Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தின் இன்றைய நிலையும் சிறிலங்காவின் தேர்தலும்.. தமிழர்திருநாளில் இயக்குனர் சீமானின் செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தின் இன்றைய நிலையும் சிறிலங்காவின் தேர்தலும்.. தமிழர்திருநாளில் இயக்குனர் சீமானின் செவ்வி

தமிழீழத்தின் இன்றைய நிலை பற்றியும், சிறீலங்காவின் தேர்தல் நிலைப்பாடு பற்றியும், தமிழீழ தமிழர்களும் தமிழக தமிழர்களும் என்ன செய்யவேண்டுமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் அவர்கள் தமிழர் திருநாளில் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி

http://meenakam.com/?p=3290

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தின் இன்றைய நிலையும் சிறிலங்காவின் தேர்தலும்.. தமிழர்திருநாளில் இயக்குனர் சீமானின் செவ்வி

பதிந்தவர்_மீனகம் on January 15, 2010

பிரிவு: காணொளி, முதன்மைச்செய்திகள்

http://meenakam.com/

[இணைப்பு 2]தமிழீழத்தின் இன்றைய நிலை பற்றியும், சிறீலங்காவின் தேர்தல் நிலைப்பாடு பற்றியும், தமிழீழ தமிழர்களும் தமிழக தமிழர்களும் என்ன செய்யவேண்டுமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் அவர்கள் தமிழர் திருநாளில் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி. ஒலிநாடா கேட்க முடியாதவர்களிற்காக எழுத்து வடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

மீனகம் : வணக்கம் இயக்குனர் சீமான் அவர்களே!

சீமான் : வணக்கம்

மீனகம் : இந்த தைத்திருநாளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

சீமான் : தைப்பொங்கல் உழைக்கும் மக்களின் திருநாள். தேசிய மக்களின் திருநாளாகவே நான் பார்க்கிறேன். தைப்பொங்கல் தமிழர்களுடைய புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. ஏனெனில், தமிழீழத்தில் நம்முடைய தேசிய தலைவர் பத்து பன்னிரண்டு வருடங்களிற்கு முதலே தைத்திருநாளே தமிழர்களின் புத்தாண்டு என அறிவித்து அந்த மண்ணில் கொண்டாடப்பட்டு வருகிறது. பத்து வருடங்களின் பின்னர் இப்ப தான் தைத்திருநாளே தமிழர்களின் புத்தாண்டு என அறிவித்து கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அதுக்குளேயே வாதங்கள் தொடங்கிவிட்டன. சித்திரை முதலாம் திகதி அதாவது ஏப்ரல் 14 ஆம் திகதி தான் தமிழ்புத்தாண்டு என ஒருசாராரும் தைத்திருநாள் தான் புத்தாண்டு என இன்னொரு சாராரும் வாதம் நடத்தி வருகின்றனர். ஆனால் பெருவாரியான தமிழர்கள் தை முதல் நாள் தான் தமிழர்களினுடைய புத்தாண்டாக கருதி கொண்டாடி வருகின்றனர். இதை தமிழர்களின் தேசிய விழாவாகவே நான் கருதுகின்றனர். விவசாயம் செய்யும் ஒரு மக்களினுடைய பண்டிகையாகவும் இது கொண்டாடப்படுகிறது. விளைந்த முதன் நெல்லை பொங்கலாக பொங்குவது வழக்கம். அதையே கிராமங்களில் நாமும் செய்து வருகிறோம்.

மீனகம் : தலைவரின் தந்தையின் மரணம் எதை உணர்த்துகிறது என நீங்கள் கருதுகிறீர்கள்?

