Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் சர்வாதிகாரியா? பேசுகிறார் பிரபாகரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sweetdreamsa.jpg

பி.பி.சி. ஆனந்தி அக்கா-சந்திரகாந்தன் மதிய உணவு உரையாடல் முழுக்க தமிழீழ விடுதலைப்போராட்டத்தையே மையமாகக் கொண்டிருந்தது. சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வன்னிக்குச் சென்று வந்திருக்கிறார் ஆனந்தி அக்கா. "தலைவரெ பார்த்து சில கேள்விகள் கேட்கணு மென்டுதான் நானும் போனேன். ஆனா அங்கு கட்டி வச்சிருக்கிற "செஞ்சோலை' குழந்தைகள் இல்லத்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம். என்ட மனக்கசடுகளெல்லாம் கழுவப்பட்டு புதுசா பிறந்த மாதிரியான உணர்வு. வன்னியிலிருந்து திரும்பி பி.பி.சி வந்து "செஞ்சோலை' பற்றி நிகழ்ச்சி தயாரித்தபோது "என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்' என்டுதான் தலைப்பிட்டேன்'' என்றார். தொடர்ந்தவர், "பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவியப்பா. என்ன வசீரமென்டே விளங்கெயில, நேரா சந்திச் சீங்களெண்டா அப்படியொரு குழந்தைத்தனம் இருக்கும். நானும் "சனத்துக்கு இவ்வளவு கஷ்டம் ஏன்? உங்க ளாலெதானே' என்டெல்லாம் கேட்கணுமென்டுதான் போனேன். ஆனால் நேரா பார்க்கேக்க நினைச்சு பார்க்கேலாத உரிமையும் பாசமும் வந்திடுது'' என்றார்.

உண்மையில் அரு கில் பார்க்க வேலுப் பிள்ளை பிரபாகரன் அப்படித்தான். அச் சுறுத்தும், யோசிக்க வைக்கும் முகபாவனை களை சல்லியளவும் அவரிடம் நீங்கள் காணமாட் டீர்கள். குழந்தைத்தன மானதொரு வசீகரம் வேடமின்றி நிழலாடிக்கொண்டே இருக்கும். நான்கூட அவரை சந்தித்தபோது எழுதிக்கொண்டு போகாத எடக்கு மடக்கான கேள்விகளை யெல்லாம்கூட துணிவாகக் கேட்கத் தொடங்கி விட்டேன். ஏதோ துணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டேன் என்று சொல்வதுகூடத் தவறு. இயல்பாக உரையாடி, அளவளாவி, வாதிட்டு சண்டையிடும் இறுக்கமற்ற சூழமைவை அவரது மென்மையான ஆளுமை உருவாக்குகிறதென்பதுதான் உண்மை.

"ஜனநாயகரீதியான தேர்தல்களில் மக்களைச் சந்திக்கிற துணிவு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இருக்கிறதா?'' என்று அவரிடம் கேட்டேன். அவர் பின்வாங்குவார் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். அவரோ தெளிவாகச் சொன்னார். "அதுபற்றின எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. சமீப காலங்களில் இங்கு நடந்த தேர்தல்களில்கூட விடுதலைப்புலிகள் இயக்கம் ஆதரித்த கூட்டணிதான் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இன்று ராணுவ ஆட்சிக்குள் இருக்கின்ற போதும்கூட எங்களுக்கு ஆதரவான "பொங்குதமிழ்' நிகழ்ச்சியெல்லாம் பல்கலைக்கழகத்திற்குள்ளேயே நடக்கிறது. இவற்றிலெல்லாம் சந்தேகமிருந்தால் இப்போகூட ஒரு தேர்தலை வைத்துப் பாருங் கள். மக்கள் மத்தியில் எங்களுக்கு ஆதரவு இருக்கிறதா, இல் லையா என்பதை நிரூபிப் பதற்காக நாங்களும் அத்தேர் தலில் நிற்போம்'' என்றார்.

அவருடைய நேர்மை யான சந்தேகத்திற்கிடமற்ற பதில் எனக்கு வியப்பாயிருந் தது. இறுக்கமற்ற சூழல் எனது கேள்வி கேட்கும் சுதந்திரத்திற் கான தளத்தை எல்லையின்றி விரிவாக்கியிருந்ததாய் உணர்ந்தேன். அந்த உணர்வில் விடாது கேட்டேன், "ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களை விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்குமா, அது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கெதிரான போராட்டமாக இருந்தாலும்கூட?'' அதற்கும் அவர் தயங்காமல் "நிச்சயமாக' என்றார். "மக்களை அழைத்துப்பேசி எனன பிரச்சனையென்பதை அறிந்து அதை சரி செய்வோம்'' என்றார்.

