Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி குடும்பத்தாரின் பெருந்தன்மை.

Featured Replies

நன்றி – விகடன் 22-09-2010 (சோவுடன் ஒரு சந்திப்பு…)

“தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பருவத்தில் இருக்கிறார் கருணாநிதி. இந்த ஆட்சியின் ப்ளஸ், மைனஸ்களைப் பட்டியல் இடுங்களேன்?”

“இது தனது குடும்பத்துக்கு என கலைஞரால் டெடிகேட் செய்யப்பட்ட ஐந்தாண்டு காலம். கலைஞரின் குடும்பத்தினர் மென்மேலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள். பல பதவிகளை அடைந்திருக்கிறார்கள். செல்வம் பெருகியிருக்கிறது. ஆக, ஐந்தாவது முறை முதலமைச்சர் பதவிக் காலம் என்பது, கலைஞரின் குடும்பத்துக்கு மிகச் சிறப்பான ஒன்றாகவே கடந்திருக்கிறது!”

“அப்போ இந்த ஆட்சியில் ப்ளஸ் பாயின்ட் என்று எதுவுமே இல்லையா?”

“என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? நான் சொன்னது ப்ளஸ் பாயின்ட் இல்லையா? ஒரு குடும்பம் செழிக்கிறது சார். அது எப்படி ப்ளஸ் இல்லைன்னு சொல்ல முடியும்?! மாபெரும் குடும்பம் அது. அதற்குப் பல கிளைகள். அவை அனைத்தும் செழிக்கின்றன. அதை எப்படி ப்ளஸ் இல்லைன்னு சொல்ல முடியும்? இதுக்கு மேல் என்ன ப்ளஸ், மைனஸ் அடுக்கி மார்க் போடுறது. போதும் சார்!”

22 – 9 – 2010 துக்ளக் கேள்வி பதில் பகுதியில் இருந்து

கே: ‘குடிக்கிற தண்ணீரில் ஆரம்பித்து, சினிமா தயாரிப்பு வரை கருணாநிதி குடும்பத்தாரின் சாம்ராஜ்யம் பெருகிக் கொண்டே வருகிறது’ — என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளது பற்றி ?

ப: அநியாயமாகப் பேசக் கூடாது. தெரு ஓர இட்லிக் கடைகள்; பீடா — பீடிக் கடைகள்; கட்டை வண்டியில் காய்கறி வியாபாரம் போன்றவற்றை இன்னமும் முதல்வரின் குடும்பம் விட்டு வைத்திருக்கிறது. அந்தப் பெருந்தன்மையை பாண்டியன் பாராட்ட வேண்டாமா ?

கருணாநிதியின் ஆட்சியில் அவரது குடும்பம் மட்டுமே செழித்துள்ளது என்பது 100 சதவீதம் உண்மையே அதுபோல, ஜெயலலிதாவின் பத்தாண்டு ஆட்சியில், “தோழி”யின் குடும்பம் மட்டுமே செழித்தது என்பதும் 101 சதவீதம் உண்மையே.

ஏழைகளின் குடும்பம் செழிக்கும் ஆட்சியைத் தரப்போவது யார்..?.

கருணாநிதியின் குடும்பத்தவரின் படங்கள்

http://www.thedipaar.com/news/news.php?id=18696

  • கருத்துக்கள உறவுகள்

கிளம்பிற்றுக் காண் குறுநரிகளின் கூட்டம்

தினமணியில் ஒரு தவ்ளூண்டு கார்ட்டூன் வந்ததுக்கே கருணாநிதி குய்யோ முறையோன்னு அலறி, கூப்பாடு போட்டு, என் பொண்டாட்டி என்ன மலடியான்னு கேட்டு, சினிமாக்காரங்களுக்கும் எனக்கும் இருக்கற ஒறவ யாராலயும் பிரிக்க முடியாதுன்னு பொலம்பனாரு

cartoon.jpg

இந்தியா டுடே வார இதழில், தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி வளைத்துக் கட்டி எழுதியும் கூட, இது வரை காதறுந்த ஊசியும் எழுதவில்லை. கருணாநிதியும் எழுதவில்லை.

இப்படி அமைதியாகவே இருந்தால் நமக்கெல்லாம் போர் அடிக்காதா ?

அதனால், இந்தியா டுடே வார இதழின் கட்டுரைகளுக்கு, கருணாநிதியின் சார்பாக சவுக்கே மறுப்பு எழுதுகிறது.

உடன்பிறப்பே,

karuna+family+tree.jpg

முதலைக் கூட்டம் போல வளர்ந்துள்ள எனது குடும்பத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் திண்டாடும் ஒரு சூழலில், மனம் வெதும்பி ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓய்வெடுக்க ஒதுங்கும் சூழலில், இப்படி ஒரு கடிதத்தை உனக்கு எழுதுவதற்கு காரணம் என்னவென்று நீ அறிய மாட்டாய் நான் அறிவேன்.