சீமான் : தலைவரின் தந்தையின் மரணம் வந்து, எனக்கு ஆழ்ந்த மனவருத்ததை தந்தது. அதிலிருந்து மீளவே நிறைய நாட்கள் எடுத்தன. ஆனால், அது எதை உணர்த்துகிறது என்றால், எவ்வளவு பெரிய தேசிய இனம் எவ்வாறு அடிமைப்பட்டுக்கிடக்கு என்பதை உணர்த்துகின்ற சான்றாக தான் அப்பா வேலுப்பிள்ளை மரணத்தையும் கைதையும் நான் கருதுகிறேன். 12 கோடி தமிழர்கள் உயிருக்கு மேலாக நேசிக்கக் கூடிய ஒரு தலைவராக தொன்மைமிக்க இந்த இனத்தின் வரலாற்று பெருமை மிக்க தலைவன் இதற்கு முன்பும் பின்பும் தோண்றவே முடியாத ஒரு அற்புதமாக அதிசயமாக இருக்கிற எமது அண்ணன் பிரபாகரன் அவர்களை போன்று தன் இனத்திற்கு என்று வரலாறுகளைப் படைத்த இதற்கு முன்பும் பின்பும் இது போன்ற ஒரு தலைவன் தோண்றவே முடியாது என்றளவிற்கு தோண்றி அற்புதமாக இருக்கின்ற தலைவன் எங்கள் அண்ணன் பிரபாகரன். இன்னுமொன்று வரலாறுகளில் படித்து அறிந்து கொண்ட வீரங்களை கண்முன் கொண்டு வந்த வீரத்தமிழனாக இருந்த தலைவன் பிரபாகரன். அப்படிப்பட்ட வீரப்பிள்ளையை இந்த தமிழ் தேசிய இனத்திற்கு தந்த எங்கள் அப்பா வேலுப்பிள்ளை, எந்த எதிர்களிடம் எம்மினம் அடிமைப்பட்டுப் போகக்கூடாது விடுதலையைப் பெற்றெடுத்து சுதந்திரமாக சுதந்திர தமிழீழத்தை பெற்றெடுத்து மக்களை வாழவைக்க வேண்டும் என்று துடித்து களமாடினாரோ நம் தலைவர் அதே எதிரியிடம் நம் தாய் தந்தையார் கைது செய்யப்பட்டு இருந்தார்கள் என்று நினைக்கும் போது அளவற்ற கவலை அடைகிறோம். 86 வயது முதியவரை விசாரணை என்ற பேரில் சிறைப்பிடித்து சிறுகசிறுக சித்திரவதை செய்து முறையான மருத்துவம் பாதுகாப்பு உணவு வழங்கப்படாமல் அவருடைய மரணம் நிகழ்ந்திருக்கிறது. பெரும் செல்வாக்குப் பெற்ற இந்த இனம் தன்னுடைய அளவற்ற தலைவனை இந்த உலகிற்கு தந்த ஒரு தந்தையரை வந்து போராடி அவர்களிடத்தில் இருந்து காக்க முடியவில்லை என்றால் அந்த இனம் எவ்வளவு அடிமைப்பட்டுக்கிடக்கிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது என்றே நான் கருதிகிறேன். இந்த தந்தையின் மரணத்திலிருந்தாவது நாமெல்லாம் உறுதியெடுத்து விடுதலையின் பக்கம் நாமெல்லாம் நிற்கவேண்டும் என்பது என்னுடைய கருத்து.

மீனகம் : எமது வீரத்தந்தைக்கு நீங்கள் வணக்கம் செலுத்தும் போது காவற்துறையினர் உள்நுழைந்து உங்கள் கமராவை பறித்து சென்றதாக சொல்லப்படுகிறதே!, அதன் காரணம் என்ன?

