Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஈழம்தான் சரியான தீர்வு என்றாலும் தற்காலிகமாக அதற்கு முன் ஒரு தீர்வு வேண்டும்

Featured Replies

தமிழ் ஈழம்தான் சரியான தீர்வு என்றாலும் தற்காலிகமாக அதற்கு முன் ஒரு தீர்வு வேண்டும்

தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் ஈழத்தில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வலியுறுத்தியுள்ளார். அண்ணா திமுக வின் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் தேர்தல் காலத்திற்கு சற்று முன் தமிழ் ஈழம்தான் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு சரியான தீர்வு எனக்கூறியதுடன் அதை அடைந்து கொடுக்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கருணாநிதி அவர்களும் தமிழீழம் அமைய, தானும் முயற்சிக்கப் போவதாக தேர்தல் காலத்தில் கூறினார். காங்கிரஸ் கட்சியைத்தவிர ஏனையவர்களெல்லாம் ஈழத் தமிழ்மக்களின் விடிவுக்காக் குரல் கொடுத்துக் கொண்டே வந்துள்ளனர்.

இந்தவேளையில்தான் உலகில் எந்தப்பகுதியிலும் நடந்திராத, வரலாறு காணாத கொடூர இனஅழிப்பொன்று தமிழீழத்தில், பயங்கரவாத (முத்திரை குத்திய) போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகக்கூறிக் கொண்டு நடந்தேறிவிட்டது. இந்த யுத்தத்தில் அணுகுண்டைத் தவிர அனைத்து பயங்கர ஆயுதங்களையும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக உபயோகிக்கப்பட்டதனால் தமிழர்தரப்பு தோல்வியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அணுகுண்டை உபயோகித்து மனித இனத்தை அழிக்க முற்பட்டால்தான் இந்த உலகின் இரட்சகர்களுக்கு குற்றமாகத் தோன்றும் போலுள்ளது. அதை ஸ்ரீலங்கா இராணுவம் உபயோகப்படுத்தி இருந்தால் கூட இந்தியா உட்பட சில நாடுகள்; ஸ்ரீலங்கா இராணுவத்தில் தவறு கண்டிருக்காது. தமிழீழத்தில் நிகழ்ந்துள்ள இத்தனை அனர்த்தங்களுக்கும் காரணமான இந்திய அரசு ஸ்ரீ லங்கா அரசிற்கு இராணுவ பொருளாதார தொழில்நுட்ப புலனாய்வு துறைகளில் பேருதவி புரிந்துள்ளது. ஈழத் தமிழரின் விடுதலைக்காக முப்பது வருடங்களாகப் போராடிய விடுதலைப் புலிகள் சிங்கள அரசுடன் மட்டும்; இந்தப் போரில்; ஈடுபடவில்லை. நயவஞ்சக எண்ணம் கொண்ட பல நாடுகளுடனும், வல்லரசுகளுடன் கூட்டுச் சேர்ந்த சிங்கள அரசுடனே போரிட்டனர்.

இன்றுவரை ஈழத் தமிழருக்கு சாதகமாக செயல்படாத இந்திய நடுவண்ணரசுக்கு, தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களது உதவி இல்லாமல், ஆட்சி செய்ய முடியாது என்ற நிலமை இருந்த போதே இவ்வளவு கொடூரத்தை செய்யத் துணைநின்றிருக்;கின்றார்கள். இதற்கு இந்த 40 பேரும் துணை போனார்களா அல்லது கையறு நிலையிலிருந்தார்களா என உலகத்தமிழர்களை எண்ணத் தூண்டுகின்றது. இந்தத் தமிழகத் தமிழர்களை வடஇந்தியர்கள் என்ன அளவையில் வைத்து கணிப்பிடுகிறார்கள் என்று எண்ணும்போது வெட்கப்படவேண்டிய நிலையிலேயே உள்ளது. இன்று காங்கிரஸ் கட்சிக்கு தமிழக காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவி தேவை இல்லை என்ற நிலை எட்டிய பின் இனிவரும் காலங்களில் அவர்களது செயலற்பாட்டை இருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாமும் தமிழர்கள், ஈழத்தில் அழிக்கப்படும் இனமும் தம் இனம் என்று எண்ணினாலே அன்றி மத்திய அரசில் பெரிதாக மாற்றம் வர இடமில்லை. காலம் எப்போதும் ஒருமாதிரியாகவும் இருக்கப் போவதில்லை.

