Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி பொன்டாய் கடற்கரையில் வரும் 25ம் திகதி மதியம் 12.45 மணி முதல் வன்னித்தடுப்பு முகாம்களில் வாழும் சிறுவர்களுக்காக நடன நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

99114779.jpg

A benefit for children currently interned in camps in the North-East of Sri Lanka

Join Tusker for an afternoon of authentic Sri Lankan food (BYO), a traditional dance performance, local Bondi musicians, special guests & unique treasures for auction

Tickets: $40.00 – call 0417 622 517 or email tuskersrescue@futura.com.au

RSVP: 20th October 2009

Proceeds: Australian Tamil Congress – www.australiantamilcongress.com

Sponsors: Thanks to - Altaphotoca - Futura – Omegaman - www.omegaman.com.au

கந்தப்பு,

தீபாவளி கொண்டாடினால் துரோகம். இப்படி வன்னிச் சிறுவர்களைச் சாட்டி ஆட்டம், பாட்டம் நடத்தினால் தியாகமா ?? வன்னி முகாம்களுக்கு எவரையும் அனுமதிப்பதில்லை எனும் தாங்கள், இந்த நிதி எந்தவகையில் அந்தச் சிறார்களைச் சென்றடையும் என விளக்குவீர்களா ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்நிகழ்வினை நடாத்துபவர்கள் சிட்னியில் உள்ள ஒரு கவுன்சில். இந்நிகழ்வுக்கு தமிழரல்லாத அவுஸ்திரெலியர்களுக்காகவே நடாத்தப்படுகிறது.

இந்நிகழ்வில் வன்னி முகாம்களில் சிறுவர்களின் அவலங்களை நடனமாடிக் காட்டுவார்கள். இந்நிகழ்வுக்கு செல்லும் அவுஸ்திரெலியர்களில் பாராளுமன்ற் உறுப்பினர்கள், சட்ட வல்லுனர்கள்,சட்டக்கல்லூரி மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து வன்னி தடுப்பு முகாம்களில் வாழும் மக்களின் அவலங்களை எங்களுக்கு மீண்டும் சொல்வதினால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது. வன்னிச் சிறையில் வாழும் சிறுவர்களின் அவல நிலையை தமிழரல்லாத அவுஸ்திரெலியர்களுக்கு வெளிப்படுத்தவே இந்நிகழ்வு. உங்களுக்குத் தெரிந்த தமிழரல்லாதவர்களுக்கு இந்நிகழ்வு பற்றித் தெரியப்படுத்தி அவர்களையும் கலந்து கொள்ளக் கேளுங்கள்.

Edited by கந்தப்பு

கந்தப்பு,

நான் உங்களிடம் கேட்ட கேள்விக்குரிய பதிலை இதுவரை தாங்கள் தரவில்லையே ?? நிகழ்ச்சியில் வசூலிக்கப்படும் நிதி வடகிழக்கில் முகாம்களில் வாழும் சிறுவவருக்ககாக எனில்,

வன்னி முகாம்களுக்கு எவரையும் அனுமதிப்பதில்லை எனும் தாங்கள், இந்த நிதி எந்தவகையில் அந்தச் சிறார்களைச் சென்றடையும் என விளக்குவீர்களா ??

