Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை பூண்டோடு அழித்தவர்கள் நாடு கடந்த அரசை ஏற்றுக் கொள்வார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பூண்டோடு அழித்தவர்கள் நாடு கடந்த அரசை ஏற்றுக்கொள்வார்களா?

புலிகளை பூண்டோடு அழித்தவர்கள் நாடு கடந்த அரசை ஏற்றுக் கொள்வார்களா?

: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விளக்கக்கோவை ஒன்றினை ஓகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளியிடுவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இதற்கமைய இத் திட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் எழக்கூடிடிய பல்வேறு கேள்விகளுக்குரிய எமது கருத்துக்களை வினா – விடை வடிவிலான விளக்கக்குறிப்புக்களாகத் தற்போது வெளியிடுகிறோம்.. இவ் விளக்கக் கோவை தற்போது இலத்திரனியல் பிரதியாகவே வெளியிடப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்; (Transnational Government of Tamil Eelam) ஒன்றினை அமைப்பதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதனையும் அதனை உருவாக்குவதற்கான செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதனையும் தாங்கள் அறிவீர்கள். இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான தேவைகளை வெளிப்படுத்தி திட்ட முன்னறிவிப்பினை 16.06.2009 அன்று ஊடகங்களுக்கான அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு மட்டங்களிலும் இத்திட்டம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் நடைபெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. இது நல்ல ஒரு அறிகுறி. நமது அடுத்த காலடிக்கு அத்தியாவசியமானதும் கூட. ஆரோக்கியமான விவாதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாகத் தெளிவினையே ஏற்படுத்தும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழுக்கூடிய பல்வேறு கேள்விகளுக்குரிய எமது கருத்தை வினா – விடை வடிவிலான விளக்கக்குறிப்பாகத் தற்போது வெளிப்படுத்துகிறோம. இது முதற்கட்ட விளக்கக்கோவையே. திட்டம் தொடர்பான மேலதிகத் தகவல்கள், விளக்கங்களை நாம் தொடர்ந்தும் வெளிப்படுத்துவோம். இவ் விளக்கக்கோவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கருத்துப்பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்த துணைபுரியும் என நம்புகிறோம்.

இவ் விளக்கக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போது சிந்தனையில் உள்ள விடயங்களே. இவற்றில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் நாம் புரிந்து கொள்கின்றோம். இதனால் தொடர்ச்சியாக மக்கள் அமைப்புக்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி அதற்கேற்ப தேவையான மாற்றங்களைச் செய்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனையும் நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். இத் திட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நல்ல பல ஆலோசனைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம். எம்முடனான தொடர்புகளுக்கான மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.orgஇந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை. திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன்

இணைப்பாளர்

30.08.2009 நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விளக்கக்கோவை ஒன்றினை ஓகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளியிடுவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இதற்கமைய இத் திட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் எழக்கூடிடிய பல்வேறு கேள்விகளுக்குரிய எமது கருத்துக்களை வினா – விடை வடிவிலான விளக்கக்குறிப்புக்களாகத் தற்போது வெளியிடுகிறோம்.. இவ் விளக்கக் கோவை தற்போது இலத்திரனியல் பிரதியாகவே வெளியிடப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சில விளக்கக் குறிப்புக்கள்

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்றால் என்ன? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்(Transnational Government of Tamil Eelam) தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஒரு நிறுவனமாகும.; இது ஒரு புதுமையான எண்ணக்கரு. தமது தாயகத்தில் தமிழீழ மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளினையும் உணர்வுகளினையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்போது எந்தவித வாய்ப்புக்களும் இல்லை. சிறிலங்கா அரசு சட்டரீதியான தடைகளுக்கூடாகவும் இராணுவ ஆக்கிரமிப்பினூடாகவும் படுகொலைகளுக்கூடாகவும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையினையும் உரிமைக் குரலினையும் ஒடுக்க முனைகின்றது. இந் நிலையில் தமிழீழ தேசத்தின் அங்கமாகிய புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள சனநாயக வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் அதி உயர் மக்கள் பீடமாக இந்த நாடுகடந்த அரசாங்கம் அமைக்கப்படுகிறது.

தாயகத்தில் வாழும் அரசியற் தலைவர்களும் மக்களும் இந்த அரசாங்கத்த்pல் பங்கு பெறுவது நடைமுறைச் சாத்தியமின்மையால் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் மத்தியிலிருந்து சனநாயக முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த அரசு தாயகத்திலிருக்கும் நேச சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும்.

