Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஞ்சள் அட்டை மயமாய் இருந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டம்.

Featured Replies

உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் அதிக மஞ்சள் அட்டை காட்டிய போட்டியாக மாறியது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் நெதர்லாந்து சார்பில் 8 மற்றும் ஸ்பெயின் தரப்பில் 5 சேர்த்து மொத்தம் 13 வீரர்கள் மஞ்சள் அட்டைபெற்றனர். இருந்தாலும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

post-7835-019338900 1278974625_thumb.jpg

உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் 116-வது நிமிடத்தின் ஸ்பெயினின் இனியெஸ்டா வெற்றி கோலை அடித்தார்.சாக்கர் சிட்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்,​​ கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய ஸ்பெயினும்,​​ மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்ற நெதர்லாந்தும் மோதின. இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை கைப்பற்றும் குறிக்கோளுடன் களமிறங்கின.

post-7835-075327800 1278974709_thumb.jpg

ஆட்டம் துவங்கியது முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின.​ நெதர்லாந்தின் வெஸ்லி ஸ்னைடர்,​​ ராபின் வான் பெர்ஸி,​​ மார்க் வான்,​​ ராபென் அர்ஜென் மற்றும் ஸ்பெயினின் டேவிட் வில்லா,​​ கார்லஸ் புயோல் என இரு அணி வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபின் வான் பெர்ஸி மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டார்.​ 17-வது நிமிடத்தில் ஸ்பெயினின் கார்லஸ் புயோல்,​​ 22-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மார்க் வான்,​​ 23-வது நிமிடத்தில் ஸ்பெயினின் செர்ஜியோ ரேமோஸ் ஆகியோர் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர்.ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில்,​​ ஸ்பெயின் வீரர் ஷேவி அலோன்ஸôவை நெதர்லாந்தின் நிகேல் டி ஜோங் நெஞ்சில் உதைத்தார்.​ இதனால் நிகேலுக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடப்பட்டது.​ 37-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வான்பொம்மேல் அடித்த பந்தை ஜோரிஸ் கோலாக்க தவறினார்.

post-7835-038556300 1278974636_thumb.jpg

நெதர்லாந்து வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் மோதிப் பார்க்க, இங்கிலாந்து நடுவர் ஹாவர்டு, மாறி மாறி "எல்லோ கார்டு' காட்டி எச்சரித்தார். நெதர்லாந்து தரப்பில் பெர்சி, பொம்மல் மற்றும் ஸ்பெயின் சார்பில் ரமோஸ், புயோல் "எல்லோ கார்டு' பெற்றனர். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர்லாந்து வீரர் நிஜல் டி யாங்கும் "எல்லோ கார்டு' பெற்றார். முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கியதும் இரு அணிகளுடைய வீரர்களின் ஆட்டத்திலும் அனல் பறந்தது.​ ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கியோவானிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.​ 55-வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை ஸ்பெயினின் ஷேவி கோல் கம்பத்தைத் தாண்டி அடித்து வீணடித்தார். ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் ஜான் ஹெய்ட்டிங்கா மஞ்சள் அட்டை எச்சரிப்புக்கு உள்ளானார்.​ 58-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் கோல் வாய்ப்பு நூலிழையில் தவறிப்போனது.62-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஸ்னைடர்,​​ கோல் கம்பத்துக்கு அருகில் நின்ற சகவீரர் ராபெனுக்கு பந்தை அடித்தார்.​ கோல் கம்பத்தை நோக்கி பந்தை எடுத்துச் சென்ற ராபென்,​​ ஸ்பெயின் கோல் கீப்பர் காஸில்லûஸ தாண்டி கோலடிக்க முயற்சித்தார்.​ ஆனால் பந்து காஸில்லஸின் காலில் பட்டதால் துரதிருஷ்டவசமாக கோல் கம்பத்திற்கு வெளியில் சென்றது.​ இதனால் நெதர்லாந்தின் கோல் முயற்சி நூலிழையில் தவறியது.67-வது நிமிடத்தில் ஸ்பெயினின் கேப்டேவில்லாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.​ 73-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.​ இதையும் ஸ்பெயின் வீரர்கள் விரயமாக்கினர். இரு பாதி முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

