Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கை

Featured Replies

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்த விடயங்களைக் கையாள்வதற்காக சர்வதேச குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும், ஜனநாயக செயற்பாட்டுக்கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் பி.ராமசாமி துரிதப்படுத்தியுள்ளார்.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை உள்ளடக்கி இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த குழு, வரும் சில மாதங்களுள் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி, ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராமசாமி தெரிவித்ததாக மலேசியாவிலிருந்து வெளியாகும் 'த சன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ராமசாமி மேலும் கூறுகையில்,இலங்கை அரசாங்கம் இறுதி யுத்தத்தின் போது மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூனிடம் கையளிக்கப்படும் என கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு, இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் உறுப்பினர்கள் பொறுப்பு கூறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பி.ராமசாமி, ஏற்கனவே கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக, இடைக்கால நிர்வாக கட்டமைப்பு முன்யோசனை வரைவு ஒன்றை முன்வைத்திருந்தார்.எனினும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.

அத்துடன் நார்வே அரசாங்கத்தினால் இலங்கையில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த காலப்பகுதியில், பி.ராமசாமி கிளிநொச்சியில் வைத்து, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு 10 நாட்கள் அரசியல் செயலமர்வு ஒன்றையும் நடத்தியுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மாதம், இந்தியாவில் நடைபெற்ற இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான கூட்டம் ஒன்றில் பேசுவதற்கு அவருக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.எனினும் அதனை அவர் நிராகரித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் இந்திய அரசாங்கத்துக்கு அனுப்பி இருந்த கடிதத்தில், இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, மலேசிய தமிழர்கள் ஆவேசம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1008/09/1100809027_1.htm

Ramasamy to spearhead committee on genocide in Sri Lanka

The group, comprising NGOs, activists and politicians, is expected to be operational within a few months, and would collect evidences of the genocide with the aim of presenting a case to the United Nations (UN) Human Rights Panel, Ramasamy said.

Ramasamy said that those involved, including leaders in the Sri Lankan and Indian governments who were responsible for the genocide, should be brought to book.

http://www.sun2surf.com/article.cfm?id=50433

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.