Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத ஜனநாயகத்தின் புதிய தோற்றம்..

Featured Replies

பயங்கரவாத ஜனநாயகத்தின் புதிய தோற்றம்..

தற்போது அமலில் இருப்பது வர்த்தக ஜனநாயகம்..

அறிவு கெட்ட பாதையில் சென்றால் புதுமாத்தளனை புலம் பெயர் நாடுகளிலும் சந்திக்க நேரலாம்…

உலகத்திற்கு ஜனநாயகத்தை அறிமுகம் செய்தவர்கள் கிரேக்கர்கள். ஆட்சிக்கு ஒருவரைத் தேர்வு செய்ய மரத்தடியில் கூடினார்கள், அதிகமாக யாருக்கு ஆதரவாக மக்கள் கைகளை உயர்த்தினார்களோ அவரே ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் ஜனநாயகத் தேர்தலும், மக்களாட்சியும் உருவான வரலாறாகும்.

கிரேக்கர்கள் சிறந்த சிந்தனைவாதிகள் என்றாலும் அவர்களிடம் மிகப்பெரிய சிந்தனைத் தவறு இருந்தது. காரணம் கிரேக்கத் தத்துவ ஞானிகளில் ஒருவர் கூட பெண் கிடையாது. பெண்களை சிந்திக்க உரிமையற்றவர்கள் என்று கருதிய அவர்களுடைய சிந்தனையில் மிகப்பெரிய ஊனத்தன்மைகள் இருந்ததை பின்வந்த அறிவியல் உலகம் நிறுவியது. பெண்களுக்கு வாக்குரிமை இருபதாம் நூற்றாண்டுவரை வழங்கப்படாமல் இருந்தது. கிரேக்கர் உருவாக்கிய ஜனநாயகத்திலும் மிகப்பெரிய ஊனத்தன்மை இருந்தமைக்கு இது ஓர் உதாரணம்.

உலகப் பயங்கரவாதம் என்பது தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியது கிரேக்கர்களின் ஜனநாயகம்தான். அவர்களின் பழைய ஜனநாயகம் புதிய அறிவியல் உலகில் மிகப்பெரிய மோசடியைச் சந்தித்திருக்கிறது. பயங்கரவாதம் உலகத்தை அழிக்கும் வேகத்தைவிட மோசமான இந்த ஜனநாயகம் உலகத்தை அழிக்கும் என்பதே உண்மையாகும்.

ஜனநாயகத் தேர்தலில் உள்ள பிரதான குறைபாடுகள் நீண்ட காலமாகவே அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது கணிதக் குறைபாடு, சாதாரணமாக பாடசாலைகளில் இதை படிப்பிப்பார்கள். மக்களாட்சி என்பது உண்மையான மக்களாட்சி அல்ல என்பதற்கு ஓர் எளிமையான கணக்கு.

மொத்த வாக்காளர் தொகை 100

போட்டியிடுவோர் ஐந்துபேர்.

போட்டியாளர் ஏ – 20 வாக்குகள்

போட்டியாளர் பீ – 15 வாக்குகள்

போட்டியாளர் சீ – 14 வாக்குகள்

போட்டியாளர் டீ – 13 வாக்குகள்

போட்டியாளர் ஈ – 12 வாக்குகள்

வாக்களிக்க வாராதோர் 26 பேர்

மொத்தம் – 100 பேர்

இந்தத் தேர்தல் முடிவில் 20 வாக்குகள் பெற்ற ஏ வெற்றி பெறுவார். அவரை எதிர்த்து 80 பேர் எதிரணியில் இருப்பார்கள். இதற்குப் பெயர்தான் மக்களாட்சி. கணிதரீதியாக இதை மக்களாட்சி என்று கூறுவது தவறானது. உண்மையாக இது மக்களாட்சி அல்ல. கிரேக்கத்தின் ஜனநாயகம் படு பாதாளத்தில் வீழ்ந்தமைக்கான ஓர் எளிய உதாரணம் இதுவாகும். இதுபோல தேர்தல் முறையில் அறிவியலின் வளர்ச்சியால் பல ஊழல்கள் மெல்ல மெல்ல வளர்ந்து வந்தன.. அதுதான் ஜனநாயக பயங்கரவாதத்தின் படி முறையான வளர்ச்சியாகும்.

