Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்கு பகுதிகளில் மீழ் குடியேற இராணுவம் அனுமதி!!

Featured Replies

ஈழ நாதம் ஞாயிற்று கிழமை

வடமராட்சி கிழக்கில் போர் முடிந்த பின்னரும் அங்கு மக்களை மீழ் குடியேற இராணுவம் இதுவரை அனுமதிக்கவில்லை. ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் யுத்த நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அனுமதி வழங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

நேற்று மாலை பலாலி படைத் தலைமையகத்தில் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையிலான குழுவினரிடம் இதற்கான உறுதிமொழியை வழங்கினார் தளபதி ஹத்துருசிங்க. முதற்கட்டமாக அம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த 81 குடும்பங்கள் நாளை திங்கட்கிழமை அங்கு மீளக்குடியமர்த்தப்படவுள்ளன.

ஏற்கனவே அம்பன் பிரதேசத்தில் ஒரு சிறிய பகுதியில் மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அனுமதி வழங்கப்பட்ட 81 குடும்பங்களும் மிக நீண்டகாலமாக தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப் படாமல் தற்காலிக இடங்களிலேயே குடியமர்த்தப் பட்டிருந்தன. இதில் 73 குடும்பங்களுக்கு தற்காலிக இடங்களில் தலா 2 பரப்பு அரச காணி வழங்கப்பட்டதுடன் அரச திட்டங்களின் கீழ் வீட்டு உதவிகளும் வழங்கப் பட்டிருந்தன.

மேலும் செம்பியன்பற்று வடக்கு (ஜே/426), செம்பியன்பற்று தெற்கு (ஜே/427), மருதங்கேணி (ஜே/428), வத்திராயன்(ஜே/429), உடுத்துறை (ஜே/430), ஆழியவளை(ஜே/431) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 2ஆயிரத்து 455 குடும்பங் களைச் சேர்ந்த 7ஆயிரத்து 531 பேர் மீளக் குடியமர்த்துவதற்கான அனுமதியையே நேற்று யாழ்.மாவட்டக் கட் டளைத் தளபதி வழங்கியதாக இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.