Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த அரசிற்கு தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் - வைத்தியர் மூர்த்தி

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலிலிருந்து விலகிக் கொண்டுள்ள போதிலும் அதன் செயற்பாட்டிற்கும் நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிட்டு பின் அதிலிருந்து விலகிக் கொண்டவரும் வெண்புறா அமைப்பின் தலைவருமான திரு. எம்.எஸ் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தமிழ் ஸ்டார் வானொலிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேட்டியின் விபரம் வருமாறு:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டதற்கான காரணங்களைக் கூறுவீர்களா?

மீண்டும் ஒரு முறை இந்தத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்படக் கூடிய பணச் செலவைக் கருத்தில் கொண்டும் இதன் காரணமாக மக்கள் மத்தியில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து எழக் கூடிய அவநம்பிக்கையைத் தவிர்ப்பதற்காகவும் இந்த மீள் தேர்தல் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தக் கூடிய பாதகமான கண்ணோட்டத்தையும் தவிர்ப்பதற்காகவே இந்தத் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வதென நான் தீர்மானித்தேன்.

இந்தத் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றது உண்மையா?

அப்படித்தான் தேர்தல் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இது குறித்து தனிப்பிட்ட முறையில் என்னால் எதுவும் தெரிவிக்க முடியவில்லை.

நாடு கடந்த அரசு வெற்றிகரமாகச் செயற்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்ற நிலையில் சிலர் குழுக்களாகப் பிரிவது குறித்த உங்கள் கருத்து…

அப்படிக் குழுக்களாகச் செயல்படுகிறார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனாலும் இவ்வாறு குழுவாதத்தைத் தவிர்த்து அனைவரும் ஒன்று சேர்ந்து இதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கருத்து

நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான சகல பணிகளிலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ள இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெற்றிக்கு எனது பங்களிப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் சிறிலங்கா அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் உங்கள் பதவி விலகலுக்குக் காரணமாக அமைந்ததா?

நிச்சயமாக இல்லை. என்னுடைய பெயர் 20 வருடங்களுக்கு முன்பே சிறிலங்கா அரசாங்கத்தால் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டு விட்டது.

இது போன்ற அச்சுறுத்தல்களுக்காக என்னுடைய தாயகம் சார்ந்த பணிகளிலிருந்து நான் பின்வாங்கிக் கொள்ளப் போவதில்லை.

நாடு கடந்த அரசாங்கத்தின் முக்கிய பணிகளாக எவை இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

முதலில் சகல எதிர்ப்புகள் சிரமங்களையும் கடந்து நாடு கடந்த அரசாங்கம் அமைய வேண்டும். அதன் பின்னர் தான் அதன் செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.

தேர்தலின் போட்டியிடும் போது இந்த அமைப்பினூடாக எத்தகைய பணிகளை முன்னெடுக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?

நான் தொடர்ந்து முன்னெடுத்து வரும் மக்களின் புனர்வாழ்வுப் பணிகளை முன்னெடுப்பதே என்னுடைய எண்ணம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ராஜதந்திர ரீதியாக சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை அணுகி எமது தரப்பு நியாயங்களை விளக்க வேண்டிய தேவையிருக்கும் போது கொடி தொடர்பான சர்ச்சை கிளப்பப்படுவது குறித்து…

இதை யார் கிளப்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் இத ஒரு றாஜதந்திர ரீதியான அணுகுமுறையாக எனக்குப் படவில்லை. இது குறித்து உரியவர்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள் என எண்ணுகிறேன்

நன்றி : தமிழ் ஸ்ரார்

SOURCE: http://www.eelamweb.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறாவுக்கு வேலயில்லாமல் செய்துபோட்டினம்....ஏதாவது செய்யதானே வேணும். :rolleyes:

புறாவுக்கு வேலயில்லாமல் செய்துபோட்டினம்....ஏதாவது செய்யதானே வேணும். :lol:

அந்தாள் வருமானத்துக்கு வளியில்லாமல் இப்படி இலங்கை தூதரகம், மக்கள் தொண்டு எண்டு உம்மை மாதிரி தானோ இருக்குது....?? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.