Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆராய்வு:த.க.அரங்கம் _

Featured Replies

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய உடனடித் தேவைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சாத்தியமான வழியில் விரைவாகத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கத்தினால் நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி கூட்டம் கிழக்கு மாகாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் 9 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்துக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அவர்கள் உத்தியோகபூர்வமான முறையில் பதிலளிக்கவில்லை எனத் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் தெரிவித்துள்ளது.

உட்கட்டமைப்புடன் கூடிய மீள் கட்டுமானம், உயர் பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாக அகற்றுதல், வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டு வரும் இராணுவக் குடியேற்றங்களை அகற்றல், முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுத்தல், வடக்கு, கிழக்கு உட்பட தமிழ்பேசும் பகுதிகளின் இடப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தல், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை தளர்த்துதல், மீள்குடியேற்றத்தினை வெளிப்படையாகச் செய்வதுடன் அவற்றுக்கு மக்கள் பிரதி நிதிகள், சர்வதேச, உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளல், 13 ஆவது அரசியல் யாப்பின் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துதல் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26325

Tamil memo to MR

Tamil political parties have drafted a memorandum to be submitted to President Mahinda Rajapaksa which also calls for the implementation of the 13th Amendment as well a political solution to the Tamil issue.

With the war now over and the LTTE also eliminated the Tamil parties have also urged President Mahinda Rajapaksa to release or expedite cases against Tamil political prisoners who are in jails around the country.

The Tamil parties which are to submit the memorandum includes the Tamil Makkal Viduthalai Pullikal (TMVP) led by Eastern Province Chief Minister Sivanesathurai Chandrakanthan, the EPDP led by Minister Douglas Devananda and the TULF led by V. Ananda Sangaree.

TMVP spokesman Azad Maulana said that the Tamil parties met in Batticaloa over the weekend and agreed on the memorandum to be submitted to the President and also decided to invite the Tamil National Alliance (TNA) for future talks.

The Tamil parties have been meeting over the past few weeks but the TNA has so far not attended the talks, which was initiated by EPDP leader Minister Douglas Devananda. (Daily Mirror online)

  • தொடங்கியவர்

ஒட்டு/ஒட்டில்லா குழுக்களை சேர்ந்தோரே வணக்கம்,

புலி அழிவுடன் பெட்டியை கட்டி வைத்த உங்களுக்கு திடீர் ஞானம் உருவாகியிருகிறது. வாழ்த்துக்கள்!

கவனம் உதுகளையும் உங்களுடன் சேர்ந்து கதைத்து விட்டு உப்படியே கவிட்டு புரட்டவும் உங்களுக்குள்ளேயே மன்னவர்கள் இருக்கிறார்கள்!!! ... பார்ப்போம் எவ்வளவு தூரம் போக போகிறீர்கள் என்று???????!!!!!

உங்கள் கோரிக்கைகள் மிக குறைந்தபட்சமானவை, அதை சிங்களம் ஏற்கும் என நினைக்கிறீர்களா??? ... ஏற்றால் ....

.... இங்கிருந்து கொண்டு ... கட்டளைக்காக காத்திருக்கிறோம் என பணத்தை சுற்றுவோரிடமிருந்தும், நம்பிக்கையே வாழ்க்கை என கெலிகொப்டர் விடுபவர்களிடமிருந்தும் .... எஸ்கேப்பாகி ... நெக்டோ உடைத்து விரதம் முடிப்பவர்களுக்கு மேலாக .... லயன்லாகர் அடித்துக் கொண்டாட வருகிறேன்!

வரும் காலங்கள் பதில் சொல்லும் ...

உட்கட்டமைப்புடன் கூடிய மீள் கட்டுமானம்,

உயர் பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாக அகற்றுதல்,

வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டு வரும் இராணுவக் குடியேற்றங்களை அகற்றல்,

முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுத்தல்,

வடக்கு, கிழக்கு உட்பட தமிழ்பேசும் பகுதிகளின் இடப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தல்,

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை தளர்த்துதல்,

மீள்குடியேற்றத்தினை வெளிப்படையாகச் செய்வதுடன் அவற்றுக்கு மக்கள் பிரதி நிதிகள், சர்வதேச, உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளல்,

13 ஆவது அரசியல் யாப்பின் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துதல் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு சில விடயங்களை பாராட்டலாம்.

(1) ஒன்றுபட்டு கதைத்தது

(2) அறிக்கையில் குறிப்பிட்ட தீர்மானங்கள்.

இந்த ஒன்றுபடுதலுக்கு பின்னணியில் இந்திய அரச பயங்கரவாதிகளின் பங்களிப்பை ஏற்கனவே முதலமைச்சர் கூறிவிட்டார். சிங்கள பயங்கரவாதிகளின் எலும்புத் துண்டுகளை நக்கிப் பழகிய இந்திய ராஜதந்திர பயங்கரவாதிகளின் பிடியில் சிங்களப் பயங்கரவாதிகள் சிக்காமல் தொடர்ந்து, இந்திய அரச பயங்கரவாதிகளுக்கு மாயா ஜாலம் காட்டும் பின்னணியில் தமிழ் அரங்கம் கூடி வருகிறது.

ஒருபுறம், இந்திய அரச பயங்கரவாதிகளின் நிகழ்ச்சி நிரலின் படி ஆடும் சம்பந்தன் தாயகத்தில் ஜனநாயக அரசியல் பலத்தை தமிழ் மக்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சர்வதேச அங்கீகாரத்தை பெறும் சாத்தியம் கொண்ட கூட்டமைப்பை சிதைத்து வருகிறார். முன்பு கஜேந்திரன் போன்றவர்கள் வெளியேற்றம், தற்போது முகுந்தன் வெளியேற்றம் என்று கூட்டமைப்பு சிதைப்பு சம்பந்தன் தலைமையில் நடைபெறுகிறது.

மறுபுறம் இந்திய அரச பயங்கரவாதிகளின் நிகழ்ச்சி நிரலின் படி தமிழ் அரங்கம் இயங்க முற்படுகிறது. இவர்களின் அறிக்கை மிகக் கவனமாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் செயற்பாடுகளை முறியடிக்கும் / குழப்பும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக அரசியல் போர்வையில், இவர்களின் கப்பம், கடத்தல், கொலை அராஜகங்களை தமிழ் மக்கள் அறிவர். இன்றும் இந்த அராஜகங்கள் தொடர்கின்றன. இவை நிறுத்தப்படும் என்ற அறிக்கையைக் காணவில்லை.

இந்த இரண்டு குழுக்களும் தனித்தனியாக தமிழர் நலன்களை மட்டும் முன்னிலைப்படுத்தி , தெற்காசிய அரச பயங்கரவாதிகளின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு முண்டு கொடுக்காமல், தமது அராஜங்களையும் நிறுத்தி, தமிழ் மக்களின் உரிமைக்காக உழைக்க முன்வருவார்களேயானால், மனம் திறந்து பாராட்டலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.