Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழ்தலின் வலி ‐ எழில்:

Featured Replies

நாம் மக்களுக்காகவே போராடுவோம்... போராட ஆசைப்படுவோம்.

மூலம்: http://www.globaltamilnews.net/tamil_news....=9933&cat=5

கடந்த எட்டு மாதமாக எண்ணிலடங்கா மக்களை பலி எடுத்து ஓய்ந்திருக்கிறது போர். முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் போராளிகளை களை எடுப்பது, பெண்களை பாலியல் வன்முறை செய்வது, குழந்தைகளை பிடித்துச் செல்வது என்று மக்களை அச்சுறுத்தும் ஒரு போர் தொடர்ந்து கொண்டிருக்க ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். உளவியல் ரீதியாக சிதைப்பட்ட நிலையில் புலம்பெயர் நாடுகளில் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது என்ற துயரில் கதறி அழுதபடி ஆற்றாமையால் துடிக்கிறார்கள் தமிழ் மக்கள். நம்பிக்கை கொள்ளும் படியான ஒரு செய்தியும் அவர்களுக்கு உலகால் வழங்கப்படவில்லை. விஜய் நம்பியார். பான்கிமூனின் பயணங்கள் இந்தியாவின் விருப்பங்களையே வெளிப்படுத்துவதாக அமைய,

மனித உரிமைகள் என்ற கேள்விக்கே இடமில்லாத வகையில் முன்னெடுத்து வெளிப்பார்வைக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் இந்தப் போர் ஏன் பௌத்த கலாசார தேசீயவாதத்தோடு பின்னிப் பிணைகிறது. சிங்களர் தமிழர் என்னும் இன முரணுக்கு தற்காலத்தில் பௌத்த, இந்து, சைவ சாயங்கள் பூசப்பட்டால் நாம் இன்னும் மோசமான ஒரு அழிவை சந்திக்க நேரிடும் என்றே தோன்றுகிறது.

எட்டு மாதங்களுக்கு முன்னர் இந்தப் போர் துவங்கிய போது இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு. இது சிங்களருக்குச் சொந்தமானது. பெரும்பான்மைச் சமூகத்தை அனுசரித்து தமிழர்கள் இங்கே வாழ்ந்து கொள்ளலாம் என்றார் இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா. புலிகளின் தலைமை தோற்கடிக்கப்பட்டு போர் முடிவுக்கு வந்து விட்டதாகச் சொல்லப்படும் சூழுலில் சில ஈழத் தமிழ் ஆர்வலர்களும் ஐக்கிய இலங்கைக்குள் நாம் கசப்பை மறந்து ஒன்றிணைய வேண்டும். அதன் மூலம் தமிழர் முரணுக்கு சில அதிகாரப் பரவலோடு தீர்வு தேடிக் கொள்ளலாம் என்கிற எண்ணமும் சிலரிடம் பரவி வருகிறது.

முரண்பட்ட ஒரு சிறுபான்மை சமூகத்தை இராணுவ வாதத்தால் வென்று விட்ட திருப்தியையே பெரும்பான்மைவாதமாக மாற்றி அந்தப் போதையிலேயே அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் ராஜபக்ஸ புலிகளை தோற்கடிப்பதன் மூலம் அவர்களை அழிப்பதன் மூலம் பெறப்படும் வெற்றியை சிங்களம் தமிழரை வெற்றி கொள்ளும் போதையாக சிங்கள மக்களிடம் கட்டமைத்து வைத்திருக்கிறார். இன்றைய நிலையில் ஒரு ஆயுததாரிக்குக் கிடைக்கிற மரியாதை நிராயுத பாணிக்கு கிடைப்பதில்லை இலங்கையில். பெரும் கூட்டமாக சிங்களர்கள் களியாட்டங்களில் ஈடுபடும் போது அந்த களியாட்டங்கள் உவப்பானதாக மாற ஒரு தமிழ் பெண்ணோ அல்லது ஒரு விரக்தியுற்ற தமிழரோ அவர்களுக்குத் தேவைப்படுகிறார். பலர் கூடி ஒருவரை இழிவதனூடே சிங்கள வெற்றிக் களியாட்டம் பேர் உவகை கொள்கிறது.

