Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

டெலஸ்கோப்... வயது 400! :வெல்கம டூ காவலூர் ஆய்வு நிலையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

விண்வெளியின் அற்புதங்களையும் ஆபத்துக்களையும் கண்டறிய உதவிடும்

தொலைநோக்கியை வடிவமைத்து, முதன்முதலாக உபயோகித்தவர் இத்தாலிய விண்வெளி

மேதையான கலிலியோ. தொலைநோக்கி உபயோகத்துக்கு வந்து 400 ஆண்டுகள் பூர்த்தி

ஆவதால் 2009, 'சர்வதேச விண்ணியல் ஆண்டு' என்று அறிவியலாளர்களால்

கொண்டாடப்படுகிறது.

துவக்கத்தில் பூமியை எல்லா கிரகங்களும் சுற்றுவதாக விஞ்ஞானிகள்

நினைத்திருந்தனர். அதை மறுத்து சூரியனைத்தான் கிரகங்கள் சுற்றுவதாகக்

கண்டறிந்து வெளிப்படுத்தினார் கோபர்னிகஸ். தொடர்ந்து கோள்களின்

இயக்கங்களை முழுமையாக வரையறுத்தவர், ஜெர்மானியரான ஜோகன் கெப்ளர்.

உலகின் பல நாடுகளில் விஞ்ஞானிகள் அண்டவெளியில் உள்ள சூரியன், சந்திரன்,

நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் விண்கற்கள் முதலானவற்றை ஆராய்ச்சி

செய்து வருகின்றனர். எல்லா நாடுகளிலும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள்

அமைக்கும் சூழல் இருப்பதில்லை. ஜப்பான் அங்கு ஆப்டிகல் தொலைநோக்கி கொண்ட

விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் சூழல் இல்லாததால், ஹவாயில்

வாடகைக்கு இடம்பிடித்து 8.2 மீட்டர் விட்டமுள்ள தொலைநோக்கி அமைத்து ஆய்வு

மேற்கொண்டு வருகிறது.

பல நாடுகள் ஒன்று சேர்ந்து தென் அமெரிக்காவில் 'ஷிலி' எனுமிடத்தில் ஆய்வு

நிலையம் அமைத்து, செலவுகளைப் பங்கு போட்டுக்கொள்கின்றன. ஹவாயில் 'கெக்'

என்னும் ஆய்வு நிலையத்தில் 10.2 மீட்டர் விட்டமுள்ள தொலைநோக்கி உள்ளது.

இந்த ஆய்வு நிலையத்தை அமெரிக்கா அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.

ஸ்பெயினில் உள்ள 10.2 மீட்டர் தொலைநோக்கி, இந்தியாவில் லே(leh)யில் உள்ள

2 மீட்டர் தொலைநோக்கி, நைனிடாலில் உள்ள ஒரு மீட்டர் தொலைநோக்கி, மௌண்ட்

அபுவில் குருஷிகர் எனுமிடத்தில் உள்ள 1.2 மீட்டர் தொலைநோக்கி, புனே அருகே

கிராவலியில் 2 மீட்டர் தொலைநோக்கி - இவை போன்ற இன்னும் பல ஆய்வு நிலையத்

தொலைநோக்கிகளுக்கு வடதிசை விண்வெளியை மட்டுமே பார்த்து ஆய்வு செய்யும்

வசதி உண்டு.

தமிழ்நாட்டில் ஜவ்வாது மலை மீது அமைந்துள்ள காவலூர் ஆய்வு நிலையத்துக்கு

வடக்கு மற்றும் தெற்கு வான் வெளிகளை ஒரே இடத்தில் இருந்து ஆராயும் வசதி

இருக்கிறது. இதுபோன்ற வசதி தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும்

அபூர்வமாக இருக்கின்றது.

