Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமரனுக்கு ஒரு அஞ்சலி ....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்குமரனுக்கு ஒரு அஞ்சலி ................

தாய் தமிழகம் தந்த முத்து

தரணியில் வந்துதித்து

தொப்புள் கொடி உறவுகளுக்காய்

ஈந்த மாபெரும் பரிசு தன் இனிய உயிர் ,

பத்திரிகையாளனாய்

சாதித்தது போதாதென்று

தமிழ் ஈழ சரித்திரத்திலே

முத்தாக பதிந்து விடான்

தமிழக முத்துக்குமரன்

ஐயா முத்துக்குமரா ....

நட்புக்கு இலக்கணம்

உயிர் கொடுத்தல் இதை மிஞ்சியும்

ஒரு கொடை உண்டோ ?

உன் ஆன்மா சாந்தியடையட்டும் ,

உன் எண்ணம் நிறைவேறும் ,

ஆழ் துயிலில் ,நீ சாந்தி அடைவாய்

சாந்தி... சாந்தி ...சாந்தி ........... ,

தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்

தொப்புள் கொடியில்

உயிர்க் கொடி

ஏற்றிய தோழா

ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா!

இணையத்திலே உன் அழகிய

முகம் பார்த்தோம்

இதயத்திலே கருகிப் போனது

எங்கள் மனம்!

எவ்வளவு இளகிய

மனம் கொண்டவன் நீ

எங்களுக்காய்...

ஏன் கருகிப் போனாய்?

தூத்துக்குடியில்

முத்துக் குளித்தவன் நீ

சாஸ்திரி பவனில்

ஏனையா தீக்குளித்தாய்?

குடம் குடமாய்

நாங்கள் அழுது வடித்த

எங்கள் கண்ணீரில்

உன் முகமே பூக்கிறது!

எம் தமிழ்மீது

நீ கொண்ட பற்றுக்கு

எல்லையே இல்லை என்பதை

இப்படியா உணர்த்துவது!

தமிழினத் தலைவர்கள்

என்று சொல்லத் துடிக்கும்

எங்கள் தலைவர்களின்

நாக்கை அறுத்தாய் நீ!

கையாலாகாத பரம்பரை

என நினைத்தாயோ

பூவாய் இருந்தவன் நீ

புயலாய் ஏன் வெடித்தாய்?

முப்பது ஆண்டுகள்

நாம் சுமந்த வலிகள்

போதாதா ஐயா

ஏனையா எரிந்து போனாய்?

பெரு வலியோடு

உனைப் பெற்ற தாயை

எந்த முகத்தோடு போய்

நாங்கள் இனிப் பார்ப்போம்?

எட்டாத தூரத்தில்

வாழ்ந்தாலும்

வாகை மரம் போல

வாடிப் போய் நிற்கிறோம்

மண்ணெணையை

உன் மீது ஊற்றி

தமிழ்மண்ணைக் காக்க

ஏனையா உனைக் கொடுத்தாய்?

தமிழீழம் வாழவே

எங்களை வாழ்த்தி

உன் வாழ்வை

ஏனையா நீ அழித்தாய்?

மரணத்திடம் மண்டியிடாமல்

மண் எங்கும் ஓடுகிறோம்

மரணத்தை தேடி நீ

ஏனையா ஓடினாய்?

தமிழீழ வரலாற்றில்

முத்தான உன் பெயர்

இனி எழுத்தாணிகளின்

முதல் வரியாகட்டும்!

உன் தியாகத்தின் முன்

நாங்கள் வெறும் சருகுகளே!

தமிழகத்தின் தாய்மடியில்

கண்ணீர் அஞ்சலி செய்கிறோம்!

- வசீகரன், நோர்வே

இதயம் கலங்க எங்கள் நன்றி கலந்த கண்ணீருடன்...

இந்துமகா சமுத்திரமே தீப்பற்றி எரிவதுபோல்

இந்தியத் துணைக்கண்டம் தீப்பிடித்து எரிவதைப்போல்

இழிஞர்ஆள் இலங்கைத்தீவு எரிந்தழிந்து கருகுதல்போல்

இளம்உயிரே! தமிழ்உணர்வே! முத்திணைநல் புத்திரனே!

இலங்கையென்ன உலகதனின் எத்திசையில் இருந்தாலும்

இதயமதால் அனைவருமே ஓரினமே என்பதனை

இவ்விதமாய் எரிந்திறந்தா இழிஞர்கட்கு உரைக்க வேண்டும்?

இதயமெலாம் எரிகிறதே! தாங்கிடாமல் இதயமதும் துயரினிலே நொருங்கிடுதே!