சீமான் : அது தொடர்ச்சியாக நிகழ்வது தானே, சுவரொட்டி ஒட்ட விடுவதில்லை, பேசவிடுவதில்லை என்னை. மக்களினூடாக ஒரு உணர்ச்சி வரக்கூடாது, எங்கள் விடுதலையை நசுக்கி விடவேண்டும் என்பது தான் காரணம். அதற்கு ஒரு சான்றாகத்தான் நான் கனடாவில் நான் பேசுவதற்கு முன்பே என்னை கைது செய்தது. இறுதிக்கட்டத்தில் சர்வதேச நாடுகள் எம்மினத்திற்கு எவ்வளவு துரோகங்களைச் செய்தது?பன்னெடுங்காலமாக எமது விடுதலைப்போராட்டத்தை இவர்கள் நசுக்கியதற்கான காரணங்கள் என்ன? உலகில் பல்வேறு நாடுகள் போராடி விடுதலை அடைந்த போதெல்லாம் புரட்சியாக பார்த்த இந்த நாடுகள் எல்லாம் அதே வழியில் நாங்கள் போராடும் போது பயங்கரவாதிகளாக ஏன் கொச்சைபடுத்தவேண்டும்? என்பதை மக்கள் மத்தியில் எடுத்து காட்டி பேசுவதால், அதன் மூலம் மக்கள் எழுச்சி அடைந்து கிளர்ச்சி அடைவார்கள். போராட தொடங்குவார்கள். என்பதால் தான் எமது நிகழ்வுகளை எல்லாம் தடை செய்து வருகிறார்கள். ஆனால், இதையெல்லாம் தாண்டி போராடி வெல்வது தான் உண்மை. இதற்கெல்லம் பயந்து கொண்டு இருக்கவோ முடியாது. அதனால், என்னுடைய பயணத்தை, கூட்டங்களை எல்லாம் நிறுத்தலாம் என்னுடைய சிந்தனைகளையோ, எண்ணங்களையோ, கற்பனைகளையும், கனவுகளையும், என் உணர்வுகளையும் உலகத்தில் எந்த தேசமும் தடை செய்ய முடியாது என்பது உண்மை. எனவே இதையெல்லாம் தடையாக எடுக்காமல் வாய்ப்பாக கருதி பெரும் படையாக நாம் மாறி விடுதலையை வென்றெடுப்பது தான் நிஜம்.

மீனகம் : சிறிலங்கா அரச அதிபர் தேர்தல் தமிழீழ மக்களிற்க் எவ்வாறான தாக்கத்தைக் கொண்டுவரவுள்ளது?