நான் நிறுத்தவில்லை. "புலிகள் ஜனநாயக மற்றவர்கள், சர்வாதிகாரிகள், மாற்றுக் கருத்தை சகிக்க முடியாதவர்கள்'' என்ற உலகப்பார்வைக்கு ஒரு பதிலை அவரிடமிருந்தே பெற்று பதிவு செய்யவேண்டும் என்ற உறுதியோடு கேட்டேன். "நாளை கிளிநொச்சியில் மக்கள்கூடி "விடுதலைப் புலிகள் ஒழிக! "வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற சர்வாதிகாரி ஒழிக!' என்றெல்லாம் முழக்க மிட்டுப் போராடுகிறார்களென்று வைத்துக் கொள்வோம் அவர்களை எப்படி அணுகு வீர்கள்?'' என்றேன். இக்கேள்விக்காவது கொஞ்சம் கோபப்படுவார். குறைந்தபட்சம் முகம் கோணுவார் என்று எதிர்பார்த்தேன். அப்போதும் அவர் பொறுமையாகவே பதில் சொன்னார். "அப்படியான நிலை வந்தாலும்கூட அவர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்போம். முன்பு இப்படியான சில அதிருப்தி கள் எழுந்தபோதெல்லாம் அவற்றை பேசி நிவர்த்தி செய்திருக்கிறோம். நாங்கள் சர்வாதிகாரிகள் இல்லை என்பதும் நீங்கள் சொல்வது போன்று எங்களுக்கும் மக்களுக்குமிடையே இடைவெளி இல்லை என்பதுதான் உண்மை'' என்றார்.

இதற்குப் பின்னரும்கூட நான் அவரை விடவில்லை. "உங்களுடைய போராளிகள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறி குற்றம் புரிந்தால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டேன். உள்ளார்ந்த தன் னம்பிக்கையோடு அவர் பதில் சொன்னார் : "பொதுவில் போராளிகளுக்கும் மக்களுக்கு மிடையேயான உறவு ஆழமானது. மக்கள் தலைமை மீது கொண்டி ருக்கும் நம்பிக்கையும் உறுதி யானது. சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால்கூட "தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ?' என்றுதான் கேட் பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு. அதேவேளை போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தி னால் அவரை அமைப்பிலிருந்து நீக்கி எமது தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவோம். காவல்துறை அவரை சிவில் சட்டங்களின் படி விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்கும். இப்படித்தான் எங்கள் அமைப்பு முறை உள்ளது.''

உள்ளபடியே விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாகம் கட்டுக்கோப்புடன் நடந்து வந்ததற்கான காட்சித் தெறிப்புகளையும் நான் வன்னியில் இருந்தபோது கண்டேன். கொழும்பிலிருந்து பழக்க மான நண்பர் ஒருவரது பஜேரோ வாகனத்தில்தான் நான் கிளிநொச்சி சென்றிருந்தேன். எனக்கு வாகனம் ஓட்டுவது, அதுவும் ஜப்பான் தயாரிப்பு வாகனங்க ளென்றால் ரசித்து ஓட்டுவேன். கொழும்பிலிருந்து வவுனியாவரை ஓட்டுநர் ஓட்டி வந்தார். அதற்குப் பிறகு ஓமந்தையில் புலிகளின் குடிவரவு சுங்கப் பிரிவு தாண்டியபின் நானே ஓட்டினேன். கிளிநொச்சி நகர் எல்லை தொடங்கி வேகத்தடை 40 கி.மீட்டருக்குள் என இருந்தது. நான் சற்று வேகமாகவே ஓட்டி வந்தேன். தமிழீழ காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, "ஏன் இந்த வேகத்தடை ஒழுங்கு, கடந்த ஒருமாதத்தில் மட்டுமே இரண்டு பள்ளிக்குழந்தைகள் விபத்துகளில் உயிரிழக்க நேர்ந்தது ' என விளக்கி பொறுமையாய் அறிவுறுத்தி அனுப்பினார்கள். என்னோடு வாகனத்தில் இருந்தவர் புனர்வாழ்வுக்கழக தலைவர் ரெஜி. அவரை அங்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆயினும் அதைப்பற்றியெல்லாம் அவர்கள் அக்கறைப்படவில்லை. கடமையைப் பணிவுடனும் பண்புடனும் செய்தார்கள்.

