Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தி வழியில் தங்கபாலு! -குமுதம் முச்சந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி வழியில் தங்கபாலு!

"ஏம்பா சித்தா.. ரொம்ப அவசரமா பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. கூட்டத்தை கூட்டுவோமா?" என்று தகவல் அனுப்பிருந்தார் கோட்டை கோபாலு. அதற்கேற்ப வள்ளுவர் கோட்டத்தை தேர்ந்தெடுத்திருந்தார் நாட்டாமை சித்தன். மாலை நேரத்தில் அலப்பறை டீம் கூடியது. தாங்க மாட்டாத போதையில் இருந்த சுவருமுட்டி சுந்தரம் "என்னால பொறுமையா இருக்க முடியல. இந்த காங்கிரஸ் கட்சி தங்கபாலு இருக்காரே, அவருதான் காந்தியோட ஒரிஜினல் சீடன்னு சொல்றாங்க... என்ன சேதி தெரியுமா?" என்றார்.

"இப்படி மொட்டையா சொன்னா எப்படி. ?அந்தளவிற்கு அரசியல் ஞானம் நமக்கு கிடையாதப்பா..." நக்கல் செய்தார் அன்வர் பாய்

"சொல்றன் கேளுங்க. நாடு சுதந்திரம் கிடைச்ச உடனே மகாத்மா காந்தி இதுக்கு மேல் காங்கிரஸ் கட்சிய வச்சிகிட்டு இருக்க கூடாது. அதை கலைச்சிடறதுதான் உத்தமம் அப்படின்னு. சொன்னாரு. ஆனா, அதை மத்தவங்க ஏத்துக்கிடல. இன்னைக்கு நம்ப தங்கபாலு அண்ணாச்சி தமிழ்நாட்டுல அந்த கட்சிய கலைச்சே தீர்றதுன்னு முடிவெடுத்து செயல்பட்டுக்கிட்டிருக்காரு. அவரோட செயல்பாடுகளால் அன்னை சோனியா ரொம்ப பூரிச்சுபோய் இருக்காங்க தெரியுமா?" என்று அதிரடியான செய்தியைச் சொன்னார். கூட்டம் தாங்கமாட்டாமல் சிரித்தது.

"என்னய்யா இப்படி சொல்ற..? தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிய வளர்க்கறதுக்கு அவரை விட்டா வேற அளு இல்லன்னுதான தங்கபாலுவை போட்டிருக்காங்க. அவரைப்போய் இப்படி நக்கல் பன்றியே.."- கோபாலு.

"யோவ் நான் ஜோக் அடிக்கல. நிஜத்தைத்தான் சொல்றேன். இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி பெரும் துரோகத்தை செய்யுதுன்னு சொல்லி, சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன்னு ஒரு காங்கிரஸ் தொண்டன் தீக்குளிச்சு இறந்தாரில்ல. அவர் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியிருக்கார். நாலுபேரு கேட்கிற மாதிரி காங்கிரஸுக்கு எதிரா கோஷம் போட்டிருக்கார். எல்லாத்துக்கும் மேல சாகப் போறதுன்னு முடிவாகி கடைசியா கொடுக்குற மரண வாக்குமூலத்துலேயும் காங்கிரஸ் கட்சிய விமர்சனம் செய்துதான் உயிர விட்டிருக்கிறார். இவ்வளவுக்கு மேலயும் புது கண்டுபிடிப்பை, தங்கபாலு மீடியாவுக்கு பேட்டியா கொடுக்குறாரு. என்ன தெரியுமா? அந்த ரவிச்சந்திரன் காங்கிரஸ் கட்சிக்காரர் இல்லையாம். அவரு இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விடலையாம். எப்படி இருக்கு அவரோட பதில்..? இதுக்கு மேலயும் அந்தக் கட்சியை தமிழ்நாட்ல எவனாவது மதிப்பான்ங்கிற. நியாயமான காங்கிரஸ் கட்சிக்காரன் எல்லாம் கொதிச்சுபோய் இருக்கான். என்னடா மொத்த தமிழ்நாடே காங்கிரஸ் கட்சிய விரோதமா பார்க்குது. வெளியில தலைகாட்ட முடியல. கட்சி ஆபீஸ்மேல கல்வீச்சு நடத்துறாங்க. இன்னும் கொஞ்ச நாளுல நம்ப மேலேயே கல்வீச்சு நடத்துவாங்க. இந்த நிலையில இருந்து எப்படி காப்பாத்திக்கப் போறம்னு தவிச்சுகிட்டு இருக்குறப்ப தங்கபாலு இவ்வளவு கேவலமா பேசியிருக்க கூடாதுன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. இப்படி பட்ட கட்சி நாங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக ஊர்வலம் நடத்துறோம்னு சொல்லுது. எவனாவது நம்புவானா?" என்று காய்ச்சி எடுத்தார்.