சீமான் : இலங்கையில் பேரினவாதம் நடத்தும் இந்த தேர்தலாம் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் விளையப்போவதில்லை. 60 ஆண்டுகாலமாக எமக்கு கிடைக்காத அதிகாரபகிர்வு, அடிப்படை உரிமை, எல்லாம் தற்போது 6 மாதத்திற்குள் வந்துவிடும் என்று நாங்கள் நம்பவில்லை. என்னைப் பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட கருத்து எனக்கு ராசபக்சவும் ஒன்று தான் பொன்சேகாவும் ஒன்று தான். ஒருவர் வெட்டுவார் ஒருவர் குத்துவார். எப்படியும் எம்மை கொலை செய்வார்கள்.ஏனெனில், அவர்களின் நோக்கம் தமிழர்களை கொலை செய்வது. மொத்த இலங்கையையும் சிங்கள தேசமாக அறிவிப்பது அது தான் அவர்களுடைய நோக்கம். எனவே, என்னுடைய நோக்கம் என்னவென்றால், வளரும் நாடுகளோ இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகளோ அல்லது சிங்களவர்களோ எங்களிற்கான விடுதலையைத் தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. என் விடுதலை என் கையில் இதில் நான் உறுதியாக இருக்கிறேன். இன்றைக்கு இந்தியாவில் ஒன்றரைக்கோடி சீக்கியர்கள் பெற்றிருக்கின்ற அந்த செல்வாக்கை இதே இந்தியாவிற்குள் இருக்கிற ஏழு கோடி தமிழர்கள் பெறமுடியததற்கு காரணம், சீக்கியர்கள் சீக்கியர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் தமிழர்களாக இல்லை. அதேமாதிரி சிங்களவர்கள் ஒன்றரை லட்சம் பேர் அந்த மண்ணில் வாழ்கின்ற தமிழர்கள் சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால் தமிழ் என்கிற பேரினம் உலகெங்கும் பரந்து கிட்டத்தட்ட 12 கோடிக்கும் மேலாக இருக்கிற ஒரு பேரினத்தை ஒன்றரை லட்சம் சிங்களவன் தீர்க்க முடிகிறதே. அவர்களுடைய தமிழர்களுடைய தாய் நிலத்தை அபகரிக்க முடிகிறதே என்றால் தமிழர்கள் தமிழர்களாக இல்லை. சிங்களவன் சிங்களனாகவே இருக்கின்றான் என்பதே உண்மை. இனிமேலாவது தமிழர்கள் நீ, நான் என்றில்லாது நீ பெரியவன் நான் பெரியவன் என்ற கணக்கில்லாது நீ என்ன சொவது நான் என்ன கேட்பது என்ற வியாக்கியானம் இல்லாது ஏழை பணக்காரன் என்ற பிளவில்லாது, கீழ் சாதி மேல் சாதி என்றில்லாது நீ இந்த மதம் நான் அந்த மதம் என்று பிரித்து பார்க்காது இன்மேலாவது ஒன்றிணைவது அவசியமாக இருக்கிறது. உதாரணமாக தமிழக எல்லையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிற போதும் சுட்டுக்கொல்லப்பட்ட எந்த மீனவரின் செய்தி வரும்போதும் மீன்பிடிக்கின்ற இந்த சாதியைச் சேர்ந்தவன் மதத்தைச் சேர்ந்தவ செத்தான் என்கிற செய்திகள் வந்தது. ஆனால், தமிழீழத்தில் இறுதிக்கட்ட போர்ச்சூழலில் கூட என் உறவுகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதும் கூட இந்த சாதியைச் சேர்ந்தவன் கொல்லப்பட்டான் என்று எதுவும் கூறப்படவில்லை. மாறாக, தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றே சொல்லப்பட்டது. இதிலிருந்து என் அன்புத் தமிழினம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் தமிழன் என்பது தான் எனது உங்களது அடையாளம் .இதை நீங்கள் மறக்க கூடாது. இந்த உறவுக்குள் நாங்கள் ஒன்று கூடி வென்றெடுக்காத வரை நமது விடுதலை நமக்கு வராது. என்னிடத்தில் கேள்வி கேட்கும் போது “ஈழம் வருமா” என்று கேட்கிறார்கள். நான் “வராது என்றேன். ஈழம் வராது நாம் வரவழைக்க வேண்டும். சுதந்திரம் வருமா? சும்மா படுத்துக்கிடந்தால் சுதந்திரம் வராது. இது இலவச அறிக்கையல்ல. ஒரு ரூபாய்க்கு அரிசி என்ற மாதிரி. இது சுதந்திரம். போராடிப்பெறவேண்டும். இரத்தமில்லாத கண்ணீரில்லாத காயங்கள் சுமக்காமல் விடுதலை வராது. எனவே வருமா வரதா என்ற கேள்விகளை விடுத்து நாம் ஒன்றிணைந்து போராடுவதால் தான் எமது விடுதலையைப் பெற்றெடுக்க முடியும் என்பதை என் அன்பான மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்த தேர்தல் முழுக்க முழுக்க சிங்களவனுக்கு நடக்கப்போவதே தவிர தமிழினத்திற்கு இல்லை. ஏனெனில், விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டு தமிழர்களிற்கு அதிகாரபகிர்வு கொடுப்பேன் என ராசபக்ச பறைசாற்றினான். அதையே அனைத்துலக நாடுகளும் தலைசாய்த்து அனைத்து உதவிகளையும் செய்து உதவியது.

இதில் ஒன்றைக்கவனிக்க வேண்டும். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவாவது தமிழர்களின் சுய உரிமை இது என்று எந்த சிங்கள அரசாவது அறிவித்ததா? இந்த நாட்டில் இலவச அரிசி தருகிறோம்.தொலைக்காட்சி தருகிறோம் அலைபேசி தருகிறோம் என்று சொல்கிறார்களே அதேமாதிரியாவது அவர்கள் ஏதும் சொல்கிறார்களா? அழிப்பதற்கு துணைபோன ஏதாவது ஒரு நாடு தமிழர்களிற்கு தீர்வு இது என்று சொன்னதுண்டா? தேர்தலில் நேரத்தில் சொல்லாதவன் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சொல்வானா?செய்வானா?