2002ல் குஜராத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் நரேந்திரமோடிக் கும்பலும் இதைத்தான் செய்தது. வன்னியில் இராணுவம் செய்ததை குஜராத்தில் ஆர்.எஸ். எஸ். பஜ்ரங்தள் ரௌடிகள் செய்தார்கள். வயிற்றைக் கிழித்து கருவை வெளியில் எடுத்து எரித்தல், புணர்ந்த பின் பிறப்புறுப்புக்குள் கூரிய ஆய்தங்களைச் செலுத்துதல் என இயல்பான உணர்வுக்கு அப்பாற்பட்ட வெறியூட்டப்பட்ட உன்னதமான புனித வெறி ஏற்றப்பட்ட கூட்டம் தான் அன்றைய குஜராத் இனப்படுகொலையை நிகழ்த்தியது. உண்மை மிக மெதுவாக வெளி வந்த போது எனக்கு 83ன் ஜுலைக் கலவரங்கள் நினைவுக்கு வந்தது. இன்றைய வன்னியின் அழிவைப் பார்க்கும் போது முகாம்களுக்குள் பெண்களும் இளைஞர்களும் நடத்தப்படும் விதத்தைப் பார்த்து குஜராத் படுகொலைகள் நினைவுக்கு வருகிறது.

ஆனால் இந்த இனக்கொலைகள் இந்தப் போரோடு முடிந்து போவதாகத் தெரியவில்லை. முடிந்து போகவோ தீர்த்து வைக்கோ இலங்கை அரசு விரும்பவும் இல்லை. இந்தப் போரின் வெற்றி தேர்தலில் வெற்றி மட்டுமே. நீண்ட காலத்திற்கு சிவில் உரிமைகள் மறுக்கப்பட்டு பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு கீழான ஒரு மக்களாக தமிழ் மக்கள் ஈழத்தில் வாழ்வதுதான் சிங்கள ஆட்சியாளர்களின் நிரந்தர வெற்றி. மற்றபடி இலங்கை அரசின் ஏனைய எல்லா சிறுபான்மை இன மக்களும் பெரும்பான்மை சிங்கள மக்களோடு கசப்புகளை மறந்து வாழ நேர்ந்தால் வலதுசாரிகள் இந்த இடத்தில் தோற்று விடுகிறார்கள் என்று இன்றைய இலங்கைச் சூழலை பொருள் கொள்ளலாம்.

கிளிநொச்சியின் வீழ்ச்சியை ஒட்டு எழுந்த அரசியல் தலைமைகளின் சிந்தனைகள் இதை உறுதிப்படுத்துகின்றன. கிளிநொச்சி வீழ்ந்த பிறகு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் இல்லை என்கிறது இடது சாரி முகம் கொண்ட இனவாத ஜே.வி.பி. பெரும்பாலான வடக்குப் பகுதி படையினரின் ஆக்ரமிப்புக்குள் வந்த போது ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் மேதானந்த தேரர்.மீட்கப்பட்டுள்ள வடக்குப் பகுதியில் பௌத்த தேசிய மரபுரிமைகள் இப்பகுதியிலேயே அதிகம் காணப்படுகின்றன. எனவே மீட்கப்படும் பிரதேசங்களில் இனவிகிதாசார ரீதியில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். முல்லைத்தீவில் நெடுங்கேணி, கரும்புலியங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் காணப்படும் எமது பௌத்த புராதன சின்னங்கள் வேறு எங்கும் கிடைப்பதில்லை. நாடளாவிய ரீதியில் நடைபெறும் இந்த பௌத்த புராதன சின்ன அழிப்பில் சிங்களவரல்லாத சக்திகளே ஈடுபட்டுள்ளன. மேதானந்த தேரரின் விஷம் தோய்ந்த இந்தப் பேச்சு இலங்கையில் தமிழ் மக்களை வெளியில் நடமாட முடியாமல் அஞ்சும் அளவுக்கு இருக்கிறது. சிங்களக் கலப்புக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும். இராணுவ முகாம்களுக்குள் தமிழ் மக்கள் வாழும் படியான சூழல் ஏற்பட வேண்டும் என தொடர்ந்து ஹெல உருமய சொல்வது தமிழ் மக்களை இவர்கள் எப்படி நடத்தப் போகிறார்கள் என்பதற்குச் சான்று.

