Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் படுகொலைகளை நிறுத்துவது சர்வதேசத்தின் கடமை: அமெரிக்க பொது உரிமைகள் காப்பாளர் ஜேஸ் ஜக்ஸன்

Featured Replies

வன்னியில் ஈழத்தமிழர், ஒரு மனிதப் பேரவலத்தை எதிர் கொண்டிருக்கின்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (All Party Parliamentary Group for Tamils (APPG-T);; உதவியுடன் பிரித்தானிய தமிழர் பேரவையால் ஒழுங்குசெய்யப்பட்ட “உலகத் தமிழர் பேரவை” என்ற சர்வதேச மாநாட்டின் இறுதி நாள் வியாழக்கிழமை 26ம் திகதி மார்ச் மாதம் இலண்டனிலுள்ள Crown Plaza விடுதியில் நடைபெற்றது.

நியூசிலாந்து அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா கனடா வரையான 22 நாடுகளிலிருந்து 45 தமிழ் அறிவாளிகள், துறைசார் வல்லுனர்கள் மற்றும் இளையோர் இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையில் தமிழர் எதிர்நோக்கிவரும் மனித அவலம், அரசின் இன அழிப்பை அம்பலப்படுத்தல், பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வின் அவசியம் மற்றும் சர்வதேச நாடுகளின் பங்குகள் சம்பந்தமாக தங்களுக்குள் கலந்தாலோசித்து முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளரான வணபிதா ஜெசி ஜக்ஸன் அவர்கள் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.

இவருடன் முன்னாள் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரும் பிரித்தானிய பிரதமரின் சிறப்புத் தூதருமான டெஸ் பிறவுண், பிரபு பால்க்கனர், தொழிற்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு(NEC) உறுப்பினர் மைக் கிறிபித்ஸ், மதிப்பிற்குரிய ஜிமி சவில், பிரித்தானிய மற்றும் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்களும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

அனைத்துத் தமிழரல்லாத விருந்தினர்களும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுதிரண்டு தமது பலத்தைப் பிரயோகிப்பதைப் பாராட்டி, தமது அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக சனநாயக வழிமுறைகளைக் கையாண்டுவரும் முக்கியத்துவம் பற்றிக் கருத்துக் கூறியதோடு சிறிலங்காவில் தமிழர் எதிர்கொண்டுவரும் அனர்த்தமானது தனித்துவமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று எனவும் கூறினர். சுடானிலுள்ள டாபோர் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா போன்றல்லாது இன அழிப்புப் போர் கடுமையடைய முன்னரே தமிழர் பகுதிகளிலிருந்து சாட்சிகளாகக் கூடிய, ஊடக மற்றும் மனிதநேய அமைப்புகள் வெளியேற்றப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டது.

வன்னியில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலம் தொடர்பாக அனைத்துலகம் காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதது குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைவதோடு சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவது இனப்படுகொலை தான் என்பதையும்; தமிழர் சம்பந்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் உரித்துடையவர்கள் என்பதனையும்; தாங்கள் சுதந்திரமாகவும் இறைமையோடும் வாழக் கூடிய தமிழீழத்தை அமைக்குமாறு தமிழர்கள் வழங்கிய ஆணையையும்; தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக் கொள்ளுமாறு மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் ஏகமனதாக கேட்டுக் கொண்டனர்.

  • அனைத்து கொலைகளும் தமிழ் மக்களுக் கெதிரான அனைத்து தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப் படவேண்டும்.
  • வன்னியில் தேவைப்படும் மனிதாபிமான பணிகள் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும்.
  • ஐ.நா அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் செஞ்சிலுவைச் சங்கம் தமிழ் மக்களுக்கான தங்களது பணியினை மீளவும் நிரந்தரமாக அங்கிருந்து மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
  • உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • போர் நிறுத்தத்தை தொடர்ந்து தமிழ் மக்களின் சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் திர்வுக்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்