குறுக்கே நூல் அணிந்த ஒரு குறுக்குப் புத்திக் காரர்களின் கூட்டம், குடும்பத்திற்கு, கழக குடும்பத்திற்கு எதிராக கிளம்பியிருப்பதை நீ அறிந்திருப்பாயா இல்லையா என்பதை நான் அறியேன்.

அந்தக் குறுநரிக் கூட்டம் என்னவெல்லாம் எழுதி விட்டது. கு’பேர’ குடும்பமாம். என்ன ஒரு ஆணவம் ? ஒரு குசேலக் குடும்பத்தை குபேரக் குடும்பம் என்று சொல்ல என்ன துணிச்சல் ?

TM_CS_Karufamily_Sept8_revised_Page_1.jpg

TM_CS_Karufamily_Sept8_revised_Page_2.jpg

அண்ணாசாலை ஆரியக் கூட்டத்தின்‘ கொட்டத்தை சாந்துப் பொட்டை வைத்து அடக்கிய ஒரு சில நாட்களுக்குள் ‘ராதாகிருஷ்ணன் சாலை ராட்சசர்கள்‘ புதிதாக கிளம்பியிருக்கிறார்கள்.

திருக்குவளையிலிருந்து, திருட்டு ரயிலேறி, தகரப் பெட்டியோடு சென்னை வந்து, தீயசக்தியாக உருமாறி, ஏழை உழைப்பாளி மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னையா குபேரக் குடும்பம் என்கிறார்கள் ?

பெயரிலே ஆங்கிலம். உணர்விலே பார்ப்பனீயம். உள்ளத்திலே நஞ்சு. இதுதான் இந்தியா டுடே.

TM_CS_Karufamily_Sept8_revised_Page_3.jpg

TM_CS_Karufamily_Sept8_revised_Page_4.jpg

இந்தியா டுடே இதழை விட பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை அதிபர்களான கோயங்கா குடும்பத்தினர், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களை தமிழக அரசின் செய்தி ஏடுகளாக மாற்றி விட்டு, பல அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி சத்தமில்லாமல் வேறு தொழிலுக்கு போக வில்லையா ?

மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று என்னால் அன்போடு அழைக்கப் பட்ட இந்து நாளேடு, இன்று கருணாநிதியின் சொம்பு நாளேடாக மாறவில்லையா ?

ஒரே ஒரு விசாரணை கமிஷன் போட்டு, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டையும், பகவான் சிங்கையும், மண்டியிட வைக்க வில்லையா ?

அரசு விளம்பரங்களை அள்ளிக் கொடுத்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை கோபாலபுரம் டைம்ஸாக மாற்றவில்லையா ?

இன்று தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிக்கையாவது உண்மையை எழுத என்னை மீறி முடியமா ? அப்படி மீறி எழுதினால் கழக உடன்பிறப்பான நீ பொறுமை காப்பாயா ? ராதாகிருஷ்ணன் சாலையில், புறநானூற்றுப் புலிப்படை அணி வகுத்தால் என்ன ஆகும் ? ஆனால், அறிஞர் அண்ணா எனக்கு அறவழியைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

TM_CS_Karufamily_Sept8_revised_Page_5.jpg

தமிழுக்காகவும், திராவிட இனத்துக்காகவும் பாடுபட்டதைத் தவிர, என்ன குற்றத்தை செய்து விட்டான் இந்தக் கருணநிதி ? இந்தக் கருணாநிதி மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றுதானே, இவ்வாறு பொய்யையும், புரட்டையும், புனைசுருட்டையும், உண்மை என்று சில ஏடுகளிலே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ?

குபேரக் குடும்பம் என்று எழுதுகிறார்களே …… நாங்கள் மட்டுமா குபேரக் குடும்பம். வட இந்தியாவிலே, திருபாய் அம்பானி என்ற ஒருவர் இருந்தார். என்னைப் போலவே, பிற்பட்ட சமூகத்தில் பிறந்து, ஒரு சாதாரண பெட்ரோல் பங்க்கிலே வேலை பார்த்து, இன்று இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியுள்ளாரே …. அந்தக் குடும்பம் குபேரக் குடும்பமாக தெரியவில்லையா ?

