Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் உண்மை நிலையை அறிய சிறப்பு தூதரை அனுப்ப வேண்டும்: பிரதமருக்கு கலைஞர் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை, 17, ஜூலை 2010 (17:4 IST)

இலங்கையில் உண்மை நிலையை அறிய சிறப்பு தூதரை அனுப்ப வேண்டும்:

பிரதமருக்கு கலைஞர் கடிதம்

பிரதமர் மன்மோகன் சிங், முதலமைச்சர் கருணாநிதிக்கு நேற்று கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில், ‘’இலங்கையில் தமிழ் சிறுபான்மை மக்கள் நிலைகுறித்து தாங்கள் எழுதிய கடிதத்திற்கு பெரிதும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த மாதத்தில் இலங்கை பிரதமர் வருகை தந்தபோது அவருடன் விவாதங்களோடு, அண்மையில் வருகைபுரிந்த இலங்கை நாடாளுமன்றத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினரின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளேன்.

இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் அங்கு வாழ்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எனது அரசு உறுதியாக மேற்கொள்ளும்.

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை விரைந்து மேற்கொள்வதன்மூலம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பான வாழ்க்கையை மீண்டும் கொண்டு வருவதில் இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்த மறுவாழ்வுப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் வழங்குவதாக நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம்.

மேலும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதும், மேலும் அங்குத் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அப்பகுதிகளில் நிலையான பொருளாதார நடவடிக்கைகள் தொடர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளதைத் தாங்கள் அறிவீர்கள்.

இந்திய அரசு இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரசியல் தீர்வு தொடர்பான முயற்சியில், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கான நடைமுறைகளில் தங்களுடைய கருத்துகளையும், ஆலோசனைகளையும் பயன்படுத்திக்கொள்வேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலலங்கைத்தமிழர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ‘’இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகள் எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே, இலங்கையில் உண்மை நிலையை அறிய சிறப்பு தூதரை அனுப்ப வேண்டும்’’என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

nakkheran

Edited by கறுப்பி

சிங்கள பயங்கரவாதிகள் வீசும் எலும்புத் துண்டுகளை நிறைய அள்ளிக்கொண்டு வந்து கொலைஞருக்கு கொடுக்கக் கூடியவராக அந்த சிறப்புத் தூதுவர் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருப்பார்.

சிங்கள பயங்கரவாதிகள் வீசும் எலும்புத் துண்டுகளை நிறைய அள்ளிக்கொண்டு வந்து கொலைஞருக்கு கொடுக்கக் கூடியவராக அந்த சிறப்புத் தூதுவர் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருப்பார்.

ஆராவமுதன் எலும்புத் துண்டுக்காக தான் மகிந்தவுக்கு ஆதரவு குடுக்கிறார் என்று நீங்கள் சொல்வது தவறு. ஏன் என்றால் அவரிடம் போதுமான அளவு பணமும் அரசியல் பலமும் இருக்கு, இப்போது அவரது சிந்தனை முழுக்காக தன்னையும் தனது குடும்பத்தையும் தமிழ் இனத்தின் கடவுளாக மாற்றுவது எப்படி என்பதே அவரது யோசனை, இதனால்தான் அவர் எமது போராட்டத்தை அழிக்க உதவினார், ஏன் என்றால் எங்கே தமிழ் ஈழம் உருவானால் தனது வரலாறு மறைக்கப்பட்டுவிடுமே என்ற பயத்தில் தான் எல்லக் கூத்தும் நடந்தது. இதற்காகத் தான் தமிழனின் 2000 ஆண்டு கால வரலாறு மறைக்கப்படுகிறது,எமது கலாச்சாரம் கேவல்ப்படுத்தப்படுகிறது. 2008ம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் திராவிட இயக்க கொள்கைகள் வழுக்கட்டாயமாக யாழ் களத்தின் ஊடாக எமக்குள் திணிக்கப்பட்டது. கொலஞனரிடம் மகிந்தவுக்கே தீணி போட காசு இருக்கு

Edited by Dash

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களைப் பற்றி பேச மற்ற எந்தகட்சிக்கும் உரிமை இல்லையாம்! ஆனால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு அடுத்த நாட்டில் வாழும் அந்த நாட்டு பிரஜைகளைப்பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.