Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!

Featured Replies

கருத்துப்படத்தை காண இங்கே சொடுக்கவும்

நீதிபதிகளை இவ்வாறு சித்தரிப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகிவிடுமோ? ஆகலாம். “நீதிபதியை அடிப்பது அவமதிப்பில்லை. அடித்ததை சொன்னால் அவமதிப்பா?” என்று கேட்கிறீர்களா - அது அப்படித்தான். சாக்கடைப் பிரச்சினை, குப்பைத் தொட்டிப் பிரச்சினைகளை suo moto வாக (யாரும் மனுச்செய்யாதபோதிலும தானே முன்வந்து) எடுத்துக் கொண்டு நீதி வழங்குபவர்கள் நீதியரசர்கள்.

பிப் 19 அன்று தானே அடிபட்ட பிரச்சினையில் “தானே முன்வந்து’ போலீசாரைக் கைது செய்யும்படி அவர்கள் ஆணை பிறப்பிக்கவில்லை. அப்படிப் பிறப்பித்திருந்தால் வழக்குரைஞர் போராட்டம் தேவையில்லை. இரகசியமாக அடி வாங்கியிருந்தால் கூட பரவாயில்லை. டி.வி காமெரா முன் உலகறிய அடிவாங்கியும் நீதித்துறை தன் ஆதிகாரத்தை செலுத்த மறுக்கிறது. சு.சாமியை முட்டையால் அடித்த பிரச்சினையில் வழக்குரைஞர்கள் மீது “கொலை முயற்சி” வழக்கு போட்டிருக்கிறது போலீசு. ஆனால் நீதிபதிகளைக் கட்டையால் அடித்த பிரச்சினையில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இதெல்லாம் கற்றுணர்ந்த நீதிபதிகளுக்குத் தெரியாதா? உச்ச நீதிமன்றத்துக்குப் புரியாதா? இந்த மவுனத்தை என்னவென்று புரிந்து கொள்வது? போலீசுக்கு நீதித்துறை பயந்துவிட்டது என்று சொல்லலாம். அது ஓரளவு உண்மை. ஆனால் முழு உண்மை அல்ல. சட்டமன்றம், நிர்வாகம், போலீசு, நீதித்துறை, சுதந்திர ஊடகங்கள் என்ற “ஜனநாயகத்தின் தூண்கள்” தனித்தனி நிறுவனங்கள் போலவும், ஒன்றை ஒன்று கட்டுப்படுத்துவதன் மூலம், இந்தத் தூண்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் கூறிவருகிறது ஆளும் வர்க்கம்.

உண்மை அதுவல்ல, அவை அனைத்தும் ஒரே அரசு எந்திரத்தின் பல கரங்கள்தான் என்பது இப்போது விளக்கமாகியிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்காகத் தொடங்கிய வழக்குரைஞர் போராட்டம் ‘வரம்பு மீறுவதை’ அரசின் எந்தக் கரமும் விரும்பவில்லை. அதன் விளைவுதான் தாக்குதல். தாக்குதலில் தாங்களே அடிபட்ட போதும் கூட நீதிபதிகள் சாதிக்கும் பெருந்தன்மையான மவுனத்திற்குக் காரணம், நாளை அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய பதவிகளோ, பதவி உயர்வுகளோ மட்டும் அல்ல. அவர்களுடைய மவுனத்திற்குக் காரணம் பொதுநலன். இந்த மோதல் ஒரு அரசமைப்பு நெருக்கடியாக மாறிவிடாமல் தடுப்பதன் மூலம் இந்த ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவர்களுடைய ‘பொதுநலனக் கண்ணோட்டம்’.

இந்தப் பொதுநலக் கண்ணோட்டத்தின் உண்மையான பெயர் போலீசு இராச்சியம். சீமான் என்.எஸ்.ஏவில் கைது, கொளத்தூர் மணி கைது, சோனியாவை சேலை கட்டிய முசோலினி என்று பேசியதற்காக நாஞ்சில் சம்பத் கைது, வினவு கருத்துப் படத்திற்காக கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்களுக்கு பிணையில்லை, கல்லூரி மாணவரிடம் பிரச்சாரம் செய்ததற்காக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் கைது… இவையெல்லாம் ஈழ ஆதரவுப் போராட்டங்களின் மீதான ஒடுக்குமுறைகள் மட்டுமல்ல. போலீசு இராச்சியம் தொடங்குவதன் அறிவிப்புகள்.

உயர்நீதி மன்றப் பிரச்சினையில் போலீசைத் தண்டிக்கவேண்டும் என்ற வழக்குரைஞர்களின் கோரிக்கையை எந்த ஓட்டுக் கட்சியும் ஆதரிக்கவில்லை. கருணாநிதியைத் திட்டுவது என்பதற்கு மேல் ஒரு படி கூட யாரும் தாண்டிக் கால் வைப்பதில்லை. அரசின் மற்றெல்லா உறுப்புகளுடைய செயல்பாடுகளையும் மெல்லமெல்ல போலீசு கைப்பற்றிக் கொண்டு வருகிறது. கடைசியாக நீதித்துறையை மேலாதிக்கம் செய்யும் நடவடிக்கையும் இனிதே நிறைவேறியிருக்கிறது.

