Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் "சொதப்பல்' போக்குத் தொடர்கிறது

Featured Replies

இலங்கை விவகாரத்தை குறிப்பாக ஈழத் தமிழர் விவ காரத்தை கையாள்வதில் இந்தியாவின் "சொதப்பல்' போக்கு மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகியிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகர னின் தாயார் இந்தியா வருவதற்கு அனுமதி அளித்து விட்டுப் பின் னர் விமானத்தை விட்டு இறங்கவே விடாமல் அனுமதிக் காமல் அவரைத் திருப்பி அனுப்பிய குளறுபடித்தனம் மூலம் இம்முறை நடந்தேறியுள்ளது.

இப்படி இலங்கை விவகாரத்தைக் குளறுபடித்தனமாகக் கையாள்வது இந்தியாவின் வழமைப்பாங்கு அன்றி வேறில்லை. எண்பதுகளில் இலங்கை விடயத்தை மிக மோசமாகக் கையாண்டு பேரவமானத்துடன் இலங்கையிலிருந்து மூடை, முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு இந்தியப் பேரரசு வெளியேற வேண் டிய நிலைமை ஏற்பட்டதற்கும் கூட இந்திய அதிகார வர்க்கத் துக்குள் நீடித்த இந்தக் குளறுபடித் தனமே பிரதான காரணம் என்பது அக்காலகட்டத்தில் இவ் விடயங்களில் சம்பந்தப்பட் டிருந்த பலருக்கும் தெரிந்த விடயம்தான்.

புதுடில்லியிலும் சென்னையிலும் இலங்கை விடயத்தை இலங்கைத் தமிழர் தரப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களை கையாளும் பல தரப்புகள் இருந்தன; இருக்கின்றன. உள் துறை அமைச்சின் கீழ் இயங்கும் ஐ.பி.(புலனாய்வுப் பிரிவு), சி.பி.ஐ.(மத்திய புலன் விசாரணைப் பிரிவு) மற்றும் "றோ', வெளி விவகார அமைச்சு, பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு, இராணுவப் புலனாய்வுப் பிரிவு என பல தரப்புகள் இலங்கை விவ காரத்தைத் தத்தமதுபாட்டில் கையாண்டு குழப்பி அடித்த மையை எண்பதுகளில் தரிசித்தோம்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம். இந்திய அமைதிப் படை களுக்கும் புலிகளுக்கும் இடையில் இலங்கையின் வடக்கு கிழக் குப் பிரதேசத்தில் கொடூர யுத்தம் மூண்டிருந்த காலம். புலிக ளின் தலைவர் பிரபாகரனுடன் சமரசம் பேசும் எத்தனமாக, அச் சமயம் தளபதி கிட்டுவுடன் தமிழகத்தில் இருந்த ஜொனி என்ற போராளியை இந்தியாவின் ஒரு புல னாய்வுப் பிரிவு, விசேட விமானத்தில் வவுனியாவுக்குக் கூட்டிவந்து வவுனியா காடு வழி யாக முல்லைத்தீவுப் பகுதிக்கு அனுப்பி வைத்தது. இந்தியத் தரப்பிடமிருந்து பிரிந்து, தனித்து முல்லைக் காட்டுக்குள் சென்ற ஜொனி அங்கு தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார்; பேசினார்.

ஆக்கபூர் வமான சில திட்ட யோசனை வரை புகளுடன் வவுனியா நோக்கிப் புறப்பட்டார். இந்தியாவின் மற்றொரு புலனாய்வுப் பிரிவு இத்தகவலை முற்கூட்டியே அறிந்து, காட்டுக்குள் பொறிவைத்துக் காத்திருந்து ஜொனியை மடக்கி, சுட்டுக் கொன்றுவிட்டு ஆவணங்களைக் கைப்பற்றி, தனது எஜமானர்களுக்கு தனது தலைமைக்கு தனது திறமை யையும் விசுவாசத்தையும் காட்டிக்கொண்டது. ஆனால் ஜொனி மூலமாக எடுக்கப்பட்ட சமரச முயற்சி அவரது உயிரோடு அப் படியே செயலிழந்துபோனது.

இப்படி, இந்திய அதிகார வர்க்கம் தனக்குள் பல பிரிவுகளாக நின்று, தன்னையும் குழப்பி, இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்துக்கான பல்வேறு நன்முயற்சிகளையும் குழப்பி நிற்பதுதான் நமது பேரவலமாகும். இதுவே வரலாற்றுப்பட் டறிவும் தொடர்கதையுமாகும்.

