Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்காத சாதுர்ய கருணாநிதி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவே அழுத்தமாகச் சொல்லிய பிறகும், அவர் அளித்த விளக்கத்துக்கு புது அர்த்தம் புகுத்தி, போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக மார்தட்டுகிறார், தமிழக முதலமைச்சர் கருணாநிதி.

காலை உணவு நேரத்தில் சென்னை அண்ணா நினைவிடத்தில் வந்தமர்ந்து, படுத்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, மதிய உணவு நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.

இலங்கையில் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு வருகிறது என்ற தகவலை, போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி, நேற்று தனது நீ.....ண்ட ஆறரை மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் கருணாநிதி.

அவர் வீடு திரும்புவதற்குள், இலங்கையில் இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் வெளியாயின.

போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று தமிழர்கள் ஆனந்தத்தில் திளைக்கத் தொடங்கிய தருணத்தில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி இது...

//போர் நடவடிக்கைகள் அவற்றின் முடிவை எட்டியிருப்பதாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கணரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்துவதையும் ஆகாயமார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்வதையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப்படையினர் பணயமாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளோடு தங்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வதோடு பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்திற்கு மிகுந்த முன்னுரிமை வழங்குவர்.//

இதைக் கருத்தில் கொண்டே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சாடியபடி அறிக்கைகள் விடுத்தனர்.

இது நேற்றைய, அதாவது ஏப்ரல் 27-ம் தேதியின் நிலை!

இன்று... ஏப்ரல் 28... இந்திய நேரப்படி மாலை 5.30 மணி...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார், தமிழக முதலமைச்சர் கருணாநிதி.

"இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை; கனரக ஆயுதத் தாக்குதல்கள் தான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன," என்ற கேள்வி எழுப்பப்படுகிறது...

அந்தக் கேள்விக்காக காத்திருந்தது போல் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு ஏ4 தாளை எடுக்கிறார், கருணாநிதி.

"இதோ... உங்களைப் போல் ஒருவர் கேள்வி கேட்டு, இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த விளக்கம் இது..." என்று கூறி, சி.என்.என். ஐ.பி.என். சேனல் பேட்டியில் ராஜபக்சே ஒரு கேள்விக்கு அளித்த பதிலைச் சுட்டிக் காட்டி வாசிக்கிறார்...

"You know, when you say that you are not using heavy weapons and you are not using air attacks, then what is it? It's like almost a ceasefire only. I mean now, soldiers are moving forward. So when you view all this it looks like a real war. But when we are not using heavy weapons then you know what is it? It's not a war. That is what he must have said."

"இப்போது சொல்லுங்கள் போர் நிறுத்தப்பட்டது உண்மையல்லவா?" என்று பெருமிதம் பொங்க பதிலளிக்கிறார், தி.மு.க. தலைவர்!

அப்போது மற்றொரு நிருபர், "இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறதே?" என்று வினவுகிறார்.

அதற்கு இலக்கியச் சுவையுடன் பதிலளிக்கும் கலைஞர், "மழை விட்டும் தூவானம் விடவில்லை" என்கிறார்.

அத்துடன், போர் நிறுத்தம் பற்றிய விளக்கத்தில் இருந்து, ஏனைய விவகாரங்களுக்கான கேள்விகளுக்குத் தாவுகிறார்!

ஆக... தனது உண்ணாவிரதத்தால், போரே நிறுத்தப்பட்டுவிட்டது என்று மீண்டும் ஒரு முறை முழு பூசணியானது ஒரு சில பருக்கைகளில் மறைக்கப்படுகிறது.

இங்கேதான் தமிழக நிருபர்கள் மீது சற்று வருத்தம் ஏற்படுகிறது. காரணம் இதுவே...

கருணாநிதி சுட்டிக் காட்டிய ராஜபக்சேவின் பதிலானது, வேறொரு கொணத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட விளக்கம். ஆனால், அதற்கு முந்தைய கேள்விக்கான பதிலில், 'போர் நிறுத்தம் இல்லவே இல்லை' என்று உறுதிபட தெரிவித்திருந்தார் ராஜபக்சே. இதுபற்றி நிருபர்கள் கேட்டிருந்தால், ஒருவேளை கருணாநிதி சிக்கியிருக்க முடியும். ஆனால், இந்த முறையில் சிக்கவில்லை சாதுர்ய கருணாநிதி.

