Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தில் தூற்றல் ஆங்கிலத்தில் கும்பிடு

Featured Replies

தெற்கில் சென்று வெளிநாடுகள் பற்றிச் சிங்களத்தில் தூற்றிப் பேசிவிட்ட பின்னர் அந்நாடுகளிடம் சென்று ஆங்கிலத்தில் கும்பிடும் செயற்பாடானது இராஜதந்திர நடவடிக்கைகளில் அரசாங்கம் போடும் இரட்டை வேடத்தையே எடுத்துக் காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி.நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசும்போதே ரவூப் ஹக்கீம் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

சர்வதேச நாணய நிதியம் தயாரித்துக் கொடுத்த அறிக்கையையே பதில் நிதியமைச்சர் சரத் அமுனுகம வரவுசெலவுத் திட்டமாகக் கொண்டு வாசித்தõர். அவர் வாசித்தது பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய அறிக்கையே தவிர, வரவுசெலவுத் திட்டமல்ல. வரவுசெலவுத் திட்டமொன்றில் இருக்க வேண்டிய சம்பிரதாயபூர்வமான விடயங்கள் எதுவுமில்லை.

சர்வதேச நாணய நிதியானது ஒன்றும் செய்ய முடியாத செயற்திறன் அற்றதொன்றென அமைச்சர் டியூ குணசேகர சாடியுள்ளார். கடனுதவிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னரே இவ்வாறு தூற்றுகின்றனர். ஜி.எஸ்.பி.+ வரிச்சலுகை விடயத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்தை இப்படியே தூற்றினார்கள்.

ஐ.நா. அலுவலகத்தைச் சுற்றிவளைக்கப் போவதாக விமல் வீரவன்ச கூறியுள்ளார். அமைச்சர் ஒருவர் இவ்வாறான அச்சுறுத்தலை விடுத்துள்ளார். தெற்கு மக்கள் மத்தியில் புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வெறும் பேச்சுகள் மட்டுமே இவை. ஆனால், இதன் மூலம் நாட்டையே ஆபத்தில் தள்ளிவிடப் பார்க்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதியின் பிரதிநிதி, ஐ.நா. உதவிச் செயலாளர்,யசூசி அகாஷி என முக்கிய சர்வதேசப் பிரதிநிதிகள் இலங்கை வந்திருந்தனர். அவர்கள் உதவுவதற்காகவே இங்கு வருகிறார்கள். இந்த நிலையில், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றை தூற்றி எதற்காக ஆபத்தில் விழப் பார்க்கிறீர்கள்?

ஜி.எஸ்.பி.+ வரிச்சலுகை எமது நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 2007 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாமென ஐரோப்பிய ஒன்றியத்தைத் தூற்றுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சர்வதேசம் என்று வரும்போது அவர்கள் ஒரு வழிமுறையின் பிரகாரம்தான் செயற்படுவார்கள். இந்தியா உள்ளிட்ட உங்களது உறவு நாடுகள் உதவும். எனினும், சர்வதேசத்தை நிறுத்த வேண்டும். தெற்கில் சென்று சிங்களத்தில் தூற்றுகின்றீர்கள். ஆனால், வெளிநாடுகளில் சென்று ஆங்கிலத்தில் கும்பிடுகிறீர்கள். இதுதான் இராஜதந்திர ரீதியில் அரசாங்கத்தின் இரட்டை வேடம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.