Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள் குடியமர்வு புள்ளி விபரங்களும் அரச பிரச்சாரங்களும் - புள்ளி விபரம்

Featured Replies

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை ஊடகங்களில் ,தடுப்பு முகாம்களில் இருந்து மீழ்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் புள்ளி விபரங்களுக்கும் அதே நேரம் அர்சசாங்க கச்சேரி, கிராம சேவகர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனங்களின் புள்ளி விபரங்களுக்கும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக கடந்த செப்டெம்பர் மாதம் கச்சேரி அறிக்கையின் படி வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் 238,057 மக்கள் இருப்பதாக பதிவுகள் கூறுகின்றன.

அதன் பின்னர் வவுனியா கச்சேரி புனர்வாழ்வு திட்ட திணைக்கள பிரிவினால் அதன் இயக்குனர் திரு பரந்தாமன் என்பவரால் கையெழுத்திட்டு 14.10.2009 அன்று வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின்படி 230,974 பேர் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகின்றது. இதன்படி உண்மையில் 7,000 மக்களே ஒரு மாத காலப்பகுதியில் வெளியே விடப்பட்டுள்ளனர். ஆனால் இக்காலப்பகுதியில் 15000 பேர் வரையில் வவுனியா, மன்னார், மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கு விடப்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகபிரிவுகள் கூறியுள்ளது.

இதே வேளை திருகோணமலை உட்பட தென் தமிழீழ மாவட்டங்களில் இன்னமும் பல குடும்பங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப படாமல் இடை தங்கல் முகாம் மற்றும் இராணுவ முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேற்படி குடும்பங்கள் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடம் கேட்டபோது வவுனியாவில் இருந்து இன்னமும் கிளியரன்ஸ் வரவில்லை என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ஏற்கனவே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குனர் பிரைட் அடம்ஸ் மற்றும் அனைத்துலக அபய ஸ்தாபனத்தின் செப்டெம்பர் மாத அறிக்கைகளிலும் கூறப்பட்டுள்ளமை தெரிந்ததே. அதாவது மீழ் குடியேற்றம் செய்யவென அழைத்து செல்லப்படும் மக்கள் மீண்டும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்படுவதனை சுட்டி காட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா தடுப்பு முகாம்களில் தற்போது உள்ள மக்கள் விபரம். http://www.eelanatham.net/story/IDPs%20stastics

எண் முகாம் பெயர் குடும்பம் ஆண் பெண் மொத்தம்

01 ஆனந்த குமாரசுவாமி வலையம்1 15117 21677 23872 45549

02 கதிர்காமர் வலையம் 0, ஆர்.வி 5151 8598 9002 17600

03 அருணாசலம் ஆர்.வி 13220 19732 20227 39958

04 இராம நாதன் ஆர்.விவலையம் 2 15269 23869 25868 49687

05 வலையம் 4 11825 17676 17244 34920

06 வலையம் 5 2205 3594 3781 7375

07 வலையம் 6ஏ 2163 3649 3708 7369

08 வீரபுரம் 1566 2419 2553 4972

09 சுமதிபுர 1730 2666 2758 5834

10 எம்.கே.கே தர்மபுரம் 1455 2381 2463 4844

11 மருதமடு வலையம் 07 1229 2094 2164 4258

12 கல்வியியல் கல்லூரி 1334 2060 2117 4177

13 தாண்டிகுளம் 309 446 513 959

14 கோமரசங்குளம் 592 940 1026 1966

15 புதுகுளம் 548 862 920 1782

16 சமணங்குளம் 110 75 185

மொத்தம் 73714 112723 118251 230974

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.