2. நாடு கடநத்த் தமிழீழ அரசு ஏன்?; அதற்கான அவசியம் எவ்வாறு ஏற்பட்டுள்ளது? ஈழத்தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு;, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தினை தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் இணையாகவும் செழுமைப்படுத்துவதிலுமேயே தங்கியுள்ளது. இதனை சிறப்பாக அடைவதற்கும், அச்சுறுத்தல்களினை ஏற்படுத்தக்கூடிய காரணிகளினைக் கட்டுப்படுத்தி வெற்றிகொள்வதற்கும் ஏதுவாக ஒரு உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு அவசியமாகவுள்ளது. இது 1976-ல் வட்டுக்கோட்டை தீர்மானமாக வடிவம்பெற்று 1977ம்ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப்படுத்தப்பட்டது. 1985 திம்பு கோட்பாடுகள் இதற்கு மேலும் வலுச்சேர்த்தது. இலங்கைத்தீவினுள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட்டு இன்றைய நிலையில் கூர்மையடைந்துள்ள இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியற்கட்டமைப்பும், பௌத்த சிங்கள மேலாதிக்க சமூகத்தினை சார்ந்த அரசியலமைப்பும,; அதனடிப்படையான சட்டங்களும் ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளினையும் நல்வாழ்வினையும் மறுத்துள்ளது. இவை தமிழ் மக்களினதும் பௌத்த சிங்களவரல்லாத ஏனைய இனங்களினதும் அரசியல் தனித்துவத்திற்கும் சமூக இருப்புக்கும் சுதந்திரமான பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப்பெரும் தடைகளாக விளங்குகின்றன. அத்துடன் தமிழ்மக்கள் தங்கள் அரசியல் வேட்கையினை சுதந்திரமாக தெரிவிப்பதற்கும் அதற்காக குரலெழுப்பி போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்ளக நிலைமைகள் மிகப்பெரும் தடையாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளன. தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழச் சமூகமும் ஒருவகையில் அரசியற் கைதிகளாகவும், உரிமைகளுக்காக போராடுவதிலிருந்து தடுக்கப்பட்ட வர்களாகவும, அடிமைகளாக வாழவும் நிர்ப்பந்திக்கப்பட்டள்ளனர். அதேவேளையில் சிங்கள அரசின் தலைவர்களும், கொள்கை வகுப்பாளர்களும, இராசதந்திரிகளும் இராணுவத் தளபதிகளும் இலங்கைதத் தீவில்; தமிழ்மக்களுக்கு எதுவித பிரச்சனையும் இல்லை என்றும் அரசில் தீர்வு என்பது அவசியமற்றது எனவும் உள்நாட்டிலும் சர்வதேசமட்டங்களிலும் பிரகடனம் செய்துவருகின்றனர். இவற்றினையெல்லாம் எதிர்கொண்டு தமிழ்மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்றெடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைகளுடாக முன்னெடுக்கவேண்டிய பாரியகடமை இலங்கைத்தீவிலிருந்து வெளியேறி வாழுகின்ற புலம்பெயர் தமிழ்மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப்பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடுகடந்த தமிழீழ அரசு என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.