20 வாக்குகளை மட்டும் பெறக்கூடிய தகுதி உடையவன் தனது வெற்றியை உறுதியாக்கச் செய்ய வேண்டிய ஓர் இலகுவான கணிதச் சூழ்ச்சி என்ன ?

அதிகமான வேட்பாளர்களை களமிறக்கி வாக்குகளை பிரிக்க வேண்டும். சிறீலங்காவில் இப்போது நடைபெற்றிருப்பது இதுதான். ஒவ்வொரு குழுவிற்கும் 15 இலட்சம் பணம் கொடுக்கப்பட்டு பெருந்தொகையான குழுக்களை அரசு இறக்கி வாக்குகளை பிரித்துள்ளதாக யாழில் இருந்து தமிழ் கட்சித் தலைவர் ஒருவர் சென்ற வாரம் தெரிவித்திருந்தார். எண்பதுபேரை ஐந்து கூறுகளாக பிரித்தால் 20 வாக்குகள் பெறுபவன் வெற்றி பெறுவான்.

இரண்டாவது சூழ்ச்சி வாக்குகளை பணம் கொடுத்து வாங்குவது. தமிழ்நாடு பொன்னாகரம் தேர்தல் தொகுதியில் தலைக்கு 3000 ரூபா கொடுக்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் நேற்று குற்றம் சாட்டினார். பல்லாயிரக்கணக்கானவர் இருக்கும் ஒரு தொகுதியில் எல்லோருக்கும் 3000 கொடுக்க பணத்திற்கு எங்கே போவதென பலரும் தடுமாறலாம். ஆனால் டாக்டர் ராமதாஸ், வை. கோபாலசாமி போன்ற தமிழ் உணர்வாளர் கணிதத்தில் மிகப்பெரிய வீக்காளராக இருப்பதுதான் உண்மை.

எல்லோருக்கும் 3000 ரூபா கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு வாக்களிக்கும் 20 பேரும் பணம் கொடுக்காமலே வாக்களிப்பார்கள். நம்மை வெற்றிபெறக்கூடிய இரண்டாவது அணியின் வாக்குகளில் வெறும் பத்தே பத்து வாக்குகளை ஆளுக்கு தலா 3000 ரூபா பணம் கொடுத்து வேண்டினாலே போதும், இலகுவாக வெற்றி பெற்றுவிடலாம். எதிரணியினர் தேர்தலுக்காக மாங்கு மாங்கென்று கத்தி, செலவிடும் பணத்தைவிட இது குறைந்த பணத் தொகையே. எதிரணியினர் வெற்றி பெறும் முதலாவது குழுவின் 15 வாக்குகளை மட்டும் ஆளுக்கு 4000 ரூபா கொடுத்து வாங்கினால் இரவோடு இரவாக எதிரணி வெற்றியை தமதாக்கலாம். இது கலைஞரின் திறமையல்ல நமக்கு ஜனநாயகத்தை ஏமாற்றும் கணித விதி தெரியாதிருப்பதால் வரும் சீர்கேடாகும்.

அப்படியானால் கணித முறை தெரிந்தவர் எல்லாம் வெற்றிபெற முடியுமென நினைத்துவிடக்கூடாது. ஆட்சி அதிகாரம் கையில் இருக்க வேண்டும். தேர்தல் கமிஷனரையும் குஷிப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதைவிட பெரிய முக்கியம் கணினி மூலம் வாக்களிப்பதாகும்.

