Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்களும் மனித நாகரீகமும் - தமிழ்நெட் செய்தி ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றங்களும் மனித நாகரீகமும் - தமிழ்நெட் செய்தி ஆய்வு

அடிப்படை பிரச்சனைக்கு அரசியல் நியாயம் கிடைக்காமல் போர் ஒருபோதும் ஓயப்போவதில்லை. கொலணிகளுக்காக உலக யுத்தங்களைச் செய்து வென்ற வல்லரசுகள் கூட ஒரு கட்டத்தில் அதே கொலணிகளுக்கு சுதந்திரம் கொடுப்பதிலிருந்து தப்ப முடியவில்லை.அமெரிக்காவினாலும் இந்தியாவினாலும் தமிழர் அரசியல் பிரச்சனைக்கு முன்வைக்கப்படும் எந்தவித வினைத்திறனுமற்ற தீர்வானது, மேற்குலக நாகரீகத்திலும், ஆப்கான் யுத்தத்திலும், இந்திய விழுமியங்களிலும் எதிரொலிக்கப் போகிறது. இன்று சிங்களம் வைத்திருக்கும் துரும்புச்சீட்டான உலக அரசியல் செல்வாக்கிற்கு நிகராக புலம்பெயர் தமிழரிடையே வளர்ந்துவரும் தோழமைத்துவம் திகழ்கிறது. இன்று புலம்பெயர் தமிழர் முன்னாலிருக்கும் வரலாற்றுக்கடமை என்னவென்றால் பொய்யான பசப்பு வார்த்தைகளுக்கும், கபட நாடகங்களுக்கும் ஆட்பட்டுப் போகாமல், தமது நாட்டிற்காகவும், மனித நாகரீகத்துக்காகவும் உழைப்பதோடு, தமிழ்நாட்டையும், முற்போக்குச் சிங்களவர்களையும் இணைத்துக்கொண்டு தமிழர்க்கு நடந்த அநீதியைப் போல இனிமேல் இன்னொரு இனத்திற்கு நடவாமல் பார்த்துக்கொள்வதும்தான். அமெரிகாவுக்கும் இந்தியாவுக்கும் முன்னாலுள்ள இறுதி ராசதந்திர சந்தர்ப்பம் என்னவென்றால், "முக்கிய பங்காளி" பாத்திரத்தை வகிப்பதன்மூலம் இலங்கையில் இரு தேசங்களுக்கிடையே சமநிலையைப் பேணுவதுதான்.

"நாம் கைதிகள் எவரையும் சிறைப்பிடிக்கவில்லை, நாம் செய்ததெல்லாம் அவர்கள் எல்லாரையும் கொன்றதுதான்" என்று ஒரு ரெண்டாம் உலக யுத்தத்தில் ஈடுபட்ட பிரித்தானியப் போர் வீரர் தன்னிடம் கூறியதாக பிரித்தானிய சரித்திர எழுத்தாளர் அன்ரனி பீவர் தனது "ரெண்டாம் உலக யுத்தத்தில் நேச நாட்டுப்படைகள் செய்த போர்க்குற்றங்கள்" எனும் 2009 ஆம் ஆண்டு நூலில் குறிப்பிட்டுள்ளார். ரெண்டாம் உலகப்போரின் முக்கிய திருப்புமுனைகளில் ஒன்றாகக் கருதப்படும் 1944 ஆம் ஆண்டு கார்த்திகை மாத நோர்மண்டித் தரையிறக்கத் தாக்குதலில் நேச நாட்டுப்படைகள் மிகப்பாரிய அளவில் போர்குற்றங்களைச் செய்ததாக அவர் கூறுகிறார். அவர்களைப் பொறுத்தவரை, "எந்த ஜேர்மன் நாட்டு போர்வீரன் உயிருடன் இல்லையோ அவனே நல்லவன்". ஆகவே உயிருடன் அகப்பட்ட அனைத்து ஜேர்மன் வீரர்களும் கொல்லப்பட்டார்கள் என்று அவர் கூறுகிறார்.