எனது கெட்ட நேரம்... திரும்பி வரும் போதும் அதே காவலரிடம் சிக்கிக்கொண்டோம். நல்லவேளை நான் ஓட்டவில்லை. அப்போதும் ரெஜி உள்ளிருந்தார். "இரண்டாம் முறையாக இந்த வாகனம் தவறு செய்கிறது. ரெஜி, உமக்கு இங்கேயுள்ள ஒழுங்குகள் தெரியும்தானே? இன்னும் ஒரு முறை இப்படி நடந்தா அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யவேண்டிவரு''மென எச்சரித்தார்.

புலிகள் ஏதோ சர்வாதிகார ராணுவ பயங்கரவாத ஆட்சி நடத்தினார்களென்ற பொய் பரப்புரையின் மாயத்திரைகள் எனது கண்முன்னே கிழிந்து அகன்றுபோன நாட்கள் அவை.

வன்னியில் நான் இருந்தபோது அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய மற்றொரு விஷயம் சந்திரிகா அம்மையாரின் ஐந்தாண்டு கால தொடர் யுத்தம் மற்றும் நீக்குப்போக்கில்லா பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பது. அப்போதைய அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன். "எல்லாமே தலைவரின் தீர்க்கதரிசனம்தான் ஃபாதர். சந்திரிகா பாரிய யுத்தமொன்று தொடங்குவாரென்பதும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு அந்த யுத்தம் தொடருமென்பதும் தலைவருக்குத் தெரிந்திருந்தது. எங்களையெல்லாம் அழைத்து முதலில் அவர் கதைத்தது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விவ சாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் துல்லியமாகப் பட்டியலிட்டோம். பணப்பயிர் களை தடை செய்தோம். விதை நெல்கள் சேமித் தோம். இயற்கை உரங்களுக்குப் பழகினோம். பூச்சிக்கொல்லிகளை இயற்கையாக எதிர்கொள் ளும் வழிகளை கற்றறிந்து செயற்படுத்தினோம்... சொன்னால் நம்பமாட்டீர்கள் இவற்றையெல்லாம் நாங்கள் அதிகமாக அறிந்துகொண்டது உங்கட தொலைக்காட்சியின் "வயலும் வாழ்வும்' நிகழ்ச்சியைக் கேட்டுத்தான். அதோட 5 லட்சம் சனத்துக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகா அம்மையாரின் கொடுமை யான இரக்கமற்ற பொருளாதாரத் தடையினை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்'' என்றார்.

நீண்ட யுத்த காலத்தில் பஞ்சம் பட்டினியிலிருந்து மக்களைக் காப்பதென்பது எளிதான விடயமே அல்ல. ஆனால் அதனை புலிகள் திறம்படச் செய்தார்களென்பது வியப்புத் தந்ததென்றால் நாம் பெரிதாகப் பாராட்டாத வயலும் வாழ்வும் நிகழ்ச்சி அவர்களுக்கு உதவியதென்பதை அவர்கள் வாயால் கேட்க சிலிர்ப்பாகத்தான் இருந்தது. பெரும் பட்டினிச் சாவினை தவிர்க்க நமது "வயலும் வாழ்வும்' உதவியதென்பது பெருமைதானே? இவற்றையெல்லாம் நான் இங்கு எழுதக் காரணம் புலிகளை வன்முறையாளர் களாகவே சித்தரித்த இந்திய ஊடகங்கள், அவர் கள் விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை இன்னபிற துறைகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங் களிப்புகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்ததை கோடிட்டுக் காட்டவும்தான்.

உட்கார்ந்து உரையாடும் வெகு யதார்த்தமான, சுவாரஸ்யமான மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அப்படித் தான் இயக்கத்திலும் சமூகத்திலும் எழுந்த பல சிக்கல்களையும், முரண்பாடுகளையும் அவர் தீர்த்து வைத்திருப்பார் என நான் எண்ணுகிறேன்.

ஒருநாள்...

(நினைவுகள் சுழலும்)

நன்றி. நக்கீரன் வார இதழ்

Edited by pepsi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.