TM_CS_Karufamily_Sept8_revised_Page_7.jpg

TM_CS_Karufamily_Sept8_revised_Page_6.jpg

அவர் மறைவுக்குப் பின், அவரது இரு மகன்களும் சண்டையிட்டுக் கொண்டு, அந்த நிறுவனத்தை இரண்டாகப் பிரித்து இன்று அவர்கள் இருவரும் தங்களுக்கென்று தனித் தனி சாம்ராஜ்யங்களை அமைத்துக் கொள்ள வில்லையா ?

அது போலத்தானே நமது கழகமும் ? திருபாய் அம்பானிக்கு ஒரு மனைவி இரு மகன்கள், ஒரு மகள். எனக்கு மூன்று மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களின் கணக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை. அதனால், மூன்று பேருக்காக ஒரு லட்சம் கோடிகளை சேர்க்கும் போது, ஒரு முன்னூறு பேருக்காக ஒரு மூன்று லட்சம் கோடிகளை சேர்த்தால் அது பொறுக்கவில்லையே இந்த விபீடணர் கூட்டத்திற்கு.

வட இந்தியாவிலே ஜம்ஷெட்ஜி டாடா என்று ஒருவர் இருந்தார். அவர் மும்பாயிலே காட்டன் மில்லைத் தொடங்கினார். அவருக்குப் பின் வந்த அவர் வாரிசுகளெல்லாம், வரிசையாக தொழிலை விரிவு படுத்தி, இன்று டாடா குழுமம் என்ற மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் குபேரக் குடும்பமா, அல்லது நான் குபேரக் குடும்பமா ?

இந்தியாவிலே முதன் முறையாக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஊழல், தியாகத் திருவிளக்கின் கணவர் அருமை நண்பர் ராஜீவ் செயல்படுத்திய போபர்ஸ் ஊழல். அந்த ஊழலின் மொத்த மதிப்பே 66 கோடி ரூபாய்தான்.

ஆனால், இந்தியாவே வியக்கும் அளவுக்கு, வாயில் விரல் வைக்கும் அளவுக்கு, எண்ணி மகிழும் அளவுக்கு, பூரிப்பால் இதயம் விம்மும் அளவுக்கு, தமிழ் கூறு நல்லுலகு பெருமை கொள்ளும் அளவுக்கு, ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை புரிந்திருப்பது ஒரு பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழன் என்பதால்தானே இந்த பொச்சரிப்பு ? வக்கரிப்பு ? மனக்கரிப்பு ? குவியும் வெறுப்பு ? என்னை அழிக்க வேண்டுமென்ற துடிப்பு ?

ஆனால், இது போன்ற தாக்குதல்களெல்லாம், கண்ணப்ப நாயினார் சிவபெருமானை கல்லால் வழிபட்டபோது, மலர்களாக மாறி அவருக்கு மரியாதை செய்தது போல எனக்கும் மரியாதை செய்கின்றன.

அய்யகோ…. இந்தியா டுடே வார இதழில் உண்மையை எழுதி விட்டார்களே…. ஊழலை அம்பலப்படுத்தி விட்டார்களே…. என்று உடனடியாக பதவி விலகி நத்தையைப் போல ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு நான் என்ன சூடு சொரணை உள்ளவனா ?

காண்டாமிருகத்தை விட தடித்த தோலுண்டு...

பதிலளிக்க எழுதுகோளுண்டு. .

கழக கண்மணிகளிடம் வீர வாளுண்டு..

குபேரக் குடும்பம் என்று என்னை அழைக்கிறார்களே, நானும் என் குடும்பத்தாரும் அப்படி என்ன பேராசைக்காரர்களா ? வாய்க்கு வாய் திராவிடம், திராவிடம் என்று அழைத்தாலும், தெலுங்கு பேசும் ஆந்திரம், மலையாளம் பேசும் கேரளம், கன்னடம் பேசும் கர்நாடக மாநிலங்களை அப்படியேவா விலைக்கு வாங்கி விட்டோம் ? தமிழகத்தையும் பாண்டிச்சேரியையும் அபகரித்து விட்டு திருப்தியோடு இருக்கவில்லை ?

பெங்களுருவில் இப்போதுதான் கால் பதித்திருக்கிறோம். கேரளாவுக்கு, குமுளி வழியாக இப்போதுதான் புறப்படத் தொடங்கியிருக்கிறோம். சந்திரபாபு நாயுடுவிடம் இப்போதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்குள்ளாக என்ன அவசரம் ?

பேராசைக் காரனைப் போல என்னை சித்தரித்திருக்கிறார்களே ? கொடுக்கும் மனமற்றவனா இந்தக் கருணாநிதி ?

இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கவில்லை ?

கேரளாவுக்கு முல்லைப் பெரியாறை வழங்க வில்லை ?

ஆந்திரத்துக்கு பாலாற்றை வழங்கவில்லை ?

கர்நாடகத்துக்கு காவிரியை வழங்கவில்லை ?

சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக எனது மானம் மரியாதையெல்லாம் வாரி வழங்கவில்லை ?

என்னைப் போய் பேராசைக்காரன் போல எழுதியிருக்கிறார்களே ?

எஜமான் படத்திலே தம்பி நெப்போலியன் ஒரு வசனம் பேசுவார். கல்யாண வீடு என்றால் நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். இழவு வீடு என்றால் நான்தான் பிணமாக இருக்க வேண்டும் என்று. அந்த வசனத்தை நான் எழுதவில்லையே தவிர, அந்த வசனத்தின் படிதானே நான் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறேன்.

karunanidhi-sept_6_Page_1.jpg

திருக்குவளையிலிருந்து வந்த ஒரு தமிழன் வந்தான். வென்றான் என்று மட்டும் இல்லாமல், மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் போலவோ, பில் கேட்ஸ் போலவோ, வாரன் பஃபெட் போலவோ முகேஷ் அம்பானி போலவோ, லட்சுமி மிட்டல் போலவோ, உலக பணக்காரர்களில் ஒருவன் இந்தக் கருணாநிதி. அவன் மட்டுமல்லாமல், அவன் குடும்பத்தினர் அனைவரையும் உலக பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி விட்டான் என்று வரலாற்றில் எழுதி விடப் போகிறார்களே என்று அஞ்சியல்லவா இன்று இந்தியா டுடே என்ற ஏடு எழுதி கிழித்திருக்கிறது ?

இது போன்று இந்தியா டுடே என்ற நாளேடு அன்றே எழுதும் என்று அறிந்துதான் அண்ணா, அடைந்தால் திராவிட நாடு என்று சொன்னார். நிரந்தரமாக பாம்புக்கும் பல்லிக்கும் நடுவே வைத்து விடுவார்களோ, என்று எண்ணி இன்பத் திராவிடத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் விளைவுதானே இது போன்ற இந்தியா டுடே என்ற ஏடுகள் ஆட்டம் போடுகின்றன ?

இன்பத் திராவிடம் அமைந்திருந்தால் இந்தியா டுடே ஏடு இருந்திருக்குமா ? திராவிடா டுடே என்றுதானே ஒரு ஏடு இருந்திருக்கும். அதையும் என்னுடைய ரைசிங் சன் யாராவது ஒருவர் தானே நடத்திக் கொண்டிருப்பார்கள் ?

ஆனந்தத் தாண்டவம் போடும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிக்க வேண்டாமா ?

கொட்டத்தை அடக்க வேண்டாமா ?

என்று எண்ணி எனது அன்பு உடன்பிறப்புகள் ஆர்ப்பரிப்பது எனக்கு தெரிகிறது. ஒரு புறம் பழக்கடை அன்பழகனும், மறுபுறம் விஎஸ் பாபுவும், மற்றொரு புரம் உசேனும், தெற்கே ஸ்டிக்கர் பொட்டும் கிளம்புகிறது என்றால், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அன்பு இளவல் ஐபிஎஸ் அதிகாரி என்பதையும் மறந்து, நோன்பை துறந்து, கழக உடன்பிறப்பாக மாறி அந்த அலுவலகத்தை துவம்சம் செய்ய புலியென புறப்பட்டு வருகிறார்.

இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறான் இந்தக் கருணாநிதி ? எப்படி அடக்கப் போகிறான் இந்த புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை ?

இந்த நேரத்திலேதான் காதில் தேனினும் இனிமையாக கழகத்தின் நிரந்தர இளைஞர் அணித் தலைவரும், துணைப் பொதுச் செயலாளர்களிலே ஒருவரான மு.க.ஸ்டாலினைப் பற்றி சிறப்பு மலர் ஒன்று அந்த ஏடு கொண்டு வரப் போவதாக செய்தி அறிந்தேன்.

வன்முறையிலே என்றுமே நம்பிக்கை இல்லாதவன் இந்தக் கருணாநிதி. அறிஞர் அண்ணா என்னை கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டோடுதான் வளர்த்திருக்கிறார். அதனால், இந்தப் புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை இப்போதைக்கு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது நானும் எனது குடும்பமாகவும் இருக்க வேண்டும் என்பது தானே வள்ளுவன் வாக்கு ?

ஊரையடித்து உலையில் போட்டு; குடும்பத்தோடு

நிம்ம தியாக வாழ்

என்றுதானே அய்யன் வள்ளுவன் எனக்கு கற்றுத் தந்திருக்கிறான் ? இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே ?.

அன்புடன்

மு.க

நன்றி இந்தியா டுடே வார இதழ்

http://savukku.blogspot.com/2010/09/blog-post.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.