Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் 5 மில்லியன் ரூபா செலவில் குளங்கள் புனரமைப்பு (பட இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 72 குளங்களில் முதலில் பூநகரி, பச்சிலைப்பள்ளி, கரச்சி, முழங்கா போன்ற பிரதேசங்களிலுள்ள 36 குளங்கள் 5 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.இந் நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பமாக உள்ளது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 36 குளங்களின் புனரமைப்புப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு, பத்தரமுல்ல ஆளுநர் உபகாரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.இக்கலந்துரையாடலில் நீர்பாசனத் திணைக்களப் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்குளங்களைப் புனரமைக்கும் பணி 'சிறு குள நீர்ப்பாசனம்" என்னும் தலைப்பின் கீழ் இடம்பெறவுள்ளது.http://www.tharavu.com/2010/09/5_21.html

1. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வசித்த மக்களில் ஆகக்குறைந்தது எழுபத்தைந்து சதவீதத்தி னர் விவசாயிகள் விவசாயத்தையே பிரதான ஜீவ னோபாயமாகக் கொண்டவர்கள்.

2. இயற்கை அன்னை யின் கொடையால் பல பெரிய குளங்கள் அங்கு நீர்ப் பாசனத்தின் பிரதம ஊற்றுக்கால்களாக விளங்குகின்றன.

3. பிரதான நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான விசுவமடுக்குளம் வெறிதாக வானம் பார்த்துக் கொண்டிருக்கிறது. 1975 ஆம் ஆண்டில் மட்டுமே விசுவமடுக்குளத்தின் நீர்மட்டம் அடித்தளத்துக்கு குறைந்திருந்தது என்பது உறுதிசெய்யப்பட்ட தகவல். அந்தக் காலத்தில் சிறுபோக பருவகாலத்தில் தோட் டக்காணிகளில் கூறிப்பிட்டு கூறுமளவுக்கு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஞாபகம்.

4. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கிளி நொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் சுமாரான மழையும் சில இடங்களில் பெரும் மழையும் பெய்தது. இத்தகைய ஒரு பின்னணியில், விசுவமடுக்குளம் இப்போதுள்ள அளவுக்கு வற்றியிருக்குமா என்ற சந்தேகம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் நிலவு கிறது.

வன்னிப் போரின் போது முல்லைத்தீவு கேந்திர நிலையமாக இருந்தது. அதன் பின்னரான பாதுகாப் புச் சார்பான செயற்பாடுகள் பலவும் வேறு தரப்பார் எவரும் கண்டுகொள்ளாத வகையில், பலபல காரி யங்கள் நடத்தப்பட்டதாக, கூறப்பட்டனவே தவிர, உறுதிசெய்யப்படவில்லை. அத்தகையவற்றில் ஒன்றாக விசுவமடுக்குளமும் வற்றுவதற்கு கரு மங்கள் நடந்திருக்குமோ என்று ஊகிக் கலாம்; அவ் வளவுதான்.

5. முல்லைத்தீவு மக்களை இயற்கை ஆசீர்வதிக் கட்டும்.

முல்லையில் குளங்கள் அடிமட்டத்துக்கு; தரிசு நிலங்கள் நெல்வயல்களாகுமா?

[ உதயன் ] - [ Sep 21, 2010 04:00 GMT ]

போரின் காரணமாக, வடக்கில் நீண்டகாலமாக நெற்செய்கை மேற்கொள்ளப்படாத தரிசு நிலங்க ளில் எதிர்வரும் பெரும்போகத்தில் மீள் சாகுபடி செய் வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி விவசாய அபிவிருத்தி நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே, அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

மீள்குடியேற்றப்பட்ட வன்னி மக்களின் பொருளாதார நிலையையும் பாதுகாப்ப யும் விருத்தி செய்வதற்குரிய திட்டங்களை வகுத் துச் செயற்படுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். அதனால் நாட்டின் ஏனைய பகுதிகளி லுள்ள மக்களுக்கு செய்யப்படும் வசதிகள் வடக்கு வாழ் மக்களுக்கும் வழங்கப்படுமென்று அமைச்சர் பஸில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வகையில், வடக்கு விவசாயிகளுக்கு 3,00,000 புசல் விதை நெல் யாழ்ப்பாணம், கிளி நொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட் டங்களில் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இச்சந்தர்ப்பத்தில் வடக்கில் நெல் உற்பத்தியி லும் சரி ஏனைய விவசாய உற்பத்திகள் பலவற்றி லும் சரி முன்னணி வகித்த வன்னி மாவட்டங்களின் தற்போதைய நிலையை நோக்குவது பொருத்தம்.

