Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பாடாகாது.

Featured Replies

அச்சமில்லாமல் எதையும் ஒப்பேற்ற முடியாதவர்கள் முகத்திற்கு அஞ்சி வேசையாடுவதற்கு சமம்.

போராட்டம் என்றால் என்னவென்பதை முழுமையாக

அறியாதவர்களின் இந்தக்கூச்சல், போலித்தனமானதாகவே எனக்குப்படுகின்றது வலியில்லாத பிறப்பு ஏதும் பூமிப் பந்தில் உண்டா?

எதையும் இழக்காமல் அத்தனையையும் அடையும் ஆசை. நடைமுறையில் எத்துணை சாத்தியம், ஒன்றை இழந்தால்தான் மற்றென்று உயிர் வாழும் என்ற மிகவும் சாதாரண வாழ்வு நிலையை புரிந்து கொள்ளவாமுடியவில்லை?.

இந்த மன வலியில்லாத உண்மையை சாதாரண இந்த மனிதனாலே ஏற்கமுடியவில்லை என்பது எத்தனை அபத்தமானதோ அத்தனை அபத்தமானது இத்தனையும் தேவை என்பது, இலங்கையின் சுதந்திரம் எந்த இழப்புக்களும் இல்லாமல் கிடைத்த மாதிரி தமிழனின் சுதந்திரம் அப்படிக் கிடைக்குமா? நமது காலத்தில் நடந்த விடுதலை போராட்டத்தில் எரித்திரியாவை எடுத்துக்கொண்டால், ஏதும் வேண்டாம் அண்மையில் கொசவோவிற்கு கிடைத்த சுதந்திரம் சும்மா ஒற்றைக்காலில் தவம் கிடந்து கிடைத்ததா?

இந்த நாடுகளில் எல்லாம் பொதுமக்கள் இறக்கவில்லையா? அல்லது போராளிகள் கொன்று குவித்தார்களா? சுதந்திரப்போர் ஒன்றும் கத்தரிக்காய் இல்லை என்பது படிக்காதவர்களிற்கு புரியாதது ஒன்றும் புதினமில்லை என்று சப்பைக்கட்டு காரணங்கள் தேடி ரணப்படுவதை விட்டு யதார்த்தத்தை சீரணிக்க தெரியவேண்டும்.

எந்த நாட்டில் விடுதலை போராட்டத்தை நசுக்கவதற்கும் அந்தந்த நாட்டின் அரசாங்கம் கண்மூடித்தனமாக தாக்குவதும், போராட்ட ஆதரவாளர்கள் என்ற கோதாவில் பொது மக்களை அழிப்பதும், அதன் மூலம் போராட்ட ஆதரவை அழிக்க நினைப்பதும் ஒன்றும் பரம ரகசியம் இல்லை. இதோ இன்றும் பலஸ்தீன போராளிகளைப் பிரித்தா இஸ்ரவேல் வான், மற்றும் இதர தாக்குதலை பொதுமக்கள் மேல் நடத்திக்கொண்டிருக்கின்றது.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போதும் இதுதான் நிலை ஆக அந்த நாட்டில் இருந்து ஆயுத, மற்றும் ஏராளமான அழிவுக்காவியை வாங்கிய இலங்கை அரசு வேறென்ன செய்யும். நான் ஒன்றும் இதை ஆதரிக்கவில்லை, ஆயினும் உண்மைகளை கள யதார்த்தத்தை ஏற்கவேண்டிய நிலையை உள் வாங்கி தந்த அவலத்தை அவனிற்கே கொடுக்கவேண்டிய காலக் கடமையை நிறைவாக செய்வதற்கு எம்மை தயார்படுத்தி நாம்தான் எங்களிற்கு எல்லாமே,

எந்த நாடாவது எங்களிற்கு ஏதும் செய்யவேண்டும் என்ற நடைமுறையற்ற நிலையை கடந்து நாமே எம் நிமிர்வுகளை அடையாளப்படுத்தியே ஆகவேண்டும். இனியாவது என்ற சொல்லை அகராதியில் இருந்து அழித்து விட்டு எமக்கான காலப்பணியை இன்னமும் மேம்பாக நெறிப்படுத்தி விடுதலைக்கான பணியை வீச்சாக்க உறுதி பூணுங்கள். பேச்சில் அல்ல மூச்சில், செயலில், அழுதழுது பிள்ளை அவளே பெற வேண்டும். எங்களிற்கான சுய நிர்ணயத்தையோ, அன்றி தேசியவிடுதலையையோ எந்த பலவானும் எங்களிற்கு தூக்கி தரமாட்டான் என்பதான யதார்த்த்திற்குள் ஆன்மபலத்தோடு நுழைவோம். களப் போராளிகளிற்கு, எமதான தேசியத் தலைவனிற்கான தேசிய பங்களிப்பை நுண்மையாக, நேர்மையாக, எமதான நன் நம்பிக்கையை எந்த நிலையிலும் தளரவிடாமல்,அகத்தூய்மையோடு அரங்கேற்றுவோம்.