இது தான் எனது கேள்வி. அதனை மீண்டும் கேட்டுள்ளேன். எனவே அதற்ககான விளக்கத்தைத் தாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்நிகழ்வினை ஒழுங்கு செய்வர்கள் சிட்னியில் உள்ள ஒரு கவுன்சில். வன்னியில் தடுப்புமுகாம்களில் எமது சிறுவர்களின் அவலங்களை தமிழரல்லாதவர்களுக்கு கொண்டு செல்வதற்காகவே இந்நிகழ்ச்சி அந்தக்கவுன்சில் மூலம் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது. எம்மவர்களில் பலர் தற்பொழுது மே மாதத்துக்குப்பிறகு பல கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை. வெள்ளைக்காரர்களை அழைக்க வேணுமென்றால் அவர்களுக்கு உணவு, அவர்கள் விரும்பும் இசை(இதனால் தான் பொன்டாயில் இருக்கும் உள்ளுர் ஆங்கில இசைக்கலைஞர்கள்)போன்றவற்றை வழங்கி எமது அவலங்களை சொல்லப்போகிறார்கள். அதுவும் சிறுவர்களுக்கு நடக்கும் அவலங்களைச் சொல்வதினால் அதிக தாக்கம் ஏற்படும்.இதனால் நடைபெறும் மண்டபத்துக்கான வாடகை, உணவு, இசைக்கு பணம் தேவை. இந்த விளம்பரம் எனக்கு மின்னஞ்சலில் கிடைத்தது. அதன் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் விபரங்கள் இருக்கிறது. உங்களுக்குத் தோன்றும் சந்தேகங்களை அவர்களிடம் கேளுங்கள்.

இலவசமாக நிகழ்ச்சி நடத்தலாம் என்று நீங்கள் நினைத்தால் எப்படி இனி நடத்தி வெள்ளைக்காரர்களைக் கூப்பிடலாம் என்றும் எப்படி சிறுவர்களின் அவலங்களை அவர்களுக்கு வெளிப்படுத்தலாம் என்றும் சொல்லுங்கோ.

கந்தப்பு,

நீங்கள் மீண்டும மீண்டும் சம்மந்தமில்லாமல் சமாளிப்புப் பதில்களையே தருகின்றீர்கள். வடகிழக்கு முகாம்களில் வாழும் சிறுவர்களுக்கான நிதியாகவே சேர்க்கப்படும் நிதி விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு அங்கு சேர்பார்கள் என்பது பற்றியே நான் கேள்வி கேட்டேனே தவிர, ஏன் பணம் வசூலிக்கின்றார்கள் என்று கேட்கவில்லை. நீங்கள் உள்ள நாட்டில் நடக்கும் நிகழ்ச்சி பற்றிய தகவலை, நீங்கள் இணைத்ததினாலேயே உங்களிடம் கேட்டேன். உங்கள் நாட்டிற்கும் எனது நாட்டிற்கும் நீண்ட நேர வித்தியாசம். அதனால் தொலைபேசியில் கதைக்க நேரங்கள் எனக்கு ஒத்து வராது. முடிந்தால் என் சார்பாக நீங்களே ஒருமுறை விசாரித்து பதிலை இணைத்து விடுங்களேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் A benefit for children currently interned in camps in the North-East of Sri Lanka என்று தான் போட்டிருக்கிறார்கள். அதனால் தான் நான் தமிழில் தடுப்பு முகாம்களில் வாழும் சிறுவர்களுக்காக என்று எழுதியிருக்கிறேன். இதில் பணம் வசூலிப்பதாகச் சொல்லப்படவில்லை. நிகழ்ச்சி நடாத்துவதற்கு பணம் தேவை( மண்டபம், வெளினாட்டு இசைக் கலைஞர்கள், உணவு).

வன்னியில் இருக்கும் சிறுவர்களின் அவலங்களை மட்டும் சொல்ல நிகழ்ச்சி நடாத்தினால் ஒரு வெள்ளைக்காரனும் செல்லமாட்டான். ஆனால் வெள்ளைக்காரர்களின் இசை நிகழ்ச்சி நடாத்தினால் வெள்ளைக்காரர்கள் செல்வார்கள். இப்படியான நிகழ்ச்சியில் எமது அவலங்களை வெளிப்படுத்த அவர்கள் எமக்கு சந்தர்ப்பங்கள் தந்திருக்கிறார்கள். இந்நிகழ்வுக்கு செல்ல கட்டணம் 40 வெள்ளிகள். இப்பொழுது இங்கு மதியம் பகல் 12.20. நீங்கள் கடைசியாகப் பதில் அளித்த நேரத்தில் இங்கு பகல். ஆகவே உங்களுக்குத் தோன்றும் சந்தேகங்களை அவர்களிடம் கேளுங்கள். இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் அவலங்கள் சேர்க்கப்பட்டதைக் குழப்ப சிங்களவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் A benefit for children currently interned in camps in the North-East of Sri Lanka என்று தான் போட்டிருக்கிறார்கள். அதனால் தான் நான் தமிழில் தடுப்பு முகாம்களில் வாழும் சிறுவர்களுக்காக என்று எழுதியிருக்கிறேன். இதில் பணம் வசூலிப்பதாகச் சொல்லப்படவில்லை. நிகழ்ச்சி நடாத்துவதற்கு பணம் தேவை( மண்டபம், வெளினாட்டு இசைக் கலைஞர்கள், உணவு).

