Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில் தமிழரின் பொதுசன வாக்கெடுப்பு முடிவுகள்

Featured Replies

ஈழ சரித்திரத்தில் இடம் பெற போகும் ஒரு தேர்தல் இது. நோர்வே வாழ் தமிழர் எவருமே உங்களுக்கு கிடைக்கும் இந்த சந்ர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தவும். இது தொடர்பான விளக்கங்கள் இடம் பெறும் இடங்கள் நகரங்கள் பற்றிய தகவல்கள் பலவும் http://www.tamilvalg.com/ என்ற இணையதள முகவரியில் கிடைக்கும். குறிப்பிட்ட இடங்களில் வசிக்காத மக்கள் தயவு செய்து பலர் சேர்ந்தாவது பயண ஒழுங்குகளை செய்து உங்களுக்கு அருகில் உள்ள நகரங்களில் சென்று வாக்களிக்கவும். மறக்காமல் உங்கள் கடவுசீட்டை எடுத்து செல்லவும். புதிதாக வந்து இன்னமும் அகதி அனுமதி கிடைக்காதவர்கள் உங்களுக்கு பதியும் போது கொடுக்கும் அத்தாட்சியை ( பச்சை புத்தகம் என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்) எடுத்து செல்லவும்.

முக்கியமான சில

1்: உங்கள் விபரங்கள் வயது தவிர எதுவம் பதிய பட மாட்டாது. உங்கள் கையில் மை பூசப் படும் மீண்டும் ஒருமுறை கள்ள வாக்கு போடாத முறையில்.

2: இந்த வாக்கெடுப்பு தமிழர்களால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தாலும் இதை நடத்தப் போகிறவர்கள் நடுநிலமை நோர்வீஜியர்கள்.

3: இது போன்ற வாக்கெடுப்புகள் வேறுபல நாடுகளிலும் முன்னெடுக்கப் படும் சாத்தியம் உள்ளதால் இதன் நம்பகத் தன்மையை கெடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம்.

Edited by வாசகன்

  • தொடங்கியவர்

மூலம்:

http://www.tamilvalg.com/faq.html

கேள்வி-பதில்

ஈழத்தமிழர்களின் தன்னாட்சியையும், இறைமையையும் கோரிநின்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தலுக்கான வாக்களிப்பானது எதிர்வரும் பத்தாம் திகதி நோர்வேயில் நடைபெறவுள்ளது. ஊத்றுப் எனும் நேர்வேஜிய பிரபல பத்திரிகை நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாக்கெடுப்பு சம்பந்தமாக, நோர்வேஜிய போதனா வைத்தியசாலையில் ஆய்வாளராகப் பணியாற்றிவரும் பேராசிரியர் இளங்கோ பாலசிங்கம் அவர்கள், நோர்வேஜிய அரச பெருந்தெருக்கள் திணைக்களத்தின் சிரேஸ்ட பொறியியலாளராகக் கடமையாற்றும் திரு சதானந்தன் மூத்ததம்பி ஆகியோருடனான நேர்காணல்

கேள்வி:

இப்படியான ஒருமுயற்சி எந்தவகையில் ஈழத்தமிழரின் இன்றைய சிக்கல்களுக்குத் தீர்வுதரக்கூடியது என நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்:

ஈழமக்களின் சிக்கல்களுக்குத் தீர்வுகூறும் முயற்சியில் சர்வதேச அரசுகளே சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலை இன்று இருக்கின்றது. ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அரசானது, பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகின்றது என்னும் எடுகோளை வைத்திருக்கின்றது. இதனால் அவர்களால் சரியான தீர்வினைக்காண முடியாமல் உள்ளது. இலங்கையில் ஜனநாயக தேர்தல் என்பது உண்மையான ஜனநாயக தேர்தல் அல்ல. அது எப்போதுமே பெரும்பான்மைச் சிங்கள மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே அமைந்துவந்திருக்கிறது. இது இலங்கையின் அரசியல் அமைப்பின்படி மாற்றப்பட முடியாதது. இவ்வரசியல் அமைப்பின்படி தமிழர்களின் ஜனநாயக கருத்துக்களை வெளிப்படுத்தவோ, உறுத்திப்படுத்தவோ வகையில்லை. இதனால் சர்வதேச நாடுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் உள்ளது. இத்தகைய உறுதிப்படுத்தப்பட்ட வாக்கெடுப்பானது, எமது சிக்கலகளைத் தீர்க்க முயற்சிக்கும் சர்வதேச நாடுகளுக்கு உதவி செய்யும்.

கேள்வி:

இக்கருத்துக் கணிப்புக்கான நடைமுறைகள் எவை? யார் நடத்துகிறார்கள்? யார் வாக்களிப்பார்கள்? யார் கணக்கெடுப்பார்கள்? வாக்களிப்பினையும், வாக்குகள் எண்ணுவதனையும் யார் உறுதிப்படுத்துவார்கள்? எந்த அடிப்படையில் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்?

