Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கல்பட்டு ஈழ ஏதிலிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செங்கல்பட்டு ஈழ ஏதிலிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

[ஆடியோ இணைப்பு]செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இங்கே அழுத்தவும்

செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமிலிருக்கும் மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமிலிருந்து தங்களை விடுவிக்க கோரி உண்ணாநிலை மேற்கொண்டனர். பின்னர் தமிழகரசு செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமை மூடி அங்கிருப்பவர்களை ஏனைய முகாங்களிற்கு மாற்றம் செய்யப்போவதாக அறிவித்ததன் பின்னர் அந்த உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழக அரசின் அந்த அறிவித்தல் நடைமுறை படுத்தபடாத காரணத்தினால் அதன் தொடர்ச்சியாக நேற்று பகல் மீண்டும் அவர்கள் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

கடவுச்சீட்டு வழக்கு மற்றும் ஏனைய வழக்குகளில் அங்கு மக்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை வேறு முகாம்களிற்கு மாற்றக்கோரியே இந்த உண்ணாநிலைப் போராட்டதை நடத்தினார்கள்.

இருப்பினும் அவர்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் மக்களை அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. உள்ளிருந்து கொண்டு உண்ணாநிலை மேற்கொண்ட மக்கள் மீது இரவு 10 மணியளவில் உள்நுழைந்த காவற்துறையினர் சரமாரியாக தாக்கினர்.

காவற்துறையினரின் தாக்குதலில் 16க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையிலும் அவர்களிற்கு தகுந்த மருத்துவ உதவியை செய்யாமல் வேலூர் சிறையில் அடைப்பதற்காக அவர்களை இழுத்துச் சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்மொழி மாநாடு நடக்கவிருக்கின்ற இந்த நேரத்தில் செங்கல்பட்டு ஈழ ஏதிலிகளின் உண்ணாநிலை அதற்கு இடையூறாக இருந்துவிடும் எனக்கருதிய தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் ஏதிலிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக மீனகம் இணையம் அறிகிறது.

http://meenakam.com/?p=5084

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் கிந்திய சனனாயகம். சோனியாவின் எடுபிடி மாமா கருநாய் நிதியினுடைய ஆட்சியின் கோரத்தைப் பார்த்தாலே புரிகிறது. தரங்கெட்ட தமிழினத்தின் காவலனாம். எந்த ஒரு காலத்திலும் மக்கள் திலகத்தினுடைய கால் தூசிற்கும் பெறாத தூசு. தமிழீழ மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட அந்த உயர்மனிதன் இருந்திருந்தால் அவர்களால் இன்றுவரை ஆட்சிக் கட்டிலில் ஏறியிருக்க முடியுமா?

மானமுள்ள புலம்பெயர் உறவுகளே! இனியாவது இவர்களுக்கும் இவர்களது காணொளிகளுக்கும் அள்ளிக் கொட்டுவதை நிறுத்த முன்வாருங்கள்.

Edited by nochchi

ஆந்திர பின்னணியை உடைய கொலைஞர் கருணாநிதியையும் அவரது கொலைகார கும்பலையும் தமிழ்நாட்டை விட்டு துரத்தவேண்டும். தமிழர்கள் தூய தமிழர் ஒருவரை தமிழ்நாட்டு முதல்வராக தெரிவு செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மானமுள்ள புலம்பெயர் உறவுகளே! இனியாவது இவர்களுக்கும் இவர்களது காணொளிகளுக்கும் அள்ளிக் கொட்டுவதை நிறுத்த முன்வாருங்கள்.

எங்கட சனத்துக்கு எங்கே மானம் ரோசம் இருக்கிறது. அவர்களுக்கு சன், கலைஞர் தொலைக்காட்சி என்றால் காணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தொலைக்காட்சியில் வந்த காணொளி

http://www.tamilantelevision.com/chengalpattu_refugees.php

கொலைஞருக்கு கூஜா தூக்கிற அண்ணன் திருமாவளவன் இதை பற்றி மூச்சும் விடவில்லை போல கிடக்கு

ஒரு வேளை முள்வலி மாதிரி ஒரு மாசம் கழிச்சு இதை பற்றியும் தொடர் எழுதலாம் என்டு இருக்கிறாரோ என்னவோ :lol: :lol:

How is this ????? :lol:

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் நடந்தது என்ன? டி.ஜி.பி. அறிக்கை

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் நடந்தது என்ன என்பது பற்றி என்று டி.ஜி.பி லத்திகா சரண் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் மீது காவல்துறையினர் 02.02.2010 இரவு தாக்குதல் நடத்தியதாகவும், அதில் பலர் காயம் அடைந்ததாகவும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகும்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 33 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக, பல்வேறு நீதிமன்றங்களுக்கு வழிக்காவல் மூலம் கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்கள். 01.02.2010 அன்று காலை முகாமில் இருந்த ரூக்ஷான், சேகர் மற்றும் ரமணன் என்ற இலங்கைத் தமிழர்கள் தங்களை முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் தொடங்கினர்.

தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்ட அவர்களிடம் 02.02.2010 அன்று செங்கல்பட்டு தாசில்தார் மற்றும் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியும், அதற்கு செவி சாய்க்காமல் , மாலை 3.30 மணியளவில் முகாமில் உள்ள மரங்களின் மீது ஏறி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த சந்தர்ப்பந்தை பயன்படுத்தி, திடீரென மாலை 6 மணிக்கு முகாமில் இருந்த இலங்கைத் தமிழர்கள் சிலர் முகாமில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தனர்.

அப்போது பாதுகாப்பு அலுவலில் இருந்த குடியாத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் ஒரு காவலர் அவர்களைத் தடுக்க முயன்ற போது, இலங்கைத் தமிழர்கள் அவர்களை அங்குள்ள ஒரு அறையில் அடைத்து வெளிக்கதவை பூட்டி அவர்கள் மீது தீ வைத்து விடுவதாக மிரட்டினர். உடனே காவல்துறையினர் அவர்களை காப்பாற்றவும், இலங்கைத் தமிழர்கள் முகாமில் இருந்து தப்பி செல்வதை தடுக்கவும் வேண்டி வேறொரு வழியாக முகாமிற்குள் நுழைந்த போது அக்கும்பல் உள்ளே சென்ற செங்கல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் முனியாண்டியை தாக்கி, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது.

காவல்துறையினர் தகராறு செய்த இலங்கைத் தமிழர்கள் 15 பேரை கைது செய்து, அடைத்து வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை பத்திரமாக மீட்டதோடு, முகாமில் இருந்து எவரும் தப்பிச் செல்லாமல் தடுத்தனர். மேலும் முகாமில் சோதனையிட்டு, அங்கிருந்த இரும்புக் கம்பிகள் மற்றும் கத்தி ஒன்றையும் கைப்பற்றினர்.

இது குறித்து குடியாத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில், போலீசாரை தாக்கிய இலங்கைத் தமிழர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி, பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இச்சம்பவத்தில் காயம் அடைந்த முனியாண்டி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறையினர் இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. இச்சம்பவத்தில் இலங்கைத் தமிழர்கள் எவரும் கடுமையான காயம் அடையவில்லை.

இவ்வாறு டி.ஜி.பி. லத்திகாசரண் தெரிவித்திருக்கிறார்.

and some more

The recalcitrant Sri Lankan Tamil Refugees and their adamant acts, said to be troubling the state administration and police officials, since the end of the ethnic war in the island nation.

In a high-type drama, three of the 33 inmates at the Chengalpattu special (Sri Lankan refugees) camp climbed up the 60 feet tall Pipal tree inside the premises and refused to come down unless they were handed down the `release orders'.

The three detainees, Ramana (33) Mohammad Rukshan (24) and Sekhar (27) continued with their tinsel style protest throughout the day, on Tuesday and when the trio finally descended in the evening, all the 33 inmates continued a `sit-in protest' until justice was meted out to them.

They then closed the inner gate of the camp late in the evening and refused to meet anyone none less than the rank of `Q' branch SP.

The tree-climbing trio had gone on a fast protesting against what they called their `illegal detention', and when the protest did not elicit the expected result, they desired, they intensified their protest.

The inmates questioned the rationale of the government to slap cases against them under the foreigners Act when they were `mere refugees' and contended that the police did not file any charge sheet against them for more than three years.

One of them said that if they were guilty, let the police produce them in the court where they would defend themselves. Demanding that they should at least be transferred to open camps, an inmate said that most of them were married with children who were 'equally languishing' in open camps in Tiruchy, Gummidipoondi and Poonamallee.

The A. S. P. (Chengalpattu) Xavier Dhanaraj and inspector Albert Wilson visited the camp in the evening to persuade them to give up their protest. `Q branch officials said, that the government was following established procedures as laid down by the Supreme Court and it was finally for the State government to act.

------

HOW CAN WE SAVE OUR PEOPLE FROM THESE ATROCITIES?

Edited by சுனாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.