Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐஃபா திரைப்பட விழா முழு தோல்வி நிலையில்.....

Featured Replies

610x.jpg

தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகமும்(IIFA), இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (FICCI)யும் இணைந்து நடத்தில் ஐஃபா விருது வழங்கு விழாவும், அதனைத் தொடர்ந்து நடந்த வணிக மாநாடும் பெரும் தோல்வியில் முடிந்தது.

இந்தி நடிகர்களில் பெரும்பாலோர் இந்த விழாவைப் புறக்கணித்தது மட்டுமின்றி, இந்த விழாவில் ஐஃபாவின் தூதராக நியமிக்கப்பட்ட சல்மான் கானும், விவேக் ஓபராயும் தங்களுடைய தனிப்பட்ட பகையை அங்கே வெளிப்படுத்தி முதல் நாள் கூத்தைக் கெடுத்தனர். இதனால் ஐஃபா விருது வழங்கு விழா முதல் நாளே களையற்றுப் போனது.

அடுத்த நாள் நடந்த உலக வர்த்தக மாநாடும் பெரும் நகைச்சுவையாகியுள்ளது. இந்த மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக வரவேண்டிய அதிபர் ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி இரண்டு மணி நேரம் தாமதமாக விழாவிற்கு வந்துள்ளார். இதனால் கடுப்பாகிப்போன இந்திய வணிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படையாகவே காட்டினராம். அதுமட்டுமல்ல, விழா இரண்டு மணி நேரம் தாமதமாக துவங்கியதால் அன்று மாலையே கொழும்புவிலிருந்து இந்தியா திரும்ப இருந்த வணிகர்கள் பலர் விமானத்தை இழந்தனர்.

இந்த விழாவின் மூலம் இலங்கையை மிகச் சிறந்த சுற்றுலா நாடாக காட்ட அந்நாட்டு அரசு மேற்கொண்ட முயற்சிதான் படுமோசமான தோல்வியானது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சல்மான் கான் கலந்துகொண்ட ஆடை அலங்கார அணிவகுப்புதான் உற்சாகமில்லாமல் போனதாம். சல்மான் கான் பெரிய ஜோக்கரானது தான் பெரிய ஹைலைட் என்று கூறப்படுகிறது.

x610.jpg

எல்லாவற்றிற்கும் மேலாக நேற்று சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கும், இந்தி நடிகர்கள் அணிக்கும் இடையே ஏற்பாடான கிரிக்கெட் போட்டிதான் பெரும் கேலிக்கூத்தாக இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன. துவக்க ஆட்டக்காரராக ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச இறங்கியதைக் கண்டு ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பினராம்.

மொத்தத்தில் சிறிலங்க அரசு 97 மில்லியன் ரூபாய் செலவிலும், ஃபிக்கியின் ஆதரவுடனும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஜஃபா விழா பெரும் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.

இந்த விழாவை ஏற்பாடு செய்த விஸ்கிராஃப்ட் இண்டர்நேஷணல் சிக்கலுக்குள்ளாகியுள்ளது என்று பேசப்படுகிறது. அந்த ஆண்டு ஐஃபா விழா நடக்குமா, அதனை விஸ்கிராஃப்ட் ஏற்பாடு செய்ய இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளதாம்.

http://news.yahoo.com/s/afp/20100605/ennew_afp/entertainmentsrilankaindiabollywoodawardsopen_20100605180328

Edited by தராக்கி

தராக்கி, யாழ் கள விதிகளின்படி நீங்கள் இணைத்த செய்தியின் மூலம் குறிப்பிடப்பட வேண்டும்.

Say thank you to FEFSI from Tamil Diaspora

We are proud of FEFSI for the strong and brave action on boycotting IFFA in Sri Lanka.

Please thank them by email and urge them to send share our letter with all affiliated organisation come under FEFSI.

fefsiindia@gmail.com.

Please mail them!

தென்னிந்திய திரையுலகத்தினருக்கும் அமிதாப்பச்சன் உட்பட்ட ஹிந்திப்பட பிரபலங்கட்கும் கனடிய தமிழர் பேரவை பாராட்டு

[ சனிக்கிழமை, 05 யூன் 2010, 01:19.18 PM GMT +05:30 ]

கனடாவில் வாழும் மூன்று இலட்சம் கனடிய தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடியத் தமிழர் பேரவை இலங்கையில் நடைபெறும் ஐஃபா திரைப்பட விழாவை பகிஷ்கரித்தமைக்காக தென்னிந்திய தமிழ்த்திரை உலகத்தினருக்கும் அமிதாப்பச்சன் குடும்பம் உட்பல பல பாலிவுட் திரை உலகத்தினருக்கும் இத்தால் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

ஈழத் தமிழினத்தை காலம் காலமாக இரண்டாந்தரப் பிரசைகளாக நடாத்தி பல ஆண்டு காலமாக அவர்களுக்கு சொல்லொண்ணாத் துயரங்களை இழைத்து இறுதியில் கடந்த ஆண்டு ஒட்டு மொத்த ஈழத் தமிழ் இனத்தின் வாழ்விருப்பினைக் கேள்விக் குறியாக்கி மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை ஊனமாக்கி அதில் 40,000 ற்கும் மேற்பட்ட மக்களின் உயிரையும் பறித்து அழித்தொழித்த இலங்கை அரசு இன்று சர்வதேச சமூகத்தினால் சர்வதேச அரங்கிலே போர்க் குற்றவாளி என குற்றஞ்சாட்டப்பட்டு யுத்தகால போர்க்குற்ற விசாரணையினை எதிர்நோக்க வேண்டும் என்று சொல்லப்படுவது யாவருமறிந்ததே.

ஈழத் தமிழரின் இரத்தத்தினால் தோய்ந்த சிங்கள ஏகாதிபத்தியத்தின் கறை படிந்த வரலாற்றினை மறைப்பதற்கு இலங்கை அரசினர் இத் திரைப்பட விழாவினைப் பயன்படுத்துவது அனைவரும் அறிந்தவிடயம்.

இந்த இலங்கை அரசின் வஞ்சக நோக்கினை நன்கு அறிந்த தென்னிந்திய தமிழ்த் திரையுலகமும் அமிதப் பச்சன் உட்பட பல இந்திப் பட பிரபலங்களும் இத் திரைப்பட விழாவினைப் பகிஷ்கரித்திருப்பது அவர்கள் தமிழ் மக்கள் மீது கொண்ட அபிமானத்தினையும் கரிசனையினையும் மட்டுமல்லாது மனித நேயத்தின் மீது அவர்களுக்குள்ள அசைக்கமுடியாத உறுதியான நம்பிக்கையினையும் காட்டுவதாக அமைகின்றது.

இதற்கு புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் இந்திய தென்னிந்தியத் திரைப்படத் துறையினருக்கும் அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கும் தங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

கனடியத் தமிழர் பேரவை

http://www.tamilwin.com/view.php?2adi89ttb2ecfDpiUe0ec4Cojt20cd35ZLu62cd336IP524b40tVQ6C4b4eQUG1fcd0ebZF2gYd0

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.