Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரியில் சிங்களவர்களை குடியேற்றும் செயற்பாடுகளில ஸ்ரீலங்கா அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரியில் சிங்களவர்களை குடியேற்றும் செயற்பாடுகளில ஸ்ரீலங்கா அரசு

திகதி: 20.07.2010 // தமிழீழம்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் சிங்களவர்களை குடியேற்றும் செயற்பாடுகளில ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி வலைப்பாடு கிராமத்தில் 225 வரையான குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு கடற்தொழில் செய்துவருகின்றார்கள்.

கடல்வளம் அதிகாமாக காணப்படும் இடமாக வலைப்பாடு கடற்பகுதி காணப்படுகின்றது. இன்னிலையில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை கருத்தில் எடுத்து செயற்படாத ஸ்ரீலங்கா அரசு தற்போது வலைப்பாட்டில் ஐஸ் தொழில்சாலை ஒன்றினை கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள கடற்தொழிலாளர்களுக்கு கடற்தொழில் உபகரங்கள் எவையும் வழங்காத ஸ்ரீலங்கா அரசு தொழிற்சாலை அமைப்பதன் ஊடாக சிங்கள கடற்தொழிலாளர்களை குடியமர்த்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

சங்கதி

தமிழ்ப் பகுதிகள் சிங்களமயமாவதை தடுக்க இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 20, 2010: இலங்கையில் உள்ள தமிழ்ப் பகுதிகள் சிங்களமயமாவதை தடுக்க வேண்டும் என்றும், தமிழர்களின் மறுவாழ்வுக்கு உரிய உதவிகள் புரிந்திட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் இலங்கை தமிழ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

சம்பந்தன், சேனாதி ராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகிய இலங்கை தமிழ் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை சென்னையில், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்தச் சந்திப்பு குறித்து இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள், நிருபர்களிடம் கூறியது:

"முதல்வர் கருணாநிதியை சந்தித்து, இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்னை குறித்து பேசியிருக்கிறோம். ஏற்கெனவே, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அரசியல் தீர்வு ஏற்படும் என்று 2006-ல் இந்தியப் பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரையில் அது இலங்கை அரசினால் நிறைவேற்றப்படவில்லை.

இதுதொடர்பாக, இலங்கை அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தும், அவர்கள் இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இலங்கையில் உள்ள நமது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இன்னும் அவரவர் பகுதிகளுக்கு குடியேற்றப்படாமல் இருக்கிறார்கள். அந்தப்பகுதிகளில் எல்லாம் இன்னும் புனரமைப்புப் பணிகள் நடைபெறாமல் உள்ளன. இந்த புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதாக இந்திய அரசு நிதியுதவி செய்திருக்கிறது. அதற்காக இந்திய அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

ஆனால், வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள், ஒரு வருட காலமாகியும் இன்னும் அவரவர் பகுதிகளில் பழைய வாழ்க்கையை ஆரம்பிக்க இயலாத சூழ்நிலையே உள்ளது. சிங்களர்களும் குடி அமர்த்தப்பட்டு வருகிறார்கள். ஆனால், நமது மக்களுக்குத் தேவையான வீடுகளை கட்டித் தருவதில் இன்னும் பணிகள் மெத்தனமாகவே உள்ளது.

ஆனால், வடகிழக்குப் பிரதேசத்திலும், வன்னி பிரதேசத்திலும் பெரும்பாலான இடங்களை ராணுவ மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்ப் பகுதிகள் சிங்களமயமாக்கும் நடவடிக்கை நாள்தோறும் நடைபெறுவதால் தமிழ் மக்களுக்கு பெரும் ஆபத்தான நிலை உருவாகி வருகிறது.

ஒருபுறம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; மற்றொரு புறம் நமது மக்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும். எனவே, இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த இந்திய அரசும், தமிழக முதல்வரும் உதவி செய்ய வேண்டுமென்று நாங்கள் உறுதியாகக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

எங்களுடைய கருத்துக்களை மிக கவனமாகக் கேட்டுக்கொண்ட, முதல்வர் கருணாநிதி தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.

இலங்கைக்கு இந்திய அரசு சிறப்புத் தூதரை அனுப்ப வேண்டுமென்ற தமிழக முதல்வரின் கோரிக்கை வரவேற்புக்குரியது. இந்திராகாந்தி காலத்திலேயே முதல்வர் கருணாநிதி இதுபோன்று விசேஷ தூதரை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்று கேட்டார். இப்போதும் கோரிக்கை விடுத்திருக்கிறார். அது நல்ல கருத்து," என்றனர்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிகழ்வு, 1983 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதற்கொரு முடிவு வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.

இந்திய பிரதமர் இலங்கையில் அரசியல் தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் தீர்வு இன்னும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அரசியல் தீர்வு ஏற்படாத அதே நேரத்தில், தமிழ் பேசும் மக்கள், அவர்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே மீண்டும் குடியேற தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது தான் மிக முக்கியமான கோரிக்கையாக இப்போது உள்ளது," என்று இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

http://www.vikatan.com/news/news.asp?artid=4137

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.