post-7835-073466400 1278974647_thumb.jpg

ரெட் கார்டு' சோகம்:இதையடுத்து போட்டி, கூடுதல் நேரத்துக்கு சென்றது. 106வது நிமிடத்தில் ஸ்பெயின் சார்பில் டேவிட் வில்லாவுக்கு பதிலாக பெர்ணான்டோ டோரஸ் களமிறக்கப்பட்டார். 109வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டாவை முரட்டுத் தனமாக தடுத்த நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 10 பேருடன் நெதர்லாந்து விளையாட நேர்ந்தது.

ஸ்பெயின் கோ...ல்: ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஒரு சூப்பர் கோல் அடித்து, அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பை கைப்பற்றியது. கடந்த 1974, 78 பைனலில் தோல்வி அடைந்த நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டு, இரண்டாம் இடம் பிடித்தது.

post-7835-093462600 1278974660_thumb.jpgஉலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணி ரூ. 142 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி 113 கோடி ரூபாய் பரிசாக பெற்றது. கோல்டன் ஷீ விருதை தாமஸ் முல்லர் (ஜெர்மனி) நாட்டை சேர்ந்தவர் தட்டிச்சென்றார். இவரே உலக கால்பந்து போட்டியின் இளம் வீரர் என்ற பட்டத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கோல்டன் பால் விருதை டீகோ போர்லன் (உருகுவே) நாட்டை சேர்ந்தவர் தட்டிச்சென்றார்.

Our thanks to,

http://www.thedipaar.com/news/news.php?id=15952

Edited by easyjobs

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்ஜென்ரினாவுடன் ஜேர்மனி விளையாடிய போது முல்லருக்கு அனாவசியமாக மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

அதன் பின் முல்லரால் அடுத்த ஆட்டம் சட்ட விதிகளுக்கமைய ஆடமுடியாமல் போனது.

அதனாலேயே...

ஸ்பானிய அணியுடன் ஜேர்மன் அணி தோல்வியடைந்ததாக இங்கு பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்ஜென்ரினாவுடன் ஜேர்மனி விளையாடிய போது முல்லருக்கு அனாவசியமாக மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

அதன் பின் முல்லரால் அடுத்த ஆட்டம் சட்ட விதிகளுக்கமைய ஆடமுடியாமல் போனது.

அதனாலேயே...

ஸ்பானிய அணியுடன் ஜேர்மன் அணி தோல்வியடைந்ததாக இங்கு பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

முல்லர் ஸ்பானியாவோடு விளையாட மாட்டார் என்ற விசயத்தை உந்த ஒக்டோபுஸ்சுக்கு யாரோ போட்டு குடுத்திட்டாங்கள், ஒட்டு குளுக்களின் வேலையாக இருக்கலாம் :lol: , உடனேயே பதில் சொல்லி இருந்தால் விடயம் வெளியில் தெரிந்து விடும் என்று ஒக்டோபுஸ்சும் யோசிப்பது போல பெட்டிக்கு மேல இருந்து நடிச்சு இருக்கு, இறுதி போட்டியில் ஸ்பானியா வெல்லும் என்று மூன்று நிமிடத்தில் சொன்ன ஒக்டோபுஸ் ஜேர்மனி தோக்கும் என்று சொல்ல ஏன் ஒன்பது நிமிடங்கள் எடுத்தது? இரண்டு போட்டிகளும் கிட்டதட்ட இழுபறியில்தான் முடிந்தது என்பதை அனைவரின் கவனத்துக்கும் வைக்கிறேன் ^_^

அதிக மஞ்சள் காட் காட்டியதுக்கு காரணம் நடுவர் பிரிட்டன் காரராம் அவர் என்ன கடுப்பில் நின்றாரோ? :lol:

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.