Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்ட தமிழர்கள்: இறந்துவிட்டனரா அல்லது தொலைந்து போயினரா?

Featured Replies

இன்றைய சிறிலங்கா மோதல்கள் இடம்பெற்ற, வன்முறை நிரம்பிய தனது கடந்தகாலத்தினை மறப்பதற்கான ஆவலுடன்தான் உள்ளது. ஆனால் காணாமற்போன பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களது விதிதான் என்னவென இதுவரை தெரியவில்லை.

அதேநேரம், பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தினது தடுப்பு முகாம்களில் தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு lakbimanews ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் Ranga Jayasuriya எழுதியுள்ளார். 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

Ranga Jayasuriya தொடர்ந்து எழுதியுள்ளதாவது:

போர் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துவிட்டது.

இந்த நிலையில் தங்களது அன்புக்குரியவர்கள் என்றோ ஒருநாள் இலங்கைத்தீவினது ஏதாவதொரு பகுதியிலுள்ள தடுப்பு முகாமிலிருந்து வெளியே வருவார்கள் என பெற்றோர்களும் உறவினர்களும் தளர்ந்துபோன நம்பிக்கையுடன் உள்ளனர்.

இருந்தபோதிலும், மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் உண்மையில் எத்தனைபேர் காணாமற்போனார்கள் என்பது புதிராகவே உள்ளது.

30 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரில் எத்தனை நூறு பேர் அல்லது எத்தனை ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமற் போனார்கள் என்பது எவருக்கும் தெரியாது.

போரின் இறுதி நான்கு ஆண்டுகளிலேயே அதிகம் பேர் காணாமற் போயிருக்கிறார்கள். அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் காணாமற்போனவர்களின் தொகை மிகவும் குறைவானதே என்றும் அது ஒரு பெரும் பிரச்சினையல்ல என்றும் வாதிடுகிறது.

காணாமற்போனர்வகள் விடயத்தில் அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்படுவது நிலைமையினை இன்னமும் மோசமாக்கியிருக்கிறது.

சிறிலங்காவினது மனித உரிமை நிலைமைகள், போரின் பின்னர் நாட்டினைக் கட்டியெழுப்பும் முனைப்புக்களில் பெரும் தடங்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன், தவறிழைத்தவர்கள் தண்டிக்காமல் விடப்படும் கலாச்சாரம் தொடர்வதற்கும் இது வழிவகுக்கிறது.

காணாமற் போனவர்களது தொகையினைக் கணக்கெடுக்கும் எந்த முனைப்புக்களிலும் அரசாங்கம் இதுவரை இறங்கவில்லை. அத்துடன் போரின் இறுதிக்கட்டத்தின் போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பொதுமக்களின் விபரங்களைத் திரட்டுவதிலும் அரசாங்கம் தயக்கத்துடனேயே இருக்கிறது.

இதன் விளைவாக மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடுபவர்களும் சரியான தொகை தெரியாது காணமற் போனவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக உத்தேசத் தொகையினையே வெளியிடுகிறார்கள்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் போரின்போது காணாமற்போன 15,000க்கும் அதிகமான தமிழ் ஆண் பெண் இளைஞர்களைத் தேடிக்கண்டுபிடிப்பதற்காக ஜே.வி.பி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் மாத்திரம் 5000 இளைஞர்கள் காணாமற் போயுள்ளதாக அவர்களது பெற்றோர்கள் முறையிட்டிருக்கிறார்கள் என இவர் எங்களிடம் தெரிவித்தார்.

'யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15,000 இளைஞர்கள் காணாமற் போயிருக்கிறார்கள். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது' என்கிறார் அவர்.

காணாமற்போனவர்கள் தொடர்பான தகவல்கள் தெளிவாக இல்லாத போதும், காணாமற்போனவர்கள் பிரச்சினை பெரும் பூதாகரமானதொரு பிரச்சினை என்பது தெளிவாகத் தெரிகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 140 மாணவர்கள் காணாமற்போயிருப்பதாக அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு சுற்றுப்பயணம் செய்த பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டமைப்பின் தலைவர் உப்புல் பிரேமரத்தின கூறுகிறார்.

500 குடும்பங்கள் வாழ்ந்துவந்த மன்னார் மாவட்டத்தின் பேசாலை என்ற கரையோரக் கிராமத்தில் 22 பேர் காணாமற்போயிருக்கிறார்கள்.

ஆனால் இதுபோன்ற தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனக்கூறி மறுத்துவரும் இந்த அரசாங்கம் காணாமற்போனவர்கள் தொடர்பான தனது தொகையினை வெளியிட மறுக்கும் அதேநேரம் காணாமற்போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பொருத்தமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதற்குத் தயங்குகிறது.

காணாமற்போன இளைஞர்களது பெற்றோர்களும் சிறிலங்காவினது பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டமைப்பினரும் தடுப்பு முகாம்களுக்குச் சென்று காணாமற்போனவர்களைத் தேடவுள்ளார்கள்.