குறைந்தது 250,000 போர்வீரர்களும் பொதுமக்களும் கொல்லப்பட்ட இந்த நோர்மண்டித் தாக்குதல் குறித்த தனது நூலில் குறிப்பிடுகையில், இதுவரை கணிப்பிடப்பட்டிருந்த அளவிற்கும் மிக அதிகமான போர்க்குற்றங்களில் நேச நாட்டுப் படைகள் ஈடுபட்டதாக கூறியிருப்பதாக அவரது நூலை ஆதாரம் காட்டி ஜேர்மனியப் பத்திரிக்கை ஒன்று ஆய்வு வெளியிட்டு இருக்கிறது. இந்த யுத்தம் முடிவடைந்து அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆய்வை ஒரு பிரித்தானிய ஆய்வாளர் வெளியிடக் காரணம் என்ன? அதுவும் முக்கியமாக, இப்போர்க்குற்றங்கள் குறித்த நுரெம்பேர்க் விசாரணைகளில் வெற்றியடைந்தவர்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்கள் மனித நாகரீகத்தை நிலை நாட்டியவர்களாக பூசிக்கப்பட்டு, புதிய உலக ஒழுங்கு அவ்வெற்றியின் மீது கட்டப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்வு அதனுடன் இறுக இணைந்திருக்கும் இன்றைய கட்டத்தில் இவரது ஆய்விற்கான காரணம் என்ன?

ஆனால் இந்த வெளிப்படுத்தல்கள் நவீன சிந்தனைகளுக்கு வலுச்சேர்க்கிறது. நுரெம்பேர்க் போன்ற நம்கத்தன்மையற்ற, எதற்குமே பிரயோசனப்படா மாதிரி விசாரணைகள் பற்றி இன்னூல் சொல்கிறது. போரில் வென்றவர்களாலும், நாடுகளாலும் முன்னெடுக்கப்பட்டும் இவ்வாறான விசாரணைகளின் பக்கச் சார்பு பற்றிச் சொல்கிறது.

பல்லாண்டுகாலமாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் ஈழத்தமிழரின் சுதந்திரப் போராட்டத்தினை எந்த விதத்திலும் ஜேர்மனிய யுத்தத்தோடு ஒப்பிட முடியாது. ஆனால் சுதந்திரப் போராளிகளான விடுதலைப் புலிகளின் கல்லறைகள் உடைத்தழிக்கப்பட்டு, சிங்களத்தாலும், இந்தியாவினாலும் தத்தமது போர்வீரர்களுக்காக நினைவுத் தூபிகள் எழுப்பப்பட்டு வரும் இன்றைய காலத்தில் இந்நாடுகளால் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகள் எந்தத் திசையில் செல்லும் என்பதை அனுமானிப்பதற்காகவே இங்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியப் படையினராலும், இலங்கைப் படையினராலும் பாரியளவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கான அழிக்க முடியா ஆதாரங்களையும், மறுக்கமுடியா நினைவுகளையும் ஈழத்தமிழர்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிளும் எழுப்பப்பட்டு வரும் சிங்கள ராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபிகள் போன்று சிங்கள இளைஞர்கள் தெற்கில் நிகழ்த்திய கிளர்ச்சியிலும் கூட கட்டப்படவில்லை என்பது உண்மையாக இங்கு நிகழ்த்தப்பட்ட போர் "பயங்கரவாதத்திற்கு" எதிரானாதாக இல்லையென்பதும் அது உண்மையிலேயே தமிழரின் தேசியத்தின்மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றென்பதும் தெளிவாகிறது.

இந்திய ராணுவ உயர்பீடத்தின் பிரசன்னத்தோடு இலங்கையில் இக்காலப்பகுதியில் நடந்துவரும் இவ்வாறான நினைவுத் தூபித் திறப்புக்கள் மேற்குலகிற்கு கடுமையான ஒரு செய்தியைத் தெரிவிக்கின்றன. அதாவது போர்க்குற்றங்களுக்கான விசாரனைகலை மேற்கொள்ள வேண்டாம் என்பதே அது. தனது சொந்த நாட்டிலிருந்து வரக்கூடிய அழுத்தங்களுக்குப் பயந்து இந்தியாவினால் இந்த செய்தியை வெளிப்படையாக இப்போது சொல்ல முடியவில்லை.

நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களின் மிக முக்கிய குற்றங்கள் இதுவரையிலும் வெளிவரவில்லை, சிலவேளை எப்போதுமே வெளிவராமல் போகலாம். ஆனால் இந்தப் போர்க்குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது சில முக்கிய இந்திய அமைச்சர்கள் இக்குற்றங்களுக்கான புள்ளிவிபரத்தை வேண்டுமென்றே மறைத்தோ அல்லது மிகவும் குறைத்தோ பொதுமக்களிடம் கூறியதன் மூலம், இக்குற்றங்களை மறைத்துத் துணை போயிருக்கிறார்கள்.

குற்றங்களைப் புரிந்து வெற்றிபெற்ற நாடுகளால் நடத்தப்படும் இவ்வாறான விசாரனைகள் எவ்வாறான முடிவைக் கொண்டிருக்கும் என்று எமக்குத் தெரிந்தாலும் கூட, உலக யுத்தங்களில் வெற்றிபெற்ற நாடுகள் கூட இறுதியில் அந்தக் கொலணிகளுக்கு சுதந்திரம் அளித்ததன் மூலம் மனித நாகரீகத்துக்குக் கட்டுப்படும் கட்டாயத்திற்கு ஆளானர்கள் என்பதை மறக்கக்கூடாது.

கொலணிகளுக்கான ஆதிக்கப்போட்டியில் ஐரோப்பிய நாடுகள் பல் நூற்றாண்டுகளாக போர்க்குற்றங்களில் ஈடுபட்டதோடு முதலாம் ரெண்டாம் உலக யுத்தங்கள் போர்க்குற்றங்களின் உச்சத்தைக் காட்டுகின்றன. அதேவேளை யூதர்கள் அரசியல் நீதியைப் பெற்றுக்கொண்டதோடு 2000 வருடங்களுக்கு முன்னர் ரோமர்களால் பறிக்கப்பட்ட தமது பூர்வீகத் தாயகத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதில் முக்கியமானது என்னவென்றால், அடிப்படைப் பிரச்சனைக்கு அரசியல் நியாயம் கிடைக்கும்வரை போர் ஓயப்போவதில்லை. அதேபொல்ல போரில் வெற்றிபெற்றவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் எவருமே இதிலிருந்து தப்ப முடியாது.

இதுவரையில் சரித்திரத்தில் இல்லாதவகையில் இலங்கயில் போர் நடைபெற்றிருக்கிறது.

இலங்கையில் போர் நடைபெற்ற விதத்திற்கு அமெரிக்காவும் இந்தியாவும் பாரிய பங்கை வகித்திருக்கிறார்கள். ஏனையவர்கள் எல்லோரும் ஒன்றில் சந்தர்ப்பத்தைப் பாவித்திருக்கிறார்கள் அல்லது துணைச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

முற்றான இனவழிப்புப் போருக்கெதிரான தமிழரின் எழுச்சி என்பது பென்ரகன் மேசையில் "தீவிரவாத எதிர்ப்பு யுத்தம்" என்கிற பெயரிலும், இந்தியாவில் தவறானவர்கள் கைகளிலும் போய்ச் சேர்ந்திருக்கிறது.

நோர்வே மத்தியஸ்த்தத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளும், இணைத்தலமை நாடுகளால் பிற்காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்த மீறல்களும் கூட ஒரு "தீவிரவாத எதிர்ப்பு யுத்தம்" என்ற நோக்கத்தில் செய்யப்பட்டவை தானா என்கிற சந்தேகம் தமிழர் வட்டாராத்தில் தற்பொழுது பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. "நிலையான மக்கள் விசாரனை மன்றத்தினால்" டப்லின் நகரில் நடத்தப்பட்ட விசாரணைகளிளும் இவ்வினா எழுப்பப்பட்டது குறிப்பிடத் தக்கது.