பதில்:

இக்கருத்துக் கணிப்பானது நோர்வேஜிய பத்திரிகையான

ஊத்றுப் ஊடக நிறுவனத்தினரால் நடத்தப்படுகின்றது.

வாக்களிக்கும் தகுதிபெற்றோர்:

இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களில்@

1991ஆம் ஆண்டும், அதற்கு முன்னரும் பிறந்து நோர்வேயில் வசிப்பவர்கள்

இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களின் சட்டபூர்வ வாழ்க்கைத் துணைவர்கள்.

இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் (தாய் அல்லது தகப்பன் இலங்கைத் தமிழ்ப் பரம்பரையாக இருந்தாலும் பொருந்தும்)

இவ்வாக்கெடுப்பானது, எதுவித பக்கசார்பற்ற நோர்வேஜியர்களைக் கொண்ட குழுவொன்றினால் நடத்தப்படும். இத்தேர்தலானது நேர்மையாக நடைபெறுகின்றதா என்பதனைக் கண்காணிப்பதற்காக நகரசபை உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றோர் அனுமதிக்கப்படுவர். தவிரவும் வாக்குக் கணிப்பின் ஆரம்பத்திலும் முடிவுகளை எண்ணும் போதும் சாவடிகளில் இரண்டு தமிழர்கள் வாக்குக் கணிப்பை பார்வையாளர் சாட்சியங்களாக நின்று பார்வையிடுவர். வாக்கு எண்ணல் வீடியோவிலும் பதிவாகும்.

குறிப்பு:

வாக்களிப்பில் முழுமையான இரகசியம் பேணப்படும்.

வாக்களித்தவர்களின் பெயர்களோ அல்லது அவர்களின் தனிப்பட்ட விபரங்களோ எந்தவகையிலும் பதிவு செய்யப்பட மாட்டாது.

கேள்வி:

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 33 ஆண்டுகள் கடந்து விட்டன. இதற்கிடையில் உலகிலும், இலங்கைத்தீவிலும் மாற்றங்கள் பல ஏற்பட்டுவிட்டன. மீளவும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு குறிப்பான காரணங்கள் ஏதாவது உண்டா?

பதில்:

ஆம், முதலாவது

ஒவ்வொரு தலைமுறையினரும் தத்தமது காலத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் இச்சிந்தனையில் உள்ளார்களா என்பதற்கு இவ்வாக்கெடுப்பானது உதவும்.

இரண்டாவது

ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்குப் பின்னால் இருக்கின்ற அவர்களது அரசியல் அபிலாசை என்ன என்பது குறித்த ஒரு கணிப்பை இது காட்டும்.

மூன்றாவது

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை உறுதிப்படுத்திய 1977ஆம் ஆண்டுத் தேர்தலே இலங்கைத்தீவில் நடந்த சுதந்திரமாக நடைபெற்ற இறுதியான தேர்தல் இது என்பதையும், அதற்குப் பின்னர் நடைபெற்ற தேர்தல்கள் எதிலும் தமிழர்களால் சுதந்திரமான முறையில் தனிநாடு குறித்த தமது அபிலாசையை வெளிப்படுத்தி வாக்களிக்க முடியவில்லை என்;ற பின்னணியையும் நாங்கள் இங்கு பார்க்கவேண்டும். ஏனெனில் 1979ம் ஆண்டில் சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டமும், 1983ம் ஆண்டின் அரசியல் சட்டயாப்பின் 6 வது சீர்த்தமும் தமிழரின் தன்னாட்சி, தேசியம் தொடர்பான கருத்துக்களை ஜனநாயக வழியில் வெளிப்படுத்த தடையாக இருந்துவந்துள்ளன.

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானமே ஈழத்தமிழர் தங்கள் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கும் வகையிலான ஆணையைக் கொண்ட ஆதாரபூர்வமாக ஜனநாயக ரீதியில் நிரூபிக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சான்றாதாரமாக இருக்கிறது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்துமே அத் தீர்மானத்தில் வெளியிடப்பட்ட தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை எந்தவகையிலும் நிவர்த்திசெய்யவோ சீரமைக்கவோ தகுந்தவகையிலான விளைவுகளை ஈட்டவோ இல்லை. இந்த நிலையில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான ஆணையை ஜனநாயக ரீதியில் கணிப்பீடு செய்யக்கூடிய இடங்களில் உரிய முறையில் கணிப்பிடவேண்டியது அவசியமாகிறது.

கேள்வி:

ஈழத்தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான உடனடிச்சிக்கல்கள் இருக்கும் காலத்தில் இம்முயற்சிக்கு முக்கியத்துவம் உண்டா?

