை உத்தியோகத்தர்களாகவும் மாறினாலும், இதன் பயனாகப் பொருளாதாரத்தையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் தமக்குச் சாதகமாக்கிய எண்ணத்தில், தம்மைப் போலியாகச் சமூகத்தில் முன்னிறுத்தவென அற்ப அதிகாரமுள்ளவர்களாக அல்லது சொற்ப சலுகைகளுக்கு வழிகாட்டுபவர்களாக மாய்மாலம் காட்டினாலும், "அகதிகள்" என்ற முத்திரைக்கு உரித்தானவர்கள் என்ற உண்மையை எவ்வாறு துடைத்தழிக்க முடியும்?!

அதற்காக, "அகதிகள்"தானே என்ற எண்ணம் தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்து வாழாதிருக்கவும் முடியுமா? நிச்சயமாக முடியாது. எல்லாவற்றுக்கும் என்றோ ஒருநாள் நல்ல தீர்வு என்ற விடியலுக்கான நம்பிக்கைதானே வாழ்தலுக்குண்டான பாடுபடுதலுக்கு ஊக்கமளிக்கிறது?!எனவே சோதியால் சந்திரனுக்கு நம்பிக்கையான வார்த்தைகளைத்தான் ஆறுதலாகக் கூறமுடிந்தது.

அந்த நகரின் ஒதுக்குப்புறமாக வெளிப்பார்வைக்குப் பாழடைந்த கட்டிடமாகத் தோற்றமளித்த அந்தக் கட்டிடக் கூட்டத்தைக் கண்டு பயந்துவிட்டான் சந்திரன். செங்கற்களாலான பழமைவாய்ந்த கட்டிடங்கள் அந்த வளவினுள் அடங்கியிருந்தன. பார்வைக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத் தளமொன்றைக் கண்முன்னே கொண்டுவந்தது.

உண்மைதான். கிழக்கு ஜேர்மனி சோவியத் யூனியனின் கீழ் இருந்தபோது அது இராணுவ முகாமாகத்தான் இருந்தது. தற்போது அரசியல் தஞ்சம்கோரி தாயகத்தில் இராணுவ அதிகாரத்துக்குள்ளால் தப்பி ஜேர்மனிக்குள் நுழையும் பல்வேறு நாட்டவரது வசிப்பிடம் அது.

ஒவ்வொரு நாட்டவர் ஒவ்வொரு கட்டிடமாகத் தங்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியெல்லாம் வெளிநாடுகளில் அலைய வேண்டியதுதான் தமிழனின் தலையெழுத்து.

எலிவளையானாலும் தனிவளை வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.