3. நாடு கடந்த அரசாங்கததிற்கும் (Transnational Government) புகலிட அரசாங்கத்திற்கு மிடையில் (Government in Exile)வேறுபாடுகள் ஏதும் உண்டா? அல்லது இரண்டும் ஒன்றா? இவ்விரண்டு அரசாங்கங்களின் செயற்பாடுகளுக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் இவ்விரு அரசாங்கங்களும் கோட்பாட்டுரீதியில் வேறானவை. புகலிட அரசாங்கம் தமது நாட்டில் இயங்க முடியாத சூழலில் தமது நாட்டைவிட்டு தப்பி ஓடி வரும் அரசியல் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்கக்கூடிய நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்து அமைக்கும் அரசாங்கமாகும். தமது நாட்டிற்குத் திரும்பிச் சென்று அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலை வரும்போது புகலிட அரசாங்கத்தினைச் சேர்ந்தவர்கள் பொதுவாகத் தமது நாடுகளுக்குத் திரும்பிச் சென்று தமது நாட்டில் அரசியல் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவர். புகலிட அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு நாடு முன்வருதல் அவசியம.; புகலிட அரசாங்கம் செயற்படுவதற்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. புகலிட அரசாங்கம் பொதுவாக தனது ஆளுகைக்குரிய விடயங்களாக தமது தாயகத்து விடயங்களை மட்டுமே கொண்டிருக்கும். நாடு கடந்த அரசாங்கம் புகலிட அரசாங்கத்தினைக் கடந்த ஒரு புதிய முறையாகும். அதன் கோட்பாட்டு அடிப்படை கடந்த இரு தசாப்தங்களாக சமூக அறிஞர்களின் கூடுதல் கவனத்தினை ஈர்த்துள்ள புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நாடு கடந்த வாழ்க்கை முறையுடனும் (Transnational life) நாடு கடந்த அரசியலுடனும்; (Transnational Politics) தொடர்புபடுகிறது. புலம் பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளில் தமது வாழ்வினை அமைத்துக் கொள்ளும் போது தமது தாயகத்துடனும் தமது மக்கள் பரவிச் சிதறி வாழும் ஏனைய நாடுகளுடனும் எல்லைகள் கடந்த உறவைப் பேணிவருகின்றனர். இவர்களது வாழ்க்கைமுறை தாம் வாழும் நாடுகளின் எல்லைகளுக்குள் சுருங்கிவிடுவதில்லை. நாடுகள் கடந்த ஒரு சமூகமாக இவர்கள் தமது வாழ்க்கையினை அமைத்துள்ளனர். தாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் தமது வாழ்வினை இவர்கள் அமைத்துக் கொண்டபோதும் இவர்களது அரசியல் சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு அம்சங்களைத் தீர்மானிப்பதில் நாடு கடந்த சமூக வெளி (Transnational Social Space) முக்கிய பங்கினை வகிக்கிறது. ஈழத் தமிழரின் புலம் பெயர் வாழ்க்கையும் இவ்வாறு தான் உள்ளது. புலம் பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்ல தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும், நாடுகடந்து தமது தொடர்புகளைப் பேணிய வண்ணம் தமது வாழ்வினை தாயகத்தில் அமைத்துள்ள ஒரு சூழலில் அம்மக்களும் ஈழத்தமிழரின் நாடு கடந்த சமூக வெளியின் அங்கமாவே உள்ளனர். மேலும், ஈழத் தமிழரின் அரசியல் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குள் சுருங்கி விடவில்லை. ஈழத்தமிழர்களுடைய அரசியல் தற்போது நாடு கடந்த அரசியலாக மாற்றம் கண்டுள்ளது. தற்பொழுது நாம் பேசுகின்ற தேசியம் பன்முகப்பாடானதும் சமூகநலன்மிக்கதும் சனநாயக அடிப்படைகளில் கட்டியெழுப்பப்படுவதுமாகும். தற்போது அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்த சமூக வெளியில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக அமைக்கப்படுகிறது. தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை மட்டுமன்றி தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டினையும் இந்நாடு கடந்த அரசாங்கம் தனது ஆளுகைக்குள் கொள்ளும். மக்களால் மக்களில் தங்கி நிற்கக்கூடிய முறையில் இவ் அரசாங்கம் அமைக்கப்படுவதால் இதன் செயற்பாடுகளுக்கு நாடுகளின் அங்கீகாரம் என்பது முன்நிபந்தனையாக இருக்காது. தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பொது அமைப்புக்கள் இவ் அரசாங்கத்தினத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்க வேண்டும். மக்களில் தங்கிநின்றவாறே அனைத்துலக அரங்கில் தமிழர் தேசியம் தாயகம் சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீhவுகாண்பதற்கு உலக நாடுகளினதும் மக்களதும் ஆதரவினை இவ் அரசாங்கம் திரட்டும். தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக அரசியல் இராசதந்திர வழிமுறைகளுக்கூடாகப் போராடுவோம்.