"காங்கிரஸ் கட்சிய விடுப்பா. நம்ப உலகத் தமிழின தலைவர் கலைஞர் என்ன பண்றார்..? அப்படிப்பட்ட விளங்காத காங்கிரஸ் கட்சி கூட சேர்ந்துகிட்டு இல்ல ஊர்வலம் நடத்துறார். இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பேரும் ரிப்பேராயிருக்கு. இனிமே எவனா நம்புவானா?"- அன்வர்பாய்.

"ரொம்ப நல்லா நம்புவான்யா. உலகத்துல அவரு பேசினாமட்டும் தமிழ். அவரு குரல் கொடுத்தா மட்டும் தமிழ் குரல். அவர் சொன்னாதான் தமிழ் ஆதரவு. மத்தவன் யார் பேசினாலும் அது எடுபடக் கூடாது. பச்சை துரோகம்னு சொல்வார். மத்வங்க முன்ன வந்து போராடினா அது நாடகம்னு உடன்பிறப்புக்கு லெட்டர் எழுதுவாரு. ரொம்ப சூப்பரா அரசியல் பண்றாருப்பா. நேத்திக்கு ஒரு சேதி. வடசென்னை சுங்கச்சாவடி பக்கத்துல இருக்குற அமரேசுங்கிறவரு துண்டு அறிக்கைய கொடுத்திருக்காரு. இலங்கைத் தமிழர்களுக்கு திமுக துரோகம் செய்யுதுன்னு சொல்லியிருந்தாரு. அதுமட்டுமில்லாம கலைஞருக்கே ஒரு கடிதம், ரொம்ப சூடு சொரணை கலந்து எழுதி வச்சுட்டு தீக்குளிச்சு உயிலை விட்டிருக்காரு. உடனடியா அந்த இடத்துக்கு போன போலீஸ் அமரேசன் கலைஞருக்கு எழுதின கடிதத்தை பறிமுதல் செய்து பத்திரமா வச்சுக்கிட்டு, இதைப் பார்த்த சாட்சிய எல்லாம் கூப்பிட்டு யாரும் வாய் திறக்க கூடாதுன்னு மிரட்டியிருக்கு. தீக்குளிச்சு இறந்த அமரேசன் ஒரு மன நோயாளி அப்டீன்னு பேட்டி கொடுத்திருக்காங்க. செத்துபோன அமரேசன் கலைஞரை வாழ்த்தி நீங்கதான் தமிழினத்தின் ஒரே தலைவர்னு சொல்லி எழுதியிருந்தா இன்னேரம் ஐயோ உடன் பிறப்பே அப்டீன்னு ஒரு கடிதம் எழுதி பார்த்தீர்களா கழக அடலேறு இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை தியாகம் செய்திருக்கு. நாங்கள் எந்த விதத்திலும் இனமானத்தை அடகு வைக்கல அப்டீன்னு ஒப்பாரி வச்சிருப்பாரு. ஆனால், அமரேசன் எழுதினது கலைஞருக்கு மேலும் வலியைத் தரமாதிரி இருந்திருக்காம். அதான் மூடி மறைச்சுட்டு திமுககாரனில்ல. அவன் ஒரு மன நோயாளின்னு போலீசை விட்டு சொல்ல வச்சிருக்காருன்னு எதிர் தரப்பு போட்டு காய்ச்சுது..."- சித்தன்