தமிழ் கலாசார தேசீய வாதத்தில் மன்னர் கால மதிப்பீடுகளுக்கு உயரிய வண்ணம் பூசப்பட்டே காலம் தோறும் வந்திருக்கிறது. என்ன செய்வது எல்லாளனும், பண்டாரவன்னியனும் தோற்றுப் போனவர்கள் ஆயிற்றே. நாம் என்ன மதிப்பீடுகளைக் கொண்டு மக்கள் விடுதலையை கட்டமைப்பதாக எண்ணினோமோ அவர்களும் அதே மன்னர் கால மதிப்பீடுகளைக் கொண்டே நம்மை ஆக்ரமிக்கிறார்கள். துட்டைகை முனுவின் விஜிதபுர யுத்தம் என்பதை கிளிநொச்சி யுத்தத்தோடு ஒப்பிட்டு புழங்காகிதம் அடைந்ததும் இப்படித்தான். போதையூட்டப்பட்டுள்ள பெரும்பான்மை வாத இனமோ இத்தகைய மன்னர் கால மதிப்பீடுகளால் நெகிழ்ச்சி கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்க, முழுக்க இழப்புகளைச் சந்தித்து வழி ஏதுமற்ற தமிழ் மக்களோ எதையும் நினைக்க முடியாத அடுத்த வேளை உணவுக்கில்லாத ஒரு கூட்டமாக மாற்றப்பட்டு மண்டியிட்டு தரையில் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறது.

எந்த இடத்திலிருந்து நாம் இனி துவங்க முடியும் எப்படித் துவங்குவது என்கிற கேள்விகளுக்கு பெரும்பாலானவர்களிடம் பதில் இல்லை.முடமாக்கப்பட்டு மரணத்தில் விழிம்பில் கதறிக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து நான் போர் தொடரும் என்கிறேன். வெறித்த விழிகளோடு பார்க்கும் அந்த மக்கள் என் வார்த்தைகளைக் கேட்டு என்ன நினைப்பார்கள் என்பது பற்றி நான் கவலை ஏதுவும் படவில்லை. எலும்பும் தோலுமாக கடந்த பல மாதங்களாக உணவில்லாமல் அனாதரவான சூழலில் முகாமுக்குள் முடங்கியிருக்கும் குழந்தையை இனி நான் ஆயுதம் ஏந்தச் சொல்வது போலத்தான் இதுவும். தமிழகத்திலோ மானமுள்ள தமிழினத் தலைவர்கள் முழங்குகிறார்கள். ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆளத்துடிப்பதில் என்ன குறை என்று கந்தல் துணியோடும் ,வற்றிய வயிரோடும், ஆற்ற முடியாத காயங்களோடும் முடங்கிக் கிடக்கும் இவர்கள் எப்போது ஆண்டார்கள் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.

