Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்குற்ற விசாரணைகளில் சிறிலங்கா மாட்டியிருப்பது எவ்வாறு?: விளக்கமளிக்கும் சட்டவல்லுனர்கள் தரப்பு

Featured Replies

போர்க்குற்ற விசாரணைகளில் சிறிலங்கா மாட்டியிருப்பது எவ்வாறு?: விளக்கமளிக்கும் சட்டவல்லுனர்கள் தரப்பு

..போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான ரோம் சாசனத்துக்கு கட்டுப்படதேவையில்லாத நாடாக சிறிலங்கா காணப்படுகின்றபோதும் சர்வதேச குற்றவிசாரணைகள் நீதிமன்றத்தில் ஏறியாகவேண்டிய பாரிய சிக்கலுக்குள் சிறிலங்கா மாட்டக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுவதாக போர்க்குற்றங்கள் தொடர்பான சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்க தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு கிடைக்கப்பெற்றால், அந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்யும்படி சர்வதேச குற்ற விசாரணைகள் நீதிமன்றத்தின் பிரதான வழக்கு அதிகாரியிடம் கோரும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு உள்ளது. இதன்பிரகாரம், சர்வதேச குற்ற விசாரணைகள் நீதிமன்றில் வழக்குக்கு முந்திய அமர்வு ஒன்றினை கூட்டி குறிப்பிட்ட போர்க்குற்றங்கள் குறித்து பிரதான வழக்கு அதிகாரி விசாரணைகளை மேற்கொள்ளுவார்.

சரணடைந்த விடுதலைப்புலிகளுக்கு என்ன நடந்தது என்று அண்மையில் ஐக்கிய நாடுகள் அதிகாரியான பிலிப் அல்ஸ்டன் சிறிலங்காவிடம் விளக்கம் கோரி அனுப்பிய கடிதம், ஐ.நா.வின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகும். சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவுக்கேற்ப சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று கருத்து தெரிவித்தவர் அதிகாரமற்ற - ஆதாரத்துக்கு இணைத்துக்கொள்ள தேவையில்லாத - நபர் அல்லர். அப்போது படை நடத்திய நாட்டின் இராணுவ தளபதி. இவரது இந்த செவ்வி சர்வதேச குற்ற விசாரணைகள் நீதிமன்றின் பிரதான வழக்கு அதிகாரியினால் தற்போது வழக்குக்கான வடிவத்திற்குள் இணைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை அந்த அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் இந்த நகர்வு ரஷ்யாவினதோ அல்லது சீனாவினதோ வீட்டோ அதிகாரம் மூலம் தோற்கடிக்கப்பட்டாலும், சர்வதேச குற்ற விசாரணைகள் நீதிமன்றின் வழக்கு அதிகாரி சுயாதீனமாக செயற்படுவதற்கு அதிகாரம் கிடைக்கப்பெற்றவர். விசாரிக்கப்படும் வழக்கு தான் சேகரித்த ஆதாரங்களின் பிரகாரம் பாரதூரமானது என்று அவர் கருதுவாரேயானால், அதனை நீதிமன்றுக்கு எடுத்துச்சென்று சம்பந்தப்பட்டவர்களை கூண்டில் ஏற்றக்கூடிய அதிகாரம் அவருக்குள்ளது.

அவ்வாறு சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்கை கையாளும்போது 14(பி) சரத்தின்படி அந்த முயறிக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை நிச்சயம் அங்கீகாரம் வழங்கியே ஆகவேண்டும்.

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் சம்பந்தமாக சிறிலங்கா அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளபோதும், அதனை சிறிலங்கா அரசு இன்னமும் விசாரணை செய்யவில்லை. ஆகவே, இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியே சர்வதேச குற்ற விசாரணை நீதிமன்றம் இலகுவாக சிறிலங்காவை தனது நீதிமன்றுக்கு இழுத்துவரும் சாத்தியங்கள் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியமும் சிறிலங்கா அரசின் மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் அதிருப்தியடைந்திருப்பதை ரத்துச்செய்யவுள்ள ஏற்றுமதி வர்த்தக வரிச்சலுகை மூலம் காண்பிக்கும்போது, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றுக்கு இழுத்துவருவது கடினமாக வேலையாக இருக்காது.

- இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

ஈழநேசன்

Although Sri Lanka is not a signatory to the Rome Convention which set up the International Criminal Court (ICC), the island nation can still be dragged before the ICC without its consent, senior cabinet minister and a former Professor of Law, G.L.Peiris, has said.

He told The Sunday Island on December 20, that the UN Security Council had the right to request the Chief Prosecuting Officer (CPO) of the ICC to embark on an investigation of the complaints it had received with a view to prosecution. The CPO could, on his own, seek the approval of the Pre-Trial chamber of the ICC to conduct investigations.

In the Sri Lankan case, the UN’s Special Rapporteur for Extrajuicial Killings and Arbitrarty Executiuons, Philip Alston, had called for clarifications on the allegation that the Sri Lankan army had killed three top leaders of the LTTE and their families when they had come to surrender waving white flags as per a prior arrangement between them and the Lankan government. The allegation had been made by no less a person than Gen.Sarath Fonseka, a former Army Commander who is now a candidate in the January 26 Presidential election.

It is felt that Alston’s letter could well be the first step in a UN bid to get key Sri Lankan decision makers and officials to appear before the ICC.

CPO COULD ACT INDEPENDENTLY

According to former diplomat Bandu de Silva, Sri Lanka might be able to block a Security Council initiative with the help of a Russian or a Chinese veto, but it should be borne in mind that the CPO could act independently. The CPO was already thinking of bringing the US before the court for war crimes, he said.

