Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் சிங்களப் புலியா கொதிக்கும் ஜெயசூர்யா பேட்டி

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றித்தான் நமக் கெல்லாம் தெரியும். ஆனால், அங்கே 'சிங்கள விடுதலைப்புலி'களும் இருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் சிங்கள தலைவர்களுக்குத்தான் இப்படியரு முத்திரை குத்தி அவர்களின் தலைக்கும் விலை வைத்திருக்கிறது சிங்கள அரசு. அப்படி முத்திரை குத்தப்பட்டவர்தான் ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளரான சிறீதுங்க ஜெயசூர்ய.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்துப் பதின்மூன்று பேர் போட்டியிட்டனர். அதில் மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் சிறீதுங்க. பிறப்பால் சிங்களர் என்றா லும் இலங்கையில் சிங்களர்-தமிழர் ஒற்றுமைக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவர். இதனாலேயே இவருக்கு 'சிங்களப் புலி' என்று முத்திரை குத்தியிருக்கும் இலங்கை அரசாங்கம், 1981-ம் ஆண்டிலேயே இவரது தலைக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானம்

அறிவித்தது. அதுமுதல் சிங்களப் பேரினவாத இயக்கங்களிடமிருந்து ஏகப்பட்ட மிரட்டல்களையும் நேரடித் தாக்குதல்களையும் எதிர் கொண்டுவரும் சிறீதுங்க, தற்போது இலங்கைப் போருக்கு எதிராக தென்னிந்திய மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்தக்கோரி 'போர் எதிர்ப்பு இயக்கம்' ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்திருந்த அவரை சந்தித்துப் பேசினோம்.

''இலங்கையில் என்னதான் நடந்து கொண்டிருக் கிறது?''

''அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றதற்கான முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சிக்கு அவரைஎதிர்த்துப் போட்டியிட்டவர்கள் என்ற முறையில் என்னை யும் ரணில் விக்கிரமசிங்கேவையும் அழைத் திருந்தார்கள். உள்ளரங்கில் நடந்த அந்த நிகழ்ச்சியில் சர்வதேச மீடியாக்கள் முன்னிலையில் ராஜபக்ஷேவுக்கு ஒரு அறிவுரை சொன்னேன். 'நீங்கள் இருக்கும் காலத்துக்குள் தமிழர் களுடைய நம்பிக்கையைப் பெற்றுவிட முயலுங்கள். இல்லாவிட்டால் நாடு மிகப் பெரிய போரை சந்திக்கும்; அதனால் தமிழர்கள் மட்டுமில்லாது சிங்களர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். பிறகு நாடே நாசமாய்ப் போகும்' என்றேன். அந்த நாசத்தை நோக்கித்தான் இப்போது இலங்கை பயணித்துக்கொண்டிருப்பதாக அறிகிறேன்.

எங்களைப் பொறுத்த வரை இலங்கை ராணுவத்தின் போரையும் கண்டிக்கிறோம். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் எதிர்க்கிறோம். சிங்களர் பகுதிகளில் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசக்கூடிய எங்களைப் போன்றவர்கள் மரண அச்சுறுத்தலில் இருக்கிறோம். ஆளுங்கட்சியிலிருந்து மட்டுமில்லை, சிங்களப் பேரினவாத அமைப்புகள், மாத்ருபூமி, சிங்கள புத்த பிக்குகள் கட்சிகளிடமிருந்தும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. இந்த ஜனவரி 9-ம் தேதிகூட ஊடகக்காரர்களுக்கு எதிரான அடக்கு முறையை எதிர்த்து நாங்கள் நடத்திய கூட்டத்தில் என்னை நேருக்கு நேராக அரிவாளால் வெட்ட வந்தான் ஒரு சிங்களன். அப்போது என்னைக் காப்பாற்றியவர் தமிழரான ஒரு ஆட்டோ டிரைவர். இலங்கையிலிருந்து இப்போது வந்துகொண்டிருக்கும் செய்திகள் அனைத்துமே இலங்கை ராணுவத்தால் தணிக்கை செய்யப் பட்டவைதான்.

ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் இலங்கை அரசு செய் திருக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தினார் என்பதற்காகவும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா செய்துவரும் உதவிகளையும் போர்ப் பயிற்சிகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார் என்பதற்காகவும் பிரபல பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவை இலங்கை அரசே அநியாயமாகக் கொன்றது.

அதுமட்டும்தான் உலகத்துக்கு தெரியும். ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் ஒன்பது பத்திரிகையாளர்கள் இப்படி அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; இருபத்தேழு பேர் சிறையில் இருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு பயந்து இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சிங்களர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமில்லை, தமிழ்தேச கூட்டணி எம்பி-யான நாகராஜ ரவிராஜ், ஐக்கிய தேசிய கட்சி எம்.பி-யான மகேஷ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். அந்த வழக்குகள் இன்னும் விசாரணைக்கே வரவில்லை. இலங்கை ராணுவம், பள்ளிக்கூடங்களிலும் மருத்துவமனைகளிலும் 'க்ளஸ்டர் பாம்' என்று சொல்லப்படுகின்ற 'கார்பெட்' குண்டுகளை வீசி அப்பாவி மக்களைக் கொல்வதாகச் செய்திகள் வருகின்றன.

கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் அதுதானே நடக்கிறது! ராஜபக்ஷே அதிபரான பிறகு, கொழும்பிலிருக்கும் தமிழ்த் தொழிலதிபர்களைத்தேடிப் பிடித்துக் கடத்திக் கொண்டு போய் பணம் பறிக்கும் சம்பவங்களும் தமிழ் இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு போய் கண்டம் துண்டமாக வெட்டி ஆற்றில் வீசும் கொடுமைகளும் அதிகமாக நடக்கிறது.

வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை உக்கிரமாக்கும்போது அவர் களுக்கு ஆதரவாக இங்கிருந்து யாரும் கிளம்பக்கூடாது என்பதற்காக இது மாதிரியான மிரட்டல் வேலைகளை முன்கூட்டியே செய்ய ஆரம்பித்து விட்டது ராஜபக்ஷே அரசு. இதெல் லாம் வெளியுலகத்துக்குத் தெரியாது.''

''சட்ட விரோதமான இந்தக் காரியங்களை இலங்கை அரசே செய்கிறது என்கிறீர்களா?''

''இலங்கை ராணுவமும் செய்கிறது. அவர்களுக்காக, அவர்களோடு புதிய கூட்டாளியாகச் சேர்ந்திருக்கும் கருணா படையினரும் இன்னும் சில சிங்களப் பேரினவாத அமைப்பி னரும் செய்கிறார்கள். கொழும்பில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. நூறடிக்கு ஒரு செக்போஸ்ட் போட்டு ராணுவம், போலீஸ், கடற்படை என மாறி மாறி சோதனை செய்கிறார்கள். இவர்களின் கண்களை மறைத்துவிட்டு நாம் ஒரு பேனாவைக் கூட எடுத்துச் சென்றுவிட முடியாது. அப்படி இருக்கையில் நம்பர் பிளேட் இல்லாத வெள்ளை வேன்களில் வந்து ஆட்களைக் கொல்கிறார்கள் என்றால் அரசின் பின்புலம் இல்லாமல் இதைச் செய்ய முடியுமா?''

''இலங்கையிலிருந்து வரும் செய்தி களைப் பார்க்கையில் விடுதலைப் புலிகள் ராணுவத் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறுவது போல் ஒரு தோற்றம் தெரிகிறதே?''

''இதுவரை கெரில்லா தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள், அண்மைக் காலமாக மரபுரீதியிலான போர் முறைக்கு வந்திருக்கிறார்கள். தங்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ராணுவத்தை எதிர்த்து நேருக்கு நேராகப் போரிடும்போது இழப்புகள் தவிர்க்க முடியாததுதான். போதாததற்குப் பிற நாடுகளும் இலங்கைக்கு உதவி செய்வதால் தற்சமயம் புலிகள் பின்வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. அதனால்தான், அவர்கள் மீண்டும் கெரில்லா தாக்குதலுக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

'புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்டு விட்டோம்; புலிகளில் 98 சதவிகிதம் பேரை அழித்துவிட்டோம்' என்று சொல்லும் இலங்கை அரசு, கொழும்பு உள்ளிட்ட தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ராணுவத்துக்கான பதுங்கு குழிகளை அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வடக்கில் போர் முடிவுக்கு வந்தாலும் அது மற்ற பகுதிகளில் மெள்ளப் பரவிக் கொண் டிருக்கிறது என்பதை உணர்ந்துதான் இலங்கை அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், பிரபாகரன் எவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்தாலும் சதாம் உசேனைப் போன்ற நிலையில் பிடிபட மாட்டார். ஒருவேளை போர்க்களத்தில் அவரது மரணம் நிச்சயிக்கப்பட்டால் அதன்பிறகு புலிகளின் எழுச்சி மூர்க்கமாக இருக்கும். புலிகள் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது!''

''அப்பாவிப் பொதுமக்களை விடுதலைப் புலிகள், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக சொல்லப்படுவது உண்மையா?''

''அது உண்மையாகக்கூட இருக்கலாம்; அது அவர் களின் இப்போதைய போர் உத்திக்குத் தேவையான ஒன்றாகவும் இருக்கலாம். ஆனால், விடுதலைப் புலிகளின் பலம் ஆயிரம் பேருக்குக் கீழ்தான் இருப் பதாக இலங்கை ராணுவமே சொல்கிறது. அந்த ஆயிரம் பேரால் ரெண்டரை லட்சம் மக்களைக் கட்டுப்படுத்தி வைக்க முடியுமா என்ன?''

''இலங்கைப் பிரச்னை தீரவும் அங்கு மீண்டும் அமைதி திரும்பவும் உங்களுடைய யோசனை என்ன?''