யாரேனும் ஒருவர் இந்த மக்களைப் பற்றிப் பேசுவார்களா? என காத்திருக்கிறோம். வீண் பெருமைகள், வீரசாகசங்கள் எல்லாம் பேசினார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள்.சடங்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரேனும் ஒருவர் இந்த மக்களைப் பற்றிப் பேசுவார்களா? என காத்திருக்கிறோம். வீண் பெருமைகள், வீரசாகசங்கள் எல்லாம் பேசினார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள்.சடங்கி??்காக ஒரு போராட்டமும்... யாராவது நீ ஈழத் தமிழனுக்கு என்ன செய்தாய் ? என்று கேட்டால் சொல்வதற்காக சில உண்ணாவிரதங்கள், கடிதங்கள், எழுதினார்கள். நாளையும் பேசுவார்கள். கடைசியில் தேர்தல் அரசியலில் அதை ஒரு சாட்டையாக சுழட்டினார்கள். அரசியல் கூட்டணிச் சூழலுக்கு ஏற்ப ஈழப் படுகொலை தொடர்பாக ஏற்ற இறக்கத்தோடு கவனமாகவே பேசினார்கள் .

யாருக்கும் எந்த பாதகமுமில்லாமல் தொடர்ந்தார்கள். சீமான், பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் உண்மையாகவே அரசின் ஒடுக்குமுறையை எதிர் கொண்டார்கள் என்பதைத் தவிர்த்து தேர்தல் அரசியலில் பங்குபெற்ற தமிழினத் தலைவர்கள் தங்களுக்கு எந்த பாதகமும் இல்லாமலே போராடினார்கள். பெரும் ஆதாயத்தை எதிர் பார்த்தே இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்றார் ஜெ. ராமதாசோ ஐந்தாண்டுகாலம் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை அனுபவித்ட்துக் கொண்டு வெற்றி பெறும் என நினைத்து அணி மாறினார். பாதகமில்லாமல் பேசினார். கருணாநிதியோ எதுவுமே செய்யாமல் செயலற்று ஆனால் நாடகங்களைத் தொடர்ந்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜெயலலிதா ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்கிறார். கருணாநிதியோ பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் என்கிறார். அநீதியான முறையில் போர் முன்னெடுக்கப்பட்டு மக்களும் பெருந்தொகையான போராளிக் குடும்பங்களும் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கும் சூழலில் நெடுமாறனும், வைகோவும் பிரபாகரன் இருக்கிறா? இல்லையா? என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு எதைப் பேச வேண்டும் என நினைத்ததோ அதை இவர்கள் பேசுகிறார்கள்.

சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்ட மக்கள் குறித்துப் பேச வேண்டிய சூழலில் அது குறித்து மௌனம் நிலவுவதால் சர்வதேச சமூகத்திலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்ளும் சூழல் எழுந்திருக்கிறது.அப்படி என்றால் வேண்டிய பொழுது மீண்டும் இம்மக்களை நரவேட்டையாட என்ன தடை இருக்கப் போகிறது? அறிக்கைகளில் காட்டுகிற வேகத்தை மக்கள் மீதான கரிசனத்தின் மீது இவர்கள் காட்ட வேண்டும் என்பதே நமது ஆசை. ஆம் நாம் மக்களுக்காகவே போராடுகிறோம். போராட ஆசைப்படுகிறோம்.

தொடரும்...

