Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா திருநாவற்குளம் கொள்ளை ‐ கொலையுடன் தொடர்புடைய தாஸ் கல்மடுக் குளத்தில் சடலமாக மீட்பு‐ கொள்ளை கொலைகள் தொடர்பாக தகவல் வழங்குமாறு பொலிசார் ஒலிபெருக்கியில் அறிவிப்பு

Featured Replies

வவுனியா திருநாவற்குளம் கொள்ளை ‐ கொலையுடன் தொடர்புடைய தாஸ் கல்மடுக் குளத்தில் சடலமாக மீட்பு‐ கொள்ளை கொலைகள் தொடர்பாக தகவல் வழங்குமாறு பொலிசார் ஒலிபெருக்கியில் அறிவிப்பு‐

27 April 10 09:30 am (BST)

வவுனியா திருநாவற்குளம் கொள்ளை மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான தாஸ் கல்மடுக் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவருடன் ஏற்கனவே மூன்று சந்தேகநபர்களையும் தாம் கைது செய்ததாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.

எனினும் இன்று ஆயுதம் பதுக்கி வைத்துள்ள இடம்மொன்றைக் காட்டுவதாக பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட இவர் பின்னர் குளமொன்றில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் குளத்தில் வீழ்ந்து மரணமாக ஒருதகவலும் தப்பி ஓட முற்பட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றன.

வவுனியா திருநாவற்குளம் பிரதேச வீடொன்றினுள் கடந்த 20ம் திகதி நுழைந்த தாஸ் உட்பட் கொள்ளையர்கள் அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டபோது கொள்ளையர்களின் கத்திக்குத்தில் 09வயது சிறுமியொருவர் கொலைசெய்யப்பட்டதுடன் சிறுமியின் தாயாரும், சகோதரனும் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தாஸ் அல்லது தாசன் என்பவர் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவருடன் கிரி குரு ஆகியவர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாரால் கைது செய்யப்பட்ட தாஸ் என்ற பிரதான சந்தேக நபர் தன்னை புளொட் உறுப்பினர் எனவும் புலனாய்வுத் துறையோடு தொடர்புடையவர் எனவும் திருநாவற்குளம் மற்றும் அண்மைய கிராமங்களில் தெரிவித்திருப்பதாகவும் இவர் புளொட் அமைப்பைச் சேர்தவர் எனவும் அங்குள்ள பலரும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியும் சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு அருகில் உள்ள புதல் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாக காவற்துறைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

திருநாவற்குளம் சிறுமி கொலை மற்றும் கொள்ளைச்சம்பவம் தொடர்பான செய்திக்கு புளொட் மறுப்பு‐ அறிக்கை இணைப்பு:‐

கடந்த 20ம் திகதி வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டபோது கொள்ளையர்களின் கத்திக்குத்தில் 09வயது சிறுமியொருவர் கொலைசெய்யப்பட்டதுடன் சிறுமியின் தாயாரும், சகோதரனும் காயமடைந்ததும் தெரிந்ததே. இது தொடர்பாக தாஸ் என்பவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இணையத்தளங்களில் மேற்படி நபர்கள் புளொட் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளமையானது புளொட் அமைப்பின் மீதான வழமையான தமது காழ்ப்புணர்வை காட்டும் உள்நோக்கங்கொண்ட உத்தி என்றே எமது அமைப்பு கருதுகின்றது. எனவே இது தொடர்பான உண்மைநிலையை தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு எமக்குள்ளதாக கருதுகின்றோம்.

மேற்குறித்த நபரான தாஸ் என்பவர் 2006ம் ஆண்டு நடுப்பகுதியில் புலிகளால் சுடப்பட்டு உயிர் தப்பி வந்து தனக்கு பாதுகாப்பு தருமாறு எம்மிடம் கேட்டு கோயில்குளம் பிரதேசத்தில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். அவ்வேளையில் அங்கு ஒருசில சமூகவிரோத செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொதுமக்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப்பெற்ற புகார்களையடுத்து நாம் அவரை 2008ம் ஆண்டு புரட்டாதி மாதம் வெளியேற்றியிருந்தோம். பின்னர் மேற்படி தாஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் கைவிட்டு விலகிச்சென்று வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக அவரது மனைவிமூலம் அறிந்தோம்.

