Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு கனடிய நகரங்களில் பெரும்பான்மையாகும் சிறுபான்மையினர்; அமெரிக்க சனத்தொகை கணக்கெடுப்பை கவனிக்கும்படி வேண்டுகை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரு கனடிய நகரங்களில் பெரும்பான்மையாகும் சிறுபான்மையினர்; அமெரிக்க சனத்தொகை கணக்கெடுப்பை கவனிக்கும்படி வேண்டுகை

[ புதன்கிழமை, 24 மார்ச் 2010, 13:23 GMT ] [ சிறப்புச் செய்தியாளர்:புதினப்பலகை]

கனடாவின் இரு பிரதான நகரங்களில் - இன்னும் இருபது வருடங்களில் சிறுபான்மை சமூகத்தவரே பெரும்பான்மையினராக மாறிவிடுவர் என்று அண்மையில் வெளியான புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

அதிகளவிலான குடியேற்றங்கள் மற்றும் பிறப்பு வீதம் அதிகரிப்பு ஆகியவை இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2031ஆம் ஆண்டில் கனடாவில் சிறுபான்மை இனத்தவர்களின் எண்ணிக்கை 14.4 மில்லியனாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

1981இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, அங்கு சிறுபான்மை இனத்தவர்கள் ஒரு மில்லியனாக இருந்தனர். இது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 5 வீதம் மட்டுமே.

2006ஆம் ஆண்டில் சிறுபான்மை இனத்தவர்களின் எண்ணிக்கை 5.6ஆக வீதமாக அதிகரித்தது. இதுவே - 2031இல் இரண்டு மடங்கிற்கும மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் - இந்தியா, பாகிஸ்தான், சிறிலங்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த தென்காசிய சமூகத்தவரே அதிகமானவர்களாகும்.

2006 கணக்கெடுப்பின் போது 1.3 வீதமாக இருந்த தெற்காசிய சமூகத்தவரின் எண்ணிக்கை 2031இல் இரட்டிப்பாகி 4.1 வீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரொரன்ரோ பெரும்பாகப் பிரதேசத்தில் [ Greater Toronto ] 2006 கணக்கெடுப்பின்படி 718,000 தெற்காசிய சமூகத்தவர்கள் வசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இரண்டாவது பெரிய சிறுபான்மை சமூகத்தவராக சீனர்கள் இருக்கின்ற போதும் அவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு அதிகளவில் இருக்கவில்லை.

2006 கணக்கெடுப்பின் போது கனடாவில் உள்ள சிறுபான்மை சமூகத்தவர்களில் 25 வீதமாக இருந்த தெற்காசிய சமூகத்தவர்களின் எண்ணிக்கை 2031இல் 28 வீதமாக அதிகரிக்கும்.

சீனர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்ற போதிலும் 2006ல் 24 வீதமாக இருந்த அவர்களின் தொகை 2031இல் 21 வீதமாக வீழ்ச்சியடையும் என்ற கருதப்படுகிறது.

அதே வேளை - 2031இல் வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை, கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 25 தொடக்கம் 28 வீதமாக அதிகரிக்கும் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள் 2031இல் ரொரன்ரோ, வன்கூவர் அல்லது மொன்றியல் பகுதிகளில் குடியேறுவர். அங்கு அவர்களின் எண்ணிக்கை 71 விழுக்காடாக அதிகரிக்கலாம்.

2031இல் வெள்ளை இனத்தவர்கள் ரொரன்ரோவில் சிறுபான்மையினராகி விடுவர்.

அங்கு 2006இல் 43 வீதமாக இருந்த வெள்ளையரல்லாத இனத்தவர்களின் எண்ணிக்கை 2031இல் 63 வீதமாக அதிகரிக்கும்.

அது போல - 2006 இல் வன்கூவரின் மக்கள் தொகையில் 42 வீதமாக இருந்த சிறுபான்மை இனத்தவர்களின் எண்ணிக்கை 2031இல் 59 வீதமாக உயரவுள்ளது.

2031இல் ரொரன்ரோ வாசிகளில் நான்கில் ஒரு பங்கினர் தெற்காசிய சமூகத்தினராகவும், வன்கூவர் வாசிகளில் நான்கில் ஒரு பங்கினர் சீன சமூகத்தினராகவும் இருக்கப் போகின்றனர்.

மொன்றியலில் சிறுபான்மை இனத்தவர்களின் எண்ணிக்கை 31 வீதமாக ஆகிவிடும். அங்கு கறுப்பினத்தவர்கள் மற்றும் அராபியர்களே அதிகமாகவுள்ளனர்.