தங்கள் கட்டுரையினை முழுவதுமாக கூட படிக்க முடியவில்லை. அவ்வளவு வலிமிகுந்துள்ளது. ஆனாலும் சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கையில் தமிழர்கள் மீதான வன்முறை ஆரம்பித்த காலம் முதல், தமிழர்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்த ஆயுத போராட்ட காலம் வரை, சிங்களவன் தமிழர்களின் உடமைகளை, உணர்வோடு சேர்த்தே காயப்படுத்தி வந்திருக்கிறான். தமிழர்களின் உயிரைப்பற்றி கடுகளவேனும் அக்கறை என்பது இல்லை. ஆனால், ஆயுத போராட்டம் ஆரம்பித்த பிறகு கூட, ராணுவ இலக்குகள் தான் போராளிகளின் பிரதான குறியாக இருந்ததே தவிர பேரினவாதத்துக்கு முட்டு கொடுக்கும் சிங்களவன் குறியாக இல்லை. இதை மிக உயர்ந்த விழுமியமாக நமக்கு நாமே சொல்லிகொண்டோம். சிங்களவன் ஒன்றை நன்கு புரிந்து கொண்டான். சிங்கள மக்கள் செய்யும் கொடுமைக்கு, போராளிகள் ராணுவத்தை தான் தாக்குவார்கள். நாம் கவலைப்பட தேவையில்லை என்பதே அது. அதனால்தான் புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டார்கள் என்று தெரிந்ததும் சிங்கள காடையர்களின் வன்முறை ஆங்காங்கே தலைதூக்க தொடங்கியுள்ளது. முஸ்லிம்களும்தான் இலங்கையில் சிறுபான்மையினர் . ஆனாலும் அவர்கள் மீது சிங்களவன் கை வைக்க தயங்குவதேன்? ஆடு வெட்டும் கத்தி உடனடியாக சிங்களனின் தலையினை வெட்ட புறப்படும் என்ற பயம்தான் காரணம். அந்த பயத்தினை சிங்களர்களுக்கு தமிழர்களும் உருவாக்க வேண்டும். ஒரு தமிழனின் உயிர் போனாலும் நூறு சிங்களவன் இறப்பது ஆயிரம் சதவீதம் நிஜம் என்று அவர்களின் மனதில் ஆழ பதிய வேண்டும். கத்தி எடுப்பவனை கத்தியுடனும், கம்பு எடுப்பவனை கம்புடனும்தான் சந்திக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களுடன் நான் ஒத்துப்போகிறேன் சி

எமது இனத்திற்கும் மற்றைய இனத்திற்கு இது தான் வித்தியாசம்.. குறிப்பாக முஸ்லீம் மக்கள் எங்கும் வாழ்கிறார்கள்.. சூழ்னிலைக்கு ஏற்ற மாதிரி வாழ்வார்கள்..

எதிர்ப்பென்று வந்துவிட்டால் உயிரைப்பற்றி யோசிக்கமால் நின்று போராடுவார்கள்..

புலிகள் இயக்கம் பலகாலத்திற்கு பின் கிடைத்தது தமிழினத்திற்கு...

ஒரு வீதியால் போகும் ஒரு மிருகத்தை பாருங்கள்..

அது சாதுவாக இருந்தால் கல் எறி..விரட்டல் சேட்டைகள் இருக்கும்...

அதே மிருகம் மிக பயங்கரமாக எப்போதும் திருப்பி தாக்கும் என்றால் எவரும் வம்புக்கு போக பயப்படுவார்கள்...

எங்கள் மக்கள் எப்போதும் எமக்கு தேவையில்லாத விடையம் படி, படி ஒதுங்கு என்று ஒரு பலயீனமான சமுதாயத்தை வளர்த்து எல்லாம் ஒற்றுமையுமில்லாமல்

தப்பினால் போதும் மனப்பாண்மையால் உலகு எங்கும் தமிழினம் பயந்து அடிமையாக அகதிகளக வழ்ந்து அழியப்போகுகிறது...

சரியான பலமான தமிழ் அரசியல் தலைமையும் இல்லை..

இந்த பலயீனங்களும் விரைவில் தீர்க்கப்படல் வேண்டும்... புலிகள் பலவீனம் ஆகுதல் உலகதமிழர்களின் பலயீனமாகிறது..