இந்நிலையில் அவர் வேறுசில கிராமங்களில் தன்னைப் புளொட் உறுப்பினர் என அறிமுகப்படுத்தி வருவதை கேள்வியுற்ற நாம், இது தொடர்பாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தோம். அத்துடன் இவர் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது குறித்தும், தனது மனைவியுடன் தகராறு செய்து வீட்டில் இருந்த பொருட்களைக் கொள்ளையிட்டதுடன்; மனைவியையும் இரு பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றது தொடர்பாகவும் மனைவியூடாக ஏற்கனவே வவுனியா நீதிமன்ற நீதவானுக்கு எழுத்துமூலம் முறைப்பாடு செய்திருந்தோம்.

இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு, கிரி மற்றும் குரு என்பவர்கள் எமது அமைப்பில் எந்தச் சந்தர்ப்பத்திலும் இணைந்து செயற்பட்டிருக்கவில்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

அதேநேரம், வவுனியா திருநாவற்குளத்தில் இடம்பெற்ற மேற்படி கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து இவர்களைக் கைதுசெய்து பொலீசாரிடம் ஒப்படைப்பதற்கு நாங்கள் மேற்கொண்ட உடனடி கடும்பிரயத்தனம் திருநாவற்குளம் மக்கள் யாவரும் அறிந்த விடயமாகும்.

இணையத்தளங்களின் இவ்வாறான திட்டமிட்ட புனைவுகள் எமது கழகத்தை மல்லினப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கிறோம். எனினும் இவ்வாறான அவதூறு பிரச்சாரங்கள் எமது செயற்பாடுகளை எவ்விதத்திலும் பாதிக்காதென்பதையும் உண்மை நிலைமைகளை இங்குள்ள மக்கள் அறிவர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=23637&cat=1

  • தொடங்கியவர்

தொடர்பு பட்ட இன்னும் ஒரு தலைப்பு.

வவுனியாவில் திருநாவல் குளத்தில் 09 வயது சிறுமி கொலை

வவுனியா நிருபர்

புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010

வவுனியாவில் திருநாவல் குளத்தில் 09 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமி தங்கி இருந்த வீட்டிற்கு கொள்ளையிட சென்ற குழுவினர். கொள்ளையிட்ட பொருட்களுடன் செல்கையில் சாட்சியாக இருந்த அந்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு சென்றனர். கூடவே அவரது தந்தையார் காயங்களுடன் தப்பியுள்ளார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71158&st=0&p=582867&fromsearch=1&#entry582867

Edited by பொய்கை

சிங்கள புலநாய்வாளர்களோடு சேர்ந்து நிண்டு தமிழர்களின் விடுதலைக்கு பாதகமாக இருந்தவர்களை இலங்கை புலநாய்வு பிரிவு கழட்டி விட்டு கொண்டு இருக்கின்றது...

கருவேப்பிலையான அடிமட்டங்கள் தேவை இல்லை எண்று முடிவெடுத்து இப்போ போட்டும் தள்ளுறாங்கள்... போட்டதில் மகிழ்ச்சியே... இலங்கை படைகளோடு சேர்ந்து நிண்டவர்களுக்கு இது நல்ல படிப்பினையே... இவர்கள் இனி வெளிநாடுகளுக்கு ஓடிப்போய் நிண்டு கொள்ள வேண்டியதுதான்...

இரண்டு பக்கமும் இடிபட்ட மக்களுக்கு ஒருபக்கதில் இருந்து விடிவு கிடைப்பதை வரவேற்க்க வேண்டும்...

Edited by தயா

கடத்தல் மாமன்னன் டக்லஸ் கொடிகட்டி பறக்கிறார்!

இவர்களுன் சித்தார்த்தன் கும்பலும் கடத்தல், கொலை ஜனநாயகத்தில் உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.