அநீதியான இந்தப் போரின் உச்ச கட்டத்தில் உலகெங்கும் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் உலக நகரங்களின் தெருக்களில் இறங்கித் தமது சொந்தங்களுக்காக லட்சக்கணக்கில் குரல் கொடுத்த சம்பவங்கள் இதுவரை உலகம் பார்க்காதவை. அவர்கள் கேட்டதெல்லாம் இந்த அநீதியான போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது மட்டும்தான்.

இந்த அநீதியான போரை முன்னெடுத்து முடித்து வைப்பதற்கு அடக்குமுறை அர்சுக்கே ஆதரவளித்ததன் மூலம் பாரியளவு மனிதப் படுகொலைகளுக்கும், சித்திரவதைச் சிறையடைப்புகளுக்கும், இற்றைவரை தொடரும் தமிழினம் மீதான அட்டூழியங்களுக்கும் வழிசமைத்ததன் மூலம் எந்தவகையான சர்வதேச ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது என்று பார்த்தால் மிஞ்சுவது விரக்தியும் வேதனையும்தான்.

ஆனால் ஒன்று மட்டும் மிகத் தெளிவானது - அதாவது இதில் ஈடுபட்ட சக்திகளால் தமிழர்க்கு ஒரு நீதியான தீர்வை இன்று பெற்றுத்தர முடியாதென்றால், அது அவர்கள் மேல் தீவிர பிரதிபலிப்பை ஏற்படுத்தப் போகிறது.

முக்கியமாக அமெரிக்காவின் மேலும், நேட்டோவின் மேலும் இது தீவிர பிரதிபலிப்பை ஏற்படுத்துவதோடு, புதிய உலக ஒழுங்கை நிலைநிறுத்தும் அவர்களது செயற்பாடுகளிளும், ஆப்கானிஸ்த்தானை விட்டு வெளியேறும்போது அவர்கள் வழங்கவிருக்கும் அரசியல் நீதியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

ஆப்காண் போர் நடவடிக்கைகளின் விளைவுகள் எவ்வாறு இருப்பினும், இலங்கையில் தமிழினத்துக்கு அரசியல் நீதியைப் பெற்றுத்தர அமெரிக்கா தவறுமிடத்து அது மேற்குல நாகரீகத்தின் பாரிய வீழ்ச்சியாக கணிக்கப்படப்போகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை 1987 ஆம் ஆண்டுப் போரின் தோல்வியானது சில தனிநபர்களினதும், சில ராணுவ ஜெனரல்களினதும், சில அரசிய கொள்கை வகுப்பளர்களினதும் தன்மானப் பிரச்சனையாக மாறியிருக்கிறது. ஆனால் இலங்கையில் இந்தியா அடையவிருக்கும் அரசியல் தோல்வியென்பது அதன் தேசிய ஒருமைப் பாட்டிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

சிலவேளை இதே கரானங்களுக்காகவோ அல்லது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் அபகீர்த்தியை உண்டுபண்ணுவதற்காகவோ சீனாவும் ரஷியாவும் இலங்கைப் பிரச்சனையில் விளையாடி வருகின்றன, ஆனால் இவர்கள் ஏற்கனெவே நலினப்பட்ட தமிழினத்தை மென்மேலும் நலிவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு அநீதியான போர், அப்போருக்கான ஆதரவு, ஒரு அநீதியான போரின் வெற்றி - இவையெல்லாமே இப்போது நடைமுறைச் சாத்தியாமாக்கப்பட்டுள்ளன. போரின் பின்னரான பலப் பரீட்சைகள், உலகளாவிய செல்வாக்கு இவையெல்லாமே சிங்கள அரசிற்கு அளவிற்கதிகமான உற்சாகத்தைக் கொடுத்திருப்பதோடு, உலகிலேயே முதன் முறையாக இந்த முறையில் நடத்தப்பட்ட அநீதியான யுத்தத்திற்குப் பின்னர் தமிழர்க்கு எந்தவித அரசியல் நீதியும் தரப்படத் தேவையில்லை என்கிற சிந்தனையையும் கொடுத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இனி எப்போதுமே சுதந்திரப் போராட்டங்கள் இவ்வாறான அநீதியான போர்களின் மூலம் வெற்றிகரமாக கைய்யாளப்படலாம் என்கீர கருதுகோளையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் சிங்கள அரசானது ஒவ்வொரு நாளும் வெளிப்படையாகவே இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொழும்பின் போர்குற்றமானது முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறவில்லை.