உதாரணத்துக்கு 1987 ம் வருடம் 'சூப்பர் நோவா -1987 ஏ' என்ற

நட்சத்திரங்களின் பெரு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த அபூர்வக் காட்சியை

உலகில் சில இடங்களிலிருந்து மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை. அந்த

அபூர்வ நிகழ்வை காவலூர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து நம்

விஞ்ஞானிகள் தெளிவாகப் பார்த்தார்கள்; படம் பிடித்துப் பதிவும்

செய்திருக்கிறார்கள்!

1968 ஆம் ஆண்டில் வைணு பப்பு என்ற விஞ்ஞானி காவலூரைத் தேர்வு செய்து,

இங்கேயே வடிவமைக்கப்பட்டு, இந்தியப் பொருட்களாலேயே தயாரிக்கப்பட்ட 15

அங்குல தொலைநோக்கி ஒன்றை நிறுவினார். இதன் பிறகு 1971-ல்

ஜெர்மனியிலிருந்து 1 மீட்டர் விட்டம் உள்ள தொலைநோக்கியை இறக்குமதி செய்து

இந்த நிலையத்தில் நிறுவினார்கள். இங்குள்ள 2.34 மீட்டர் விட்டம் உள்ள

ஆப்டிகல் தொலைநோக்கி, ஆசியாவிலேயே மிகப் பெரியதாகும். இந்தியப்

பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டது என்ற பெருமை இதற்கு உண்டு!

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய விண்வெளி இயல் நிறுவனத்தின்

இத்தொலைநோக்கியை, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி 1986-ல் நேரில் வந்து

திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவை தவிர 30 அங்குல

தொலைநோக்கி ஒன்று இங்கே இருக்கிறது. அதை நவீனப்படுத்தும் வேலை தற்போது

நடந்து வருகிறது.

பெங்களூர் தலைமை நிலையத்தில முன்கூட்டியே அனுமதி பெற்று காவலூர் விண்வெளி

ஆய்வு நிலையம் சென்றோம். உதவியாளர்கள் ஜெயக்குமார் மற்றும் புகழேந்தி

மற்றும் பொறியாளர் அன்பழகன் ஆகியோர் உடன் இருக்க, நம்மிடம் பேசினார்

நிலைய விஞ்ஞானி முத்துமாரியப்பன்.

"இந்த விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு சனிக்கிழமைகளில் பொதுமக்கள் தாராளமாக

வரலாம். பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தங்கள் குழந்தைகளுடன்

வந்து, பொதுமக்களுக்கென்று வைக்கப்பட்டுள்ள 6 அங்குல விட்டம் உள்ள

தொலைநோக்கி மூலம், நிலா, வியாழன், சனி, செவ்வாய் என்று அனைத்து

கிரகங்களையும் பார்க்கலாம்.

சாதாரணமாக விண்வெளியைப் பார்க்கும்போது ஒரு நட்சத்திரமாகத் தெரிபவை

இரட்டை நட்சத்திரங்களாகவும் இருக்கலாம். இரட்டை நட்சத்திரங்களாக

இருப்பனவற்றில் பல வெறும் கண்ணுக்குத் தெரியாது. தொலைநோக்கியில்

பார்த்தால்தான் தெரியும். பொதுமக்கள் கிரகங்கள், சந்திரன், இரட்டை

நட்சத்திரங்கள், நெபுலா, ஓரியன் போன்ற வாயுக் கூட்டங்களை தொலைநோக்கி

மூலம் காண்பதில் அலாதி ஆர்வம் காட்டுகிறார்கள்.

நட்சத்திரங்களும் சூரியனைப் போன்று எரியும் ஒருவகை கோளங்களே. சூரியனும்

ஒரு நட்சத்திரமே!

நட்சத்திரம் என்பது வாயு உள்ள ஒரு பந்துதான். இதன் மத்தியில்

அடர்த்தியும் உஷ்ணமும் அதிகம். இங்கு அணு வெப்பக் கிரியை நடைபெறுகிறது.