வாக்காளர் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க அதிகாரத்தை கையில் வைத்திருப்பவன் திரை மறைவில் அதை அவதானித்துக் கொண்டிருப்பான். வாக்களிப்பு தனக்கு பாதகமாகப் போவதை நிமிடத்திற்கு நிமிடம் அவன் வீட்டில் இருந்தே அவதானித்தபடி இருப்பான். யார், யார் வாக்களிக்கவில்லை என்பதும் அவனுக்கு தெரியும். எனவே வாக்களிக்காமல் இருப்பவர்களை தேடி தொலைபேசிகள் பறக்கும், வாகனங்கள் ஓடும், தலைக்கு எவ்வளவு கொடுத்தால் வெற்றி பெறலாம் என்பதை அறிந்து அந்தத் தொகையை வழங்கியாவது அவர்களை வாக்களிக்க வைப்பார்கள் அடியாட்கள்.

தமிழ் நாட்டில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பல இடங்களில் ஆளுக்கு 10.000 கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. கணினியால் அவதானித்தபடி இருப்போர்தான் இந்தச் சூதாட்டத்தை செய்ய முடியும். இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய முடியாது, அதற்கு ஆதாரங்களும் கிடையாது. சிறீலங்கா அதிபர் தேர்தலில் கணினி வாக்களிப்பில் மோசடி நடைபெற்றதாக எதிரணி குற்றம் சுமத்தியதும், பின்னர் அதை நீதிமன்று கொண்டு செல்ல முடியாமல் போனதும் ஏன் என்பதற்கு இது ஓர் உதாரணம். இந்த முறையில் நாம் விரும்பிய எவரையும் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெறலாம். சரத் பொன்சேகாவின் சொந்தத் தொகுதியான அம்பலாங்கொடையிலேயே அவரைத் தோற்கடிக்க முடியும்.

மேலும் பல வேட்பாளர் போட்டியிடும்போது சின்னங்களால் அவர்களை ஏமாற்ற முடியும். சுமார் 40 வீதமான வாக்காளர் கடைசி நிமிடத்தில்தான் வாக்களிக்கப் போவதற்கு முடிவு செய்வார்கள். அவர்களுக்கு சின்னங்கள் பற்றி அவ்வளவு நிதானமிருக்காது. இவர்களில் பத்து வீதமானவர்கள் பார்வைக் குறைவானவர்களாக இருப்பார்கள். அடுத்த பத்துவீதமானவர் அடிப்படை அறிவே இல்லாதவர்களாக இருப்பார்கள். சரத் பொன்சேகாவுக்கு அன்னம் சின்னமாக வழங்கப்பட்டது. அவருக்கு அருகில் இன்னொரு சுயேட்சை வேட்பாளருக்கு கழுகு வழங்கப்பட்டது. யாழ். குடாநாட்டில் கடைசி நேரம் வாக்களிக்க ஓடி வந்தவர்கள் அன்னத்திற்கும் கழுகிற்கும் பேதம் தெரியாமல் கழுகில் புள்ளடியிட்டார்கள். க.சிவாஜிலிங்கத்தை கழுகு சின்ன வேட்பாளர் யாழ்ப்பாணத்தில் வைத்தே தோற்கடித்தார். இதுதான் அதிக வேட்பாளரை அறிமுகம் செய்து சின்னங்களால் தோற்கடிக்கும் முறையாகும். அதிபர் தேர்தலின்போது மொத்தம் 50 இந்திய தேர்தல் நிபுணர்கள் இலங்கைக்கு போனதாக செய்தியொன்று கூறியிருந்தமை கவனிக்கத்தக்கது.

