Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிற்கான 'அழுத்த அரசியலை' தொடரப்போகும் சக்தி எது?

Featured Replies

விடுதலைப்புலிகளின் வீழ்சிக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் தாயகம், புலம்பெயர் தேசம் என இரு கூறாகியிருப்பது வெளிப்படையானது.

உணர்வுநிலை சார்ந்து இதில் சிலர் முரண்படலாம் ஆனால் உண்மை இதுதான்.

இதனை எவ்வாறு மீளவும் ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சிக்கலானதும் சவால்கள் நிறைந்ததுமாகும்.

எத்தகைய விமர்சனங்கள் இருப்பினும் களத்தையும் அதாவது தாயகத்தைரயும் புலம் பெயர் தேசத்தையும் தமிழ்த் தேசிய நிலையில் ஒன்றுபடுத்தும் சக்தியாக விடுதலைப்புலிகளே இருந்தனர்.

அதே வேளை ஒழுங்குபடுத்தலிலும் கையாள்கையிலும் விமர்சனங்கள் இருந்தாலும் விடுதலைப்புலிகளே புலம்பெயர் தளத்தை ஈழத் தமிழர் விடுதலைக்கான வலுவான பின்தளமாகவும் மாற்றினர்.

ஆனால் அது சுயாதீனமாக இயங்கக் கூடிய வகையான அடித்தளம் எதனையும் விடுதலைப்புலிகள் அமைக்கவில்லை. இதுவும் விடுதலைப் புலிகள் விட்ட மிகப் பெரிய தவறுகளில் ஒன்று.

இதன் காரணமாகவே புலிகளின் வீழ்சிக்கு பின்னர் அது இயக்கமற்ற நிலைக்கு சென்றது மட்டுமல்லாமல் கொழும்பின் விருப்பங்களுக்கு ஏற்ப தமக்குள்ளேயே முரண்பாடுகளை வளர்த்தும் செல்கிறது.

சமீபத்தில் புலம்பெயர் நாடொன்றில் இருந்து இயங்கும் இணையத் தளம் ஒன்று சுட்டிக்காட்டியது போன்று "எதிரியின் விருப்பங்களை நிறைவு செய்யும் வகையிலேயே தற்போதைய புலம்பெயர் சக்திகள் இயங்க முனைகின்றன."

அனைத்து புலம்பெயர் தமிழ்த் தேசிய சக்திகளையும் மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் நாடுகடந்த அரசு என்னும் அமைப்பு வடிவில் ஒரு பிரிவினர்,

விடுதலைப் புலிகளின் புலம்பெயர் வளங்களை தம்வசப்படுத்தியிருக்கும் ஒரு பிரிவினர்,

மேலும் தற்போது கொழும்புடன் உறவுகளை ஏற்படுத்துதல் என்னும் புதிய இலக்குடன் இன்னொரு பிரிவினர் என புலம்பெயர் தளம் மேலும் மேலும் பிளவுண்டும் செல்கிறது.

இந்த இடத்திலேயே அந்த இணையத் தளத்தின் கணிப்பான "இவர்கள் தம்மை அறியாமலேயே எதிரியின் நிகழ்சிநிரல்களை பின்பற்றும் நிலைக்குச் செல்கின்றனர்" என்பது துல்லியமாகப் பொருந்திப் போகிறது.

இந்த பின்புலத்தில் நாடு கடந்த அரசு [Transnational Government] என்னும் அமைப்புசார் கருத்து குறித்தும் அதன் இயங்கு நிலையில் தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்கான சாதகங்கள் பற்றியும் பார்க்க வேண்டியிருக்கிறது.

இதனை தெளிவாக குறித்துக் கொள்வோமானால் நாடு கடந்த அரசு என்னும் கருத்துநிலையில் கொழும்பு குறிவைப்பதன் பின்னணிகளையும் நாம் தொகுத்துக் கொள்ள முடியும்.

நாடு கடந்த அரசு [Transnational Government] என்பது அடிப்படையிலேயே முற்றிலும் புதியதொரு அரசியல் முயற்சியாகும்.

இதுவரை எந்தவொரு ஒடுக்கப்பட்ட மக்களும் அல்லது மக்கள்சார் விடுதலை அமைப்புக்களும் இவ்வாறானதொரு முறைமையை பயன்படுத்தியதில்லை அந்த வகையில் இது ஒரு பரிசோதனை முயற்சியே.

எனவே ஒரு பரிசோதனை முயற்சியை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே விமர்சிப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல.