களப்பலியான எம் விடுதலை வீர்ர்களிற்கும், அராஜகமாக இலங்கை பேரினவாதிகளால் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்ட எங்கள் பொதுமக்களிற்கு நமதான மானசீகமான அஞ்சலிகள், பிறக்கும், மலரும் தமிழீழம் தான் என்பதை ஒவ்வொரு கணமும் நீறு பூத்த, கங்குலாக எப்போதும் எமதான நினைவில், செயலில், உறுதியில் இழையோடவிட்டபடியே காலப் பணியை தொடர்ந்தும் முன்னெடுப்போம். சில நாய்கள் குலைப்பதற்காக கல்லெறிந்து காலத்தை கடத்தாமல், முல்லையில் இருந்து ஆரம்பிக்கப்போகும் ஆழ�

�ானவிடுதலையின் வீச்சு உதிர்விற்கானதல்ல என்பதை இனி வரும் காலம் ஊன்றி அறைந்து இகத்திற்கு இயம்பப்போகும் ஆரோக்கியகாலம் தலைவனால் இத்தரணியில்உருவாகும். அது வெறும் ஊகத்தினால், ஏற்படும்மாற்றம்இல்லை .உறுதியின்இருப்பிடங்களினால், விழ,விழ எழுவதும்,ஒன்று விழ ஓராயிரமாய் எழுந்துதலும், அனேகமாக களத்தில் விரைவில் ஆதார்சமாகப் போவதை காலம் திடமாக முன்வைக்கும்,வீராப்பு வார்த்தைகளை தலைவன் என்றுமே உதிர்த்தில்லை,சொல்லிற்கு முன் செயல். புலிகளின் தாரகசெயற்பாடு இங்குதான் எப்போதும் மையங்கொள்வதை கடந்த காலம் கற்க வைத்த பாடமாகும்.

ஒரு ஸ்டாலின் கிராட்,வியட்நாம் ஆகிய போர்க்களங்கள் தற்போதைய எமதான நிலைகளைகடந்தே விரபூமியை தம் வசமாக்கியது.எதிரிகள் எப்போதும் எங்களை சுற்றி நிற்கத்தான் போகின்றார்கள்,இந்த எதிரிகள் என நான் இங்கே குற்றிக்காட்ட விழைவது எமதான சமூகத் துரோகிகளைத்தான், வெறும்பேச்சிற்கு கூறவில்லை , இவைகள்எலாம்எமதானவெற்றியின் பின்னால் கால வெள்ளத்தில் அடியுண்டு போகத்தான் போகின்றார்கள்.

எங்களது துர்அதிஸ்டம் எங்களில் வசிட்டர்களைவிட நக்கீரர்களே அதிகம். நான் இங்கே குறிப்பிட்ட நக்கீரன்கள் பாடு பொருளையே பிழையென்று வாதிடும் போக்கற்றவர்கள். அக்கால நக்கீரன் சொற்பிழையை ஏற்றுக்கொண்டு பாடுபொருள் பிழையென்று வாதிட்டு சிவனையே எதிர்த்தவன்.ஆதலால் எரியுண்டவன்,ஆயின் இதோ எம் இக்கால அவலங்களிற்குள்ளும்,எம்மை, எமதான தாய் நிலத்தை,நிலமீட்பிற்கான ஆழமான போராட்டத்தை,ஆளுமைமிக்க தலைவனை,எந்த ஒப்பீட்டிற்கும் உவமையில்லா எமதான பெருந்தகையான மாவீர்ர்களுடைய தியாகத்தை,இகழும் இந்த இவர்களை காலம் மறப்பதற்குள் எமதான காலச் சூரியர்கள் மன்னிப்பார்களா?இது ஒன்றும் வசைபாடும் நேரமில்லைதான் என்று ஒவ்வொருவரும் ஒதுங்கி,ஒதுங்கியே இதுகளை வளரவிட்டபொறுப்பு எங்களையும் சாரும்.

இது ஒன்றும் தட்டி கழிக்கக்கூடிய விடயமில்லை,ஆதலால் இதனால் விழைந்த பாரியபக்க விழைவுகளை நிலம்+புலம் வாழ்,ஈழத்தை நேசிக்கக்கூடிய நாங்களும் அனுபவிக்கின்றோம்,மேலும் விளக்கவேண்டிய வினை இல்லையென்றே ஆழமாக நம்புகின்றேன்.ஆர்ப்பாரிக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.