Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் இறுதி மூச்சை அடக்குவதற்கு சிறீலங்கா அரசு தயாராகி வருகின்றது: விரைந்து நடவடிக்கை எடுங்கள்

Featured Replies

தமிழ் மக்களின் இறுதி மூச்சை அடக்குவதற்கு சிறீலங்கா அரசு தயாராகி வருகின்றது: விரைந்து நடவடிக்கை எடுங்கள்

கடந்த 20 ஆம் நாள் பாரியதொரு இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்ட சிறீலங்கா அரச படைகள் அனைத்துலகத்தின் எதிர்ப்புக்களை எல்லாம் புறம் தள்ளி மீண்டும் ஒரு பாரிய படை நகர்விற்கு தயாராகி வருகின்றன.

கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை அதற்கு பின்னர் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதல்கள் என்பவற்றில் சிக்கி ஏறத்தாள 2500 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 5,000 இற்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் தற்போது அதனை விட பாரிய ஒரு நடவடிக்கைக்கு படைத்தரப்பு தயாராகி வருகின்றது.

முன்னைய சமரில் அழிவடைந்த முதலாவது மற்றும் இரண்டாவது சிறப்பு படையணிகளை மூன்றாவது மற்றும் நான்காவது சிறப்பு படையணிகளை கொண்டு மீள புனரமைத்துள்ள இராணுவம் அதனை வன்னி களமுனைக்கு நேற்று நகர்த்தியுள்ளது.

அது மட்டுமல்லாது வான்படையின் உச்ச பலத்தை கொண்டு கடந்த இரு தினங்களில் அறுபத்தைந்துக்கு மேற்பட்ட வான் தாக்குதல்களை வன்னி பகுதியில் மேற்கொண்டுள்ளது. சிறீலங்கா வான்படையின் மிக்-27 மற்றும் கிபீர் தாக்குதல் விமானங்கள் மேற்கொண்ட இந்த தாக்குதல்களின் போது ஏறத்தாள 300 மெற்றிக் தொன் எடை கொண்ட வெடிகுண்டுகளை வான்படையினர் பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது கொட்டியுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

மக்கள் செறிவாக வாழும் பிரதேசத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என்ற அனைத்துலகத்தின் நிபந்தனைகளை புறம் தள்ளியுள்ள அரசு அனைத்துலக சமூகம் விடுத்த போர் நிறுத்த கோரிக்கைகளையும் புறம்தள்ளியுள்ளதுடன், விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர் நிறுத்த கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை இராணுவம் தனது சகல வளங்களையும் பயன்படுத்தி பாரிய தாக்குதலை நடத்தலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சிறீலங்கா அரசு அனைத்துலகத்தின் கோரிக்கைகளை தொடர்ச்சியாக முற்றாக புறம் தள்ளி வருவதனால் கனரக ஆயுதங்களையும், இரசாயண ஆயுதங்களையும், வான் தாக்குதலையும் பாதுகாப்பு வலையத்தின் மீது இராணுவம் செறிவாக பயன்படுத்தலாம் என்ற அச்சங்களும் எழுந்துள்ளன.

இவ்வாறு இராணுவம் தனது தாக்குதலை ஆரம்பிக்குமாக இருந்தால் பல பத்தாயிரம் மக்கள் குறுகிய நேரத்தில் படுகொலை செய்யப்படலாம், பல ஆயிரம் மக்கள் காயமடையலாம், மேலும் பல ஆயிரம் மக்கள் காணாமல் போகலாம் என்ற பாரிய அச்சங்கள் எழுந்துள்ளன. இந்த தாக்குதல் மூலம் படைத்தரப்பு தமிழ் மக்களின் இறுதி மூச்சை அடக்குவதற்கான இறுதி நடவடிக்கைக்கு தயராகி உள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை (29) ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சிறீலங்கா தொடர்பான விவாதம் கொண்டுவரப்பட்டால் அது சிறீலங்காவுக்கு ஆபத்தானது என்ற கருத்துக்களை தென்னிலங்கை இராஜதந்திரிகள் முன்வைத்துள்ள அதே சமயம், இந்தியாவும் அதனை விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

எனினும் வன்னிப்பகுதியில் கடந்த 90 நாட்களில் 6,432 மக்கள் கொல்லப்பட்டதுடன் 14,000 வரையிலான அப்பாவி மக்கள் படுகாயமடைந்துள்ளதாக ஐ.நாவின் உள்ளக தகவல்கள் வெளிவந்த நிலையில் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சிறீலங்கா தொடர்பான விவாதங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற வாதங்களை ஐ.நாவின் பாதுகாப்புச்சபை உறுப்பு நாடுகளும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களும், மனித உரிமை அமைப்புக்களும் வலுவாக முன்வைத்து வருகின்றன.