4. நாடுகடந்த அரசு உருவாகிவிட்டதா? இல்லையெனின் அறிவிக்கப்பட்டு;ள்ள ஆலோசனைக்கு குழுவில் உள்ளோர் தான் இதனை உருவாக்கப் போகிறார்களா? நாடு கடந்த அரசினை உருவாக்கும் பணி எவ்வாறு நடைபெறும்? நாடு நடந்த அரசு இன்னும் உருவாகவில்லை. அதனை உருவாக்குவதற்கான செயற்குழு திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இச் செயற்குழுவின் உறுப்பினர்களில் இதன் இணைப்பாளரான உருத்திரகுமாரனின் பெயர் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு நடந்த அரசினை உருவாக்குவதற்கான செயற்பாட்டுக்குழுவினை நாடுகள் சார்ந்து உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இச் செயற்பாட்டுக்குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்களை தற்போது இணைத்து வருகிறோம். ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்படும் செயற்பாட்டுக்குழுவுக்குத் தலைமை தாங்குபவர்களை உள்ளடக்கிய ஒரு தலைமைச் செயற்பாட்டுக்குழுவும் அமைக்கப்படும். விரைவில் ஒவ்வொரு நாடுகளுக்குமுரிய செயற்குழுவின் விபரங்களை வெளிப்படுத்துவோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழு உருவாக்கச் செயற்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. இந் நாடுகள் தழுவிய செயற்பாட்டுக்குழுக்கள் தத்தமது நாடுகளில் தமிழ் அமைப்புக்களுடனும் தமிழ் மக்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும். தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல தமது நாடுகளில் உள்ள சிவில் சமூகத்தின் (Civil Soceity) ஆதரவினையும் இவ் அரசாங்கத்தினை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். ததத் மது நாடுகளின் அரசியல் தலைவர்களினதும் அரசாங்கத்தினதும் ஆதரவினை இந் நாடு கடந்த அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு திரட்டும் செயற்பாடுகளிலும் இச் செயற்குழு ஈடுபடும். ஆலோசனைக் குழுவும் முஸ்லீம், இந்திய புத்திஜீவிகளையும் உள்வாங்கி விரிவுபடுத்தப்படும். ஓவ்வொரு நாடுகளிலும் வாழும் ஈழத்தழிழ் மக்களின் வாக்காளர் பட்டியல் தமிழர் மத்தியில் இயங்கும் மக்கள் அமைப்புக்களின் துணையுடன் நன்மதிப்புப் பெற்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் துணையுடன் சர்வதேச நடைமுறைகளுக்கமைய சுயாதீனமான தேர்தல் குழு அமைக்கப்பட்டு தேர்தல்களை நடத்தி நாடு கடந்த அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தம்மை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி சட்டச் சிறப்புக் குழுவினரின் உதவியுடன் மக்கள் அமைப்புக்களின் ஆலோசனைகளை உள்வாங்கி நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான யாப்பினை தயாரிப்பார்கள்.

5. நாடு கடந்த அரசுக்கான முயற்சியினை புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் ஏன் முன்;னெடுக்க வேண்டும்?; நாட்டை விட்டு வெளியேறி வேறு தேசங்களில் குடியுரிமைகளினைப் பெற்றவர்களுக்கு ஈழத்தின் அரசியல் விடுதலையில் உள்ள பங்கு யாது? நாடு கடந்த அரசியல் என்பது ஒரேநேரத்தில் பல தேசியங்களினைத் தன்னகத்தே கொண்டதாக இருக்க முடியும.; அதாவது ஒருவர் ஒரே நேரத்தில் பிரித்தானியராகவும் தமிழராகவும் அல்லது கனடியராகவும் தமிழராகவும் இருக்கமுடியும். இது எங்கள் சமூகத்தின் பலமே தவிர பலவீனமல்ல. இது ஈழத்தமிழர்களுக்கு வலுச்சேர்க்கின்ற விடயமாகவே கொள்ளப்படவேண்டும். 21ம் நூற்றாண்டின் அரசியல் யதார்த்தம் நாடுகடந்த அரசியலாகவே பரிணாமம் பெற்று வருகின்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்துவருகின்ற ஐரிஷ் மக்கள் வடஅயர்லாந்து மக்களின் போராட்டத்திற்கு உறுதியானதும் வெளிப்படையானதுமான ஆதரவினை வழங்கினார்கள். புலம்பெயர்ந்து வாழ்கின்ற யூதமக்கள் இந்நாள் வரையும் இஸ்ரேல் தேசத்தினை அரசியல்ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் வலுப்படுத்திவருகின்றனர். இன்னுமொரு தளத்தில் இத்தாலி, எல்சல்வடோர், எரித்திரியா, குரோசியா, மோல்டோவா போன்ற பல நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களினை தமது சொந்த நாட்டு அரசியலின் தவிர்க்கமுடியாக அங்கமாக மாற்றிவிட்டன. இத்தாலிய பாராளுமன்றத்திற்கு நான்கு உறுப்பினர்கள் புலம்பெயர்ந்த இத்தாலிய மக்களிடமிருந்து தெரிவுசெய்யப்படுகின்றார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.