இராணுவத்தில் நீங்கள் 40 விழுக்காடு நாங்கள் 60 விழுக்காடு என்று ஏதும் சிங்களம் அறிவித்ததா? காவற்துறையில் இத்தனை தமிழர்கள் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள்? அரச பணிகளி இத்தனை விழுக்காடு தமிழர்களுக்கு என்று ஏதும் இருக்கிறதா? இதில் ஏதாவது ஒன்று தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா? விடுதலைப்புலிகளை அழித்துவிட்டது, போராளிகளை சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. இப்படியெல்லாம் இருக்கும் போது எதற்காக சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேச நாடுகளும் தடைவிதித்திருக்கின்றன! தாம் பிறந்து வளர்ந்த மண்ணில் மக்கள் எதற்காக முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்? சுதந்திரம் தருகிறோம் என்று சொன்னவர்கள் மக்களை சுற்றிவளைத்து திறந்த வெளி கொட்டில்களில் அடைத்துவைத்திருப்பது ஏன்? இதையெல்லாம் ஏன் உலக நாடுகள் கேட்கவில்லை. இதையெல்லாம் உணர்ந்து எமக்கான விடுதலை எங்கள் கையில் என்பதைத் தவிர வேற வழியே இல்லை. இதுவே என்னுடைய கருத்து.

மீனகம் ; தமிழினம் ஒற்றுமையாக இருக்கவேண்டிய இந்த தருணத்தில் கூட்டமைப்பு பிளவு பட்டிருக்கிறது. இந்த நிலைமை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

சீமான் : நான் வருத்தப்படுகிறேன். அங்குள்ள சூழ்நிலை எனக்கு புரியவில்லை. ஐயா சிவாஜிலிங்கமிடமும் நான் தொடர்ச்சியாக பேசினேன். அவரின் நிலைப்பாடு சரியாக படுகிறது. மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. ஐயா சிவாஜிலிங்கம் அவர்களின் நிலப்பாடு என் மனநிலையோடு ஒத்துப்போகிறது.

மீனகம் : சிவாஜிலிங்கம் ஐயா அவர்கள் தனித்து போட்டியிடுவதால் என்ன பலன் இருக்கிறது?

சீமான் : எங்கள் உணர்வை வெளிக்காட்ட முடிகிறது. எல்லாவற்றையும் தனிமனித கருத்து என ஒதுக்கி வைக்க முடியாது. இந்த உலகத்தில் இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் தனிமனித சிந்தனையில் உதித்தவை தான். அன்று கத்தி கத்தி இருந்ததால் தான் இன்று என் பின்னாடி லட்சக்கணக்கான தம்பிமார்கள் திரண்டு வருகிறார்கள். அதே மாதிரி தான் அவரின் நிலையும் உள்ளது. நான் இந்த இரண்டு துரோகிகளிற்கு துணை போக முடியாது என்று அவர் சொன்னார். அது அவருடைய நிலைப்பாடு. அது சரியோ பிழையோ எனக்கு தெரியாது.

மீனகம் : வட்டுக்கோட்டைத்தீர்மானம் சம்மந்தமாக சர்வதேச நாடுகளில் தேர்தல் நடத்தப்படுகிறது மக்கள் மத்தியில். அது எவ்வாறான நிலமையை தமீழீழ களத்திற்கு கொண்டுவரப்போகின்றது?