எனவே அனைத்துலகத்தின் அழுத்தங்களை புறம்தள்ள முடியாது என உணர்ந்து கொண்ட இந்தியா தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாரயணன் மற்றும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை சிறீலங்காவுக்கு அனுப்பி போரை விரைவாக நிறைவுசெய்யும் ஆலோசனைகளை சிறீலங்காவின் பாதுகாப்பு செய்லாளர் கோத்தபாய ராஜபக்சாவுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எத்தனை தமிழ் மக்கள் கொல்லப்படாலும் தமிழ் மக்களுக்கு எதிரான தனது பகைமையை தற்போது ஆட்சிபுரியும் இந்திரா காங்கிரஸ் கட்சி விடப்போவதில்லை என்பதை அவர்கள் தற்போது மீண்டும் ஒரு தடவை அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.

இலத்திரனியல் தொடர்பு சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தொடர்புகளை மேற்குலகம் உன்னிப்பாக அவதானிக்கும் என்ற காரணத்தினால் தான் இந்திய அதிகாரிகள் நேரிடையாக கொழும்பு சென்று இறுதித்தாக்குதலுக்கான தமது ஆதரவுகளை தெரிவித்ததாக ஐரோப்பிய நாடு ஒன்றை தளமாக கொண்ட ஆய்வாளர் ஒருவர் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இறுதித்தாக்குதல் என இதனை தெரிவித்து வரும் சிறீலங்கா அரசு அதற்கு ஏதுவாக தனது முன்னனி படையணிகள் ஐந்தை முன்னிறுத்தியுள்ளதுடன், அதன் பின்னனி நகர்வுக்கு மேலும் நான்கு படையணிகளையும் தயார் படுத்தியுள்ளது. ஏறத்தாள 40,000 படையினருடன் மேற்கொள்ளப்போகும் இந்த நடவடிக்கைக்கு படைத்தரப்பு பாரிய அளவில் எறிகணைகளை பயன்படுத்தலாம் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன.

45,000 குடும்பங்களை சேர்ந்த 165,000 மக்கள் செறிவாக வாழும் 10 சதுர கி.மீ பரப்பளவினுள் 40,000 படையினர் இரவோடு இரவாக நகர்வை மேற்கொண்டால் மிகப்பெரும் மனித அவலம் வன்னியில் மிகவும் குறிறுகிய நேரத்தில் நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை நிறுத்துவதற்கு உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மக்கள் அவசர வேண்டுகோள்களை விடுத்து வருகின்றனர். பல ஆயிரம் எமது உறவுகளின் உயிர்காக்க நாம் எழுவோம். இந்திய மத்திய அரசின் போர் ஆவலை முறியடிக்க தமிழக உறவுகள் உடனடியான செயற்பாடுகளில் இறங்க வேண்டும்.

தமிழ் மக்களின் குருதியை கொண்டு ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் தனக்கு ஏற்பட போகும் அவமானங்களை கழுவுவதற்கு பேரினவாத சிறீலங்கா அரசும், போர் வெறிகொண்ட இந்திரா காங்கிரஸ் கட்சியும் முயன்று வருகின்றன. அதனை முறியடிக்கும் வல்லமை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடம் தான் உண்டு. எமது இனத்தின் இறுதி மூச்சை காப்பாற்றுவதற்கு நாம் எழுவோம்.

- பதிவிற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறவுகள்

Urgent, Urgent !!!

A credible information was received that we only have a few hours-5-6 at most to prevent a major human catastrophe where upwards of 10,000 people will be killed by the GoSL that is mounting a major sea, air and land offensive in defiance of the world.

Please, Please call the White House, and Susan Rice's office.

WHERE EVER RIGHT NOW, It has to be stopped NOW.

More than 10,000 people will be killed.

Please Please get on the Phone right now.

Phone:

White House - 202 456 1414

Susan Rice - 212-415-4050

- 202 456 1111

Fax:

White House -- 202-456-2461

Hillary Clinton -- 202-647-2283

Susan Rice -- 212-415-4053

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.