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Sri+Lanka+cannot+escape+war+crime+charges&artid=TRJc6BXEEIA=&Title=Sri+Lanka+cannot+escape+war+crime+charges&SectionID=oHSKVfNWYm0=&MainSectionID=oHSKVfNWYm0=&SEO=war+crimes,+sri+lanka,+fonseka&SectionNa

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட எழுத்து வல்லுனர்கள் ஏத்திறதும் இறக்கிறதுமா.....லெக்சன் முடிய எல்லாமே குப்பைக்குளள போகிடும்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறு சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்கை கையாளும்போது 14(பி) சரத்தின்படி அந்த முயறிக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை நிச்சயம் அங்கீகாரம் வழங்கியே ஆகவேண்டும்

எது எப்படி இருப்பினும்

எமக்கான நீதியைத்தராது சர்வதேசம் அடுத்த நடவடிக்கைக்கு செல்ல முடியாது...

சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது - டி.பி.எஸ். ஜெயராஜ்

சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசிநிலப்பகுதியை முற்றாக சுற்றிவளைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்தவுடன், விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்தது. அதன்படி, விடுதலைப்புலிகளின் ஒரு அணி இராணுவத்தினருக்கு எதிரான கடைசி நேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றை மேற்கொண்டு முற்றுகைக்குள்ளிருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல்துறையினர் உள்ளடக்கிய மற்றைய அணி இராணுவத்தினரிடம் சரணடைவது என்றும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது.

இதன்படி, சரணடைதல் தொடர்பான விடயத்தை விடுதலைப்புலிகள் அரசியல்துறைபொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புக்களுடனும் அவர் தொடர்புகொண்டு பேசினார். ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள், கொழும்பிலிருந்த மேற்குலக நாடுகளின் மூன்றின் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயரதிகாரிகள், பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தினார்.

மே 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணியளவில் நடேசனை தொடர்புகொண்ட சந்திரகாந்தன் எம்.பி. - சரணடையும் விடுதலைப்புலிகளின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசு உத்தரவாதமளித்திருப்பதாகவும் அதனால் சரணடையும்படியும் தான் மாலை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்குபின்னர், மேற்குலக நாடொன்றிலுள்ள தனது நண்பருடன் பேசிய நடேசன், தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காக இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவது மேல் என்றும் கூறியுள்ளார்.

இதன்பின்னர், சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பிரகாரம், நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் 10 முதல் 15 பேர் வரையிலானோர் முன்னே வெள்ளைக்கொடியை ஏந்தி செல்வது என்றும் அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்துக்கு பின்னால் தளபதி ரமேஷ் மற்றும் இளங்கோ தலைமையில் 30 முதல் 40 வரையிலானோர் வெள்ளைக்கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தின் மனிதநேயம் அறவே இல்லாத 59 ஆவது டிவிஷன் படையணியைவிட 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால், சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீர்மானிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59 ஆவது டிவிஷன் படையணியின் தளபதி பிரசன்ன டி சிலவா, தனது படையணியின் நான்கு குழுவினரை நகர்த்தினார். 59 ஆவது டிவிஷன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்டன் கோசல விஜயக்கோன் தலைமையிலும் டெல்டா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கோல்வ் மற்றும் ரோமியோ பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்டா பிரிவுக்கு மேஜர் விபுலதிலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப்பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடமும் வழங்கப்பட்டது.

அப்போது, நடேசன்,புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர் (10 - 15 பேர்) கைகளில் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்காக வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஷ், இளங்கோ தலைமையில் (40௪5 பேர்) சரணடைவதற்கு வந்துகொண்டிருந்தனர்.

நடேசனது தொகுதியினரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்து சென்ற அதேவேளை, ரமேஷ் தலைமையிலானவர்களை சுமார் 100 மீற்றர் தொலைவில் வெள்ளைக்கொடியை உயர்த்திப்பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.

காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் தரையில் முழங்காலில் நிற்கமாறு பணிக்கப்பட்டனர். அதன்பின்னர், சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர், அவர்களை சுடுவதற்கு தயாராகினர். சிங்களப்பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது. உடனே, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுடவேண்டாம் என்று அழுதுகுழறியபடி எழுந்துசென்று கணவனுக்கு அருகில் செல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்தபோது, அங்குநின்றுகொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இவ்வேளையில், காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஷ் குழுவினர் உடனடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத்தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும்படி கத்தியபடி கலைத்துச்சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஓடும்போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓட முடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்துவிட்டனர். இதனையடுத்து, கலைத்துச்சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலேயே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்றுதள்ளியுள்ளனர். அந்தக்கூட்டத்திலிருந்து ஓருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.

இந்தப்படுகொலை படலம் போர் முடிவுற்றவேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால், சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்க்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.

அப்போது சீனாவிலிருந்த தன்னை கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவிலிருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?

அல்லது

இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?

அல்லது

உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம்பெற்றதா - என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகிறது.

ஆனால், சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்த படுகொலை விடயத்தை சிறிலங்கா அரசு இலகுவில் மறைத்துவிடமுடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்க கூடியளவுக்கு சிறிய சம்பவம் அல்ல.

கொடூரமான மனிதப்பேரழிவை பற்றி எழப்போகின்ற கரிசனைகளையும் அதனையொட்டி எழுப்பப்படபோகின்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தால் ஒருபோதும் தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.

அவ்வாறான விசாரணைகள் வருகின்றபோது, தற்போது சர்வதேச அரங்கில் சிறிலங்காவை பாதுகாத்துவரும் �சிறிலங்காவின் நண்பர்கள்� என சொல்லப்படுவோர், நெருக்கடியான நிலையொன்றுக்குள் தள்ளப்படுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.