"நாசமா போகட்டும்... நான் அரசியல் கூட்டணி பத்தின விஷயத்திற்கு வர்றேன்.." என்ற சுவருமுட்டி சுந்ரதம் "காங்கிரசை விட்டு எந்த சந்தர்பப்த்திலும் பிரியக் கூடாதுன்னு கலைஞர் முடிவு செய்திருக்காரு. அந்த கூட்டணி கூட விஜயகாந்தையும் கொண்டு வர்றதுக்கு தளபதி ஸ்டாலின் போய் கேப்டன்கிட்ட பேசி முடிச்சிருக்காராம். கேப்டனும் சரின்னு சொல்லியிருக்காரு. அந்தக் கூட்டணிகூட திருமாவளவனையும் தக்க வச்சுகிட்டா, வட மாவட்டத்துல பாமக கட்சிக்கு சவால் விடுற மாதிரி இருக்குமாம். போன தடவை திமுக கூட்டணியில காங்கிரஸ், ரெண்டு கம்யூனிஸ்ட், பாமகன்னு பெரிய கூட்டணி நின்னுச்சு. அதிமுகவில் வைகோ மட்டும்தான் இருந்தாரு. அதுல சேர்ந்த விடுதலை கட்சி வட மாவட்டத்துல நிறைய தொகுதியில பா.ம.க வை பெரும்வாரியா தோற்கடிச்சது. அதைக் கணக்கு வைச்சு இப்போ காங்கிரஸ், தி.மு.க, விஜயகாந்துன்னு பெரிய கூட்டணியில திருமாவை வச்சுகிட்டா வட மாவட்டத்துல பாமகவை சுத்தமா ஒன்றும் இல்லாம துடைச்சுடலாம்னு கலைஞர் கணக்கு போடுறாராம். அதுக்காக திருமாகிட்டேயும் பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்குன்னு சொல்றாங்க..." என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே குறுக்கிட்ட கோபாலு, "ஏம்பா காங்கிரஸ் ஜெயிக்குமா..? அதுக்கூட நிக்குற திமுகவுக்கு ஓட்டு விழுமா?" என்று சந்தேகத்தை எழுப்பினார்.

"அப்படி கேளு. காங்கிரஸ்கூட நின்னா ஓட்டு விழாதுங்கிறது கலைஞருக்கு நல்லாவே தெரியும். தமிழ்நாட்டுல அந்த கூட்டணி ஜெயிக்காதுங்கிறதும் அவருக்குத் தெரியும். அவரோட கணக்கு வேற. அதாவது தமிழ் நாட்டை தவிர்த்து பார்த்தா இப்போ காங்கிரஸ் கட்சிதான் அதிக இடத்தை பிடிக்குமாம். சமீபத்துல நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தல், மற்ற மாநில தேர்தல் எல்லாம் பார்த்தா காங்கிரஸ் கட்சிதான் அதிக இடத்தைப் பிடிச்சிருக்கு. அந்த வகையில வரும் நாடாளுமன்ற தேர்தல் கணக்கும் இருக்கும். தமிழ்நாட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் கூட மத்தியில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் உட்காரும். அதனால இப்போ ஈழ பிரச்னைய வச்சு அந்த கட்சிகூட முறுக்கிட்டு வெளியில வந்தா, அந்த கேப்புல அ.தி.மு.க உள்ள நுழைந்து கூட்டணி வச்சிக்கிடும். அதனால தமிழ் நாட்டுல தோத்தாலும் பரவாயில்ல. ஆனா, காங்கிரசை பகைச்சுக்காம உறவை வளத்துகிட்டா தமிழ் நாட்டுலையும் முதலமைச்சர் பதவிய தக்க வைச்சுகிடலாம். அப்படியே மத்தியில் ஆட்சியப் பிடிக்கப்போற காங்கிரஸ் மந்திரி சபையிலும் பதவிய தக்க வைச்சுக்கிடலாம். எதுவும் சேதாரம் ஆகாது. இன உணர்வு அதுஇதுன்னு சொல்லி இப்போ காங்கிரஸ் உறவை இழந்துட்டா, அடுத்து வர்ற சட்டமன்ற தேர்தலில் அதிக மெஜாரிட்டி இருந்தாலும் அப்போ மத்திய ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் நம்மை விட்டு வைக்காது. அதனால வரும் தேர்தலில் தோல்விங்கிறது நிச்சயம்னாலும் பரவாயில்லன்னு தொலைதூர கணக்கு போட்டு வச்சிருக்கிறாராம் கலைஞர்..." என்று உண்மையை போட்டு உடைத்தார்.

"ஆக எப்படி பார்த்தாலும் அடுத்த ரெண்டு வருஷத்துக்கு திமுக ஆட்சியை யாரும் கலைக்க முடியாது. வரும் எம்.பி தேர்தலில் ஜெ கூட்டணி அதிக இடத்தை பிடிச்சாலும் திமுகவை அது ஒண்ணும் செய்ய முடியாது.." - அன்வர்பாய்

