Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிரட்டல், மோசடி, அத்துமீறல், அராஜகம் - வெற்றியை நோக்கி நகரும் சிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

makinda.jpgசிறிலங்காவின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் அரசியலமைப்பின் 18வது திருத்தம் நாடாளுமன்றத்தில் வரும் புதன்கிழமை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இது தொடர்பான பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்றியுள்ளன.

அரசியலமைப்புத் திருத்தத்துக்கு கருத்து வாக்கெடுப்பு தேவையில்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாக சிறிலங்கா பிரதமர் தகவல்

சிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின 18வது திருத்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ள அரசாங்கம், இதை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் கருத்தை அறிய வேண்டுமா என்று ஆலோசனை வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்திடம் கருத்துக் கேட்டிருந்தது.

அதேவேளை, இது தொடர்பாக மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரி பல அரசியல்கட்சிகள், அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

இந்தநிலையில் கடந்தவாரம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் இரகசியமாக வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு நாளை நாடாளுமன்றம் கூடும் போதே அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்னரே சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ண உயர்நீதிமன்றத் தீர்ப்பை மரபுக்கு மாறாக முறையில் வெளிப்படுத்தியுள்ளார். கருத்து வாக்கெடுப்பு நடத்த்த் தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கம்பளையில் நேற்று நடைபெற்ற பேரணியில் அவர் கூறியுள்ளார்.

இந்தப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, “ நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்புத் திருத்தமாக 18வது திருத்தம் வரலாற்றில் இடம்பிடிக்கும்.

இதற்காக மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றமும் கூறியுள்ளது“ என்று தெரிவித்தார். அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக நாடு ழுழுவதிலும் பேரணிகள்

அரசியலமைப்பின் 18வது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்றுத் தொடக்கம் அரசாங்கம் நாடு முழுவதிலும் பேரணிகள், பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. கம்பளையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட முதலாவது பேரணியைத் தொடர்ந்து அமைச்சர்கள், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது சொந்தத் தொகுதிகளில் பேரணிகளை நடத்தி வருகின்றனர். நேற்று மீரிகம உள்ளிட்ட பல பகுதிகளில் இதுபோன்ற பேரணிகள் நடத்தப்பட்டன. எதிர்வரும் புதன்கிழமை வரை தொடர்நது இத்தகைய பேரணிகளை நடத்தி எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்குமாறு அரசாங்கம் பணித்துள்ளது. சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் குதிக்கிறார் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பின் 18வது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாளை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். 18வது திருத்தத்துக்கு எதிரான இயக்கத்தின் சார்ப்பில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் அமைப்பாளர் சிறிரல் லக்திலக தெரிவித்தார். இந்தப் போராட்டம் நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலேயே நடைபெறவுள்ளது.

இந்த இயக்கம் அரசியலமைப்புத் திருத்தம் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ள எதிர்வரும் புதன்கிழமையை கறுப்பு நாளாக பிரகடனம் செய்திருப்பதுடன் வேலை நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அமைப்பில் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இடதுசாரித் தலைவர்களான சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ண, சரத் மனமேந்திர மற்றும் மனோ கணேசன், சுதந்திர ஊடக இயக்கம் போன்றனவும் அங்கம் வகிக்கின்றன. அஸ்கிரிய பீடாதிபதி ஆதரவு - மல்வத்த பீடாதிபதி மௌனம் அரசியலமைப்பின் 18வது திருத்தத்துக்கு அஸ்கிரிய பீடாதிபதி ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளை மல்வத்தை பிடாதிபதி தமது கருத்தை இன்னமும் வெளியிடவில்லை. அரசியலமைப்புத் திருத்தத்துக்கு தடையை ஏற்படுத்தும் இறுதி முயற்சியாக ஐதேக, அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகளின் காலைப்பிடித்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. நேற்றுக்காலை கரு ஜெயசூரிய தலைமையிலான ஐதேக பிரமுகர்கள் அஸ்கிரிய பீடாதிபதி உடுகம சிறி புத்தரகித்த மகாநாயக்க தேரரையும், மல்வத்தை பீடாதிபதி திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள மகாநாயக்க தேரரையும் சந்தித்து அதிகாரங்களைக் குவிக்கும் இந்த முயற்சிக்கு அதரவளிக்க வேண்டாம் என்று கோரினார்.

அதன் பின்னர் தலதா மாளிகைக்குச் சென்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அஸ்கிரிய பீடாதிபதியையும், மல்வத்தை விகாரைக்குச் சென்று மல்வத்தை பீடாதிபதியையும் சந்தித்துப் பேசினார்.

இதன்போது “அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தில் எந்த பயங்கரவாதப் போக்கும் கிடையாது. அதற்கு முழுமையான ஆசி வழங்குகிறேன். ஆதரிக்க வேண்டிய முக்கிய விடயங்களை ஐ.தே.க. ஆதரிப்பது அதன் தார்மீகப் பொறுப்பு“ என்று அஸ்கிரிய பீடாதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை மல்வத்தை பீடாதிபதியின் ஆதரவு அரசாங்கத்துக்கா அல்லது எதிர்க்கட்சிக்கா என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆதரவாக 160 வாக்குகள் கிடைக்கும் என்கிறார் அமைச்சர் டலஸ் அரசியலமைப்ப்பின் 18வது திருத்த யோசனை நாளை மறுதினம் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதமர் டி.எம்.ஜெயரட்ண இந்த்த் திருத்த யோசனையை நாடாளுமன்றத்தில் காலை 9.30 மணிக்கு சமர்ப்பிப்பார். அதையடுத்து இந்த திருத்த யோசனை மீதான விவாதம் ஆரம்பமாகும். இரவு 7மணி வரை விவாதம் நடத்தப்பட்டு இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்படும். இதன் போது கடந்த பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 15 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பர் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அத்துடன் இந்த அரசியலமைப்புத் திருத்தம் 160க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று சபையில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார். ஆதரவாக வாக்களிக்கும்படி அமைச்சர்களுக்கு மிரட்டல்

அரசியலமைப்பின் 18வது திருத்ததுதுக்கு ஆதரவாக வாக்களிக்கா விட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண மற்றும் டியு.குணசேகர ஆகியோரை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மிரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடதுசாரிக் கட்சிகளின் சார்ப்பில் சிறிலங்கா அரசாங்கத்தில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்கு அரசியலமைப்பின் 18வது திருத்தத்தில் உடன்பாடு இல்லை. எனினும் இதுபற்றி அவர்களின் இறுதி முடிவு இன்னமும் வெளியாகவில்லை. ஒன்றில் இவர்கள் எதிராக வாக்களிக்கலாம் அல்லது வாக்கெடுப்பு நேரத்தில் சபையில் இருந்து வெளியே செல்லலாம் என்று கருதப்படுகிறது. இந்தநிலையில் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஏற்ப அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் திஸ்ஸ விதாரணவையும் டியு.குணசேகரவையும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட ரீதியாக எச்சரித்துள்ளார்.

இல்லையேல் அமைச்சரவையில் இருந்து தூக்கியெறியப்படுவீர்கள் என்றும் அவர் மிரட்டியுள்ளார். சிறிலங்கா அதிபரின் இந்த மிரட்டலினால் அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, டியு. குணசேகர மற்றும் பிரதி அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஆகியோர் அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று இடதுசாரிக் கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.(நன்றி -புதினப்பலகை )http://www.tharavu.com/2010/09/18.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.