சீமான் : வட்டுக்கோட்டைத்தீர்மானம் தான் தமிழீழம் என்ற சொல்லை பிரதிபலிக்கும் தீர்மானம். தமிழர்களிற்கு தனித்தமிழீழம் என்ற தனியரசை உணர்த்திய தீர்மானம் அது. தமிழர்களிற்கு வேறு வழியில்லை என்பதை என்பதை உணர்த்திய தீர்மானம். அந்த அரசியல் வழியில் நாம் பயணிக்கும் போது அதை நிறைவேற்றியிருந்தால் இந்தளவு அழிவுகளையும் உயிர்பலிகளையும் நாம் எதிர்நோக்கவேண்டியிருக்காது. அந்த அரசியல் வழியை விட்டு எந்த ஆயுதத்தைக்காட்டி எம்மை படுகொலை செய்கிறார்களோ, எந்த ஆயுதத்தைக்காட்டி எம்மை அழித்தார்களோ அந்த ஆயுதத்தைப்பயன்படுத்தி எமது தேசிய தலைவரான அண்ணன் பிரபாகரன் தமிழீழ தேசிய இராணுவத்தைக் கட்டியமைத்து ஒரு நீண்ட நெடுங்காலமாக தமிழ் தேசிய போரை நிகழ்த்தினார்கள். இன்றைக்கு கடைசிக்கட்ட போரில் மட்டும் எமது மக்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள், சுதந்திர பூமி என்பது சுடுகாடாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழீழ விடுதலை என்பது தமிழீழத்தில் வாழ்கின்ற மக்களிற்கு கிடைக்கின்ற விடுதலை இல்லை. அங்கே களமாடிய தலைவன் பிரபாகரனிற்கு கிடைக்கும் விடுதலையும் இல்லை. அதை அவர் விரும்பவுமில்லை. அங்கே களமாடி மடிந்த் மாவிரர்களிற்கானதுமல்ல, களமாட தன் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்களினது விடுதலையுமல்ல. ஈழவிடுதலை என்பது தமிழ்தேசிய இனத்தின் விடுதலை. உலகம் எங்கும் பரந்து வாழ்கின்ற 12 கோடி மக்களிற்கும் கிடைக்கின்ற விடுதலை. அவர்களின் ஆத்ம விருப்பம் தான் விடுதலை. அதே இடத்தில் தற்போது மக்களிடத்தில் நமது போராட்டம் கையளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்பதை தவிர்த்து தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம் என ஒவ்வொரு தமிழனினதும் தாகமும் தமிழீழம் அவர்களின் தேசிய விருப்பம். அவர்களின் 60 வருடகால தேவை தான் தமிழீழம். அந்த மண்ணில் எங்கள் மொத்த எண்ணத்தைதான் தலைவர் பிரபாகரன் பிரதிபலித்தார். எங்கள் இலட்சியத்தைக் காக்கத்தான் எங்கள் பிள்ளைகள் உயிரைக்கொடுத்து போராடி மாவீரர் ஆனார்கள். தமிழீழ மண்ணில் எங்கள் பிள்ளைகள் போராடும் போது பயங்கரவாதம் என சித்தரித்த உலக நாடுகள் நாம் போராடும் போது எங்களிற்கு என்ன திர்வு? இவ்வளவு காலம் நாம் போராடியதற்கு ஒரே தீர்வு தான் தமிழீழம். தமிழீழ குடியரசு தான் என்று உரத்து முழங்கவேண்டியிருக்கிறது.

இனவெறியரசுக்கு உதவி செய்து எமது போராட்டம் அழித்தொழிக்கப்பட்டுள்ளபோது பலம் கொடுத்து உதவிய உலக நாடுகள் இன்று போர் இல்லை. அதே நோக்கத்திற்காக நாங்கள் போராடுகிறோம். என்வே, எங்களின் விருப்பத்தை நீங்கள் தெரிந்துகொள்ளூங்கள். எமது விருப்பம் தனித்தமிழீழம் என்றதை புரிந்துகொண்டு எமக்கு ஆதரவு கொடுங்கள்: என்று கேட்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஆடை தராதவன் எப்படி எனக்கு அதிகாரம் தருவான்? நாம் போராடிய போது அழித்தொழிக்க துணைபோனீர்களே, இப்போது எமக்கு ஆதரவு தாருங்கள். முடியவில்லை என்றால் விலகிக்கொள்ளுங்கள். மறுப்படியும் நாங்கள் ஆயுதமேந்திபோராடவேண்டுமா? போராடினால் நீங்கள் பயங்கரவாதம் எனக்கூறாது தமிழ்தேசிய பிரச்சனை என்று கூறி தமிழ்தேசியத்தை பெற்றுத்தாருங்கள் என்று உலகநாடுகளை வறுபுறுத்தியே இந்த வட்டுக்கோட்டைத்தீர்மானம் முன்னெடுக்கப்படுகிறது.

