Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்ப்பு காட்டினால்தான் எதிர்காலம் - அமெரிக்கப் புரட்சி சொல்லித் தந்த பாடம்-மு.தமிழ்ச்செல்வன்

Featured Replies

பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவைக் காலனியாக்கத் தொடங்கின. பிரான்ஸ், ஹாலந்து, ஸ்பெயின், இங்கிலாந்து முதலிய நாடுகள் இதில் ஈடுபட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவிலருந்து பிரான்சை இங்கிலாந்து வெளியேற்றியது ஹாலந்து கட்டுப்பாட்டிலிருந்த நியூ நெதர்லாந்து என்ற பகுதயை எடுத்துக்கொண்டு

அதற்கு நியூயோர்க் என்று இங்கிலாந்து பெயரிட்டது. இவ்வாறு அமெரிக்காவில் இங்கிலாந்து பதின்மூன்று காலனிகளை அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் கொண்டிருந்தது.

நிலமற்ற விவசாயிகள் மதச் சுதந்திரம் வேண்டுவோர், முதலாளிகள், வணிகர்கள் என்று இப்பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். வடபகுதியில் தொழில்களும், தென்பகுதியில் வேளாண்மை மற்றும் தோட்டங்களும் வளர்ந்தன. ஓவ்வொரு காலனியும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டிருந்தது. அது வரிகளை விதிப்பது, சட்டங்களை இயற்றுவது என்று செயற்பட்டது. அதே சமயம் காலனிகள் இங்கிலாந்தின் அரசிற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டிய அவசியம் இருந்தது. இங்கிலாந்தின் சட்டங்கள் காலணிகளில் நலனுக்குப் புறம்பாக அமைந்தவேளை இங்கிலாந்து எதிர்த்து சுதந்திரம் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.தனிநாடுக்கு கோரிக்கையெழுந்தது.

இங்கிலாந்தின் பொருளாதாரக் கொள்கையின் காலணிகளுக்கு சாதகமாக இல்லை. வணிகத்தில் இங்கிலாந்து கப்பல்களையே பயன்படுத்தக் கட்டாயப் படுத்தப்பட்டது. புகையிலை, பருத்தி, சர்க்கரை போன்ற பொருட்கள் இங்கிலாந்துக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. இரும்பு நூற்பு போன்ற தொழிற்சாலைகளைத் தொடங்கவும் தடைவிதிக்கப்பட்டது. இவை யாவும் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது.

இவ்வாறு காலணிகளின் சுதந்திரத்தை இங்கிலாந்து கட்டுப்படுத்தியது. காலணிகள் அமெரிக்காவின் மேற்குப் பகுதிக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது. காரணம் இங்கிலாந்து பணக்காரரர்கள் காலணிய விவசாயிகளிடமிருந்து வாடகை வசுலித்து வந்தனர். எனவே பொது இடங்களுக்கு அவர்கள் சென்றுவிட்டால் வருமானம் குறைந்து விடும் என்று கருதி தடைசெய்யப்பட்டது.

ஐரோப்பாவில் தொடர்ந்து ஏற்பட்ட போரினால் இங்கிலாந்தின் கடும் சுமை அதிகரித்தது. வருவாயைப் பெருக்கும் நோக்கில் 1965 இல் முத்திரைச் சட்டம் கொண்டு வரப்பட்டு காலணிகளில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. இது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியதால் இங்கிலாந்துப் பொருட்களை புறக்கணித்தனர். வரி வசுலிப்பவர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் காலணியின் பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில் காலணிகள் மீது வரி விதிக்கும் உரிமை இங்கிலாந்துக்குக் கிடையாது என்று எதிர்ப்புக் கிளம்பியது. இக்கால கட்டத்தில் மனிதரின் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு எழுந்தது ஜான்லாக் ஹரிங்டன் மில்டன், ஜெஃபர்சன், தாமஜ் பெய்ன் ஆகியோரின் கருத்துக்கள் இதற்குத் துணை புரிந்தன.ஆதிக்க அரசை எதிர்கும் துணிவை இக் கருத்துக்கள் அழித்தன.