சூரியனில் நடப்பது என்ன? இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இணைத்து ஒரு ஹீலியம்

அணுவாக மாற்றும்போது கிடைக்கும் ஆற்றலினால்தான் சூரியன் பிரகாசிக்கிறது.

இந்தப் பிரகாசம் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கும் சாதகமாக இருக்கிறது.

விண்வெளியில் சூரியன் மாதிரியான நட்சத்திரங்கள் அதிகம்.

சூரியனின் மொத்த ஆயுட்காலம் 9 பில்லியன் வருடங்கள் என்று கணக்கிட்டு

இருக்கிறார்கள். இதுவரை 4.5 பில்லியன் வருடங்கள் முடிந்திருக்கின்றன.

மனிதனின் ஆயுள் 100 வருடங்கள் என்று வைத்துக் கொண்டாலும் அவனால்

முழுமையாக சூரியனையோ அல்லது வேறு எந்தக் கிரகத்தையோ ஆராய்ந்துவிட

முடியாது. எனவே, நாங்கள் எங்கள் குறுகிய வாழ்நாளுக்குள் முடிகிற சிறு

சாம்பிள் ஆய்வுகளை மேற்கொள்கிறோம். இதற்கு முன்பு பல விஞ்ஞானிகள்

ஆராய்ந்து சொல்லியிருக்கிற அடிப்படைகள் எங்கள் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன.

சனிக் கிரகத்துக்கு அதைச் சுற்றி ஒரு வளையம் இருப்பது முன்பே கண்டு

பிடிக்கப்பட்ட ஓர் உண்மை. அதேபோல யுரேனஸ் கிரகத்துக்கும் அதைச் சுற்றி

ஒரு வளையம் இருப்பதை 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்குள்ள எங்கள்

விஞ்ஞானிகள் கண்டுபிடித்துச் சொன்னபிறகு உலக விஞ்ஞானிகள் அதை ஏற்றுக்

கொண்டார்கள். ஜுபிடரின் துணைக் கோள் 'கனிமீட்'. இதற்கு பூமியில் உள்ளது

போன்று வளி மண்டலம் (atmosphere) இருப்பதைக் கண்டுபிடித்தது இங்குள்ள

விஞ்ஞானிகள்தான்!

விண்வெளியில் இருக்கும் பிரம்மாண்ட விண்கல் ஒன்றைக் கண்டுபிடித்து

உலகுக்குச் சொன்னதோடு, அதற்குக் கணித மேதை ராமானுஜம் பெயரை வைக்க காவலூர்

விஞ்ஞானிகள் பரிந்துரைக்க, உலக விஞ்ஞானிகள் அதை ஏற்றுக் கொண்டது

பெருமைக்குரிய செய்தி!

'ஷு மேக்கர் லெவி' என்ற வால் நட்சத்திரம் வியாழன் (ஜுபிடர்) கிரகத்தில்

விழுந்தபோது அதைத் தொலைநோக்கி மூலம் இங்கு விரிவாக ஆராய்ச்சி நடத்திப்

பதிவு செய்திருக்கிறோம். 'டெம்பிள் 0.5' என்ற வால் நட்சத்திரம் பூமியை

நோக்கி வந்தபோது அமெரிக்காவின் 'நாஸா' விண்வெளி ஆராய்ச்சி நிலையம்

'ஸ்டார் டஸ்ட் மிஷன்' மூலம் ஒரு தாக்குதலை நடத்தி, அந்த வால்

நட்சத்திரத்தின் துகள்கள் வெளிப்படக் காரணமாய் அமைந்தது. அப்போது எழுந்த

புகைக் கூட்டத்தை இங்கிருந்து நாங்கள் எடுத்த படங்கள் மிகவும் துல்லியமாக

இருந்தன," என்று நம்மிடம் விவரித்தார் விண்வெளி விஞ்ஞானி முத்து

மாரியப்பன்.

