Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கில் நிரந்தர இராணுவக் குடியிருப்புக்கள் - தளபதி ஜகத் ஜயசூரியா மகாநாயக்கர்களிடம் எடுத்துரைப்பு

Featured Replies

கண்டி,ஜூன்27

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிரந்தர இராணுவக் குடி யிருப்புக்களை நிறுவவும், அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் படையினருக்கு நிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்கவும், அந்தந் தப் பகுதிகளில் அவர்கள் நெல் உற்பத்தி மற்றும் விவசாயம் செய்யவும் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

இவ்வாறு தகவல் வெளியிட்டிருக்கிறார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியா.

பொசன் விழாவை முன்னிட்டு இராணுவத் தளபதி மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக் கர்களைச் சந்தித்து அவர்களிடம் ஆசிபெற்றார். அதன்பின்னரான கலந்துரையாடல்களிலேயே மேற்கண்ட புதிய தகவல்களை அவர்களிடம் எடுத்துக்கூறினார் பொசன் பண்டிகையை முன்னிட்டு இரா ணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மல்வத்த மற்றும் அஸ்கி ரிய பீடங்களுக்குச் சென்று விசேட பூசை வழிபாடுகளில் பங்குபற்றினார்.

முதலில் தலதா மாளிகையில் புனித சின்னத்தைத் தரிசித்து விசேட பூசை களில் பங்குபற்றினார்.

முதலில் அஸ்கிரிய மகாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்திர கித்த மகாநாயக்க தேரரையும், அதன் பின் னர் மல்வத்த மகாநாயக்க தேரர் அதி வண. திபொட்டுவேவ ஸ்ரீ சுமங்கல மகா நாயக் கரையும் தனித்தனியே சந்தித்து ஆசிபெற் றார்.

அப்போது இராணுவத் தளபதி மகா நாயக்கர்களிடம் எடுத்துக் கூறியவை வரு மாறு:

இலங்கை இராணுவம் சவாலையும் எதிர்கொள்ளும் பலமும் தகுதியும் பெற்றி ருக்கிறது. அதனால் நாட்டின் அபிவிருத் திப் பணிகளில் இராணுவத்தினரை ஈடு படுத்தலாம். அவ்வாறு செய்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை விரைந்து அடையலாம் என்று இரண்டு மகா நாயக்கர்களும் இராணுவத் தளபதியி டம் கருத்து வெளியிட்டனர்.

அதற்குப் பதிலளிக்கையில் இராணு வத் தளபதி தெரிவித்தவை யாவது:

வடக்கு, கிழக்கில் உள்ள சகல மதங் களினதும் வழிபாட்டுத் தலங்களை புனர் நிர்மாணம் செய்வதில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பணிக ளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வரு கிறது.

அதேவேளை வடக்கு, கிழக்கில் இரா ணுவக் குடியிருப்புகளை அமைப்பதிலும் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணி களில் ஈடுபடும் பொருட்டு அங்கு கட மைக்குச் செல்லும் இராணுவத்தினருக்கு நிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட வுள்ளன. அவர்கள் விரும்பினால் நெல் உற்பத்தி உட்பட விவசாயத்திலும் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.

ந்த இரண்டு மாகாணங்களிலும் பொறியியல் வேலைகள் உட்பட நெடுஞ் சாலைகள், பாலங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் ஆகியவற்றை நிர்மாணிப்பதில் இராணுவத்தினரை ஈடுபடுத்தினால், அர சாங்கத்துக்கு பெருந் தொகை பணத்தை மிச்சம் பிடிக்கலாம், சேமிக்கலாம் என்று இராணுவத் தளபதி மகாநாயக்க தேரர்க ளிடமும் எடுத்துச் சொன்னார்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3454&Uthayan1277718034

  • தொடங்கியவர்

நிரந்தர இராணுவ கட்டமைப்புக்கள் வடக்கு கிழக்கில் அமைக்கப்படும் _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24846

Colombo schemes Sinhalicised capital for North

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32069

  • தொடங்கியவர்

... நாளை எங்கள் அடுத்த சந்ததிக்கு .... உன் அப்பனோ, பாட்டனோ, பீட்டன் ... இங்கு தான் பிறந்து வளர்ந்தவர்கள் ... என்று உலகப்படத்தை தொட்டுக்காட்டும் நிலை ஏற்படுவதற்கு வெகுகாலமில்லை!

... இங்கு புலத்திலிருந்து போட்டி போட்டுக் கொண்டு போய், இரத்தக்கறை படிந்த கைகளுக்கு கைலாகு கொடுக்கும் எமது முன்னால் புலி புத்திஜீவிகளுக்கு இப்படியான செய்திகள் கண்களுக்கு படுவதில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.