Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழலுக்கிறைத்த நீராகுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sat, May 15 2010 | Published in கட்டுரைகள்

விழலுக்கிறைத்த நீராகுமா?

By: admin

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதியில் புனர் வாழ்வு, மீள்கட்டுமானப் பணிகளுக்காக இலங்கைக்கு இந்தியா தெடர்ந்து நிதி உதவி வழங்கும் என்று இந் திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரி வித்துள்ளார்.

2009 மே 18இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த பின்பு, இலங்கைக்கு இந்தியா குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதியின் புனர்வாழ்வு, மீள் கட்டுமானப் பணி களுக்கு உதவி செய்து வருகிறது. இவற்றுள் கடந்த வருடம் பிரதமர் மன்மோகன் சிங்கினால் அறிவிக் கப்பட்ட 500கோடி ரூபா உதவி, வடபகுதிக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கவும் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்குமான 41 கோடியே 60 லட்சம் டொலர்கள் உதவி மற்றும் கடந்த வருடம் ஒக் ரோபரில் வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகத்துக்காக வழங்கப்பட்ட 10கோடி டொலர்கள் உதவி என்று இலங்கைக்கு இந் திய உதவிகள் தாராளமாகக் கிடைத்து வருகின்றன.

அத்துடன் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, காங் கேசன்துறை துறைமுக அபிவிருத்தி ஆகியவற்றுக் கும் இந்திய உதவி கிடைத்துள்ளது. இந்தியாவின் உதவிகள் வரவேற்கத்தக்கவைதான். ஆனால் இந்த உதவிகள் இலங்கையில் நிரந்தர சமா தானத்தை ஏற்படுத்துவதற்கு எந்த விதத்திலாவது உதவுமா என்பதே இன்றைய கேள்வி ஆகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா முழு அளவில் செயற்பட்டது.

இந்தியாவின் உதவி கிடைத்திருக்கா விடில் விடுதலைப் புலிகளை இலங்கையினால் முற் றாக அழித்திருக்க முடியாது. தற்பொழுது போர் முடி வுக்கு வந்து எதிர்வரும் 18ஆம் திகதியுடன் ஒருவருட மாகிறது. இந்தப் போருக்குக் காரணமாக இருந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்க வில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்பு பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்றார் ஜனாதிபதி. பின்பு பொதுத் தேர் தலுக்குப் பின்பு தெரிவு செய்யப்படும் தமிழ் எம்.பிக் களை அழைத்து பேசித் தீர்வு காண்போம் என்றார். பின்பு சார்க் மாநாட்டுக்குப் பின்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறப்பட்டது.

தற்போது சார்க் மாநாடும் முடிவடைந்து விட்டது. இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை ஆரம் பிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக அதனைப் பல வீனப்படுத்தும் முயற்சிகளிலேயே அரசு கவனம் செலுத்தி வருகிறது. மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கும் 13 ஆவது அரசமைப் புத் திருத்தத்தை முழு அளவில் அமுல் செய்வது, அதற்கும் மேலாகச் சென்று பிரச்சினைக்குத் தீர்வு காண் பது (13+) எல்லாம் தற்போது அடிபட்டுப் போய்விட் டது.

கடந்த வருடம் யுத்தம் முடிவடைந்த பின்பு இலங் கைத் தமிழர் பிரச்சினைக்கு 13ஆவது அரசமைப்புத் திருத்தம் மூலமான தீர்வு குறித்து இந்தியா தீவிரமாகச் சிந்தித்து வந்தது. அதற்கு மேலாகவும் சென்று தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று இந்தியா கூறிவந்தது. ஆனால் இந்தியாவின் போக்கு தற்போது மாறி வருகிறது. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கைக்கு உதவி செய்வதில் முனைப்புக் காட்டுகிறதே தவிர, தமிழ் மக்களின் அபி லாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியா நாட்டம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

இலங்கை என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளும் நிலை யில்தான் இந்தியா இன்றும் இருக்கிறது. இலங்கைக்கு உதவிகளை வழங்குவதால் மட்டும் சமாதானத்தைக் கட்டி எழுப்பிவிட முடியாது. இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்தியா வின் பங்களிப்பு தேவை என்பதை இந்தியா புரிந்து கொண்டு செயற்படுவது அவசியம். இந்தியா தற்பொழுது வழங்கிவரும் உதவிகள் தமிழ் மக்கள் மனங்களை வெல்லவோ அல்லது இலங் கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவோ உத வப்போவதில்லை.

சமாதானம் இல்லாத இடத்தில் ஏற் படுத்தப்படும் அபிவிருத்திகள் விழலுக்கிறைத்த நீராகிவிடும் என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். இந்த யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள மனமில்லா மல் இந்தியா தனது பிராந்திய மேலாதிக்கத்தில் மட் டும் அதீத அக்கறை காட்டுவது ஈழத்தமிழரின் விவ காரத்தில் அதன் அசமந்தப் போக்கையே காட்டுகி றது!

உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றுபட்ட வடக்க கிழக்கே கேள்விக்குறி.... 87 தீர்வு வந்தாலே பெரிய விசயம். :)

  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனத்துக்கு பைத்தியம் பிடிச்சுப்போட்டுது. ஏனெண்டால,; சரியா யோசிக்கத்தொடங்கிற்றிது.

Sat, May 15 2010 | Published in கட்டுரைகள்

விழலுக்கிறைத்த நீராகுமா?

சமாதானம் இல்லாத இடத்தில் ஏற்படுத்தப்படும் அபிவிருத்திகள் விழலுக்கிறைத்த நீராகிவிடும் என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். இந்த யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள மனமில்லா மல் இந்தியா தனது பிராந்திய மேலாதிக்கத்தில் மட் டும் அதீத அக்கறை காட்டுவது ஈழத்தமிழரின் விவ காரத்தில் அதன் அசமந்தப் போக்கையே காட்டுகி றது!

உதயன்

வட இந்தியன், அவன் வால்கள் ... = பயங்கரவாதிகள், தமிழின படுகொலையாளிகள், தமிழின விரோதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.