பதில்:

உடனடிச் சிக்கல்களில் ஒரு முக்கிய பரிமாணமானது, தமிழர்களை நீண்டகால அடிமைகளாக ஆக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அரசியல் இராணுவச் சூழல். உடனடிச் சிக்கல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் அதன் அடிப்படையை அணுகி அதனை உரிய முக்கியத்துவத்தோடு வெளிப்படுத்தும் முயற்சியானது கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறான இன்றைய சூழலில் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான அபிலாசை குறித்து, குறிப்பாக நோர்வேயில் வாழும் தமிழர்கள் வட்டுக்கோட்டைக் கோட்பாட்டின் அடிப்படைகளை மீளவும் வலியுறுத்துகிறார்களா இல்லையா என்பது சர்வதேச சமுகத்திற்கு சில அடிப்படைகளை மீள வலியுறுத்துவதாக நிச்சயம் அமையும்.

கேள்வி:

புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் மாத்திரம் பங்குகொள்ளும் இம்முயற்சி எந்த வகையில் ஈழத்தில் வாழும் எம்மக்களுக்குப் பயன்தரக் கூடியதாக இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்:

ஈழப்போராட்டத்தின் முக்கியமான ஒரு அங்கமாக புலம்பெயர்ந்த சமுகம் உள்ளது என்பதனை சர்வதேசம் இப்போது பகிரங்கமாகக் கூறிவருகிறது. வருகின்றது. இந்தவகையில் வன்னியில் திட்டமிடப்பட்ட முறையில் சிறீலங்கா அரச படையினரால் கொன்றொழிக்கப்படும் தம் உறவுகளுக்காக@ திறந்த வெளிச்சிறைச்சாலையிலும், தடுப்புமுகாம்களிலும் இருக்கும் ஈழமக்கள் இன்று வாய்திறந்து ஓர் அனுதாபத்தைக்கூடக் கூறமுடியாத போது சர்வதேசமும் தனது கருத்துநிலைகளில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டுமானால் எமது அபிலாசைகள் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தப்படுவது அவசியமாகின்றது.

இன்று வன்னிப் பகுதிக்கு அருகில் இருக்கும் அம்பாறை, திருக்கோணமலை, மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகம் முதலான பகுதிகளில் வதியும் ஈழமக்கள் இன்றைய அவலத்தைப் பார்த்தும் வாய்திறந்து ஆறுதல் வார்த்தையோ அல்லது இறைவனிடம் சென்று வழிபாடுகூட நடத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்நிலைமையில் சுதந்திரமாகக் குரல் கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள் புலம்பெயர் தமிழ்மக்கள் மட்டுமே.

கேள்வி:

வட்டுக்கோட்டைத் தீர்மானமானது வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிக்கோளாகக் கொண்டது. இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களின் நிலை என்னவாக இருக்கும்?

பதில்:

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை நிறைவேற்றிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முக்கிய அங்கமாக மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் இருந்தமையையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ்அரசு உருவாகும் போது@ வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மையாக இருக்கப் போகின்ற சிங்களவர்களோ அல்லது சிறீலங்காவில் சிறுபான்மையாக இருக்கக் கூடிய தமிழர்களோ பாதிக்காத வகையிலான சில ஆலோசனைகளை வட்டுக்கோட்டைத் தீர்மானமானது கொண்டிருக்கின்றது. உதாரணமாக பரஸ்பர சமநிலைத் திட்டம் ஒன்றை இத்திட்டம் கொண்டுள்ளது.

கேள்வி:

இன்றைய இலங்கையின் ஒருமையையும், இறைமையையும் பாதிக்கக்கூடிய இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு என்ன உரிமையுண்டு?

பதில்:

பிரித்தானியரால் சிறுபான்மையினருக்கான சில பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட இலங்கை அரசியல் அமைப்புச் சட்டமானது, 1972ம் ஆண்டு சிங்கள அரசால் மாற்றப்பட்டது. 1972ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டுப் பெரும்பான்மையான தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறியிருந்தனர். 1972 ஆம் ஆண்டின் சட்டயாப்பை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதானது@ 1974ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கேசன்துறைத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் நிறுவப்பட்டிருந்தன. எனவே 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்த அனைத்துத் தமிழர்களுக்கும், அவர்களது வம்சாவளியினருக்கும் இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு. வருங்காலத்தில் இலங்கைத்தீவில் உருவாகும் தீர்வுகள் அனைத்திலுமே இவர்களுக்குப் பங்கும் உரிமையும் உண்டு. நாம் இன்று எந்த நாட்டுக்குடியுரிமை பெற்றிருந்தாலும் இதற்கு விதிவிலக்காக முடியாது.

கேள்வி:

இந்நடவடிக்கையானது இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச அரசுகள் மத்தியில் எவ்வகையான விளைவுகளைக் கொண்டுவரும் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்?

