Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலியில் 9 தமிழ் இளைஞர்கள் கைது – இரகசிய நடவடிக்கைக்காக இலங்கையின் பாதுகாப்பு அதிகாரியே தம்மை அனுப்பியதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவிப்பு

Featured Replies

Itali.Arested.Team.jpg

இரகசிய நடவடிக்கையொன்றுக்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பிரதான அதிகாரியொருவரே தம்மை ஜரோப்பாவுக்கு அனுப்பியதாக, அகதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இத்தாலிய காவற்துறையிரால் கைதுசெய்யப்பட்ட 9 தமிழர்கள் தெரிவித்துள்ளதாக ஜீ.ரீ.என்ற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இத்தாலிய காவற்துறையினர் இராஜதந்திர நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் இந்த சம்பவமானது அரசாங்க அதிகாரத் தரப்பு போலிக் கடவூச்சீட்டு மூலம் கருணாவை இங்கிலாந்து அனுப்பிய சம்பவத்தை நினைவூட்டுவதாக இத்தாலியில் இருந்து ஜீ.ரீ.என்ற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழுவின் தலைவரான அருமைநாதன் கிருஷ்ணஜெகன் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவராவார். இந்த குழுவில் கஜிதா ரஞ்சிநாதன் என்ற யுவதியும் இடம்பெற்றுள்ள தாக கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அருமைநாதன் கிருஷ்ணஜெகன் (22) ‐ சாவகச்சேரி.

பாக்குலலகிருஷ்ணா கோபாலகிருஷ்ணன் (20) சாவகச்சேரி.

கஜிதா ரஞ்சிதநாதன் (23) யாழப்பாணம்.

சிவநேஸ்வரன் கோகிலதாஸ் (31) காரைநகர்.

தர்மருகஜனி சிறிதரன் (26) யாழ்ப்பபாணம்.

ஸ்டெலின்ராசா துஷ்யந்தன் (29) யாழ்ப்பாணம்.

தர்மகுலசிங்கம் துஷ்யந்தன் (24) மாணிப்பாய்.

எட்வட் யேசுஜெய்சன் (27) மன்னார்‐ பேசாலை.

நந்தகுமார் உதயபுத்திரன் (25) உடுவில்

விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்கள் மத்தியில் இருந்த நிலையில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என கைதுசெய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் இருந்ததாகவும் இத்தாலியில் தம்மை சந்திக்கும் நபர் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தமக்கு அறிவிக்கவிருந்ததாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் இத்தாலிய காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக ஜீ.ரீ.என்ற்குத் தெரியவருகிறது.

அமைச்சர் ஒருவரின் சகாவே தம்மை கட்டுநாயக்க விமான நிலையம் வரை அழைத்துச் சென்றதாகவும் இவர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் "பாலர்வோ" நகரில் உள்ள தொடரூந்து நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட பின்னர், இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் கிருஷ்ணன் என்பவர் இவர்களை சந்தித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நமக்காக நாம் நிதி திரட்டல் நடவடிக்கையின் கீழ் இத்தாலியில் நிதித் திரட்டும் பொறுப்பு கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் பிரதானியொருவரின் அனுமதியுடன், கைதுசெய்யப்பட்டவர்கள் இத்தாலிக்கு அனுப்பட்டதாக கூறப்படும் தகவல் கொழும்பில் ஊடக மட்டங்களில் பரவியுள்ள நிலையில் தாம் முற்றாக அதனை நிராகரிப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார் என கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவரும் புனர்வாழவளிக்கப்படுவதற்காக ஒப்படைக்கப்படுவதாகவும் அவர்களை இராணுவத்தினர் தமது பொறுப்பில் வைத்துகொள்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளதாகவும் கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் விடுக்கப்பட்;;;;;டு வருவதாகவும் இவ்வாறு விடுக்கப்பட்டவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றிருக்கக்கூமோ என்பதை தான் அறியவில்லை எனவும் எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து தேடிபார்த்து பின்னர் பதிலளிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் சமரசிங்க மேலும் கூறியுள்ளதாகவும் எமது ஜீரீஎனின் புலநாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அமைச்சர் ஒருவரின் சகாவே தம்மை கட்டுநாயக்க விமான நிலையம் வரை அழைத்துச் சென்றதாகவும் இவர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் "பாலர்வோ" நகரில் உள்ள தொடரூந்து நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
:D:lol:

இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவரும் புனர்வாழவளிக்கப்படுவதற்காக ஒப்படைக்கப்படுவதாகவும் அவர்களை இராணுவத்தினர் தமது பொறுப்பில் வைத்துகொள்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளதாகவும் கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் விடுக்கப்பட்;;;;;டு வருவதாகவும் இவ்வாறு விடுக்கப்பட்டவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றிருக்கக்கூமோ என்பதை தான் அறியவில்லை எனவும் எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து தேடிபார்த்து பின்னர் பதிலளிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் சமரசிங்க மேலும் கூறியுள்ளதாகவும் எமது ஜீரீஎனின் புலநாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

GTN, சிங்கள அரசுக்கு சார்பான கருத்துக்களை, சிங்கள இராணுவத்தின் பிரச்சாரங்களை ஒருதலைப்பச்சமாக பிரசுரித்து, அதை தமது புலனாய்வு செய்தியாளர் செய்திகளாக கூறி, யாராவது தமிழின விரோத சக்திகளின் கைக்கூலிகளாக இயங்குகின்றனரா என்ற சந்தேகத்தை போக்க வேண்டும். சிங்கள இராணுவத்தின் பிரச்சாரகர் கூறியது பொய் என்பது ஏற்கனவே யாழ் களத்தில் பதியப்பட்டிருந்தது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவரும் புனர்வாழவளிக்கப்படுவதற்காக ஒப்படைக்கப்படுவதாகவும் அவர்களை இராணுவத்தினர் தமது பொறுப்பில் வைத்துகொள்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளதாகவும் கொழும்பில் இருந்து ஜீ.ரீ.என் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறு விடுக்கப்பட்டவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றிருக்கக்கூமோ என்பதை தான் அறியவில்லை எனவும் எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து தேடிபார்த்து பின்னர் பதிலளிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் சமரசிங்க மேலும் கூறியுள்ளதாகவும் எமது ஜீரீஎனின் புலநாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71648

இது சர்வதேசத்தை தொடர்ச்சியாக ஏமாற்றும் சிங்களவனின் சுத்த பொய். இதற்கு துணை போவது இதைக் கண்டு கொள்ளலாமல் இருக்கும் சகல தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் தான்.

புனர்வாழ்வு முகாம்கள் முழுக்க முழுக்க சிங்கள பௌத்த இராணுவ பயங்கரவாதிகளால் தான் நடத்தப்படுகிறது. பெண்கள் முகாமிலும் சகல சர்வதேச நியமங்களுக்கு மாறாக பெருமளவு ஆண் சிங்கள பௌத்த இராணுவ பயங்கரவாதிகள் தான் உள்ளனர்.

"இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவரும் புனர்வாழவளிக்கப்படுவதற்காக ஒப்படைக்கப்படுவதாகவும் அவர்களை இராணுவத்தினர் தமது பொறுப்பில் வைத்துகொள்வதில்லை" என்பது சர்வதேசத்தை கவரும் அப்பட்டமான பொய். சகல புனர்வாழ்வு முகாம்களுக்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஏனைய ஐ. நா. பிரதிநிதிகள் அடிக்கடி தாம் விரும்பிய நேரத்தில் சென்று வந்தால் இந்த உண்மை தெரியும்.

இப்பிடியே சொல்லி சொல்லித் தான் சிங்கள பயங்கரவாத அரசு மேற்குலகை ஏமாற்றுகிறது. மேற்குலகமும் ஏமாறுகிறது. இந்த பொய்களை தகர்க்க வேண்டியது நா. க. த. ஈ. அ. உறுப்பினர்களின் தலையாய பணிகளில் ஒன்று.

வெறுமனே தேர்தலை வைத்து, இத்தனை வீதத்தால் வென்றோம், பேச்சுவார்த்தை என்ற போக்கில் இறுமாப்பு அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருந்தால், சிங்கள பயங்கரவாத அரசு தமிழ் மக்களை அழித்துவிடும்.

கடந்தகால தவறுகளில் மிக பெரியது தமிழ் மக்கள் பிரச்சனைகளை சர்வதேச மட்டத்தில் ஆதாரங்களுடன் கொண்டு செல்லாததும், சிங்கள பயங்கரவாத அரசின் படுகொலைகளை, போலித்தனங்களை, பொய்களை, .... ஆதாரங்களுடன் தொடர்ந்தும் தகர்க்காதது ஆகும். இதற்காக ஒரு குழு பாதுகாப்பான வெளிநாடொன்றில் இயங்கவேண்டும்.

மிக அவசியமான கருத்து. நன்றி ஆசான்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71648

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.