பாதிக்கப்பட்டவர்களை தம்மை அழித்தவர்களிடமே கைய்யளித்திருக்கும் இந்தச் சர்வதேச அமைப்புகளுக்கு நன்றிகள், போர்க்குற்றமானது தமிழர்களின் இன்றைய வாழ்விலும், அவர்களது தன்மானத்திலும், அவர்களது சொத்துக்களின் மேலும் சிங்களத்தால் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.

இவ்வாறான சிங்களத்தின் இனவழிப்புச் செயற்பாடுகள் இதுவரை காலத்தையும் விட இன்று மிகவும் அதிகமாக நடைபெற்று வருவது திரும்பத் திரும்ப ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறது, அதாவது தமிழரைப் பொறுத்தவரை தனியான தமிழீழத்தைத் தவிர வேறு எந்தமுறையிலும் தமது வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதைத்தான்.

முன்னர் கொழும்பில் பணியாற்றிய இந்திய அதிகாரியான பரத்குமார் தனது மே, 2009 அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

"ஐரோப்பியர்கள் சிங்கள அரசிற்கெதிராக போர்க்குற்ற விசாரனைகளைச் செய்ய முடியும் என்று கனவு காண்கிறார்கள், என்னே ஒரு அறியாமை"

" நாம் சிங்களவர்களுக்கு இனிவரும் காலங்களில் எவ்வாறு சாதுரியமாக, தமது செயற்பாடுகளை மிகவும் ரகசியமாக முன்னெடுக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப அறிவுறுத்தி இருக்கிறோம், ஆனால் அவர்கள் எல்லாவற்றையுமே பகிரங்கப்படுத்தி விட்டார்கள்"

"ஆனால் அவர்களிடம் தமிழர்க்கான தீர்வு எதுமே இல்லையென்று நாங்கள் நினைக்கவில்லை, ஒன்று ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இருக்கிறது"

" அவர்கள் ஏற்கனவே தமிழர் பிரச்சனையை திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் தீர்த்துவைத்திருப்பதைக் கவனியுங்கள், இந்த மாவட்டங்கள் எதிலுமே தமிழர்கள் இன்று பெரும்பான்மையாக இல்லை"

"இவ்வாறே தமிழர்கள் தமது தாயகமான வட மாகாணத்திலும் சிறுபான்மையினராக்கப்படுவார்கள். ஆனையிறவிற்கு வடக்கே இடம்பெறப்போகும் புதிய சிங்களக் குடியேற்றங்களுடன் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டியிருக்கும்"

"இன்னொரு பத்துவருடத்தில் பாருங்கள், தமிழரின் பிரச்சனை என்பது இந்திய உபகண்டத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்று பின்னர் அழிந்து போன ரத்த வரலாறாக மாறிவிடும்"

"எமது கரங்களில் படிந்துள்ள ரத்தக்கறை பற்றிப் பேசலாம், உண்மையிலேயே அருவருக்கக் கூடியதுதான், ஆனால் வரலாற்றில் எமது கரங்களில் ரத்தக்கறை படிந்தது இதுவே முதல்தடவையுமல்ல"

"எங்கள் வாரத்தைகளை நம்புங்கள், இந்த அழிவு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை, ரத்தம் ஒருபோதுமே கறைகளை விட்டுச் செல்வதில்லை"

பரத்குமார் சிலவேளை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்ட எண்ணியிருக்கலாம், ஆனால் தமிழரின் சுதந்திரப் போராட்டத்தினை ஒரு "திவ்விரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான சந்தர்ப்பமாகப்" பார்த்ததன் மூலமும், இதுவரையிலும் தமிழர் பிரச்சனைக்கு நியாயமான தீர்வொன்றைத் தர முடியாதிருப்பதன்மூலமும், இவர்களது நோக்கங்களும் இனவழிப்புச் சிங்களத்தின் நோக்கங்களும் ஒன்றோவென்று எண்ணத் தோன்றுகிறது.