மேலும் வாக்களாரில் 30 வீதமானவர்கள் இராமன் ஆண்டால் எனக்கென்ன, இராவணன் ஆண்டால் எனக்கென்ன என்றிருப்பார்கள். இவர்களை வாக்களிக்க வராமல் தடுக்க முதலிலேயே வன்முறைகளை தூண்ட வேண்டும். யாழ்ப்பாணத்தில் தேர்தலன்று அதிகாலை 13 குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன, இப்படியான பயந்த கூட்டத்தை முடங்க வைக்கவும் ஒரு வழியை செய்ய வேண்டும. இவை தவிர பணம் கொடுத்து சங்கங்களை வேண்டுதல், சாதிக்கலவரங்களை உருவாக்குதல், பிரதேச வாதத்தை தூண்டுதல் என்று பல உத்திகள் இதில் உள்ளன. எதுவுமே காரணம் இல்லாமல் இல்லை, எல்லாமே காரணத்துடன்தான் நடக்கிறது.

ஆனால் இவைகளை மகிந்த ராஜபக்ஷவும், கருணாநிதியும், சோனியாவும்தான் மட்டும்தான் செய்வதாக நாம் குற்றம் சுமத்த முடியாது. காரணம் ஆட்சியில் யார் இருந்தாலும், தமது அதிகாரத்தை தக்க வைக்க இதைத்தான் செய்வார்கள். ( இதற்காக இவர்கள் பாதை சரி என்று கருதிவிடக் கூடாது ) மேலும் இதற்கு ஈழத் தமிழரும் விதிவிலக்கல்ல என்பதை எழுத உதாரணங்கள் உண்டு, ஆனால் நம்மால் விமர்சனங்களை தாங்க முடியாது என்பதால் தவிர்த்து அப்பால் செல்வோம்.

இப்படியான மோசடிகளில் மேலும் பல கணித நுட்பங்களும் கண்கட்டு வித்தைகளும் உள்ளன. ஆனால் இவற்றை மிக மிக தந்திரமாக செய்ய வேண்டும். இதே நுட்பத்தை ஈரானில் கடைப்பிடித்தபோது ஒரு தவறு நிகழ்ந்தது. 10.000 வாக்காளர் வாக்களிக்கும் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் 20.000 வாக்குகள் விழுந்திருந்தன. அப்படியான நேரத்தில் இராணுவத்தை பயன்படுத்த வேண்டிய நிலை வரும். அன்னிய ஏகாதிபத்தியத்திற்கு விலை போய்விட்டதாக குற்றம் சுமத்தி மக்களை இலகுவாக ஏமாற்றிவிடலாம். துரோகிப்பட்டம், விலைபோய்விட்டான் என்ற மலிவான குற்றச்சாட்டுக்கள் ஊழல் செய்பவர் வாயிலிருந்து பீரங்கிகள் போல வரும். உங்களுக்கு அருகில் இருந்து யார் மற்றவரை துரோகி, விலை போய்விட்டான் என்று கூறுகிறாரோ அவருக்கு பின்னால் பெரிய ஊழல் மறைந்துள்ளதை நீங்கள் கண்டு கொள்ளலாம். இதற்கு ஈரானோ, இந்தியாவோ, இலங்கையோ, ஈழத்தமிழரோ விதிவிலக்கல்ல.

சரி இவை போன்ற தவறுகள் கீழை நாடுகளில்தான் நடக்கின்றன, மேலை நாடுகளில் இப்படி நடக்குமா ? என்று நாம் சவால் விடலாம். அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் ஜோர்ஜ் புஸ்சின் சகோதரர் கவர்னராக இருந்தார். அங்கு பல்லாயிரம் வாக்குச் சீட்டுக்களில் துளையிடப்பட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்ட நிகழ்வுகளும், அதில் நடைபெற்ற நுட்பமான மோசடிகளும் அல் கோரை தோற்கடித்து புஸ்சை அதிகாரத்திற்கு கொண்டுவந்தது. அதற்குள் நடைபெற்ற தவறுதலான ஜனநாயத்தில் இருந்துதூன் பயங்கரவாத போர் வந்தது. அந்தப் பயங்கரவாத பட்டியலில்தான் புலிகள் சிக்குப்பட்டு புதுமாத்தளனில் புதைக்கப்பட்டார்கள்.

