Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா என்ற அரசியல்வாதி...!

Featured Replies

[ தினக்குரல் ] - [ Nov 16, 2009 05:00 GMT ]

படை அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்த கடிதம் ஊடகங்கள் மூலமாகப் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த மே மாத நடுப்பகுதியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தன்னை ஓரங்கட்டுவதற்கு அரசாங்க உயர்மட்டத்தினால் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதாக கவலை வெளியிட்டிருக்கும் ஜெனரல் ஓய்வுபெறுவதற்குத் தன்னை நிர்ப்பந்தித்த காரணிகளைக் கடிதத்தில் விளக்கமாகக் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. படைகளின் விவகாரங்களுடன் தொடர்புடைய அம்சங்களுக்குப் புறம்பாக அரசியல் ரீதியில் சர்ச்சைக்குரியவையாகியிருக்கும் சில பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக, போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அவலம், போரின் முடிவுக்குப் பின்னர் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வதற்கு உருப்படியான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறியமை, ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படுகின்றமை போன்ற விடயங்கள் அவற்றில் முக்கியமானவையாகும்.

தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் மீது ஜெனரல் பொன்சேகா சுமத்தும் குற்றச்சாட்டை நோக்கும் போது ஒருவருடத்துக்கும் கூடுதலான காலத்துக்கு முன்னர் அதாவது 2008 செப்டெம்பர் பிற்பகுதியில் அவர் இராணுவத் தளபதியாக இருந்த வேளையில் கனடாவின் "நாஷனல் போஸ்ட்%27 பத்திரிகைக்குஅளித்த பேட்டியில் இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கக்கூடிய அந்தஸ்து தொடர்பில் தெரிவித்த கருத்துகளே நினைவுக்கு வருகின்றன. வன்னியில் போர் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் ஜெனரல் பொன்சேகா அளித்த பேட்டியென்பதால் இலங்கைப் பத்திரிகைகள் அதற்குப் பெரு முக்கியத்துவம் கொடுத்து மறுபிரசுரம் செய்திருந்தன.

"தமிழர்கள் தங்களுக்கென ஒரு தாயகத்தை அமைக்கவிரும்பி அதற்காக இலங்கையைத் தெரிவு செய்தமையினாலேயே போர் மூண்டது. தமிழ்ச் சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கையைத் துண்டாடுவதற்கு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதுமே அனுமதிக்கப் போவதில்லை. இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், சிறுபான்மை இனத்தவர்களும் இலங்கையில் வாழ்கிறார்கள். எமது மக்களைப் போன்று அவர்களையும் நாம் நடத்துகிறோம். நாட்டு சனத்தொகையில் 75 சதவீதத்தினராக இருக்கும் சிங்களவர்களாகிய நாம் ஒரு போதுமே விட்டுக்கொடுக்க மாட்டோம். நாட்டைப் பாதுகாப்பதற்கான உரிமை எமக்கிருக்கிறது. நாமும் ஒரு பலம் வாய்ந்த தேசத்தவர்கள். சிறுபான்மை இனத்தவர்கள் எம்முடன் சேர்ந்து வாழலாம். ஆனால், சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் தகாத கோரிக்கைகளை முன்வைப்பதற்கு முயற்சிக்கக்கூடாது%27 என்று அந்தப் பேட்டியில் ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

ஜெனரலின் இந்தக் கருத்துகள் இலங்கையின் சிறுபான்மை இன மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் தொடர்பில் எத்தகைய சிந்தனையை அவர் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாக உணர்த்தியிருந்தன. இலங்கை சிங்களவர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த பேரினவாத அபிப்பிராயத்தையே ஜெனரல் பொன்சேகாவும் கொண்டிருக்கிறார். எந்தவொரு சிறுபான்மை இனத்தவரும் நாட்டின் எந்தவொரு பகுதியையும் தங்களின் பாரம்பரிய வாழ்விடம் என்று உரிமை கோரமுடியாது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு தனித்துவம், சுய உரிமை என்று எதுவுமே இருக்க முடியாது என்பதே அந்தப் பேரினவாத நிலைப்பாட்டின் அடிப்படை அர்த்தமாகும். அந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தி கனடா பத்திரிகைக்கு தன்னால் அளிக்கப்பட்ட பேட்டி இலங்கை சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்களின் மனங்களை எந்தளவுக்கு புண்படுத்தியிருக்கும் என்பதே ஜெனரல் பொன்சேகா அறியமாட்டார். இன்று அவர் அரசாங்க உயர்மட்டத்தினால் தனக்கு அவமதிப்பு நேரும் போது தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வது குறித்து பேசப் ஆரம்பிக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம்.