மாசசுசெற் காலணித் தலைவர்கள் ஒரு கூட்டத்தை கூட்டி பிரதிநிதித்துவம் இல்லாது வரி கிடையாது என்ற கோரிக்கையை எழுப்பினர். இங்கிலாந்துப் பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு முத்திரைச் சட்டத்தை விலக்கிக் கொண்டது.ஆனால் பொருட்களின் மீதான வரியை அதிகரித்தது. இறக்குமதி பாதியாகக் குறைந்ததன் விளைவாக வரிகள் விலக்கிக் கொள்ளப்பட்டு தேயிலை மீதான வரி மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1773 இல் இங்கிலாந்து கப்பலில் வந்த தேயிலையை இறக்க அமெரிக்கர்கள் மறுத்தனர். கப்பலில் ஏறி தேயிலை மூட்டைகளை கடலில் தள்ளினர். இது பாஸ்டன் டீ பார்ட்டி மற்றும் (பாஸ்டன் தேநீர் விருந்து ) என்று அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஸ்டன் துறைமுகம் மூடப்பட்டது. மற்றக் காலணிகளும் இங்கிலாந்துக்கு எதிராக கிளர்ந்தன.

1774இல் 13 காலணிகளும் பிலடெல் பியாவில் ஒரு மாநாட்டைக் கூட்டினர். தங்களின் ஒப்புதல் இல்லாமல் இங்கிலாந்து அரசு வரி விதிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. காலணிய எதிர்ப்பை ஒடுக்க இங்கிலாந்து அரசர் படைகளை அனுப்பினார். 1775 இல் லெக்ஸிடன் என்ற இடத்தில் முதல் மோதல் நடந்தது. 1776 ஜூலை 04 இல் நடந்த இரண்டாவது மாநாட்டில் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் உருவானது. அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர். பறிக்க முடியாத உரிமைகள் படைத்தவனால் அழிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை, சுதந்திரம், இன்பநாட்டம் ஆகியவை முக்கிய அடிப்படை உரிமைகள் என்று அந்தப் பிரகடனம் அறிவித்தது. அதிகாரத்தின் ஆதாரம் மக்களே என்று தங்களின் அரசை அமைக்க தங்களுக்கு உரிமை உண்டு என்றும் அப்பிரகடனம் அறிவித்தது. அதிகாரத்தின் ஆதாரம் மக்களே என்றும் தங்களின் அரசை அமைக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும் அப்பிரகடனம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க விடுதலைக்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அமெரிக்கப் படையை நடத்தும் பொறுப்பை ஜொட்வொசிண்டன் ஏற்றார். முதல் சண்டை பாஸ்டனைச் சுற்றிநடந்தது. பிரான்சும் அமெரிக்கப் படைக்குத் துணை புரிய தனது படைக் கலங்களையும் அனுப்பியது. ஸ்பெயின் மற்றும் ஹாலந்தும் மற்ற இடங்களில் இங்கிலாந்துடன் போர் புரிந்து வந்தன. இங்கிலாந்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. அயர்லாந்திலும் கலவரம் ஏற்பட்டது. அமெரிக்காவுடன் நடந்த போரில் இங்கிலாந்து தோற்று 1781 சரணடைந்தது. இங்கிலாந்தின் படைத் தளபதியாக அப்போது ஹரன் பாலிஸ் இருந்தார். 1783 இல் பாரிஸில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டு அமெரிக்காவின் 13 காலணிகளின் விடுதலையை இங்கிலாந்து அங்கீகரித்தது.

பிலாடல் பியாவில் மற்றுமொரு மாநாடு கூட்டப்பட்டு 1789 புதிய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் கூட்டாட்சி குடியரசாக மாறியது. அரசமைப்புச் சட்டத்தை சீர்திருத்தும் நோக்கில் உரிமைகள் மசோதா என்று பத்துசட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதன் மூலம் அமெரிக்கக்குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. இது உலகில் முதலில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டமாக விளங்குகிறது கறுப்பர்கள், அமெரிக்க இந்தியர்கள், பெண்கள் ஆகியோருக்கு வாக்குரிமை பல ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் பல்வேறு அடக்குமுறைக்கு அப்பால் அமெரிக்கர்கள் காட்டிய எதிர்ப்புத் தான் இன்றைய சுதந்திர அமெரிக்காவாக எழுந்து நிற்கிறது. இங்கிலாந்தின் காலணியாக இருந்த அமெரிக்கா இன்று உலக வல்லரசாக நிமிர்ந்துள்ளது.இதற்குக் காரணம் அன்றைய அமெரிக்கர்களின் அடக்குமுறைக்கு அடங்கிப் போகாத மனநிலையே உலகில் அடக்குமுறைக்கு எதிர்ப்புக்காட்டிய சமூகங்களே சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கின்றன. இதனை அமெரிக்கப்புரட்சி மட்டுமல்ல உலகில் இதுவரை நடந்துள்ள புரட்சிகளும் போர்களும் இதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது. எதிர்ப்புக் காட்டுபவர்களுக்கே எதிர்காலம் என்பது உலகவிதியாக மாறிவிட்டது.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

Edited by தராக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.