  • தொடங்கியவர்

இன்று இலங்கயில் தமிழ் மக்களில் ஒருவர் விடாது அனைவரும் இராணுவ, அரச கட்டுப் பாட்டு பிரதேசங்களில், அவர்களின் கடுமையான இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். இராணுவமோ அல்லது சிங்கள காடையர் கூட்டமோ எது வேண்டும் என்றாலும், என்ன வேண்டும் என்றாலும் எத்தகைய அட்டூழியம் வேண்டும் என்றாலும் தமிழ் மக்கள் மீது புரிந்து கொள்ளக் கூடிய அபாய நிலை இருக்கும் போது இத்தகைய கண்ணுக்கு கண், வாளுக்கு வாள் என்ற வெற்றுக் கோசம், மேலும் அவர்களை பேரழிவிற்கே இட்டுச் செல்லும். ஒரு பெரும் நரவேட்டையை ஆடிவிட்டு சர்வதேச சட்டங்களுக்கு பெரும் சவாலாக தான் செய்த அனைத்தையும் மறைப்பதில் வெற்றி கண்டுள்ள சிங்கள அரசு, இதற்கு மேலும் இன்னமும் படுகொலைகளை துணிவாக செய்யவே முனையும். நிலைமை இவ்வாறு இருக்கையில், நாம் வசதியாக வெளிநாடுகளில் இருந்து கொண்டு பழிக்கு பழி கோசத்தினை எழுப்புவதால் முற்றாக பாதிக்கப் படப்போவது நாதியற்று எஞ்சிப் போயுள்ள எமது மக்களே.

முடிந்தால், இந்த நாதியற்று போயிருக்கும் மக்களுக்காக, அவர்களின் இன்றைய நிலையில் இருந்து மீள வைப்பதற்காக போராட்டங்களை வெளிநாடுகளில் ஆரம்பிப்போம். அது தான் இன்றைய அவசிய, உடனடித் தேவை

ஒரு தமிழனின் உயிர் போனாலும் நூறு சிங்களவன் இறப்பது ஆயிரம் சதவீதம் நிஜம் என்று அவர்களின் மனதில் ஆழ பதிய வேண்டும். கத்தி எடுப்பவனை கத்தியுடனும், கம்பு எடுப்பவனை கம்புடனும்தான் சந்திக்க வேண்டும்.

இவ்வாறான சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் இப்போது வேலை இல்லை. இவ்வாறான எண்ணங்களை தூக்கி குப்பையில் போடுங்கள். இலங்கையின் ஒட்டுமொத்த தமிழினத்தின் கழுத்தில் கத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளியில் இருந்து தூண்டப்படும் முயச்சிகள் ஒரு சில மணித்தியாலங்களில் தமிழனை பூண்டோடு துடைத்தளிக்கும். பின்னார் யாருக்காகவும் விடுதலையின் தேவை இருக்காது. இலங்கை அரசு எத்தனை ஆயிரம் மக்களை கொன்றாலும் அதை காப்பாற்ற இந்திய அரசு இருக்கின்றது. சீன அரசு இருக்கின்றது. அவர்கள் சர்வதேசத்தில் இலங்கைக்காக வக்காலத்து வாங்குவார்கள்.

இலங்கைக்கு வெளியில் இருக்கும் தமிழர்கள் இலங்கைக்கு சென்று தமது விடுதலைக்காக போராடக் கூடிய நிலையில் இல்லாமல் தூண்டிவிடுதல் ஏத்தி ஏவி விடுதல் போன்ற காரியங்களை அடியோடு நிறுத்துங்கள். மாறாக சிங்களத்தின் சிறைகளில் சிக்குப்பட்டுள்ள மக்களுக்கான பாதுகாப்புக்காக குரல் கொடுங்கள். இதை விட வேறொன்றும் இப்போதைக்கு செய்வதற்கில்லை. கால மாற்றத்தில் சில சந்தர்ப்பங்கள் வரும் அப்போது பார்த்துக்கொள்ளலாம். அல்லது சிங்கள அரசுக்கு பலமான இந்திய சீன பாகிஸ்த்தான் போன்ற நாடுகளின் உறவுகளை முறிப்பதற்கு என்ன வழிவகைகள் எவ்வாறு அந்த நோக்கில் நகரலாம் என்பதை சிந்தியுங்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்ற இறுமாப்பை பின்தள்ளி முடிந்தால் ஒவ்வொருவரும் நரியாக மாறுங்கள். தந்திரம் ஒன்றே இப்போதைக்கு கூர்மையான தெரிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.