Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அமைச்சரினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை குறித்து ஐ.நா. தீவிர கவனம்

Featured Replies

இலங்கை அமைச்சரினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை குறித்து ஐ.நா. தீவிர கவனம்

01 July 10 01:52 am (BST)

இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சவினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிபுணர்கள் குழுவினை கலைக்கும் வரையில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளை அதிகாரிகளை வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமேன வீடமைப்பு மற்றும் பொறியியல் அமைச்சர் விமல் வீரவன்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் பாரான் ஹக் தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரின் கருத்து தனிப்பட்ட கருத்து என அரசாங்கம் அறிவித்துள்ளது.

விமல் வீரவன்சவினால் வெளியிடப்பட்ட கருத்து தனிப்பட்ட அவரது கருத்து எனவும், அது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைக் கிளை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைக்கு பாரிய அச்சுறுத்தல்கள் கிடையாது என ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் உதாசீனம் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா இலங்கைக் கிளை பணியாளர்களை, மக்கள் வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் ‐ விமல் வீரவன்ச :

30 June 10 03:12 pm (BST)

ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளை பணியாளர்களை நாட்டு மக்கள் வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை கலைக்கும் வகையில் ஐ.நா இலங்கைக் கிளை பணியாளர்களை காரியாலயத்தை விட்டு வெளியேற முடியாத வகையில் வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நோக்கிலேயே பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழு நியமனத்தின் அடுத்த கட்டம் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகள் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் எமது நாட்டின் தலைவர்களையும், யுத்த வீரர்களையும் சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு வழிகோலும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஜெனரல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து, இந்த தேசத்தின் இறைமைக்கு இழைக்கப்படும் பாரிய துரோகமாக கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=26581&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.