இன அழிப்புப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது தமிழகத்தில், தமிழ் இன உணர்வாளர்கள் தம்மைத் தீயில் கொளுத்தியும் , அனைத்துத் தமிழர் தரப்பினரும் எல்லாவகையான எதிர்ப்புகளைச் செய்தும், நடுவண் அரசு அசைந்து கொடுக்காதது தமிழக மக்களைக் கால் தூசிக்குக் கூட கணக்கிலெடுக்கவில்லை என்பது கண்கூடு. இதனால்தான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடைசிக் கட்டத்தில் கனரக ஆயுதங்களையும், நச்சுவாயு எரிகுண்டுகளையும் உபயோகித்து ஈழத் தமிழர்களின் 55,000 க்கு மேற்பட்ட உயிர்களையும் 30,000க்கு மேற்பட்டவர்களை ஊனமுறவும் செய்ய இந்தியா துணை போய்விட்டது. இந்த இரத்தப்பழி இந்தியாவை ஊளியுள்ள காலமெல்லாம் தொடரவே செய்யும். ஈழத்தமிழர் கொடிய சிங்களவனிடமிருந்து விடுதலை கோரியது குற்றமா? இந்தியா தன் பிராந்திய நலன்களுக்காக இன்றுவரை ஓரு லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களின் உயிரழிவிற்கும் எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் உலகெங்கும் அகதிகளாக அலைவதற்கும் காரணமான பெரும் பழியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டது. இந்தப் பழியை ஓரளவாவது துடைப்பதற்கு இந்;தியஅரசும், தெரியாதது போல் இருந்த இந்திய அரசியல் தலைவர்களும் , மறைமுகமாகத் துணைபுரிந்த ஊடகத் துறையினரும், தம் கைகளிலும் உடலிலும் உள்ளத்திலும் தெளிக்கப்பட்டுள்ள இரத்தக்கறைகளை கழுவ, அவர்கள் மனச்சாட்சிப்படி ஈழத்தமிழனுக்கு ஏதாவது பரிகாரம் செய்துதான் ஆகவேண்டும். அதற்கான வழி தமிழீழம்தான். அது உடனடியாக முடியாத பட்சத்தில் வேறொரு நல்ல சாதகமான தீர்வை முன்வைக்க வேண்டும்.

இருப்பினும் இன்றைய நிலையில் நல்வாழ்வு நிலைய மென்னும் பெயரில் அகதிகளாக முகாம்களில் முடக்கப்பட்டவர்களுக்கு விடுதலையும், ஊனமுற்றவர்களிற்கு மறுவாழ்வும் அளிக்க ஓரு வழியை முதலில் செய்ய வேண்டும். அந்த மக்கள் படும் சொல்லவொண்ணா துன்ப துயரங்களை வெளியுலகத்திற்குக் கொண்டு வராமலே மறைக்கப்பட்டு விடும் போலுள்ளது. இந்த வகையில் ஒரு தீர்வை விரைவாக ஏற்படுத்த இந்திய மக்களுக்கு விசேஷமாக தமிழக மக்களுக்குத் தார்மீக கடப்பாடு உள்ளது. காரணம் இந்த யுத்தத்தை இலங்கை இராணுவத்திற்குப் பின் நின்று நடத்தியது இந்திய அரசென்பது அனைவரும் அறிந்ததே. இதை இலங்கை அரச அமைச்சர்களும், இலங்கை எதிர்கட்சித் தலைவரும், இராணுவ அதிகாரியும், வெளிப்படையகாவே கூறியுள்ளனர்.