தற்போதுள்ள கேள்வியென்னவென்றால் தமிழர்களது வாய்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போர்க்குற்ற விசாரணைகள் என்பது எந்தவகையான நீதியான விசாரணைகளையும், தமிழர்கான நீதியான அரசியல் தீர்வையும் தரப்போகிறது என்பதுதான்.

சிங்கள அரசுமீதான் அழுத்தங்களுக்காக போர்க்குற்ற விசாரனைகளை ஆரம்பிப்பதன் மூலம் இந்த நாடுகள் தமிழர்க்குச் சொல்லும் செய்தி என்னவென்றால், " எல்லா வழிகளுமே மகிந்த ராஜபக்ஷவை நோக்கித்தான் செல்கின்றன" என்பதைத்தான்.

மேற்கு நாடுகளின் இந்த செயற்பாடே சிங்களத்தின் தைரியமாக மாறியிருக்கிறது.

மேற்குலகின் நிரந்தர அங்கமாகிப் போயிருக்கும் புலம்பெயர் தமிழர்கள் உணரவேண்டியது என்னவென்றால், தமது ஒற்றுமையான கருத்தென்பது சிங்களத்தின் உலகளாவிய செல்வாக்கிற்கு நிகரானது என்பதைத்தான்.

இதை புலம்பெயர் தமிழர்கள் உணர்கிறார்களோ இல்லையோ, சிங்களம் நன்றாக உணர்ந்துகொண்டதன் விளவுதான் அது இன்று புலம்பெயர் தமிழரைத் தனது பிடிக்குள் கொண்டுவர எடுத்துவரும் நடவடிக்கைகள்.

தன்மீது பிரயோகிக்கப்பட்டு வரும் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பும் ஒரு வழிமுறையாகத்தான் அது இன்று நடத்திவரும்"புலம்பெயர் தமிழருடனான புரிந்துணர்வு நாடகங்கள்". அதையும் மிகவும் சாதுரியமாக " தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் " மூலம் செய்துவருகிறது.

கொழும்பு அரசானது தனது போர்க்குற்ற நண்பர்களுடன் சேர்ந்தே விசாரணைகளை முகங்கொடுக்க தீர்மானித்திருக்கிறது. இந்த "தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்" சூத்திரதாரிகள் நோர்வே தலமையிலான சமாதான நடவடிக்கைகள் ஏன் தோலிவியடைந்தன என்கிற ஆராய்ச்சியையினையும் செய்யக்கூடும்.

புலம்பெயர் தமிழர் சமூகம் செய்யக்கூடியதும், செய்ய வேண்டியதும் என்னவென்றால், தமிழர்க்கு மட்டுமல்லது முழு மனித வர்க்கத்திற்கும் நீதியான தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்க உழைப்பதும், ஈழத் தமிழர்க்கு நடந்ததைப்போன்ற அக்கிரமங்களை இனி எந்தவொரு நாடும் எவருக்குமே செய்வதற்குக் கனவிலும் கூட நினைக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வதும்தான்.

மனித நாகரீகம் எனப்படும் ஒரு முக்கிய நோக்கத்துக்கக புலம்பெயர் தமிழர் அரசியல் செயல்ப்பாட்டு அமைப்புக்களை இன்று நிறிவியிருக்கிறார்கள், இவ்வமைப்புகள் தமது கடமைகளிருந்து ஒருபோதுமே தவறக்கூடாது.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகிலன் என்பவர் அண்மையில் எழுதிய பத்திரிக்கை குறிப்பில், ஈழத் தமிழர் சிலர் தமக்கிடையே வாக்குவாதப் படுகையில் "புலிகளை முற்றாக அழிப்பதன்மூலம், இந்தப் போரை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்" என்று கோரியபோது தான் மிகவும் வருந்தியதாகக் குறிப்பிடுகிறார்.