அதேவேளை நாடுகடந்த அரசு விடுதலைப் புலிகளின் அரசியலை பிரதிபலிக்க முற்படுவதாகவும் இதன்காரணமாகவே புலிகளின் கடந்தகால அரசியலை விமர்சன கண்ணோட்டத்துடன் இவர்களால் அணுக முடியாமல் இருப்பதாகவும் இதன் மீது ஒரு விமர்சனம் உண்டு.

சில வேளைகளில் நமது விமர்சனங்கள் நியாயமானதாக இருப்பினும் புறச் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை நமக்குண்டு என்பதை இந்த கட்டுரை கருத்தில் கொள்கிறது.

இன்றைய ஈழத்தின் அரசியல் சூழலுக்கும் புலம்பெயர் தமிழர் மனோநிலைக்கும் இடையில் நிலவும் அரசியல்சார் உணர்வுநிலை வேறுபாடுகள் இவ்வாறான விமர்சனங்களின் போது கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

இன்றும் ஒரு சில கருத்துருவாக்கப் பிரிவினரை தவிர, பெரும்பாலான புலம்பெயர் ஈழத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்சார் அரசியலில் அனுதாபம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

எனவே நாடு கடந்த அரசு என்னும் அமைப்புசார் புதிய செயற்பாட்டாளர்கள் இந்த யதார்தத்தைக் கருத்தில் கொண்டு செலாற்ற வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றனர் என்பதையும் அது குறித்து விமர்சிப்போர் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

எனவே ஒரு புதிய முயற்சி என்ற வகையில் நாடு கடந்த அரசு குறித்து இவ்வாறான சாதகநிலையான அவதானங்கள் தற்போது அவசியம் என்பதையே இந்த கட்டுரை சுட்டிக்காட்ட முனைகிறது.

அதே வேளை அதன் வளர்சிக்கு சாதகமான விமர்சனங்களையும் இந்த கட்டுரை ஏற்றுக் கொள்கின்றது.

நாடுகடந்த அரசு என்பது அடிப்படையில் புலம்பெயர் தமிழ்த் தேசிய தளத்தையே குறிக்கின்றது. எனவே நாடுகடந்த அரசின் செயற்பாடுகள் என்பவை அடிப்படையில் புலம்பெயர் தளத்தை ஈழத் தமிழர் நலன்களை வென்றெடுக்கும் நோக்கில் எவ்வாறு கையாளுவது என்பதுடன் நேரடியாகத் தொடர்புபடுகிறது.

இன்றைய சூழலில் நாடுகடந்த அரசு எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் அத்துடன் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது?

சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் தலைமையை இல்லாதொழித்து அதன் கட்டமைப்புக்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கியதுடன் இலங்கையைப் பொறுத்தவரையில் அதன் உள்ளக அரசியலில் புலிகளின் அத்தியாயம் முடிந்துவிட்டது.

இங்கு முடிவுக்கு வந்திருப்பது விடுதலைப் புலிகளின் இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல என்பதை இங்கு குறித்துக் கொள்வது அவசியமாகும்.

கொழும்பு விடுதலைப் புலிகளை வீழ்த்தியதன் மூலம் உள்ளகரீதியாக கடந்த முப்பது வருடங்களாக இருந்த தமிழ்த் தேசிய நிலைப்பட்ட அரசியல் அழுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றது.

சரி பிழைகளுக்கு அப்பால் கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அடிபணியவைக்கக் கூடிய தமிழ்த் தேசிய சக்தியாக விடுதலைப் புலிகளே இருந்தனர்.

தற்போது தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநித்துவப்படுத்தும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தபோதும் கொழும்பு கருத்தில் எடுக்கக் கூடிய ஒரு சக்தியாக அது இல்லை.

அதற்கான உள்ளகரீதியான கட்டமைப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் எதனையும் அது கொண்டிருக்கவில்லை.

இந்த பின்புலத்தில்தான் இன்றைய சூழலில் கொழும்பிற்கான 'அழுத்த அரசியலை' தொடரப்போகும் சக்தி எது என்ற கேள்வி எழுகிறது.

இங்கு 'அழுத்த அரசியல்' என்று குறிப்பிடப்படுவது, புலிகளின் வீழ்சிக்கு பின்னர் கொழும்பு எதிர்கொள்ளப் போகும் புதிய முரண்பாடுகளை துல்லியமாக மதிப்பிட்டு அதற்கு ஏற்ப அழுத்தங்களை கையாளுவது என்ற பொருள் கொண்டதாகும்.