அவர்கள் தமது முயற்சியில் இதுவரை காணாமல்போயிருந்த இரு இளைஞர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்ததன்மூலம் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

புவியியல் வகுப்பு முடிந்து வெளியேறிக்கொண்டிருக்கும்போது பல்கலைக்கழக வளாகத்தினுள் வைத்துக் கைதுசெய்யப்பட்ட பெரதெனியா பல்பலைக்கழக மாணவியான இராசையா துவாரகா பூசா தடுப்பு முகாமில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதுவரை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் அவரது பெற்றோர்கள் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையிலேயே இருந்தனர்.

கனேடிய தமிழரான றோய் மனோஜ் குமாரும் பூசாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர் வெளியுலகுடன் தொடர்புகொள்வதற்கு அனுமதிக்கப்படாத நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோர்களும் உறவுகளும் தமது அன்புக்குரியவர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் என எதுவும் தெரியாத நிலையிலுள்ளனர். சிலவேளைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சகோதரர்களுடன்கூட தொடர்புகொள்ள முடியாத நிலை இதற்குக் காரணமாகலாம்.

அநேகமான உறவினர்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட 'நலன்புரி' நிலையங்களிலிருந்து சில மாதங்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தகவல்களில் ஏற்பட்ட இடைவெளிக்கு எந்தவொரு தொடர்பாடல் வசதிகளுமில்லாமையே காரணம் என காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாளர்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்த விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைதுசெய்யப்படால் உறவுகளுக்குத் தெரியப்படுத்தப்படுகின்றபோதிலும் பாதுகாப்புப் படையின் ஏனைய புலனாய்வுப் பிரிவுகள் இந்த நடைமுறையை உரிய முறையில் மேற்கொள்வதில்லை என சிலர் இரகசியமாகத் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளத் தவறினால் அது ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். உப்புல் பிறேமரட்ண காணாமல்போன ஒரு தமிழ் இளைஞனின் மனைவிக்கு நேர்ந்த அவலத்தை நினைவுகூர்ந்தார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவராகத் தன்னைக் காட்டிக்கொண்ட ஒருவர் தனது கணவரை விடுவிப்பதற்குப் பணம் கேட்டதாக பேசாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.

தனது கணவரை உயிருடன் காணவேண்டும் என்ற ஆர்வத்தில் தனது தோட்டை அடகுவைத்து அவருக்குப் பணம் கொடுத்திருக்கிறார். மறுநாள், தனது கணவருக்காக மதிய உணவை சமைத்துவிட்டு அவன் வருகைக்காகக் காத்திருந்திருக்கிறாள் இப்பெண்.

அவளது கணவனோ, அவரை விடுதலை செய்வதாகக் கூறி ஏமாற்றிய அந்த நபரோ ஒருபோதும் வரவேயில்லை.

அநேகமான இளைஞர்கள் கடந்த 4 வருடங்களினுள்ளேயே காணாமல்போயுள்ளபோதிலும் தாமும் அரச படைகளால் அல்லது அவற்றுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் குழுக்களால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர்களின் பெற்றோர்கள் எங்கும் முறைப்பாடு செய்யவில்லை.

ஆனால், தற்போது கடத்தல்காரர்களை அடையாளங் காட்டுவதற்கும் எப்போது, எங்கே வைத்து அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்று கூறுவதற்கும் சிலர் தயாராக உள்ளனர்.

சில உறவுகள் தமது அன்புக்குரியவர்கள் தொடர்பில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிப்பது தொடர்பிலும் சிந்தித்து வருகிறார்கள்.

தடுப்பு காவலில் உள்ளவர்களின் சிறப்பு தேவைகள் கவனிக்கப்படவில்லை:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த 153 பேர் பம்பைமடு தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் 43 பல்கலைக்கழக மாணவியர் விடுவிக்கப்பட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்கள்.

இவர்கள் விடுவிக்கப்பட்டபோதும் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என அங்கு சுற்றுப்பயணம் செய்த உப்பில் பிரேமரத்தின கூறுகிறார். இந்த 43 மாணவர்களில் 12 பேர் உடலுறுப்பை இழந்தவர்கள்.

எவ்வாறிருப்பினும் இவர்களது சிறப்பு தேவைகள் கவனிக்கப்படாமலேயே உள்ளன என அவர் குற்றம் சுமத்துகிறார். புனர்வாழ்வு முகாம்கள் எனக் கூறப்படும் தடுப்பு முகாம்களில் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தடுப்பில் இருந்தபோது என்னவெல்லாம் கற்பிக்கப்பட்டது என அவர்களிடம் கேட்டபோது, சிரட்டையிலிருந்து கைப்பணிப்பொருட்களைத் தயாரிப்பு எவ்வாறு என்றே கற்றுத்தரப்பட்டது என்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த புனனேந்திரன் தஸ்மிதா க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையினைப் பெற்றிருந்ததோடு, பொறியியல் பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால், இவர் இன்னமும் பம்மைமடுத் தடுப்பு முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

களனி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருந்த பீற்றர் சற்குணராசன் அனுசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் இனரீதியான பாகுபாடு மீண்டும் மெதுவாகத் தலைதூக்குகிறது.

http://www.puthinappalakai.com/view.php?20100601101220

பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் இனரீதியான பாகுபாடு மீண்டும் மெதுவாகத் தலைதூக்குகிறது.

... மீண்டுமா? ..... நகைச்சுவை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.