ஆயினும் - ரொரன்ரோ போன்று அங்கு சிறுபான்மை இனத்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கவில்லை என்றும் அந்தப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பலம்: கனடாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னால் ஒர் ஈழத் தமிழர்

இதற்கிடையே -

அமெரிக்காவில் இந்த வருடம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுகின்றது. இதற்கென அமெரிக்க அரச மக்கள் தொகைப் புள்ளிவிபரத் திணைக்களம் நாட்டின் மக்கள் அனைவருக்கும் படிவங்களை அனுப்பியுள்ளது.

இந்தப் படிவங்களை நிரப்பும் போது தமிழர்கள் தமது இனத்தை தெளிவாக வெளிப்படுத்துவதன் மூலம் அமெரிகாவில் குறிப்பிடத்தக்க சில நன்மைகளைப் பெற்றுக் கொள்ளவும், தமிழரின் அடையாளங்களை நிலைநிறுத்தவும் வாய்ப்பாக அமையும் என்று அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை [united States Tamil Political Action Council - USTPAC ] வலியுறுத்துகின்றது.

இதன் மூலமாக - அமெரிக்காவில், அரசியல் ரீதியாக ஓரளவுக்குச் சக்தி வாய்ந்த ஓர் இனமாக தமிழர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும், அதன் மூலம் தமிழர்களின் குரல் உரிய மட்டங்களுக்குக் கேட்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தமிழர் செயலவை கருதுகி்ன்றது.

அதற்கும் மேலாக - தம்மை ஒரு தனியான மக்கள் இனமாகப் பதிவு செய்வதன் மூலம் - பண்பாட்டு, மொழி மற்றும் சமூக ரீதியான மேம்பாடுகளுக்கு நன்மைகள் கிடைப்பதையும் உறுதி செய்துகொள்ள முடியும் எனவும் செயலவை தெரிவிக்கின்றது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான அமெரிக்க தமிழர் செயலவையின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பாகப் புதினப்பலகை-யிடம் கருத்துத் தெரிவித்த போது -

"அமெரிக்காவில் தற்போது தமிழ்நாட்டையும், ஈழத்தையும் தாயகமாகக் கொண்ட சில இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றோம்.

ஆயினும் - அமெரிக்க மக்கள் தொகையில் தமிழர்களது இனம் சார்ந்த அதிகாரபூர்வமான எந்தப் புள்ளிவிபரங்களும் கிடையாது.

அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவங்களில் கேட்கப்படும் ‘இனம்’ [ Race ] பற்றிய கேள்வியில் பல்வேறு இனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதில் "தமிழ்" என்ற இனம் என்று இடம்பெறவில்லை என்பதால் தமிழர்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளிவிபரங்கள் ஏதும் இல்லை.

இந்தக் குறைபாட்டை இந்த வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது நிவர்த்தி செய்ய முடியும்" என்று தெரிவித்தார்.

எனவே, அமெரிக்கத் தமிழர்கள் தமது நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்த சில ஆலோசனைகளை அமெரிக்க தமிழர் செயலவை முன்வைத்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தின் 9வது பிரிவில் ‘இனம்’ பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கான பதிலை புள்ளடியிடும் போது "Other Asian" என்ற கட்டத்தைத் தெரிவு செய்து, பின்னர் அதற்குக் கீழ் உள்ள கட்டங்களில் "Tamil" என்று எழுதுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

அத்துடன், "Indian Asian" என்று தெரிவு செய்யவோ, அல்லது Tamils என்று எழுதவோ வேண்டாம் என்றும் செயலவை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

Tamil என்று சிலரும், Tamils என்று சிலரும் குறிப்பிட்டுவிட்டால், அது இரு வேறு இனங்கள் என்றாகப் பதிவாகிவிடும் சாத்தியம் உண்டு என்பதால் எல்லோரும் Tamil என்றே பதிவு செய்யுமாறு வேண்டப்படுகின்றனர்.

அத்தோடு - இந்தச் செய்தியைப் பார்க்கும் வெறு நாடுகளில் வாழும் தமிழர்கள், அமெரிக்காவில் வாழும் தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த விடயத்தைத் தெரியப்படுத்தி - இதன்படி செயற்படுமாறு கேட்டுக்கொள்ளுமாறும் செயலவை வேண்டுகின்றது.

அமெரிக்க தமிழர் செயலவையால் வழங்கப்பட்ட மாதிரிப் படிவமும், அதனை நிரப்பும் வழிமுறையும் ஆங்கிலத்தில்:

1. Please Do Not check the box "Asian Indian". [ If we check "Asian Indian" and also write TAMIL in any of the two blank spaces shown below, the Census form will automatically count it as Asian Indian ]

2. Please check the box "Other Asian" and write "TAMIL" in the box which is right below "Other Asian".

3. Write TAMIL [ Do NOT write TAMILS ]. All must be consistent in writing the same word [ Tamil ], otherwise it will be counted as TAMIL and TAMILS separately.

படிவம் நிரப்பும் வழிகாட்டி

http://www.puthinappalakai.com/view.php?20100324100770

Edited by தி.ஆபிரகாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.