விடுதலைப் புலிகளை தோற்கடித்ததன் மூலம் கொழும்பு இதுவரை புலிகளை மையப்படுத்தி மேற்கொண்ட உள்ளக அரசியலை தொடர்ந்து மெற்கொள்ள முடியாத நிலைமையில் உள்ளது.

முன்னர் தெற்கில் தோன்றிய சகல முரண்பாடுகளையும் கொழும்பின் ஆளும் வர்க்கம் புலிகளை காரணம் காட்டியே திசை திருப்பிவந்தது.

எல்லாவற்றுக்கும் இனவாத அரசியலையே தப்பித்தல் மார்க்கமாகக் கைக்கொண்டு வந்தது. ஆனால் இனிவரப் போகும் காலங்களில் அதனைத் தொடர முடியாத நிலைமையில் கொழும்பு உள்ளது.

எனவே புலிகளை மையப்படுத்திய அரசியலின் முடிவு என்பது கொழும்பைப் பொறுத்தவரையில் எழப் போகும் புதிய முரண்பாடுகளின் காலமாக அல்லது ஏலவே உறங்குநிலையில் இருந்த முரண்பாடுகள் கூர்மைப்படும் காலமாக அமையலாம்.

சரத் பொன்சேகா விவகாரம் கொழும்பின் ஆளும்வர்க்க முரண்பாடு ஒன்றையே துலாம்பரமாக்கின்றது.

இதுவரை தீவிர இனவாத அரசியலை முன்னெடுத்ததன் மூலம் கொழும்பின் ஆளும்வர்க்கம் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த யுத்தத்திற்கு முண்டு கொடுத்துவந்த ஜே.வி.பி யினருக்கும் மகிந்த தலைமையிலான ஆளும் வர்க்கத்தினருக்கும் இடையில் பகைமை நிலை தீவிரமடைந்து செல்கிறது.

இது இன்னொரு தளத்தில் கொழும்பு எதிர்கொள்ள போகும் உள்ளக முரண்பாடாகும்.

உள்ளக ரீதியான நிலைமைகள் இவ்வாறு அமைய புறச்சூழலில் கொழும்பு மேற்குடன் முரண்பாடுகளை தீவிரப்படுத்திச் செல்கிறது.

ஐ.நா. நிபுணர்கள் குழு விவகாரத்தில் கொழும்பின் நிகழ்சிநிரலின் கீழ் இனவாதிகளை தூண்டிவிடும் அணுகுமுறை அம்பலமாகியிருக்கின்றது.

சிறிலங்கா தொடர்பான மேற்கின் அதிருப்தி அதிகரித்துச் செல்லும் நிலையில் கொழும்பு, இந்தியா, சீனா போன்றவற்றுடன் உறவினை திவிரப்படுத்த முயற்சிக்கலாம்.

இது மேலும் சில விரிசல்களை ஏற்படுத்தலாம்.

சீனாவுடனான கொழும்பின் தொடர்புகள் அதிகரித்துச் செல்வதை தனது நலன்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கும் இந்தியாவிற்கும் கொழும்பிற்கும் இடையில் புதிய முரண்பாடுகள் தோன்றக் கூடும்.

இவ்வாறான முரண்பாடுகளை சாதமாக கைக்கொள்ளுவது எவ்வாறு என்ற கேள்விக்கு விடைகாண்பதுதான் இனிவரப் போகும் கால ஈழத் தமிழர் தேசிய அரசியலாக இருக்க முடியும்.

அவ்வாறில்லாது நாமே நமக்குள் கூறுபட்டு மோதிக் கொள்வது அல்லது நமக்கு நாமே பட்டங்கள் சூட்டி மகிழ்வது இவையெல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொழும்பை பலப்படுத்தவே பயன்படும்.

எனவே எல்லாவற்றுக்கும் முன் நாம் நம்மை ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கிறது. இது முதலாவது படி.

இதில் ஒழுங்காக காலடி எடுத்து வைத்ததால்தான் அடுத்த படிகளை இலகுவாக கடக்க முடியும்.

ஆனால் புலம்பெயர் சூழலைப் பார்த்தால் நாம் முதலாவது படியிலேயே சறுக்கி விழுந்துவிடுவோமோ என்ற சந்தேகமே எழுகிறது.

புலம்பெயர் சூழலில் மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு மார்க்கமாகவும் அதே வேளை மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான ஒரு வடிவமாகவும் நாடு கடந்த அரசு என்னும் சிந்தனை முறைமை அமைய முடியும்.