அன்னை பார்வதி வேலுப்பிள்ளை விடயத்திலும் இந்தி யத் தரப்பின் இத்தகைய குளறுபடித்தனமே அரங்கேறியிருக்கின்றது என்பது வெளிப்படை. அதை அறிவதற்கு இது தொடர் பான சம்பவங்களின் கோவையைப் பார்க்க வேண்டும்.

அன்னை பார்வதிக்கும் அவரது உதவியாளருக்கும் மலேஷியாவில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த வெள்ளியன்றுதான் இந்தியா செல்ல விஸா வழங்கியது. அன்று இரவே அவர்கள் சென்னை பயணமானார்கள். நள்ளிரவே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

ஆனால் அன்னை பார்வதி இந்தியா செல்வதற்கு அனுமதிக் கப்பட்டிருக்கின்றார் என்ற செய்தியை, மலேஷியாவில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த வெள்ளியன்று அவருக்கு விஸா வழங்கு வதற்கு முன்னரே "உதயன்', "சுடர் ஒளி' நாளிதழ்கள் முற்பக் கத்தில் மிக உறுதியான செய்தியாக வெளியிட்டுவிட்டன. கடந்த வியாழனன்று இரவு அச்சான "உதயன்', "சுடர்ஒளி' நாளிதழ் களின் முற்பக்கத்தில் "பிரபாகரனின் தாயார் இந்தியா வர அனுமதி'என்ற தலைப்பில் "சென்னை' இடக்குறிப் பிட்டு அச்செய்தி பிரசுரமாகியிருந்தது.

.........பிரபாகரனின் தாயார் மருத்துவக் கவனிப்புக்காக இந்தியா வரவிரும்பினால் அதற்கு இந்தியா அனுமதி அளிக் கும் என்று சென்னை வட்டாரங்களில் இருந்து தெரி யவரு கின்றது. இதற்கான இணக்கத்தை இந்தியா ஏற்கனவே பிரபா கரனின் தாயாரின் பராமரிப்பாளருக்குத் தெரியப்படுத்தி விட்டதாகவும் அறியவந்தது.

பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள் ளையின் மறைவை அடுத்து, வல்வெட்டித்துறையில் தங்கி யிருந்த பார்வதி வேலுப்பிள்ளை பின்னர் கொழும்பு ஊடாக வெளிநாடு ஒன்றுக்குக் கூட்டிச் செல்லப்பட்டார்.

அவர் தற்சமயம் மலேஷியா அல்லது சிங்கப்பூரில் தங்கியிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.

""மருத்துவக் கவனிப்பு என்ற மனிதாபிமான அடிப்படை யில் அவருக்குத் தமிழகத்தில் தங்கியிருப்பதற்கான அனு மதியை இந்தியா வழங்க முன்வந்துள்ளது. அதற்கான தக வல், சம்பந்தப்பட்ட தரப்புக்குத் தெரியப்படுத்தப்பட்டுள் ளது. பிரபாகரனின் தாயார் எந்நேரமும் இந்தியா வரலாம். அதற்குத் தடையோ, இடைஞ்சலோ இல்லை. ஆனால், அவ ரைக் கூட்டி வரும் சாக்கில் முன்னாள் எம்.பியான சிவாஜிலிங்கம் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படமாட்டார்.'' என இந்திய அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்படி அந்தச் செய்தியில் "உதயன்', "சுடர் ஒளி' நாளி தழ்கள் உறுதியாகத் தகவல் வெளியிட்டிருந்தன.

பிரபாவின் தாயாருக்கு விஸா அனுமதி அவரின் கையில் வழங்கப்படுவதற்கு முன்னரே அது பற்றிய தகவலை இந் தியாவின் அதிகாரபூர்வ வட்டாரம் ஒன்றிடமிருந்து "உத யன்', "சுடர் ஒளி' பெற்றுக்கொள்ள முடிந்தது அதுவும் திட்டவட்டமான, உறுதியான செய்தியாக.

அப்படி அவருக்கு அனுமதி அளித்துவிட்டு, கடைசி நேரத்தில் அவரை விமானத்திலிருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பிய குளறுபடித்தனத்துக்கு இந்திய அதிகார வர்க்கத்துக்குள் இருக்கும் வழமையான தலைமைப் பிளவே அதிகாரப் போட்டியே காரணம் என்பது இப்போது உள் வீட்டுத் தகவலாகக் கிடைத்திருக்கின்றது.

இதில் பரிதாபத்துக்குரிய வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், புதுடில்லி வழங்கிய அனுமதிக்கு கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை போட்டு அதனைக் குழப்பியவர் தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் தமிழகத் தலைவர் ஒருவர் என்பதுதான்!

அந்தப் பின்னணி குறித்து பிறிதொரு ஆசிரிய தலையங் கப் பத்தியில் ஆராய்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.