ஆகிய தீர்மானங்களும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

நிறைவாக, ஆங்கில தமிழ் ஊடகவியலாளருக்கான ஊடகவியலாளர் மாநாடொன்றும், மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பிரதிநிதிகளால் நடாத்தப்பட்டது. தங்களது மக்களின் விடுதலை வாழ்வுக்காக ஒன்றாக ஒரே குரலில் குரல் கொடுப்போம் செயற்படுபோமென்ற உறுதியுரையோடு மாலை 5 மணியளவில் மாநாடு நிறைவு பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் மூத்த பொது உரிமைகள் காப்பாளர் வணக்கத்துக்குரிய ஜேஸ் ஜக்சன், இலங்கையில் படுகொலைகளை நிறுத்துவது சர்வதேசத்தின் கடமை என தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் மாநாட்டில் பங்கேற்ற அவர், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்தநிலையில் இது தொடர்பாக சர்வதேச மட்டத்தின் தெளிவாக்கலை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

பிரச்சினைகள் யாவும் சிந்தித்து தீர்க்கப்படவேண்டும்,அவை துப்பாக்கி சூட்டினால் தீர்க்கப்படமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைக்கு மேலே துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்து கொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. எனவே இலங்கையில் யுத்த நிறுத்தம் அவசியமானதாகும் என வணக்கத்துக்குரிய ஜேஸ் ஜக்சன் வலியுறுத்தியுள்ளார்

வட அயர்லாந்திலும் தென்னாபிரிக்காவிலும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டமைக்கு பொது அமைப்புகளின் பங்கு குறித்து அவர் உரையாற்றினார்

எனவே இலங்கைப்பிரச்சினை விடயத்தில் தமது அமைப்பு உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்

ஏற்கனவே இலங்கையில் யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன், பிரித்தானிய பிரதமர் கோடன் பிரௌன் போன்றோர் அழைப்பு விடுத்துள்ளமையை ஜக்சன் சுட்டிக்காட்டினார்.

கிளர்ச்சிகள் ஒவ்வொன்றும் மற்றும் ஒரு கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதேபோல வெற்றியானது இன்னும் ஒரு வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையிலேயே அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் சர்வதேச சட்டங்கள் கடைப்பிடிக்கப்படவேண்டும் மனித உரிமைகள், மற்றும் சுயநிர்ணய உரிமைகள் உட்பட்ட பொருளாதார நீதி கடைப்பிடிக்கப்படவேண்டும் என்றும் வணக்கத்துக்குரிய ஜெஸ் ஜக்சன் தமது உரையில் கோரிக்கை விடுத்தார்.

Jesse_Jackson_Tamil_conf_78317_200.jpg

Jesse_Jackson_Tamil_conf_2_78313_44.jpg

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாநாடு இரகசியமாகவா நடத்தப்பட்டது? இது பற்றிய அறிவித்தல் ஒன்றும் மாநாட்டிக்கு முன் ஏன் வெளி வரவில்லை? இவ் மாநாட்டுக்கு வெளியார் ஒருவரும் சமூகமளிக்கவில்லையா?

ரதி அது என்ன? எப்பவும் கேள்வியாகவே உங்களுடைய கருத்தை முன்வைக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள்,கூட்டங்கள் நடத்துவது புலம் பெயர் நாட்டில் அனைத்து மக்களும் புலிகளுக்கும் தேசியத்திற்கும் ஆதரவு என்பதை உலகுக்கு காட்டத்தான் அத்தோடு மிக முக்கியமாக மக்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகும் அதற்கு எவ்வளவு மக்கள் அதிகமாக போகுறார்களோ அவ்வளவுற்கு அவ்வளவு நல்லது என்பது எனது கருத்து. ஆனால் லண்டனைப் பொறுத்த வரை ஒன்று தாங்களே கூட்டத்தை ஒழுங்குபடுத்தி விட்டு தாங்கள் மட்டும் செல்வார்கள். அல்லது அடுத்த நாள் கூட்டம் என்றால் முதல் நாள் தான் அறிவிப்பார்கள் அப்படி என்றால் வேலைக்கு போறவர்கள் தீடிரென வேலைக்கு லீவு எடுத்து என்னென்டு போறது? முதலே அரசிடம் அனுமதி பெற்று தானே செய்கிறார்கள் அனுமதி பெற்றவுடன் மக்களுக்கு அறிவித்தால் என்ன? மற்ற நாடுகளில் ஆர்ப்பாட்டம் என்றால் இணையங்களில் முதலிலே இணைத்து விடுவார்கள் ஆனால் லண்டனில்? சம்மந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