தனது தலைமையின் கீழ் போரில் இராணுவம் வெற்றி பெற்றபோதிலும், அரசாங்கம் சமாதானத்தை இன்னும் வென்றெடுக்கவில்லை என்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் ஜெனரல் பொன்சேகா தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை என்றும் இதனால் போரில் கண்ட வெற்றி பாழாகி எதிர்காலத்தில் இன்னொரு கிளர்ச்சி மூளக்கூடிய ஆபத்து தோன்றும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார். இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற அவலங்கள் குறித்து தனக்குப் பெரும் வேதனையாக இருப்பதகக் கூறும் ஜெனரல் அந்த மக்களுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் உகந்த திட்டங்கள் இல்லை என்று குற்றஞ்சாட்டுகிறார். நாட்டின் ஏனையபகுதிகளில் உள்ள உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்வதற்கு இடம் பெயர்ந்த மக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக போரின் முடிவுக்குப் பிறகு முழுநாடுமே எதிர்பார்த்த சமாதானத்தின் பலாபலன்களை அனுபவிக்க முடியவில்லையே என்ற பெருங் கவலை அவருக்கு!

பொருளாதார நெருக்கடியினால் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் அதேவேளை ஊழல்,மோசடி, விரயம் ஆகியவை தலைவிரித்தாடுகின்றன என்றும் ஜனாதிபதிக்கு கூறியிருக்கும் ஜெனரல் பொன்சேகா ஊடக சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படுவதையும் வெறுக்கிறார். இராணுவச் சீருடையைக் கழற்றிய பின்னரே அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவதாக ஜெனரல் கூறியிருக்கின்ற போதிலும், கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் மேற்படி விடயங்களை நோக்கும் போது சரத் பொன்சேகாவிற்குள் இருக்கும் அரசியல்வாதி சீருடை களற்றப்படும் வரை காத்திருக்காமல் பேச ஆரம்பித்து விட்டார் என்றே கூற வேண்டியிருக்கிறது.

Published: Nov 16, 2009 05:00 GMT

ஜெனரல் பொன்சேகா விடயத்தில் இந்தியத் தரப்பின் விசேட சிரத்தை!

விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட் பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தும் முடிவு சாத்தியமாகும் சூழ்நிலை திடுதிப்பென ஏற்பட் டமை பல தரப்புகளிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்று வித்திருக்கின்றது.

குறிப்பாக இந்தப் பிராந்திய நாடுகளிலும் இவ் விடயம் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறவில்லை.

இராணுவத் தளபதியாக இருந்த ஒருவர் திடீரெனத் தேர்தலில் குதித்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி யாகிவிட்டால் இந்தப் பிராந்தியத்தில் அதனால் ஏற் படக்கூடிய விபரீதங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்துப் பிராந்திய நாடுகள் ஏற்கனவே அசைபோட அலச தொடங்கிவிட்டன.

அந்த வகையில், இந்தப் பிராந்தியத்தின் வல்லா திக்க சக்தியான இந்தியா, இந்த விடயம் குறித்துத் தீவி ரமாகவும், ஆழமாகவும், விசாலமாகவும் நோக்கத் தொடங்கியிருக்கின்றது.

இராணுவ நிர்வாகத்தில் தேர்ந்தவரும் அதில் ஊறித் திளைத்தவருமான ஜெனரல் சரத் பொன்சேகா, தப்பித் தவறி இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதி பதியாகி விட்டால் அத்தகைய நிலையில், நாடாளுமன்றத்தில் தமக்கு சார்பாகப் பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவைக் கொண்டிராத காரணத்தால், அதனால் தமது நிறை வேற்று அதிகாரத்தை உரியமுறையில் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டு, அந்தச் சினம் காரணமாக, அவர் இரா ணுவப் பாணி முடிவை எடுத்துவிட்டால் நிலைமை என் னாகும் என்பது பற்றியே புதுடில்லி கவலைப்படுவதா கக் கூறப்படுகின்றது.

இலங்கை அரசமைப்பு மற்றும் சட்ட ஏற்பாடுகளின் படி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை எம். பிக்களின் ஆதரவு இல்லாத ஜனாதிபதி அவரிடம் நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும் கூட ஒரு வகையில் "நொண்டி வாத்து" போன்றவர்தான்."சக்தி" இல்லாத"சிவம்" போல அவர் இயக்கமற்று அடங்கிவிட வேண் டியவர்தான்.