கருணாநிதிச் சுட்டிக் காட்டிய ராஜபக்சேவின் பதிலை இங்கே கேள்வியுடன் சுட்டிக் காட்டுகிறோம்...

CNN-IBN: The Indian Home Minister P Chidambaram declared that the Sri Lankan government had actually declared a fecation of hostages.

Rajapaksa: You know, when you say that you are not using heavy weapons and you are not using air attacks, then what is it? It's like almost a ceasefire only. I mean now, soldiers are moving forward. So when you view all this it looks like a real war. But when we are not using heavy weapons then you know what is it? It's not a war. That is what he must have said.

சரி... முந்தையக் கேள்வியையும் பதிலையும் இங்கே காண்போம்...

CNN-IBN: So have you instructed your army to ceasefire?

Rajapaksa: No. It is not ceasefire. We are freeing the people who are kept there as hostages. That is my duty. So the army is now only helping the civilians. We want to get the civilians out from them. It was at the Security Council where we finally thought that we have to do this because for the first time we made a statement saying that we are not using heavy weapons and attacks. An area which was called a no-fire zone was declared by the army on a day-to-day basis. So we managed to send them (civillians) to the no-fire zone. And the LTTE also took them there thinking that they can escape from the sea. But now they realised that they can't move forward. But still they are using heavy weapons inside. They have heavy weapons inside the no-fire zone.

இப்போது புரிகிறது அல்லவா?

மிகச் சாதுர்யமான சொல்விளையாட்டு நேர்த்தியால், பிந்தையக் கேள்விகான பதிலை 'போர் நிறுத்த' அறிவிப்பாக கருதிக் கொண்டு விளக்கமளித்துள்ளார், கருணாநிதி.

இந்த சூட்சம பதிலின் பிண்ணனியைத் தெரிந்துகொள்ளாமல், கருணாநிதியிடம் குறுக்கு கேள்வி கேட்காததால், மீண்டும் நாளைய செய்தித்தாள்களின் சிலச் செய்திகள், 'போர் நிறுத்தம்' பற்றிய கருணாநிதியின் பொய்யான தகவலுடன் வெளிவரலாம்!

ஒருவேளை கருணாநிதியின் அகராதியில், ராஜபக்சேவின் பேட்டிக்கான மறைமுக அர்த்தம் 'இலங்கையில் போர் நிறுத்தம்'தான் என்று பாவித்தால்...

இலங்கையில் மறைமுறைமாக அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை, தனது வெற்றியாகக் கருதிக் கொண்டு, ஆறரை மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, மதிய உணவுக்கு வீடு திரும்பியத் தலைவர் என்று வருணிப்பதில் தவறில்லை என்றேத் தோன்றுகிறது.

'சொன்னதைச் செய்த' சாதனைப் பட்டியலில், 'இலங்கையில் போர் நிறுத்தம் கண்ட தி.மு.க. தலைவர்' என்ற விளம்பரத்துக்கு செலவிடப்பட்ட ஆறரை மணிநேரம், கருணாநிதியைப் பொறுத்தமட்டில் நிறைவானதாகவே இருந்துள்ளது போலும்!

சரி... இன்றைய இலங்கை நிலவரம் என்ன?

'ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை: 5,000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்று கோரக்கொலை' என்கிறது புதினம் இணையதளச் செய்தி.

இதுதான் "மழை விட்டும் தூவானம் விடவில்லை" என்பதா?

தொடர்புடைய 'லிங்க்'குகள்

சி.என்.என். ஐ.பி.என். செனலுக்கு ராஜபக்சே அளித்த பேட்டியின் முழு வடிவம்

http://ibnlive.in.com/news/we-want-to-catc...sa/91256-2.html

இன்றைய கோரத் தாக்குதல் குறித்த புதினம் செய்தி

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO2a030Mt3e

நன்றி: http://www.nigazhvugal.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.