மீனகம் : இந்த தைத்திருநாளில் தமிழ்ப்புத்தாண்டு பிறந்திருக்கின்ற இந்த நாளில் தமிழீழ மக்களுக்கும் தமிழக உறவுகளுக்கு என்ன சொல்ல விரும்புறீங்கள்?

சீமான் : ஏறக்குறைய எல்லா பதில்களையும் நான் விளக்கிவிட்டேன். இருப்பினும் என் சொந்தங்களிடம் கேட்டுக்கொள்வது முடிந்தது முடிந்து விட்டது. இனியும் நீ பெரியவன் நான் பெரியவன் என்று கூறும் தருணம் இதுவல்ல. எந்த மொழியில் பிறந்திருக்கிறோம் என்று தெரியாமலே எமது பிஞ்சுக்குழந்தைகள் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு கருகிச்சென்ற குழந்தைகளின் மனநிலையை எண்ணிப்பார்த்து இலட்சக்கணக்கான என் மக்கள் எத்தனை வகையான துன்பங்களை பட்டார்கள் எல்லாம் எதற்காக சொந்தங்களே! யூதர்கள் நாடு இல்லை. என்றாலும், அடுத்தமுறை சந்திக்கும் போது ஸ்ரேலில் சந்திப்போம் என்று கூறிச்சென்றனர். அதேமாதிரி நாமெல்லாம் அடுத்தமுறை சந்திக்கும் போது தமிழீழத்தில் சந்திப்போம் என கூறி கலைந்து நம்பிக்கையுடன் செல்லுங்கள். கூடுமானவரை பிணக்கின்றி இணக்கமாக கூடுமானவரை முயலுங்கள். இதைவிட்டால் வேறு தருணம் இல்லை. ஒரு மனிதனின் மரணத்திற்கு ஊர் கூடுகிறது. ஒரு இனத்தின் விடுதலைக்கு மொத்த இனமும் கூடவேண்டும். இப்போது அந்த நாட்டில் போர் இல்லை. ஆனால், போராட்டங்கள் எமது கைகளில் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து போராடுங்கள். நாம் தமிழர். நீயும் தமிழன் நானும் தமிழன் என்று ஒன்றிணைந்து வென்றெடுப்போம் எமது உரிமைகளை விடுதலையை.

வருகின்ற 18 ஆம் திகதி தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு ஒன்று மதுரையிலே நடக்கவிருக்கிறது. அதற்கு எல்லோரும் ஆதரவு கொடுத்து அந்த உணர்வை எல்லோரும் பிரதிபலித்து பிளவின்றி ஒன்று படுவோம் என உறுதியேற்று, வணக்கத்திற்குரிய பாசத்திற்குரிய அப்பா வேலுப்பிள்ளை அவர்களினுடைய நினைவை மனதில் ஏற்று நடக்கவேண்டும் என்றே மக்களாகிய உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது.

மீனகம் : எமது வீரத்தந்தையின் வீரவணக்கத்தை மனதில் ஏற்றிக்கொண்டு ஒற்றுமையாக செயற்பட்டு தமிழினமாகிய நாம் எனிமேலேனும் தமிழீழத்துக்காக ஒற்றுமையாக செயற்படவேண்டுமென்று மீனகம் வலைத்தளத்தினூடாக நாங்களும் எமது மக்களை அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வளவு நேரமும் எங்களுடன் தொடர்பு கொண்டு நிறைய விடயங்களை எமக்களித்தமைக்கு மிக்க நன்றி.

சீமான் : நன்றி, வணக்கம்.

http://meenakam.com/?p=3290

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.