குறிப்பாக, மீள்குடியேற்றம் நடைபெற்று வரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வசித்த மக்களில் ஆகக்குறைந்தது எழுபத்தைந்து சதவீதத்தி னர் விவசாயிகள் விவசாயத்தையே பிரதான ஜீவ னோபாயமாகக் கொண்டவர்கள். இயற்கை அன்னை யின் கொடையால் பல பெரிய குளங்கள் அங்கு நீர்ப் பாசனத்தின் பிரதம ஊற்றுக்கால்களாக விளங்குகின் றன.

அதனால், மேற்குறிப்பிட்ட மாவட்டங்கள் இரண் டிலும் மக்கள் தமது கடும் முயற்சியாலும் உழைப் பாலும் வாழ்க்கையில் சராசரியாகவேனும் வசதியாக வாழ்ந்தவர்கள். அதற்கு அவர்களுக்கு இயற்கையும் குளங்களுமே பேராதாரங்களாக விளங்கின.

ஆனால் இப்போது, குறிப்பிட்ட இரண்டு மாவட் டங்களிலும் நெற்செய்கையின், முதற்கட்ட போகத் துக்கு முன்னரைப்போன்று தாராளமாக தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேக நிலை தோன்றியுள்ளது.

மிகக்குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய, பிரதான நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான விசுவமடுக்குளம் வெறிதாக வானம் பார்த்துக் கொண்டிருக்கிறது. 1975 ஆம் ஆண்டில் மட்டுமே விசுவமடுக்குளத்தின் நீர்மட்டம் அடித்தளத்துக்கு குறைந்திருந்தது என்பது உறுதிசெய்யப்பட்ட தகவல். அந்தக் காலத்தில் சிறுபோக பருவகாலத்தில் தோட் டக்காணிகளில் கூறிப்பிட்டு கூறுமளவுக்கு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஞாபகம்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கிளி நொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் சுமாரான மழையும் சில இடங்களில் பெரும் மழையும் பெய்தது. இத்தகைய ஒரு பின்னணியில், விசுவமடுக்குளம் இப்போதுள்ள அளவுக்கு வற்றியிருக்குமா என்ற சந்தேகம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் நிலவு கிறது.

இப்போது அந்தப் பகுதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய, பிரதான நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான விசுவமடுக்குளம் வெறிதாக வானம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இயற்கையாகவே விசுவமடுக்குளம் வற்றியிருக் கும் என்று தங்களால் நம்பமுடியவில்லை. அது வற்று வதற்கு செயற்கைச் செயல்கள் எதுவும் இடம்பெற் றிருக்குமோ என்று மற்றவர்கள் சந்தேகப்படும், ஊகிக்கும் அளவுக்கு முந்திய நிலைகுறித்த அவர் களின் தகவல்கள் ஐயமுற வைக்கின்றன.

வன்னிப் போரின் போது முல்லைத்தீவு கேந்திர நிலையமாக இருந்தது. அதன் பின்னரான பாதுகாப் புச் சார்பான செயற்பாடுகள் பலவும் வேறு தரப்பார் எவரும் கண்டுகொள்ளாத வகையில், பலபல காரி யங்கள் நடத்தப்பட்டதாக, கூறப்பட்டனவே தவிர, உறுதிசெய்யப்படவில்லை. அத்தகையவற்றில் ஒன்றாக விசுவமடுக்குளமும் வற்றுவதற்கு கரு மங்கள் நடந்திருக்குமோ என்று ஊகிக் கலாம்; அவ் வளவுதான்.

இத்தகைய ஒரு பின்புலத்தில் வன்னிப்பிர தேசத்தின் தரிசு நிலங்களை நெல்வயல்களாக மாற் றும் அரசின் திட்டம் அல்லது முயற்சி வெறும் வாய் வேதாந்தமாக இருக்குமா என்பதற்கு இயற்கைதான் பதில் சொல்லவேண்டும். நொந்து நொடிந்து வாழ்க் கையின் எல்லாத் துறைகளிலும் நூலாகிப் போயிருக் கும் முல்லைத்தீவு மக்களை இயற்கை ஆசீர்வதிக் கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.