Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிருபாமா ராவிற்கு சுற்றுலா காண்பித்த படையினர்: மக்களை சந்திக்கவில்லை

Featured Replies

நிருபாமா ராவிற்கு சுற்றுலா காண்பித்த படையினர்: மக்களை சந்திக்கவில்லை

புதன்கிழமை, செப்டம்பர் 1, 2010

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபாமாராவின் நேற்றைய வடமாகாண விஜயம் வெறும் அரச அதிகாரிகளுடனான சந்திப்பாகவே இருந்தது. அவர் மீள்குடிய மர்த்தப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு செல்லவேயில்லை என வடக்கில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவுக்கு நேற்றுக்காலை விஜயம் செய்த நிருபாமா ராவ் இராணுவ அதிகாரிகளுடன் மெனிக் பாம் முகாமுக்கு விஜயம் செய்தார். பின்னர் ஓமந்தையில் இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். மெனிக் பாம் விஜயத்தின்போது ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

வவுனியா கச்சேரிக்கு முற்பகல் 11.30 மணியளவில் விஜயம் செய்த நிருபமா ராவ் அங்கு அரச அதிபருடன் பேச்சு நடத்திய பின்னர் கிளிநொச்சி புறப்பட்டுச் சென்றார். கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த நிருபமா ராவ் கிளிநொச்சி கச்சேரிக்கு விஜயம் செய்து அரச அதிபர் உட்பட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் பேச்சுகளில் கலந்துகொண்டார்.

நிருபாமாராவின் விஜயத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இடம் பெயர்ந்த மக்களும் பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பதுடன், அதிருப்தியும் தெரி வித்தனர்.

கிளிநொச்சி கச்சேரியில் அரச அதிபரைச் சந்தித்த வெளியுறவுச் செயலர் நிருபாமாராவ் வேறு எங்கும் செல்லாமல் அங்கிருந்து ஹெலி மூலம் யாழ். நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

Eelanatham.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.