பிரதமராக சந்திரிகா குமாரதுங்க இருந்தபோது பேச்சு மூச்சற்றிருந்த ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது செய லற்றிருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இதற்கு நல்ல உதாரணங்கள் ஆவர். பிரதமர் ரணிலின் அரசைக் கலைத்து வீட்டுக்கு அனுப்பிய பின்னரே ஜனாதிபதி சந்திரிகாவினால் தமது நிறைவேற்று அதிகாரங்களை முழு அளவில் பிரயோகிக்க முடிந்தது.

தப்பித்தவறி ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா வென்றாலும், சிங்களவர்களின் இரு பெரும் கட்சிகளான ஐ.தே.கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அவரைத் தங்கள் கட்சியின் தலைவராகவோ, கட்சியைச் சார்ந்தவராகவோ சேர்க்கப்போவதில்லை என்பது திண்ணம். அந்தப் பின்புலத்தில் இந்தப் பிரதான இரு கட்சிகளையும் சேர்ந்த எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பொன்சேகா வுக்கு எதிரணியிலேயே இருப்பர்.

இதன் காரணமாக, பொன்சேகா ஜனாதிபதியானா லும், நாடாளுமன்றம் அவருக்கு எதிரானதாகவே அமை வதற்கு அதிக வாய்ப்புகள் எப்போதும் இருக்கும்.

இப்படி நாடாளுமன்றம் தமக்கு எதிரானதாக தமது நிறைவேற்று அதிகாரத்தைப் பிரயோகித்துச் செயற்படு வதற்கு இடைஞ்சலாக முட்டுக்கட்டையாக இருக் குமானால், அதை ஒதுக்கிவிட்டுக் காரியம் பார்ப்ப தற்காக, ஏற்கனவே இராணுவ வழி நிர்வாகப் பாணியில் தம்மை மூழ்கடித்துக் கொண்டவரான ஜெனரல் பொன் சேகா, தமக்கு அப்போது இருக்கக்கூடிய நிறைவேற்று அதிகாரத்தையும், படைகள் மீதான செல்வாக்கையும் முழுதாகப் பயன்படுத்தி, இலங்கையின் நாடாளுமன்றத் தையே இடைநிறுத்தலாம். அரசமைப்பையும் கூட ஓரங்கட்டலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் செய்தமை போல இலங்கையிலும் இராணுவ ஆட்சியை அவர் பிரகடனப்படுத்தலாம். ஜனநாயக முறையிலான தெரிவு மூலம் ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்து, அந்த அதிகாரத்தை முழு அளவில் பிரயோகிப் பதற்காக அவர் இராணுவ சர்வாதிகாரியாகவும் மாறலாம் என்ற அச்சமே புதுடில்லியில் நிலவுகின்றது.

ஜெனரல் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துகின்றமை தொடர்பில் தனது சிரத்தையை கவலையை ஆட்சேபத்தை (apprehensions), புதுடில்லி கடந்த வாரம் இந்தியாவுக்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாசூக்காகத் தெரியப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.

ஆனாலும், புதுடில்லியின் சிரத்தையைப் புறக்க ணித்துவிட்டு, பொது வேட்பாளராக சரத் பொன் சேகா வைக் களமிறக்கும் திட்டத்துக்குப் புதுடில்லியில் இருந்த வாறே ரணில் விக்கிரமசிங்க பச்சைக் கொடி காட்டினார் என்று விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பு மீதான பிடியை செல்வாக்கை புதுடில்லி கோட்டை விட்டு விட் டது. இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் புதுடில்லிக்கு புறமுதுகு காட்டத் தயாரா கிவிட்டார்.

இனி, இலங்கை விவகாரத்தில் மலையகத் தமிழ் தரப்புகள் தவிர்ந்ததாகத் தான் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரேஒரு தரப்புத்தான் புதுடில்லிக்கு உண்டு. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. அதன் மீதான புதுடில்லியின் செல் வாக்கும் இன்னும் எத்தனை நாளைக்கு என்பதுதான் கேள்வி.

இதுவரை புதுடில்லியின் தயவை எதிர்பார்த்துத் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக் கள் பலர் அதை விட்டு எகிறி வேறு புகலிடம் தேடும் அல்லது அணி மாறும் முனைப்பில் உள்ளனர். அது பற்றிய விடயங்களைப் பிறிதொரு தினத்தில் இப்பத் தியில் நோக்குவது பொருத்தமாக இருக்கும்.

http://www.uthayan.com/Welcome/afull.php?id=177&L=T&1258335920

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.