வன்னியில் இருக்கும் சிறுவர்களின் அவலங்களை மட்டும் சொல்ல நிகழ்ச்சி நடாத்தினால் ஒரு வெள்ளைக்காரனும் செல்லமாட்டான். ஆனால் வெள்ளைக்காரர்களின் இசை நிகழ்ச்சி நடாத்தினால் வெள்ளைக்காரர்கள் செல்வார்கள். இப்படியான நிகழ்ச்சியில் எமது அவலங்களை வெளிப்படுத்த அவர்கள் எமக்கு சந்தர்ப்பங்கள் தந்திருக்கிறார்கள். இந்நிகழ்வுக்கு செல்ல கட்டணம் 40 வெள்ளிகள். இப்பொழுது இங்கு மதியம் பகல் 12.20. நீங்கள் கடைசியாகப் பதில் அளித்த நேரத்தில் இங்கு பகல். ஆகவே உங்களுக்குத் தோன்றும் சந்தேகங்களை அவர்களிடம் கேளுங்கள். இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் அவலங்கள் சேர்க்கப்பட்டதைக் குழப்ப சிங்களவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

கந்தப்பு,

ஒரு பொய்யை மறைக்க திரும்பத் திரும்ப பொய்களை எழுத வேண்டாம். "A benefit for children currently interned in camps in the North-East of Sri Lanka". இதன் அர்த்தமே "இலங்கையின் வடகிழக்கில் தற்போது தடை முகாம்களில் வாழும் சிறுவர்களுக்கு நிதி உதவி" என்பதே. இதற்கு பணம் சேர்க்காமல் வேறு என்ன சேர்த்து நிதி அளிப்பது. தயவு செய்து எனிமேலாவது அடுத்தவரை ஏமாற்ற பொய்களை எழுதுவதை நிறுத்துங்கள். உங்களைப் போன்றவர்கள் எடுத்ததற்கெல்லாம் பொய்களை எழுதிக் கொண்டு, சிங்களவர்கள் நிகழ்ச்சிகளை குளப்ப முயல்கின்றார்கள் என்று கதை புனைவதில் என்ன பயன் ?? உங்களைப் போன்றோர் ஏமாற்ற முயல்வது சிங்களவர்களை அலல சக தமிழர்களைத் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

benefit என்றால் நன்மை என்று ஒரு பொருள் இருக்கிறது. இந்நிகழ்வினால் அவர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை. அவுஸ்திரெலியா வாழ் யாழ் உறவுகள் சுண்டல், தூயா, அரவிந்தன், யமுனா, புத்தன் ,ரகுநாதன், ஈழவன், வேறு சிட்னி வாழ் யாழ் உறவுகள் என்று தெரிந்தால் தனிமடலில் இந்நிகழ்வு பற்றிக் கேளுங்கள். இவர்களிடம் சிங்களவர்கள் இதற்கு முன்பு இப்படியான நிகழ்வுகளைக் குழப்ப என்ன செய்தார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவில் வசம்புவினால் கேட்கப்பட்ட கேள்விகள் - தீபாவளி கொண்டாடினால் துரோகம்?