சிலவேளை இவ்வாறான தனிநபர்களும், "தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்" பற்றி எழுதும் தமிழ் எழுத்தாளர்களும் உண்மையிலேயே புலிகள் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியல் இவ்வாறு செயற்படுகிறார்களோ என்று புல்மபெயர் தமிழர் எண்ணக் கூடும். ஆனால் ராஜபக்ஷவினால் புனையப்படும் பொய்களும், தமது "தீவிரவாத - எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு " கிடைக்கும் அபரிதமான "சந்தை வாய்ப்பும்" அவர்களை இதையும் மீறி தமிழரின் அடிப்படைப் பிரச்சனையையே தவறென்று வாதிடும் நிலமைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

இவ்வாறானவர்களில் சிலர், போர்க்குற்றங்கள் புலிகளாலேயே முதன் முதலாக ஆரமிபிக்கப்பட்டதாக இப்போது எழுதவும் பேசவும் தொடங்கிவிட்டனர், ஆனால் சிங்களத்தின் மீதான போர்க்குற்ற விசாரணைகள் தேவையற்றவை என்பதுதான் அவர்களின் வாதம்.

போர்க்குற்றங்களை மூடி மறைப்பதன் மூலமும், இன்றும் நடைபெறும் போர்க்குற்றங்களை ஊக்குவிப்பதன் மூலமும் இவ்வாறான தனிநபர்கள் செய்வதெல்லாம் சர்வதேச அரங்கில் மகிந்த ராஜபக்ஷவின் மனித குலத்திற்கெதிரான நிலைப்பாட்டை நியாயப்படுத்துவது மட்டும்தான்.

தாயகத்திற்கு புலம்பெயர் மக்கள் உதவுவதில் இருவேறு பேச்சிற்கு இடமில்லை. அவர்கள் முன்னரும் செய்தார்கள், இப்போதும் செய்கிறார்கள், இனிமேலும் செய்வார்கள், ஆனால் அவர்கள் தமக்குச் சரியெனத் தெரியும் வழிகளில் அதைச் செய்கிறார்கள். நாம் அந்த வழிகள் பற்றி ஆராயத் தேவையில்லை. புலம்பெயர் தமிழரிடம் இன்று ஒரு முக்கிய கடமையிருக்கிறது, அதாவது தமது சொந்தங்களின் உரிமைக்காகப் போராடுவது.

தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்துச் சிங்களக் குடிய்யேற்றங்களில் ஈடுபட பணமிருக்கும் ஒரு அரசிற்கு, தனது ஆக்கிரமிப்பு ராணுவத்தை சகல வசதிகளுடனும் தமிழர் தாயகத்தில் வைத்திருக்கப் பணமிருக்கும் ஒரு அரசிற்கு, ஆனால் அந்த மண்ணின் சொந்தக்காரர்களான தமிழர்களுக்குப் புனர்வாழ்வளிக்க மறுக்கும் ஒரு இனவாத அரசிற்கு ஏன் புலம்பெயர் தமிழர் பணம் கொடுக்க வேண்டும்?

சிலர், இலங்கையிலிருக்கும் தமிழர் மற்றவர்களிடம் பிச்சைக்காகக் கைய்யேந்தத் தேவையில்லை என்று கூறுவார்கள், ஆனால் நிலமை அதைவிட மோசமானது. "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்பதுதான் அவர்கள் கேட்பது. அந்த நாய்கள் திரத்தப்பட வேண்டியவை.

புலம்பெயர் தமிழரின் ஒரு பகுதியினர் சமாந்தர அரசியல் வழிமுறைகளிளும், ராசதந்திர ரீதியிலும் செயற்பட வேன்டும் என்று நினைக்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் அதுவே எமது முன்னிலைப் போராட்டமாக இருக்க முடியாது. மக்களைப் பொறுத்தவரை நேர்முறையான அரசியலும், தமது அபிலாஷைகளைப் பிரதிபலிக்கக் கூடிய அரசியல் தலமையுமே தேவைப்படுகிறது.