நமக்கு ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கியான 'வைணு பப்பு தொலைநோக்கி'

நிறுவப்பட்டிருந்த கட்டிடத்தைச் சுற்றிக் காட்டினார்கள். ஏ.சி.யின்

ஜில்லென்ற குளிர்ச்சியில் லிஃப்டில் சுமார் 80 அடி உயரம் போன பிறகு,

அங்கு பிரமாண்ட தொலைநோக்கி நிறுவப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. எந்த

கிரகம் அல்லது நட்சத்திரத்தைப் பார்க்க விரும்புகிறோமோ அந்தத் திசையில்

தொலைநோக்கி, கணிணி மூலம் திருப்பப்படுகிறது. கணிணித் திரையில் நாம் காண

விரும்பும் கிரகம் பளீரென்று தெரிகிறது.

"இந்த வைணு பப்பு தொலைநோக்கியில் ஒரு சிறப்பு இருக்கிறது. நட்சத்திரங்களை

மிக நுணுக்கமாக ஆராய்வதற்கு எஷால் ஸ்பெக்டோகிராஃப் (நிறப்பிரிகை) என்று

ஒரு கருவியை இங்கேயே தயாரித்துப் பொருத்தியிருக்கிறோம். இதன் மூலம்

தெரியும் பிம்பங்கள் ஒரு லட்சம் ரெசல்யூஷனில் நமக்குக் கிடக்கும்.

இந்தியாவிலேயே இந்த விசேஷக் கருவி இங்குதான் இருக்கிறது என்பதுடன், அது

இங்குள்ள விஞ்ஞானிகளாலேயே அமைக்கப்பட்டது என்பதுதான் இதன் சிறப்பு.

சூரியன் தன்னைச் சுற்றி நிறைய கிரகங்களுடன் ஒரு மண்டலமாக இயங்கி வருவதைப்

போல தங்களுக்கே உரிய கிரகங்களுடன் சுமார் 300 நட்சத்திரங்களுக்கு மேல்

விண்வெளியில் இயங்கி வருவது, இதுவரை உலக விஞ்ஞானிகளால்

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கண்டுபிடிக்கும் வசதி எஷால்

கருவியில் இருக்கிறது. இதைத் தவிர மற்ற ஒளிப்பிரிகைக் கருவிகளும் 2.34

மீட்டர் மற்றும் 1 மீட்டர் தொலைநோக்கிகளில் உள்ளன. இரண்டு

தொலைநோக்கிகளிலும் விண்வெளியில் உள்ளவற்றைப் படம் பிடிக்கும் வசதியும்,

மின் அணு சாதனமும் (CCD) உண்டு.

நட்சத்திரங்களில் ஏற்படும் அதிர்வுகள், ஒளி மாற்றங்கள், நட்சத்திரக்

கூட்டங்கள், வேதியியல் குணங்கள், 'நெபுலா' என்ற வாயுக் குழம்பு,

வால்நட்சத்திரங்கள், அண்டவெளி ஆகியவற்றை இங்கு ஆராய்ந்து வருகிறோம்ம்,"

என்று முத்துமாரியப்பன் மேலும் நமக்கு விளக்கிச் சொன்னார்.

பரந்து காட்சியளித்த காவலூர் வைணு பப்பு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில்

எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேல் என்று மரங்கள், செடி கொடிகள்.

அங்கங்கு வானத்தைத் தொடும் முயற்சியில் இருப்பது போன்ற தொலைநோக்கிக்

கூண்டுகள், ஏராள ஏக்கர் நிலப் பரப்பில் சுற்றிலும் வேலி போட்டு மத்திய

அரசுக்குச் சொந்தமான அந்த இடத்தைப் பாதுகாத்திருக்கிறார்கள். அந்த

அமைதியும், பசுமையும் அழகும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கிற

ஆராய்ச்சிகளும் மனசில் இடம்பிடித்து அமர்ந்து கொள்ள, அந்தச் சூழ்நிலையைப்

பிரிய மனமில்லாமல் திரும்பி வந்தோம்.