நான் வேறு ஒரு பதிவில் திபாவளியை இராவணனைக் கொன்ற தினத்தை திபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். கிட்லரைக் கொன்ற தினத்தை வெள்ளைக்காரர்கள் கொண்டாடுகிறார்களா? என்று கேட்கப்பட்ட ஆக்கத்தினை யாழில் இணைத்தேன். அதில் பல விடயங்கள் எனக்கு சரியாகப் பட்டது. ஆனால் அதில் திபாவளியைக் கொண்டாடினால் துரோகிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறதா?. அல்லது நான் சொன்னேனா?

வன்னி முகாம்களில் எவரையும் அனுமதிப்பதில்லை என்று நான் சொன்னதாக வசம்பு எழுதியிருக்கிறார். இப்பதிவில் சொல்லவில்லை. வேறு பதிவில் எங்கே சொன்னேன்?. எனது கருத்து வன்னியில் பல தடுப்பு முகாம்கள் இருக்கின்றன. சில தடுப்பு முகாம்களில் என்ன நடக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாது. வெளியுலகில் இருந்து ஒருவரும் செல்ல முடியாது. இங்கு இளம் வயதுடையோர் இருக்கிறார்கள். மற்றைய முகாம்களில் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் செல்வதைத் தடை செய்யப்பட்டிருக்கிறது. எனினும் ஒருசில தொண்டு நிறுவனங்களை சில பகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்குகிறார்கள் . உ+ம் - கரித்தாஸ் என்ற கத்தோலிக்க அமைப்பு. இம்முகாம்களில் ஒரு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் அனாதைப்பிள்ளைகளை, விழிப்புலன் அற்றவர்களை தனியாகக் கவனிக்க அனுமதி வழங்கி இருக்கிறது.

----------------

கந்தப்பு,

நீங்கள் மீண்டும மீண்டும் சம்மந்தமில்லாமல் சமாளிப்புப் பதில்களையே தருகின்றீர்கள். வடகிழக்கு முகாம்களில் வாழும் சிறுவர்களுக்கான நிதியாகவே சேர்க்கப்படும் நிதி விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு அங்கு சேர்பார்கள் என்பது பற்றியே நான் கேள்வி கேட்டேனே தவிர, ஏன் பணம் வசூலிக்கின்றார்கள் என்று கேட்கவில்லை. நீங்கள் உள்ள நாட்டில் நடக்கும் நிகழ்ச்சி பற்றிய தகவலை, நீங்கள் இணைத்ததினாலேயே உங்களிடம் கேட்டேன். உங்கள் நாட்டிற்கும் எனது நாட்டிற்கும் நீண்ட நேர வித்தியாசம். அதனால் தொலைபேசியில் கதைக்க நேரங்கள் எனக்கு ஒத்து வராது. முடிந்தால் என் சார்பாக நீங்களே ஒருமுறை விசாரித்து பதிலை இணைத்து விடுங்களேன்.

------------

மேலே உள்ள பதிவை வசம்பு அவர்கள் சிட்னி நேரம் காலை 11.33 க்கு பதிந்திருக்கிறார். அவரால் அந்த நேரத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவரால் சந்தேகங்களைக் கேட்க முடியும். அத்துடன் அது கைத்தொலை பேசி இலக்கம் . இரவைத்தவிர என்னேரமும் கேள்விகள் கேட்க முடியும். மின்னஞ்சல் முகவரிக்கு 24 மணி நேரமும் கேள்வி கேட்கலாம்.

இந்த நிகழ்ச்சியை நடாத்துபவர்களுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. அவுஸ்திரெலியா ஊடகங்களிலும் இந்நிகழ்வு பற்றிய செய்திகள் வந்திருக்கிறது. யாழில் நான் சிட்னியில் நடைபெறும் தாயாக சம்பந்தமான நிகழ்ச்சியை இனிமேல் இணைக்கும் போது அதில் கொடுக்கப்படும் மின்னஞ்சல் , தொலைபேசிகளை தொடர்பு கொண்டு சந்தேகங்களைக் கேளுங்கள்.

இப்பதிவில் வசம்புவினால் கேட்கப்பட்ட கேள்விகள் - தீபாவளி கொண்டாடினால் துரோகம்?

