Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிராக போராட்டம் தொடரும் – நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிராக போராட்டம் தொடரும் – நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் அறிவிப்பு

தமிழர்களின் உணர்வைப்புரிந்து iifaவிலிருந்து நடிகர் அமிதாப்பச்சன் விலகியுள்ளார். அவரது இடத்தில் நடிகர் சல்மான்கான் இப்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ளார். நடிகர் சல்மான்கானைக்கண்டித்தும் போராட்டங்கள் தொடருமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கிய பங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழர்களின்இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம் தமிழர் இயக்கத்தினர் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன் சில வாரங்களுக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அமிதாப் அவர்களைச் சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு சாதகமாக கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும் படி வற்புறுத்தியும் நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்‌ஷா வீட்டின் முன் நேற்று காலை முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டத்தின் விளைவாக அது குறித்து பரீசீலித்த அமிதாப் iifa விருது வழங்கும் கமிட்டியில் இருந்து,அதிலிருந்து விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று புதன் கிழமை iifa விருது வழங்கும் கமிட்டியானது அமிதாப் அவர்களை தூதர் பதவியில் இருந்து விடுவித்தது.ஐஸ்வர்யாராய்,அபிஷேக் பச்சன் ஆகியோரும் விலகிக்கொண்டனர்.நடிகர் சல்மான் கான் அவர்களை புதிய தூதராக இன்று காலை நியமனம் செய்துள்ளது.லாரா தத்தா,விவேக் ஓபராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து இன்று கருத்து தெரிவித்த நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான்,தமிழர்களின் ஒப்பாரியும் மரண ஓலமும் ஆட்சியில் இருக்கும் இந்தியர்களுக்கும் அவர்களை அண்டி இருக்கும் திராவிடர்களுக்கும்,சில தமிழர்களுக்கும் புரியாத நிலையில் எங்கோ உத்திரப்பிரதேசத்தில் பிறந்த நடிகர் அமிதாப் அவர்களுக்கு புரிந்திருக்கின்றது.அதனை அவர் உணர்ந்து கொண்டு கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்ல மறுத்திருக்கின்றார்.அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனி புதிதாகப்பொறுப்பேற்றுள்ள சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிரான போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்..

http://meenakam.com/?p=16044

கொழும்பில் நடந்த கூத்து....

610x.jpg

610x.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மும்பேய இயங்காம நிப்பாட்ட போறாராம்... :o

முட்டாள் தனமா கருத்து எழுதாத தல. தமிழர்கள் முப்பத்தி ஐந்து வருடம் முன்பே மும்பையை ஆட்டி படைத்தவர்கள் . தமிழர் வசிக்கும் இடங்கள் பெரும்பாலும் முக்கிய இணைப்புகளும் சந்திப்புகளும் இருக்கும் இடம் . ஒரு இடம் போக்குவரத்து ஸ்தம்பித்தால் மொத்த மும்பைக்கே போக்குவரத்து பிரச்னை ஆகும் . மேலும் காசுக்காக இல்லாமல் உண்மையான தமிழ் இன உணர்வு உள்ளவர்கள் நிரம்பிய இடம் மும்பை . தமிழனை அடித்தார்கள் என்ற பழைய பாட்டை பாடும் கேனைகளா இன்று சிவா சேனாவின் முக்கிய பலங்களில் ஒன்று தமிழன் ஓட்டு தான் . மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு தமிழனை சட்ட மன்றத்திற்கு நிறுத்திய ஒரே கட்சி சிவா சேனா தான் . பழங்கதையை விட்டு விட்டு நிகழ காலத்திற்கு வரவும் . அமிதாப் என்ன தமிழ் நாட்டுகாரனுக்கும் உமக்கும் பயந்துட்டான்னு நினைத்தீராக்கும். அவர் மதித்தது மும்பை தமிழனை .

100 சதவீதம் உண்மை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.