சிங்கள இராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராக தமிழகம் நடத்திய போராட்டத்தின் முடிவில், போலீசு கொடுங்கோன்மை நிலைநாட்டப் பட்டிருக்கிறது. அங்கே தன்னுரிமைக்காகப் போராடும் குற்றத்துக்காக மீது குண்டுவீச்சு. இங்கே தன்னுரிமையை ஆதரித்துக் குரல் கொடுக்கும் குற்றத்துக்கே தடியடி. அதற்குப் பெயர் இராணுவ ஆட்சியாம்! இதற்குப் பெயர் ஜனநாயகமாம்!

இன்று உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை எதிர்த்து வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தில் இடம் பெறும் முழக்கங்களையும், கேலிச்சித்திரத்தையும் இங்கே உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். இந்தப் போராட்டத்தை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

1 - Sometimes context is everything….”

THE HINDU editorial dtd 7th March 8, 2009 hailing Srikrishna report.

விசாரணைக்கு வந்த ஸ்ரீகிருஷ்ணா, தி.மு.க சார்பு முன்னாள் நீதிபதி மோகன் வீட்டில் விருந்துண்டது ஏன்?

அறிக்கை வெளிவருவதற்கு முன்பே, “ஸ்ரீகிருஷ்ணா எனது நண்பர்” என்றும்”ஐகோர்ட் சம்பவத்தில் வக்கீல் - போலீஸ் இரண்டு பேர் மீதும்தான் தவறு” என்றும் முன்னாள் நீதிபதி மோகன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது எப்படி?

தாமிரவருணிப் படுகொலையை “ஆற்றில் விழுந்து செத்தார்கள்”என்று கூறி நீதிபதி மோகன் அன்று கொடுத்த அறிக்கையும்,இன்று ஸ்ரீகிருஷ்ணா கொடுத்திருக்கும் அறிக்கையும் ‘அசப்பில்’ ஒரே மாதிரி இருப்பது ஏன்?

Yes, SOMETIMES CONTEXT IS EVERYTHING !

2 - “Sometimes context is everything….”

THE HINDU editorial dtd 7th March 8, 2009 hailing Srikrishna report.

2006 முதல் 2008 வரை இலங்கையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் 20 பேர். அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள் அதைவிட அதிகம்.

உலகிலேயே பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் முதலிடம் இராக். இரண்டாவது இடம் இலங்கை.

ஸ்ரீலங்கா மாஸ் மீடியா சொசைட்டி என்ற அரசின் அடிவருடி அமைப்பு 2008 இல் வழங்கிய விருதை இலங்கைப் பத்திரிகையான சண்டே டைம்ஸ் புறக்கணித்தது. அதே அமைப்பு வழங்கிய ‘ஆசியாவின் சிறந்த பத்திரிகையாளர்’ என்ற விருதை

‘இந்து’ ராம் வாங்கிக்கொண்டார்.

சமீபத்தில் இந்து ராமின் பாட்டி இறந்ததற்கு ராஜபக்சே இரங்கல் செய்தி அனுப்பினார்.

Yes, SOMETIMES CONTEXT IS EVERYTHING !

3-“Sometimes context is everything….”

THE HINDU editorial dtd 7th March 8, 2009 hailing Srikrishna report.

சுப்பிரமணிய சாமி முட்டையடி பட்டால் ….. சோ தலையங்கம்

சோ வை மொழிபெயர்த்தால் ……. இந்து வின் ஆவேசக் கட்டுரைகள்

இந்து செய்திகளைத் தொகுத்தால் ……. ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை

” I feel personally vindicated by the factual narration in the Srikrishna report” -Subramanian Swamy, Indian Exp, March, 7

Yes, SOMETIMES CONTEXT IS EVERYTHING !

4

உயர்நீதிமன்ற காவல் நிலையத்தை எரித்தது யார்?

அங்கிருந்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள்

வெடிக்காத மர்மம் என்ன?

எரித்தவர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தி விட்டார்களா?

5

முட்டை அடித்ததற்கு 5 நீதிபதி விசாரணை!

நீதிபதியையே அடித்தால்

எத்தனை நீதிபதிகள் விசாரணை?

6

சு.சாமியின் முகத்தில் முட்டை வழிந்தால் … 356 !!!

வக்கீல்களின் முகத்தில் இரத்தம் வழிந்தால்….

விசாரணைக் கமிஷனா???

கருத்துப்படத்தை காண இங்கே சொடுக்கவும் ; http://vinavu.wordpress.com/2009/03/09/sswamy11/

வினவு தளத்திலிருந்து: http://vinavu.wordpress.com/2009/03/09/sswamy11/

இதன் மறுமொழிகள்: http://vinavu.wordpress.com/2009/03/09/sswamy11/#respond

தொடர்புடைய பதிவுகள்:

தமிழக போலீசை காக்க ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !

நீதிமன்றத்தால் தேடப்படும் போலீசு குற்றவாளிகள் ! படங்கள் !!

போலீசு வக்கீல் மோதலல்ல ! ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் !!

வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.