"அதேதான்... அதைவிடுப்பா. நான் இன்னொரு மேட்டருக்கு வர்றேன்.." என்ற சித்தன், "இம்புட்டு நாளும் இல்லாத அளவுக்கு திடீர்னு காங்கிரகட்சி தலைமை இலங்கையில் போர் நிறுத்தம் செய்யணும்னு கொஞ்சம் கூடுதலா சவுண்ட் விடுதே... என்ன காரணம் தெரியுமா? சில இணையதளத்துல இலங்கையில் போர் நடத்துவதே இந்தியாதான். தன் கணவர் ராஜீவ் காந்தியை கொலை செய்தார்கள் என்பதற்காகவே புலிகளை ஒழிக்க சபதமேற்றிருக்கிறார். பிரபாகரனிள் சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடிக்கும் வரை அவர் போரை நிறுத்த மாட்டார். ராஜபக்சேவிற்கு பணபலம் குறைந்தாலும் தாராளமா கொடுத்து தாங்கிப் பிடிப்பார். ராணுவபலம் இல்லையா, இந்தா அனுப்புறேன், மூன்று கப்பல் நிறைய ராணுவத்தை என்று அனுப்பி வைப்பார். அவரோட சபதம் நிறைவேறுவதற்காக ஒட்டுமொத்த தமிழினமே அழிஞ்சாலும் கவலைப்பட மாட்டார்னு விவரமா எழுதியிருந்தது. அதை சில ஆங்கில நாளேடுகள் எடுத்து செய்தியா போட்டிருந்தது. இது உலகளவில் பேர் டேமேஜ் ஆகுற விஷயமாயிருக்கு. பல நாடுகளோட கண்டனத்திற்கு ஆளாக நேரிடும்னு யோசிச்சிருக்காங்க. அதனாலதான் இப்ப கொஞ்சம் வாயைத் திறந்து இலங்கையே போர் நிறுத்தம் செய் அப்டீன்னு சவுண்டு விடுறாங்க. ஆனாலும் இதுவும் ஒரு ஊரை ஏமாத்துற நாடகம்தான்னு அரசியல் கட்சி வட்டாரம் சொல்லுது..." என்றார்.

"பங்காளி எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. நம்ப வைகோ, திருமா, தா.பாண்டியன், ராமதாஸ், பழ.நெடுமாறன் எல்லாம் உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவா இருக்காங்களா? எனக்கு விளங்கவே மாட்டேன்கிறது..?"- கோபாலு

"உனக்கு மட்டுமில்ல. நாட்டு மக்களும் அப்படித்தான் விளங்காம குழம்பியிருக்காங்க. பழ.நெடுமாறனைப் பொறுத்த வரைக்கும் யாரும் குறை சொல்ல மடியாது. அவர் அரசியல் கூட்டணிக்குள்ள எப்பவும் வர்றதில்ல. ஆனா, மத்தவங்க எல்லாம் சந்தேகத்திற்கு இடமானவர்கள்தான்னு கருத்துக் கணிப்புல மக்கள் சொல்லியிருக்காங்க. நாங்கதான் ஈழ மக்களுக்கு ஒரிஜினல் ஆதரவாளர்கள்னு சொல்றாங்க. வாஸ்தவம்தான். ஆனா, அந்தப் பக்கம் ஜெ கூட கூட்டணின்னு சொல்றதுதான் சங்கடமா இருக்கு. எந்தக் காலத்திலேயும் அந்த மக்களுக்கு ஆதரவா செயல்படாத அந்த அம்மாகூட கூட்டணி வச்சு, அவிங்களை முதல்வர் நாற்காலியில உட்கார வைச்சா, பிறவு என்ன பண்ணுவாங்க. முதல் வேலையா வைகோவை தூக்கி உள்ள வச்சுடுவாங்க. அடுத்து திருமா. அப்படியே ராமதாஸ்... உள்ள வைச்ச பிறவு சதிகாரி, இனத்துரோகி, இனத்தை அழிக்க வந்த கோடாரியே அப்டீன்னு வசனம்... எதுக்கு இதெல்லாம்..?. எப்படியோ கூட்டணியில கொஞ்சம் சீட்டு கிடைச்சா போதும்கிறதுதான இவிங்க நோக்கம். ஒண்ணு தனியா நிக்கணும். இல்லாட்டி, கலைஞர்கூட இறங்கி பேச்சுவார்த்தை நடத்தி இணைய வைக்கணும். அதை விட்டுட்டு எதிராளிகூட கூட்டணின்னு போய் நிக்குறது ஈழ மக்கள் ஆதரவு விஷயத்தை ஆழ குழி தோண்டி புதைக்குற மாதிரிதானன்னு மக்கள் குழப்பத்தோட கேட்குறாங்க. இந்தமாதிரி முன்னுக்கு பின் முரணான விஷயத்தாலதான் என்னை மாதிரியான ஆளுங்க குடிகாரணா மாறிப்போறாங்க..." என்று ஒரே போடாய் போட்டார் சுவருமுட்டி சுந்தரம்.

எல்லோரும் சிரித்தார்கள்.

- குமுதம் முச்சந்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.