நான் இந்த மாநாட்டை மட்டும் வைத்து இக் கருத்தை எழுதவில்லை இது எனது ஆதங்கம் தப்பாயின் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள்,கூட்டங்கள் நடத்துவது புலம் பெயர் நாட்டில் அனைத்து மக்களும் புலிகளுக்கும் தேசியத்திற்கும் ஆதரவு என்பதை உலகுக்கு காட்டத்தான் அத்தோடு மிக முக்கியமாக மக்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகும் அதற்கு எவ்வளவு மக்கள் அதிகமாக போகுறார்களோ அவ்வளவுற்கு அவ்வளவு நல்லது என்பது எனது கருத்து.

நீங்கள் சொல்வது சரி ஆனால் அனைவரையும் திரட்டுவது தான் கடினம்.

ஆனால் லண்டனைப் பொறுத்த வரை ஒன்று தாங்களே கூட்டத்தை ஒழுங்குபடுத்தி விட்டு தாங்கள் மட்டும் செல்வார்கள். அல்லது அடுத்த நாள் கூட்டம் என்றால் முதல் நாள் தான் அறிவிப்பார்கள் அப்படி என்றால் வேலைக்கு போறவர்கள் தீடிரென வேலைக்கு லீவு எடுத்து என்னென்டு போறது? முதலே அரசிடம் அனுமதி பெற்று தானே செய்கிறார்கள் அனுமதி பெற்றவுடன் மக்களுக்கு அறிவித்தால் என்ன? மற்ற நாடுகளில் ஆர்ப்பாட்டம் என்றால் இணையங்களில் முதலிலே இணைத்து விடுவார்கள் ஆனால் லண்டனில்? சம்மந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

எமது போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் போது அங்கு சிங்கள மக்களும்(பேரினவாதிகளும்) அவர்களுக்கு வால் பிடித்து திரியும் ஒட்டுக்குழுக்களும் வாழ்கிறார்கள் பல நாட்களுக்கு முதலே எமது போராட்டம் பற்றிய அறிவிப்பை தந்துவிட்டு போராட்டம் நடத்துவோமானால் அந்த திகதியிலேயே அதே இடத்திலேயே அவர்களால் எமக்கு ஏதிரான போராட்டத்தை நடத்துவதற்கு அவர்கள் இருக்கும் அரசிடம் அனுமதி பெறமுடியும் ஆகவே அவர்கள் அனுமதி பெறுவதற்கு நாம் கால அவகாசத்தை வழங்கக்கூடாது,எமது போராட்டத்துக்கு ஏதிராக ஏதாவது போராட்டம் நடக்குமானால் அதனால் சிக்கல்கள் அதிகமாகும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.தேவையற்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காகத்தான் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதே தவிர வேண்டும் என்று யாரையும் புறக்கணிப்பதற்காக அல்ல அத்தோடு இது பெரும்பாலும் எமக்கு சிக்கல் உள்ள நாடுகளில் அமுல்படுத்தப்படுகிறது லண்டனில் மட்டுமல்ல. இந்த போராட்ட திகதிகளை பற்றி ஓரளவு அறிந்துகொள்வதற்கு போராட்டத்தை லண்டனில் யார் யார் ஒழுங்குபடுத்துகிறார்களோ அவர்களோடு நேரடி தொடர்பை கொண்டிருங்கள் அத்தோடு மிகவும் அவதானமாக இருங்கள் ஏனென்றால் எம்மிடையே துரோகிகளும் உள்ளார்கள்.

தயவுசெய்து தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை புரிந்துகொண்டு அனைவரும் புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் நடப்பதையே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணா நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.நான் சம்மந்தபட்டவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.