ஆகவே இன்றய உலகில் ஜனநாயக பயங்கரவாதமென்பதை வெற்றி கொள்ள மக்கள் சக்தியால் முடியாது. ஜனநாயகத்தின் பெரும் தொழில்நுட்பத் தோல்வி, சர்வாதிகாரத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மக்களாட்சி தற்போது சர்வாதிகாரிகளை உற்பத்தி செய்ய காரணமாகிவிட்டது. இப்போது பர்மாவில் உள்ள ஜிந்தா ஆட்சி தேர்தல் நடாத்தப்போகிறது, அது ஆங் சாங் சுகி அம்மையாரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க மறுத்துவிட்டது.

இவைகளை எல்லாம் சீர்தூக்காது,

வரும் தேர்தலில் தமிழர்கள் அதிகமாக போட்டியிடுவதால் சிங்களவரிடம் ஆசனங்களை இழப்பர் என்று எழுதுவது அறியாமையாகும். தமிழர் சகல ஆசனங்களை வென்றாலும், சிங்களப் பெரும்பான்மையின் முன்பு எதையும் செய்ய முடியாது என்பதை முன்னர் கூட்டணி பெற்ற வெற்றி, பின்னர் கூட்டமைப்பு பெற்ற வெற்றிகளால் நாம் பார்த்து முடித்துவிட்டோம்.

ஆகவேதான் அறிவியலில் முன்னேறிய நாடுகள், தேர்தலில் போட்டியிடுவோரையும், ஆட்சியாளரையும் கோமாளிகளாக பார்த்து சிரித்தபடியே புறந்தள்ளுகின்றன. இந்தக் கோமாளிகளை விலைக்கு வாங்க இன்னொரு கூட்டம் முதலாளி வர்க்கமாக உருவாகி நிற்கிறது. உதைபந்தாட்டங்களில் வெற்றி விலைக்கு வாங்கப்படுவதுபோல இப்போது தேர்தல்களிலும் வந்துவிட்டது. பில் கிளின்டனுக்கு ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனம் தேர்தலுக்கு நிதி ஒதுக்கி பின் ஜப்பான் கார்களை அமெரிக்காவிற்குள் தள்ளியது. அதற்குப் பிறகு புஸ் ஆட்சி ஜப்பான் கார்களை புறந்தள்ளியமை இந்த ஜனநாயக வர்த்தகத்தின் இன்னொரு காட்சிப் படிமமாகும்.

1789 ம் ஆண்டு புரட்சி மூலம் பிரான்சிய மக்கள் மிகப்பெரிய சர்வாதிகாரியான நெப்போலியனின் கால்களில் விழுந்து சர்வாதிகாரத்தை தோற்றுவித்தார்கள்.

1917 ல் நடைபெற்ற ரஸ்ய மக்கள் புரட்சி மிகப்பெரிய சர்வாதிகாரியான ஸ்டாலினை தோற்றுவித்தது.

1949 சீனாவில் நடந்த புரட்சி மிகப்பெரிய கொலைஞனாக மா ஓ சே துங்கை தோற்றுவித்தது.

இதுபோலத்தான் ஜனநாயகமும் இன்று சர்வாதிகாரிகளின் உற்பத்திக் களமாகியுள்ளது.

ஆகவே ஜனநாயகம் அறிவியலின் வளர்ச்சியில் தோற்கடிக்கப்பட்டு பயங்கரவாத ஜனநாயகமாக கூர்ப்படைந்து நிற்பதை உணர வேண்டும். இதை மேலும் மேலும் கண்டறிய நிறையவே படிக்க வேண்டும். ஈழத் தமிழினம் தகுதியற்றவர்களை தலைமை தாங்க வைத்து மனம் போனபடி நடந்தால் புதுமாத்தளன் சேற்றை புலம் பெயர் நாடுகளிலேயே காணும் அரிய வாய்ப்பையும் பெற முடியும்.

http://www.alaikal.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.