அந்தவகையில் இந்த கட்டுரை அதனை சாதமான ஒன்றாகவே கருதுகிறது. ஆனால் இதற்கு முன்நிபந்தனையாக நாடு கடந்த அரசு குறித்து பேசும் தரப்பினர் தம்மை முறையாக ஒழுங்குபடுத்திக் கொள்ளுவது அவசியம் என்ற கருத்தையும் இந்த கட்டுரை சுட்டிக்காட்ட முயல்கிறது.

இதில் முதலாவது விடுதலைப் புலிகளைக் காரணம்காட்டி 'நாடு கடந்த அரசு' என்னும் வடிவம் புறக்கணிப்படாத வகையில் அவர்கள் தம்மை தகவமைத்துக் கொள்வது முக்கியமானது ஆகும்.

இது குறித்து மாற்றுத் தரப்பினர் முன்வைக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை உள்வாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவநிலை அவசியம்.

இது விடுதலைப் புலிகளிடம் இல்லாத ஒன்று.

மிக முக்கியமானது 'அரசு' என்பதற்கு மிகவும் தெளிவான விளக்கத்தை வரையறுக்க வேண்டும்.

அது நவீன உலக அரசியல் ஒழுங்குடன் பொருந்திப் போகும் ஒன்றாகவும் இருக்க வேண்டும்.

'தமிழீழம்' என்பது அப்படிப் பொருந்திப் போகக் கூடிய ஒன்றல்ல.

அந்த அடிப்படையில் 'நாடு கடந்த தமிழ் ஈழம்' என்ற கருத்துநிலை வேண்டுமானால் புலம்பெயர் மக்களை வசியப்படுத்த பயன்படலாம் ஆனால் அது 'அழுத்த அரசியல்' என்னும் அர்த்தத்தில் மிகவும் பலவீனமானதாகவே அமையும்.

அத்துடன் விடுதலைப் புலிகளுடன் தொடர்படுத்தி இலுகுவாக 'பயங்கரவாத' நிகழ்சிநிரலுடன் இணைப்பதற்கு வாய்ப்பாகவும் அமையும்.

மறுபுறமாக உள்ளக அரசியலில் நாடுகடந்த அரசை காரணம் காட்டி, ஈழத் தமிழரின் தற்போதைய இருப்புநிலையில் கொழும்பு மேலும் கெடுபிடிகளை ஏற்படுத்தலாம்.

அதற்கு வழமைபோல் 'புலிவாத' அரசியலை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனைத்துலக ரீதியாக அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய ஒரு பொறிமுறையாக நாடு கடந்த அரசு என்னும் வடிவம் செயலாற்றக் கூடிய தகுதிநிலையில் இருப்பது அவசியம்.

இதற்காக புலிகளின் அர்ப்பணிப்பு தியாகம் எவற்றையும் விட்டுவிடும்படி இந்த கட்டுரை வாதிடமுயலவில்லை.

மாறாக விடுதலைப் புலிகளின் தியாகம் அர்ப்பணிப்பு இவற்றை சொல்லிக் கொண்டிருப்பது தற்போதைய சூழலைக் கையாள்வதில் தடைகளை ஏற்படுத்துமாயின் அந்த தியாகங்களை நம் மனதில் பவுத்திரப்படுத்திக் கொண்டு முன்னேறுவோம் என்பதையே இந்த கட்டுரை குறித்துரைக்க முயல்கிறது.

அடுத்தது நாடு கடந்த அரச தரப்பினர் தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளவது அவசியம்.

ஒரு கட்டமைப்பு ஒழுங்கின் கீழ் இருப்பதற்கான பொறுப்புணர்வை நாடு கடந்த அரசு தரப்பினர் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தேவையற்று கொழும்பின் நிகழ்சிநிரல் குறித்து அலட்டிக் கொள்ள வேண்டிய தேவை நாடு கடந்த அரசு தரப்பினருக்கு இல்லை, அது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பாக இருப்பின்.

இதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் கே.பியின் தொடர்பில் கொழும்பு சென்று வந்தோர் குறித்து மேற்கொண்ட விவாதங்கள்.