தமிழர்க்கான தாயக்ம் எனும் கோற்பாடு, சிறு பகுதி தமிழர்களால் மட்டுமே தூக்கிப்பிடிக்கப்படுகிறது, பெரும்பாலானவர்கள் அதைக் கைவிட்டு விட்டனர் என்கிற திட்டமிட்ட விசமக் கற்பிதம் "தீவிரவாத - எதிர்ப்பு நடடிக்கை" சக்திகளால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமக்கு நீதியான அரசியல் தீர்வொன்று தரப்படும்வரை தமிழர்களின் மனதில் கணன்று கொண்டிருக்கும் கோபம் தணியப்போவதில்லை.

போர்க்குற்றங்களுக்கான விசாரணைகள் ஒரு நியாயமான தீர்வை தராமல் போனாலோ அல்லது இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து சிங்கள அர்சிற்கு முண்டு கொடுப்பது தொடர்ந்தாலோ புலம்பெயர் தமிழரும், தமிழ்நாட்டுத் தமிழரும், முற்போக்குச் சிங்களவர்களும் தம்மை ஒரு நீண்ட உலகளாவிய அரசியல் புரட்சிக்காகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

உண்மை என்னவென்றால், விடுதலைப் புலிகள் என்கிற அமைப்பே இதுவரை அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இலங்கைக்குள் ஊடுருவதற்கு தடைக்கல்லாக இருந்துவந்தது அல்லது இவ்விரு நாடுகளின் ஒன்றின் இலங்கை மீதான சுய ஆதிக்கத்திற்கு தடையாக இருந்தது. இதை விரைவில் சிங்களச் சமூகம் உணர்ந்துகொள்ளும், அதுமட்டுமல்லாமல் தமிழர்க்கு சுயநிர்ணய உரிமையைக் கொடுக்காததன் விளைவையும் அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

விடுதலைப் புலிகள் இன்று மவுனமாக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கைதொடர்பாக தமக்கிடையிலான "புரிந்துணர்வு பங்களிப்பை" நிறுவும் இறுதிச் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. இலங்கை நாட்டில் இரு தேசங்கள் என்கிற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு இரண்டையும் சமமாகப் பார்ப்பதன் மூலம் மட்டுமே இதை அவர்கள் செய்ய முடியுமென்பதுதான் இன்றைய யதார்த்தம்.

நன்றி தமிழ்நெட்

தமிழாக்கம் ரகுனாதன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நெற், ஆங்கில இணையத்தளத்தில், வெளியிடப்படும் இதுபோன்ற ஆய்வுக் கட் டுறைகளைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவது வரவேற்கப்படவேண்டிய து .

சூடான் அதிபர் ஓமர் மீது இன அழிப்பு குற்றம்

சூடானில் டார்பூர் என்ற இடத்தில் நடந்த இனப்படுகொலை நம் அனைவரும் அறிந்ததே. 2003ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டு வரை நீடித்த இந்த பயங்கரத்தின் மூலம் உயிர் இழந்தோர்கள் சுமார் 3 லட்சம் நபர்கள். உள்நாட்டிலே அகதிகள் ஆனோர் 2 மில்லியன் நபர்கள். இது ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட புள்ளி விபரம்.

ICC (International Criminal Court) யில் சில வருடங்களுக்கு முன்பு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சூடான் அரசில் அமைச்சர்களாக இருக்கும் இருவருக்கு முன்பே அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்க பட்டும் உள்ளது. இப்பொழுது அதிபர் ஓமர் மீது இன அழிப்பு குற்றம் சுமத்தபபட்டுள்ளது.

http://www.nationalpost.com/President+Sudan+charged+with+genocide/3266582/story.html

http://www.guardian.co.uk/world/2010/jul/12/bashir-charged-with-darfur-genocide

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.