நான் வேறு ஒரு பதிவில் திபாவளியை இராவணனைக் கொன்ற தினத்தை திபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். கிட்லரைக் கொன்ற தினத்தை வெள்ளைக்காரர்கள் கொண்டாடுகிறார்களா? என்று கேட்கப்பட்ட ஆக்கத்தினை யாழில் இணைத்தேன்.

:)"இராவணனைக் கொன்ற தினத்தை திபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்". அருமை.... அருமை....... புதியதொரு தகவலைத் தந்ததன் மூலம் இவ்வளவு நாளும் கம்சனைக் கொன்றது தான் திபாவளி என்று நம்பியிருந்த எனக்கு கண்ணைத் திறந்து விட்டீர்கள். :):)

அப்படியே உங்கள் Benefit சம்மமந்தமான விளக்கமும் என்னை அப்படியே புல்லரிக்க வைத்து விட்டது. Benefit என்ற சொல் வேறு சொற்களுடன் சேர்ந்து வரும் போது வெவ்வேறு அர்த்தங்களில் வரும்.(உதாரணமாக Benefit of doubt - சந்தேகத்தின் சாதகமான பலனை எனும் அர்த்தத்தில்) ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட வசனம் நிதி சம்மந்தமாகவே வருகின்றது. அதற்கு பொய்யான விளக்கஙங்கள் கொடுக்க நீங்கள் இவ்வளவு சிரமம் எடுபப்பதேனோ ?? நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களிடமே கேள்வியைக் கேளுங்கள் எனும் நீங்கள், Benefit என்ற சொல்லிற்கு எடுத்து விடும் விளக்கங்கள் அம்மாடியோ..... முடியலை... நன்றி வணக்கம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol:"இராவணனைக் கொன்ற தினத்தை திபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்". அருமை.... அருமை....... புதியதொரு தகவலைத் தந்ததன் மூலம் இவ்வளவு நாளும் கம்சனைக் கொன்றது தான் திபாவளி என்று நம்பியிருந்த எனக்கு கண்ணைத் திறந்து விட்டீர்கள். :lol::lol:

நான் இணைத்த ஆக்கத்தில் 'இராவணைனைக் கொன்றதினத்தை திபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். கிட்லர் இறந்ததினத்தை வெள்ளைக்காரர்கள் கொண்டாடுகிறார்களா? என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவர் கொல்லப்பட்ட தினத்தை கொண்டாடுவது சரியா? என்று அதில் கேட்கப்பட்டது. அதில் கொண்டாடுபவர்கள் துரோகி என்று சொல்லப்பட்டிருக்கிறதா?. சிலர் திபாவளி தினத்தை இராவணனைக் கொன்ற தினமாகவே கருதுகிறார்கள். வேறு சிலர் நரகாசுரனைக் கொன்றதினை தீபாவளியாகக் கருதுகிறார்கள். நான் இதில் தீபாவளியைக் கொண்டாடுவது துரோகம் என்று சொல்லி இருக்கிறேனா?.

In Hinduism, Diwali marks the return of Lord Rama to his kingdom Ayodhya after defeating Ravana - the ruler of Lanka in the epic story of Ramayana. It also celebrates the slaying of the demon king Narakasura by Lord Krishna. In Jainism, Diwali marks the attainment of moksa by Mahavira in 527 BC.

In Sikhism, Diwali commemorates the return of Guru Har Gobind Ji to Amritsar after freeing 52 other Hindu kings imprisoned in Fort Gwalior by Emperor Jahangir.

http://en.wikipedia.org/wiki/Diwali

One of the attractions of the Deepavali fair is the burning of the effigy of the Demon King Ravana followed by Fireworks display. The program will finish around 8:30 pm with a fantastic display of fireworks.

http://www.hinducouncil.com.au/diwali.html

வன்னித்தடுப்பு முகாம்களில் எவரையும் அனுப்புவதில்லை என்று நான் சொன்னாத வசம்பு சொன்னதற்கு விளக்கம் கொடுத்து விட்டேன்.