பதில்:

சர்வதேச நாடுகள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வுகளை 13வது திருத்தச் சட்டத்துக்குள் முடிப்பதற்கே விரும்புகின்றன. எமது தீர்க்கமான முடிவுகளை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவதன் மூலமாக சர்வதேசத்தின் முடிவுகளில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரமுடியும் என நாம் திடமாக நம்புகின்றோம்.

கேள்வி:

மிகக்குறுகியகால அவகாசத்தில் இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கான காரணங்கள் ஏதாவது உண்டா?

பதில்:

ஆம், ஈழத் தமிழர்களின் போராட்டமும், அதன் மீதான சர்வதேசத்தின் கவனமும் என்றுமில்லாதவாறு உச்ச நிலையை அடைந்துள்ளது. இந்நிலைமையை எமக்குச் சாதகமாக்க வேண்டியது அவசியமானதும், உடனடித் தேவையுமாகும்.

உதாரணமாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உகந்த தீர்வு தமிழீழமே எனவும், அதனைப் பெற்றுக் கொடுப்பதற்காகத் தான் முக்கிய பங்கு வகிக்கப் போவதாகவும் பகிரங்கமாக அறிவித்ததுடன் அதற்கு ஆதரவும் தேடிவருகின்றார்.

இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தொடர்ந்தும் இராணுவத் தீர்வுகாண முற்பட்டால், அந்நிலைமையானது இலங்கையின் இறைமையைப் பாதிப்புக்குள்ளாக்கும் என அமெரிக்க அதிபரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சர்வதேச நிலைப்பாடுகளுக்கு நாம் எடுக்கப்போகும் இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமானது பெரிய அளவில் உதவியாக அமையும் என நாம் நம்புகின்றோம்.

கேள்வி:

விடுதலைப் புலிகளின் ஆயதப் போராட்டத்துக்கும், இம்முயற்சிக்கும் தொடர்புகள் ஏதாவது உண்டா?

பதில்:

அவ்வாறான தொடர்புகள் ஒன்றும் இல்லை. இது ஒரு பக்கச்சார்பற்ற பத்திரிகையின் முன்னெடுப்பாகும். தவிரவும், தமிழீழப் போராட்டம் என்பது பரந்துபட்ட தமிழரின் போராட்டம் ஆகும். சிறீலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலைகளே அதனை ஆயுதப் போராட்டமாக மாற்றியது என்பதையும் இங்கு நாங்கள் நோக்கவேண்டும்.

கேள்வி:

மாற்றீட்டு வழிமுறைகளைக் கணக்கிற் கொள்ளாமல் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தையும், தமிழீழ உருவாக்கத்தையும் மாத்திரம் வலியுறுத்துவதால் இம்முயற்சியில் தேர்வு இல்லை, கருத்துக் கணிப்பு மாத்திரமே உண்டு. இதற்கான விளக்கங்கள் ஏதாவது உங்களிடம் உண்டா?

பதில்:

தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட மாற்றீட்டு முயற்சிகள் அனைத்துமே 30 ஆண்டுகளாகத் தோல்வியைச் சந்தித்தமையே வரலாறாகும். எனவே எமக்கு வேறு திட்டங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. எமது கோரிக்கையை சர்வதேசத்தின் முன்னால் நாங்கள் முன்வைப்போம். அரசு தனது நிலையை வெளிப்படையாக சர்வதேசத்தின் முன்வைக்கட்டும். அதுவே எமது நிலைப்பாடு.

கேள்வி:

தமிழரின் தாயக விடுதலைக்காகப் போராடிய முக்கிய இயக்கங்களால் இணைந்து முன்வைக்கப்பட்ட திம்புக் கோரிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நீங்கள் முன்வைத்து வாக்களிக்குமாறு கூறுவது எதற்காக?

பதில்:

வட்டுக்கோட்டைக்குப் பின்னால் வந்த முன்னெடுப்புக்கள் சுயநிர்ணய உரிமை போன்ற அடிப்படைகளை மாத்திரமே கருத்திற்கொண்டவை. அவை ஏற்றுக்கொள்ளப்படாததால் அதற்கப்பால் தமிழர்களுக்கான தெளிவான அரச கட்டமைப்பைத வெளிப்படுத்தக்கூடிய நிலைக்கு போக முடியவில்லை.

வட்டுக்கோட்டைப் பிரகடனத்திற்குப் பின்னால் வந்ந முன்னெடுப்புகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மக்களாட்சி முறைகளால் உறுதிப்படுத்தப்பட்டவையுமல்

  • தொடங்கியவர்

http://www.utrop.no/Nyheter/Innenriks/16585

தேர்தல் முடிவுகள் மேலே உள்ள இணைப்பில் உள்ளன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.