முன்னதாக அனுமதி பெற்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விண்வெளி

ஆராய்ச்சி குறித்த விரிவுரை அளித்து, ஆராய்ச்சி தொடர்பான திரைப்படமும்

காவலூர் ஆய்வு மையத்தில் போட்டுக் காட்டுகிறார்கள்.

எம்.எஸ்சி முதல் வருடப் படிப்பு முடித்த மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும்

மே மாதம் 10 நாட்கள் முகாம் நடத்தி விண்வெளி விஞ்ஞானம் குறித்த

வகுப்புகள் எடுக்கிறார்கள்.

காவலூர் ஆய்வு மையம் நிறுவிய அமரர் வைணு பப்பு பிறந்த நாளான ஆகஸ்ட் 10

ஆம் தேதி, வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து தலா 10 சிறந்த பிஸிக்ஸ்

மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஒருநாள் முழுவதும் மூத்த

விஞ்ஞானிகள் விண்வெளி அறிவியல் விளக்கம் அளிப்பதுடன், நிலைய விஞ்ஞானி

மூலம் அறிவியல் வினாடி வினா நடத்திப் பரிசும் தருகிறார்கள். அவர்களுக்கு

ஒருநாள் உணவை ஆய்வு மையம் தன் செலவில் வழங்குகிறது.

விண்வெளியை நுட்பமாகக் காண மாணவர்களுக்கு வழி செய்யும் வகையில்

கல்லூரியோ, அல்லது தனி மனிதர்களோ விரும்பினால் அவர்களின் ஆர்வத்தை

ஊக்குவிக்கும் வகையில் 4 அங்குல விட்டமுள்ள தொலை நோக்கியை இங்கு

தயாரித்து ரூ.3000 விலைக்கு வழங்குகிறார்கள். லாப நோக்கமின்றித்

தயாரிக்கப்படும் தொலைநோக்கியை, அதன் அடக்க விலைக்கே விற்பனை செய்கிறது

மத்திய அரசு.

ஏதாவது ஒரு நட்சத்திரத்தையோ, கிரகத்தையோ, விண்கல்லையோ கண்காணித்து ஆய்வு

செய்யும் விஞ்ஞானிகள், அது நகர்ந்து பார்வைக்கு மறைந்தவுடன், வேறு

நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குப் போய் தொடர்ச்சியாக ஆராய்ச்சி

மேற்கொள்கிறார்கள். காவலூர் மையத்தின் விஞ்ஞானிகள் வெளிநாட்டு ஆராய்ச்சி

மையங்களுக்குப் போய் ஆராய்ச்சி செய்வதும், வெளி நாட்டு விஞ்ஞானிகள் இங்கு

வந்து ஆய்வு மேற்கொள்வதும் அவர்களின் தங்கும் வசதி, உணவு வசதி ஆகியவற்றை

அந்தந்த ஆய்வு மையங்கள் ஏற்பதும் நடைமுறையாக உள்ளன.

காவலுர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் மொத்தப் பணியாளர்

எண்ணிக்கை - 73.

இங்குள்ள தொலைநோக்கிக் கருவிகளைப் பராமரிக்க ஆகும் செலவு ஒரு நாளைக்கு

ஒரு லட்சம் ரூபாய் என்ற தகவலையும் விஞ்ஞானி முத்துமாரியப்பன் நம்மிடம்

சொன்னார்.

http://youthful.vikatan.com/youth/Nyouth/telescope12122009.asp

Muthamizh

Chennai

Posted

ஹே!

வை டோண்டு யு தெலேல் லைக் திஸ்...

டெலஸ்கோப்... ஏஜ் 400! :வெல்கம் டு kavalur (காவலூர்) றீசேர்ச் ஸென்றர்

வி அண்டஸ்ற் ஸடாண் வெரி உவல் யு நோ ?

vikatan_logo.jpg

ஆகா! ஆகா! ப்ரமாதம்

ஆகா! ஆகா! வசினேற்றிங் ஸண்டிற்

ஓஉஉ யா யூத்புள் ...

:(:D:( :( :D

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.