''இரண்டு தரப்புமே ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும். ஆனால், இப்போது இலங்கையில் இருப்பது முதலா ளித்துவ அரசாங்கம். ஆட்சியிலிருப்பவர்கள், மக்கள் தொகையில் 74 விழுக்காடாக இருக்கின்ற சிங்க ளர்களை நம்பித்தான் ஆட்சி நடத்தவேண்டும். இத்தகைய பூர்ஷ்வா அரசாங்கம் மாறாதவரை இந் தப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கிக்கொண்டே இருப்பார்களே ஒழிய... சுமுகமான தீர்வை எழுத விட மாட்டார்கள். தமிழ் சகோதர, சகோதரிகளோடு நாங்கள் சேர்ந்து வாழத்தான் நினைக்கிறோம். எனி னும், அவர்கள் தனிநாடாகப் பிரிந்து செயல்பட நினைத்தால் அதற்கு நாங்கள் ஒருபோதும் குறுக்கே நிற்கமாட்டோம்.''

''இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் பலர் தீக்குளித்து உயிர்க்கொடை கொடுத்துக்கொண்டு இருப்பது பற்றி?''

''இந்திய அரசியல்வாதிகள், குறிப்பாகத் தமிழக அரசியல்வாதிகள் இலங்கை விவகாரத்தில் மகா நடிகர்களாய் இருக்கிறார்கள். கருணாநிதியின் நாடகம் மன்மோகன் சிங்குக்குத் தெரியும்; மன்மோகன் சிங்கின் நடிப்பு கருணாநிதிக்குத் தெரியும். பிரச்னை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்து வதற்காக இங்கிருந்து மாலையில் இலங்கைக்கு வருகிறார் பிரணாப் முகர்ஜி. மறுநாள் காலையில் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்புகிறார். ஓர் இரவுக் குள் அவரால் என்ன சாதித்திருக்க முடியும்? நிம்மதி யாகத் தூங்கிவிட்டுப் போவதற்காகவே பிரணாப் இலங்கைக்கு வந்திருப்பார் போலிருக்கிறது! இவர்கள் அனைவருமே ராஜபக்ஷே, எடுத்த காரி யத்தை எப்போது முடிப்பார் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருப்பவர்கள்.

இன்றைக்கு இலங்கையில் இருக்கும் தேயிலைத் தோட்டங்கள், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி, பெட்ரோல் விநியோக மையங்கள், அலைபேசி சேவை உள்ளிட்டவை இந்திய நிறுவனங்களின் கையில்தான் இருக்கின்றன. நிஜத்தைச் சொல்லவேண்டுமென்றால், இலங்கையை இந்தியாவின் இருபத்தைந்தாவது மாநிலமாகத்தான் நாங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். இலங்கையில் போர் நீடித்தால் அது அங்கிருக்கும் இந்திய முதலாளிகளை பாதிக்கும் என்பதால் இந்தியாவும் எப்படியாவது புலிகளை ஒழித்து போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் துடிக்கிறது. இந்த நாடகங்களை எல்லாம் மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். அதனால்தான் அரசியல்வாதிகளை நம்பாமல் அவர்களே களத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்தத் தீக்குளிப்பு சம்பவங்கள். இந்த இன உணர்வை இனி யார் நினைத்தாலும் கட்டிப்போட்டுத் தடுக்க முடியாது. இந்த உணர்வுப் போராட்டம் இலங்கையில் நடக்கும் தமிழினப் போராட்டத்தோடு இணையும் நாளும் வெகு தொலைவில் இல்லை!'' -தீர்க்கமாகச் சொன்னார் சிறீதுங்க ஜெயசூர்ய.

- குள.சண்முகசுந்தரம்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி --vikatan

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

''இலங்கையிலிருந்து வரும் செய்தி களைப் பார்க்கையில் விடுதலைப் புலிகள் ராணுவத் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறுவது போல் ஒரு தோற்றம் தெரிகிறதே?''

''இதுவரை கெரில்லா தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள், அண்மைக் காலமாக மரபுரீதியிலான போர் முறைக்கு வந்திருக்கிறார்கள். தங்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ராணுவத்தை எதிர்த்து நேருக்கு நேராகப் போரிடும்போது இழப்புகள் தவிர்க்க முடியாததுதான். போதாததற்குப் பிற நாடுகளும் இலங்கைக்கு உதவி செய்வதால் தற்சமயம் புலிகள் பின்வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. அதனால்தான், அவர்கள் மீண்டும் கெரில்லா தாக்குதலுக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

''அப்பாவிப் பொதுமக்களை விடுதலைப் புலிகள், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக சொல்லப்படுவது உண்மையா?''

''அது உண்மையாகக்கூட இருக்கலாம்; அது அவர் களின் இப்போதைய போர் உத்திக்குத் தேவையான ஒன்றாகவும் இருக்கலாம். ஆனால், விடுதலைப் புலிகளின் பலம் ஆயிரம் பேருக்குக் கீழ்தான் இருப் பதாக இலங்கை ராணுவமே சொல்கிறது. அந்த ஆயிரம் பேரால் ரெண்டரை லட்சம் மக்களைக் கட்டுப்படுத்தி வைக்க முடியுமா என்ன?''

இவரது பேட்டியை நேற்று கலைஞர் தொலைக்காட்சியிலும் பார்த்தேன்

Edited by வசி_சுதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.