இலங்கைத்தீவில் தமிழினத்தை அநீதியென்றே தெரிந்திருந்தும்

இதயமில்லா அரக்கரவர் இடம்பறித்தற் கழித்தொழிக்க,

இந்தியத்தின் தலைவர்களும் அதற்கிணைந்து உதவுவதை

இகமதனில் இதயமுள்ள எவரும் ஏற்றல் இலகுவல்ல

இரக்கமில்லா பாதகத்தை இலகுவாகத் தொடர்வதற்கு

இலங்கையிலே மனிதவுருப் பேய்களெனச் சிங்களவர்

இலகுவாகக் கடைப்பிடிக்கக் கையெடுத்த பொய்யதனால்

இந்தியாவும் இதரர்களாம் கடைந்தெடுத்த கள்வர்களும்

இலங்கைத்தீவின் தமிழர்உரிமைப் போர்பயங்கர வாதமென்றார்

இதயமின்றி ஏழைமக்கள் அழிந்தொழியற் காயுதங்கள்

இவர்தரலை அனைத்துலகம் அலட்சியம்செய் வழிவகுத்தார்

இனமதற்குள் துரோகியரை இங்குமங்கும் இழுத்திழுத்து

இனமதனின் ஒற்றுமைக்கே வேட்டுவைக்கும் சதிபுரிந்தார்

இனித்தமிழர் தாயகமாம் தமிழகத்தில் தனிமையில்லை

இங்கும் அங்கும் எங்குமெங்கள் மக்களொன்று என உணர்ந்தே

இதுவரைக்கும் எம்மினத்தை ஏய்த்தவர்க்கும் ஏய்ப்பவர்க்கும்

இனியுமெங்கள் மத்தியிலே இடமதனை அளிக்கவிடோம்

இங்கெவரும் எம்மைவைத்து ஏய்த்துயரற் கிடமளியோம்

இகமதனின் எங்குள்ள எம்மினத்தை நினைக்காரை

இனியுமெங்கள் ஆள்சபைக்குள் இடம்பிடிக்க விடமாட்டோம்

இதுவரைக்கும் இடம்பிடித்தே ஏய்ததவரே! இனித்தொலைக!

இது தமிழர் தாய்நிலமாம் தமிழகமாம் என உரைத்தே!

இலங்கையிலே நடக்கும்பழி, பாதகங்கள் சரியதுபோல்

இரக்கமில்லா அரசியல்சார் தலைவர்களே இந்தியத்தில்

இரும்பிதயம் தனைத்தளர்த்தி நீதிசார உனைக் கொடுத்தாய்!

இருப்பினிது அவர்களையே திருத்திடுமா? நம்பவில்லை

இரும்பு சூடுபட்டிடாமல் தானுருகி வளைவதில்லை

இந்தியத்தைச் சிங்களவன் ஏய்க்கும் காலம் தொலைவிலில்லை

இந்தியத்தை அணுகிநிற்கும் சீனமுமிப் பாகிஸ்தானும்

இலங்கையதை வைத்துத் தீண்டும் தீமை என்றும் தவிர்வதற்கில்லை

இலங்கையதில் சிங்களர்க்கு இந்தியத்தில் அன்புஇல்லை

இருக்கும் சூழல்பயன்படுத்திப் பயன் விழைவார்.வேறுஇல்லை

இலங்கைத் தீவின் ஈரினமும் தனித்தனியாய் இருவிதமாய்

இருபுறமும் ஆள்தலன்றி அவர்களுக்கு அமைதி இல்லை

இவ்விதத்தில் இனியெவரும் தீயணைத்து இறப்பதையும்

இணைந்திருந்தோ, தனித்திருந்தோ உணவொறுத்தல் செய்வதையும்

இன்றினின்று விட்டிடுங்கள், இணைந்து நின்று உழைத்திடுங்கள்

இதயமற்றார் கண்களுக்குத் தியாகமெல்லாம் வெறுஞ்செயல்தான்

இதனை வைத்து அரசியலில் உயர்ந்திடவே அவர்நினைப்பார்

இகமதனைநீதி கேட்டு எழும்பவைத்தாய் எம்மகனே!

இறைவனுனது துணைஇருப்பான் இருண்ட இதய இரங்கிடாரை

இனியும் விடான் அவன்தடுப்பான் இதயம் திருந்த வழி கொடுப்பான்

இறைஞ்சவில் எவரையும் நாம் அதுநடக்கக் கெஞ்சவில்லை

இதயமில்லா நரிக்கூட்டம் திருந்துமென்றும் நம்பவில்லை.

இருந்துமொன்றைச் சொல்லித்தான் ஆகவேண்டும் தீயவர்க்கு

இதயமற்ற மனிதர்களை மனிதரென்று அழைப்பதிலே

இறைவனுக்கும் இழுக்குஉண்டு என்பதைநீர் தெரிந்திடுவீர்.

இன்று அங்கு செந்தணலாய் வெந்துயிரை நீத்தவனின்

இதயமதன் கொதிப்பினுக்கு உங்கள் மீதே பழி விழட்டும்

இருக்கும்சொந்த மக்கள் சாக அரசியலால் பிழைப்புமக்கு

இந்தியத்திலிருக்குதென்றால் அந்தப்பாவம் உமில் நிலைக்கும்

இனியுமங்கு காந்தி,நீதி,அகிம்சையென்று கதையளந்தால்

இளித்து நிற்கும் குரங்குகளாம் தொண்டருக்கும் பழி கிடைக்கும்

இனியுமில்லை நீதிகேட்க என்று தடை விதித்திடும் நீர்

இனியுமிந்தி யாவில்நின்று எவருக்காக ஆளுகின்றீர்?

இனியும் கவிதை, கதைகளென்று தமிழ் வளர்த்து ஏய்த்தல் போதும்

இதற்குமேலும் தூங்கிடாது தமிழினத்தைக் காக்க வாரும்

இந்த வீரன் முத்துக்குமரன் செய்திருக்கும் உயர்ந்த தியாகம்

இந்த மண்ணில் விதைக்கும் வீரம் தமிழர் மானம் காக்க சேரும்

இழிவுவேலை செய்து மேலே எழவருவோர் துரத்திடவும்

இனியும்நீ! தயங்காதே! நேர்வழியில் இணைந்தியங்கு!

இனியும் ஆள்வோராய் அவர் நெருங்கல் தனைச்சாடித் தடுத்துவிடு!

இனிமேலும் இதுபோலே இன்னோருயிர் எரிந்துவிழ

இந்தியத் தாயேநீயும் இனிவிடாதே! நீதி எடு!

இருக்கும் காலமதில் சுதந்திரத்தைக் காத்துவிடு!

- 'சிந்தனைச் செல்வன்' எழிலன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.