உங்களைப் பார்த்து நீங்கள் சுவிற்சுக்கு அகதியாகச் சென்றதினால் உங்களுக்கு கிடைத்த Benefit என்ன? என்று கேட்டால் உடனே எனக்கு அகதிப்பணம் கிடைக்குது என்று தான் நீங்கள் பதில் அளிப்பீர்களா?. இங்கு Benefit என்பது நன்மை என்ற பொருள் இருக்கிறது. வேறு ஒருவரைக் கேட்டால் சிறிலங்காவை விட இங்கு சுவிஸில் நான் சுதந்திரமாக வாழக்கூடியதாக இருக்கிறது என்று பதில் அளிப்பார்.

Edited by கந்தப்பு

உங்களைப் பார்த்து நீங்கள் சுவிற்சுக்கு அகதியாகச் சென்றதினால் உங்களுக்கு கிடைத்த Benefit என்ன? என்று கேட்டால் உடனே எனக்கு அகதிப்பணம் கிடைக்குது என்று தான் நீங்கள் பதில் அளிப்பீர்களா?. இங்கு Benefit என்பது நன்மை என்ற பொருள் இருக்கிறது. வேறு ஒருவரைக் கேட்டால் சிறிலங்காவை விட இங்கு சுவிஸில் நான் சுதந்திரமாக வாழக்கூடியதாக இருக்கிறது என்று பதில் அளிப்பார்.

கந்தப்பண்ணை, திருவாளர் மதிப்புக்குரிய வசம்பைப் பார்த்து, சீமானைப் பற்றிக் குறை சொல்ல அவருக்கு என்ன Benefit கிடைக்கிறது என்று கேளுங்கோ?. சாத்திரி பேட்டி கண்ட தமிழ் உணர்வாளர் இனி இப்படித்தான் செய்வார் என்று எழுதியதற்கு அவருக்கு என்ன Benefit கிடைக்கிறது என்று கேளுங்கோ?. திருமதி கிளிண்டன் சொன்ன கருத்துக்கு கண்டனம் தெரிவித்த இரத்தினசிறி விக்கிரம சிங்காவின் கருத்துத்தான் சரி என்று அடம் பிடித்த திருவாளர் மதிப்புக்குரிய வசம்புக்கு என்ன Benefit கிடைக்கிறது என்று கேளுங்கள். அப்ப அவர் Benefitக்கு சரியான விளக்கம் சொல்லுவார்

அவரின் பதில் நிதி என்றால் யாரிடமிருந்து கிடைக்கிறது என்று சொல்லச் சொல்லுங்கள். நானும் போய் வாங்கி வீடு பணக்காரணாக வரலாம் தானே.

திருமதி கிளிண்டன் சொன்ன கருத்துக்கு கண்டனம் தெரிவித்த இரத்தினசிறி விக்கிரம சிங்காவின் கருத்துத்தான் சரி என்று அடம் பிடித்த திருவாளர் மதிப்புக்குரிய வசம்புக்கு என்ன Benefit கிடைக்கிறது என்று கேளுங்கள். அப்ப அவர் Benefitக்கு சரியான விளக்கம் சொல்லுவார்.

ரத்திணசிரியார் கிளங்டனின் தவறைக் காட்டி தமது நாட்டை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அதைச் சுட்டிக்காட்ட அமெரிக்காவிற்கு யோக்கியதை கிடையாதென்பது உண்மை.

:lol:ஒழுங்காக தமிழையே விளங்கிக்கொள்ள முடியாதவர்களெல்லாம் ஆங்கிலத்திற்கு அர்த்தம் சொல்ல வெளிக்கிடுவது என்ன கொடுமை. :lol::wub:

:lol:அடுத்தவன் நிதி வாங்கிறான் என்று கதையளந்து, ஏமாற்றி சேர்த்த பணத்தை இப்ப யார் உரிமை கொண்டாடுவது என புடுங்குப்படுவது, யாரென்று இன்று ஐரோப்பா முதல் கொண்டு அனைத்து நாடுகளும் அறியும் செல்லம். :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.