நாடு கடந்த அரசு தரப்பில் தெரிவான உறுப்பினர்கள் தங்கள் இலக்கில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால் கே.பி குறித்து அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

அவர் செய்ய முயலும் நல்ல விடயங்களையும் மறைமுகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இங்கு கொழும்பின் இராஜதந்திர இலக்கானது குழம்பிக் கிடக்கும் புலம்பெயர்தள அரசியலை அதே குழப்ப நிலையிலேயே பேணிக் கொள்வதுதான்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் புலம்பெயர் தளத்தின் அரசியல் செயற்பாட்டாளர்கள் குழப்பநிலையில் சோர்வுற்று அல்லது அதிருப்தியடைந்து செயலற்ற நிலைக்கு சென்றுவிடுவர் என்பதே கொழும்பின் கணிப்பு.

நமது தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு முழுவதுமே கொழும்பின் இராஜதந்திரத்திற்கு முன்னால் மிகவும் அவமானகரமான தோல்விகளையே நாம் சந்தித்திருக்கிறோம்.

இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு செயலாற்ற வேண்டிய பொறுப்புணர்வு, ஈழத் தமிழர் தேசிய அரசியல் குறித்து பேசும் நம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

வீணே பழம் பெருமைகள் பேசிக் கொண்டிருப்பதால் ஆகப் போவது எதுவுமில்லை. ஏனெனில் நாம் பெருமைகளில் மூழ்கிக் கிடக்கும் பொழுதுகளில் எல்லாம் எதிரி மேலும் நமது இருப்பை சிதைத்துக் கொண்டிருக்கிறான் என்பதே யதார்த்தம்.

எதிரியின் அரசியல் முரண்பாடுகளை துல்லியமாகக் கணித்து அதற்கு எற்ப அழுத்தங்களை பிரயோகிக்கும் அரசியல் உபாயமே இப்போதைய தேவை.

இங்கு அழுத்த அரசியலின் இறுதி இலக்கு கொழும்பே ஆனால் வெளிப்படுத்தல்களில் அது சீனாவிற்கு எதிரான ரஸ்யாவிற்கு எதிரான புலம்பெயர் போராட்டங்களாக இருக்க முடியும்.

அனைத்தையும் மேற்கு சமூகம் மதிப்பளிக்கும் மனித உரிமைகள் என்ற அர்த்தப்படுத்தல்களுக்குள்ளேயே கைக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக நிபுணர் குழுவிற்கு ரஸ்யா எதிர்ப்பு தெரிவிக்கும் போது மேற்கின் பல பாகங்களிலும் ரஸ்யாவியின் மனித உரிமை பாதுகாப்பிற்கு எதிரான தலையீடு என்ற வகையில் போராட்டங்கள் அமைய வேண்டும்.

அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் ரஸ்ய, சீன நன்மதிப்பு பாதிக்கப்படுமாயின் அதனை குறிப்பிட்ட அரசுகள் கவனத்தில் எடுத்தே ஆகும்.

மேற்படி அரசுகள் சிங்களவர்கள் மீதான காதலால் கொழும்பிற்கு முண்டு கொடுக்கவில்லை. தமது அரசியல் பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டே கொழும்பிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

எனவே தத்தமது நலன் என்று வரும்போது இவர்கள் கொழும்பை கைவிட்டுவிடுவர்.

எனவே நாடு கடந்த அரசு தரப்பினர் தமது சிந்தனைகளை இந்த வகையில் திருப்ப வேண்டியது இன்றைய சூழலில் அவசியமாகும் என்பதையே இந்த கட்டுரை முக்கியப்படுத்தி உரைக்கிறது.

ஜ.நா நிபுனர் குழு விவகாரம் நல்லதொரு துருப்புச் சீட்டு. அது என்ன நன்மைகளைக் கொண்டுவரும் என்பதல்ல இங்கு விடயம். அதிலுள்ள முக்கிய விடயம் கொழும்பு அதனை எதிர்த்து நிற்பதுதான். அதுதான் நமது போராட்டத்திற்கான உள்ளடக்கம்.

அதற்கு ஆதரவு தெரிவித்து களமிறங்கும் நாடுகளை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு சாத்தியமான அனைத்து இடங்களிலும் அந்த நாடுகளின் நன்மதிப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் புலம்பெயர் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னெடுக்கலாம்.

நாடு கடந்த அரசு மேற்கொள்ளும் அனைத்து போராட்டங்களும் மனித உரிமைகள்சார் சிந்தனையை தழுவியதாகவே அமைந்திருக்க வேண்டும்.

இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் மனித உரிமைகள் என்பது மிக முக்கியமானதொரு அழுத்த ஆயுதமாகவே மேற்கு அரசுகளால் கைக் கொள்ளப்பட்டுவருகின்றன என்பதை கணித்தே நமது அழுத்த அரசியல் செயற்பாடுகள் திட்டமிடப்பட வேண்டும்.

மனித உரிமைசார் அரசியலே ஒரே நேரத்தில் கொழும்புடன் உறவு கொள்ளும் அனைத்து தரப்பினரையும் சமதையாக கையாளுவதற்கான ஒரே வழியாகும்.

நாடு கடந்த அரசு என்னும் வடிவம் நமது அடுத்த கட்ட அரசியல் முன்னெடுப்புக்களின் போது எவ்வாறான அணுகுமுறைகளை கைக்கொள்ளலாம் என்பது பற்றிய ஒரு அவதானமே இந்த கட்டுரை.

இது போன்று இன்னும் பலவகையான பார்வைகள் இருக்கக் கூடும். அவ்வாறான பார்வைகளும் முன்வைக்கப்பட்டால் நாம் அதிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம்.

நாடு கடந்த அரசின் பலவீனங்கள் அல்லது சில பொருத்தப்பாடின்மைகள் குறித்து பேசுவோரும் தமது ஆக்க பூர்வமான கருத்துக்களை முன்வைக்க முன்வர வேண்டும்.

நமது இன்றைய தேவை முதன்மைப்படுத்தல்கள் அல்ல நமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு எவ்வாறு இன்றைய சூழலை நமக்கு சாதகமாகக் கைக்கொள்ளவது என்பதேயாகும்.

ஆனால் இது எல்லாவற்றுக்கும் முதலில் நாடு கடந்த அரசு தரப்பினர் தம்மை முறையாக ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளருக்கு கருத்துக்களை அனுப்ப: arinanthan@gmail.com

  • தொடங்கியவர்

நன்றிகள் கட்டுரையாளருக்கு! மிக யதார்த்தமாக, காலத்தின் தேவை அறிந்து ஆக்கப்பட்ட கட்டுரை! ...... விமர்சனங்கள் துரோகங்கள் அல்ல, விடப்பட்ட பிழைகளை சுட்டிக்காட்டுவதும் துரோகங்களல்ல! அதனை எப்போது உணர்கிறோமோ அப்போதுதான் விமோசன பாதை திறக்கும்!

... அதை விடுத்து சகதிகளை கிளறி ... எதிரியின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதிலேயே காலத்தை கழிக்கிறார்கள் ... எம்புலம்பெயர் அதியமான்களும்/சேரமான்களும்/பார்த்தசாரதிகளும்!!!! இவர்களின் கிளறல்கள் தமிழ்த்தேசியம் என்பது ஒரு சாக்கடையே என்ற சிந்தனைக்கு மக்களை இட்டுச் செல்கிறார்கள்!!! .... இவர்கள் தம் அறிவீனங்களை களையப்போகும் நாள் எப்போது???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே ஒரு பரிசோதனை முயற்சியை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே விமர்சிப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல.

பரிசோதனை முயற்சியை விமர்சிபது தவறு, பரிசோதனை முயற்சியை நம்பி இருப்பதும் இக்காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை.

Edited by thenmozi

  • தொடங்கியவர்

பரிசோதனை முயற்சியை விமர்சிபது தவறு, பரிசோதனை முயற்சியை நம்பி இருப்பதும் இக்காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை.

... சரி பரிசோதனையை நப்பி இருக்க முடியாது! என்ன செய்கிறீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள்? ... ஒன்றுமே இல்லை! ... செய்வதும்/செய்யப்போவதும் ... அவன் துரோகி/இவன் துரோகி பட்டமளிப்புகளும், சேறடிப்புகளும், சகதிகளை கிழறுவதும், குழி பறிப்புக்களும் ... மொத்தத்தில் சிங்களவன் செய்ய வேண்டியதை இங்கு இந்த காஸ்ரோக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்! ...

... இல்லை ஏதாவது பிரயோசனமாக இங்கு செய்கிறார்கள் என்றால் கூறுங்கள் பார்ப்போம்??????

... தானும் படுக்காது, தள்ளியும் படுக்காது!!!! .... நாய்களை விட கேவலங்கெட்ட ....!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையான். 2009 மே19 பின் ஒரு சில வாரம் மொளனமாக இருந்து இருக்கலாம் அவசரம், அவசரமான அறிவித்தல்கள் தான் எம்மை இன்று அம்மணமாக நிறுத்தியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.