தமிழக முதல்வர்; கூறியபடி ஈழத்தமிழரின் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்கமுடியாதென்ற கொள்கை அடிப்படையில் இலங்கை சுதந்திரமடைதற்கு முன் இலங்கையின் வட கிழக்கு மானிலங்களில் மக்கள் என்ன விகிதாசாரத்தின்படி வாழ்ந்தார்களோ அந்த விகிதாசாரம் இன்று அனைவராலும் வலியுறுத்தும்; தீர்வுத்திட்டத்தில்; கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்கு உதவ எடுக்கும் அரசியல் நடவடிக்கைகளில் இதுவே முதலாவதாக அமைய வேண்டும்.

ஈழத்தமிழர் மொழியால் தமிழகத்துடன் தொடர்புள்ளது போல சில பழக்கவழக்கங்களால் மலையாள (சேர) நாட்டு மக்களுடன் இப்போதும் இணைந்துள்ளனர். இந்த மலையாளிகளுக்கு ஈழத்தமிழர் நாங்கள் என்ன துரோகம் செய்தோம். நாராயணன், சிவசங்கர் மேனன், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி ( இவர் ஒரு கிறீஸ்தவர்? ) சதீஸ் நம்பியார், விஜய் நம்பியார் போன்றோர் மனச்சாட்சி இன்றியும், நடுவுநிலமை தவறியும் செயலாற்றி விட்டனர். எம் இரத்தப் பழியில் பங்கு கொண்டதால் இவர்களும் தம் இனத்திற்கு தேடக்கூடாததைத் தேடிவைத்துவிட்டனர்.

இன்றுவரை ஈழத்தமிழர்களின் வரலாறுகளை சிங்களவர் அழித்தும் திரிபுபடுத்தியும் வந்துள்ளனர். இந்த சிங்கள வம்சத்தில் வந்த துட்ட கெமுனு என்னும் சிற்றரசன் வடக்கு கிழக்கு வடமத்திய மாகாணம் சேர்ந்த இராஜரட்டை மாநிலத்தின் அரசனாக இருந்த எல்லாள மன்னனை வஞ்சகத்தால் தோற்கடித்தான். இதன்மூலம் இராஜரட்டையின்; தலைநகரான அநுராதபுரத்தை உள்ளடக்கிய வடமத்தியமாகாணம் சிங்களவர் வசமானது. (இதை மகாவம்ச மென்னும் சிங்கள வரலாற்று நூல் கூறுகிறது) எஞ்சிய வட,கிழக்கு மாநிலங்களை அண்மைக் காலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மூலமாகவும் அதிகாரத்தையும் படைவலுவையும் கொண்டு தமதாக்க சிங்களவர் முயன்று வருகின்றனர்.

தமிழினம் எப்படித் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதென்பதை இலங்கை அன்னியர்களிடமிருந்து சுதந்திரம் பெற முன்பும் அதன் பின்புமுள்ள சனத்தொகை விகிதாசார மாற்றத்தைப் பாருங்கள். இனஅழிப்பு எப்படி நடைபெறுகின்றதென்பது புரியும். தமிழீழமென்ற தீர்வைத் தமிழன் விரைவில் அடையாவிட்டால் இலங்கையில் தமிழன் காணாமல் போகக் கால் நூற்றாண்டு கூடத்தேவையில்லை. எம் இன அழிப்பின் மூலம் கறைபடிந்த கரத்தையுடைய தலைவர்களே இலங்கையில ;தமிழர்களைச் சிங்கள அரசு தடயமின்றி அழித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் கதிரைகளில் கருந்தனமாயிராமல் உங்கள் மீது படிந்துள்ள பழிக்கும் பரிகாரம் தேடுங்கள். வரலாறு உங்களை மறவாது.

ஆக்கம்:எம்.எஸ்.பிள்ளை

31.05.2009

Edited by Eelamagal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.