Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலரவிருக்கும் தமிழீழமானது உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆதரவாக போராடும் – ஜெயசங்கர் முருகையா(நா.க.தமிழீழ அரசு)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலரவிருக்கும் தமிழீழமானது உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆதரவாக போராடும் – ஜெயசங்கர் முருகையா(நா.க.தமிழீழ அரசு)

மலரவிருக்கும் தமிழீழமானது சர்வதேச அளவில் உலக வறுமைக்கும், கொடுங்கோலர்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும், பயங்கரவாதத்திற்க்கும் எதிராகவும்; உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆதரவாகவும் உலக நாடுகளு-டன் தோளோடுதோள் நின்று பாடுபடும் என்று நாடு கடந்த தமிழீழ அரசின் ஜெயசங்கர் முருகையா தெரிவித்துள்ளார்.

அன்பான ஈழத்தமிழ் உறவுகள் அனைவருக்கும்,

வணக்கம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களுள் ஒரு-வனாகிய ஜெயசங்கர் முருகையா (பிரித்தானியா) ஆகிய நான், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பிற்காக, கீழ்க்காணும் எனது கருத்துக்களை முன்வைத்துள்ளேன். இக்கருத்துக்கள் யாவும் எனது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி, இவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான கருத்துக்களாக இன்னமும் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பதனையும் இத்தால் உங்கள் அனைவருக்கும் அறியத்தர நான் கடைமைப் பட்டுள்ளேன்.

இன்று, புலத்தில் எமது உறவுகளும், முன்னாள் போராளிகளும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பலதரப்பட்ட துன்பங்களை மட்டும் அன்றி; சில வரலாற்று உண்மைகளையும், வரலாற்றிலே முன்னொருபோதும் காணப்படாத எங்கள் மக்களின் இன்றைய மிகவும் கவலைக்கிடமான உடல்ரீதியானதும், பொருளாதாரரீதியிலுமான மிகவும் பலவீனப்பட்-டுப் போயுள்ள நிலைமையையும் கருத்தில் கொண்டு எனது கருத்துக்-கள் அமைந்துள்ளன. மேலும், இன்றைய ஸ்ரீ லங்காவின் உள்நாட்டு மற்றும் பூகோள, சர்வதேச அரசியல் சூழ்நிலைகளையும், சர்வதேச அரசியல் அறிஞர்களினதும் மற்றும் சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆழ்ந்த சிந்தனைகளையும், நாளைய உலக மனித சமுதாயத்தின் நன்மையை-யும் கருத்தில் கொண்டும் எனது இக்கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.

இவை தவிர, இன்றைய உலகில், பல உலகத் தலைவர்களும் மற்றும் மொத்த உலக மனித சமுதாயமும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கி-ன்ற பல்வேறு பட்ட பல உலகப் பிரச்சனைகளுக்கு மத்தியில், ஒரு மிகச் சிறிய தேசிய இனமாகிய நாம், எங்களது அடிப்படை மனித உரிமை-களை, ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை உட்பட, எவ்வாறு, சர்வதேச சமூகத்தினரின் உதவியுடன், வென்றெடுப்பது என்பது பற்றிய எனது ஆழ்ந்த புரிந்துணர்வின் அடிப்படையில் இக்கருத்துக்கள் என்னால் முன் வைக்கப்பட்டுள்ளன என்பதனையும் நான் உங்கள் அனைவருக்கும் இத்தால் உண்மையுடன் தெரிவித்துக் கொள்கின்-றேன். நன்றி.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டியன:-

இலங்கைத் தீவினில் வாழுகின்ற அனைத்து இனமக்களும் தீவின் பூர்வீகக்குடிகளின் வழிவந்தவர்கள் என்பதனையும், இலங்கைத்தீவானது தீவினில் வாழும் அனைத்து இனமக்களுக்கும் சொந்தமானது என்பதனையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஏகமனதாக ஏற்றுக்கொள்கின்றது. இலங்கையின் பெரும்பான்மை இனமக்களான சிங்களவர்கள் தீவின் மத்திய, தெற்கு, மேற்குப் பிரதேசங்களை தமது பாரம்பரிய தாயகமாக கொண்டிருக்கும் அதேசமயம், தீவின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை சிறுபான்மையினராகிய தமிழ் இனமக்கள் தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பியர்களின் வருகையின் முன்னர், தீவின் இவ்விரு இனமக்களும் தத்தமது பிரதேசங்களில் தத்தமது தனித்துவமான, மொழி, மத, பண்பாட்டு, கலை, கலாச்சாரங்களைக் கொண்ட நாகரீகங்களை வளர்த்தெடுத்து, மிகவும் சிறப்புடன் வாழ்ந்திருந்தனர். இலங்கைத்தீவினை இறுதியாக காலனித்துவப் படுத்திய ஐரோப்பியர்களான பிரித்தானியர்கள் தீவின் தெற்கில் சிங்கள மன்னர்களையும், வடக்கில் தமிழ் மன்னர்களையும் வென்றபின்னர், 1833 இல் முதன் முதலாக முழுத்தீவினையும் தமது ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.

1948 இல் பிரித்தானியர்கள் இலங்கைத்தீவினை விட்டுச்செல்ல முன்னராக, “Westminister” மாதிரியான ஜனநாயக ஆட்சி முறையினூடாக, இலங்கையின் ஆட்சிப் பொறுப்பினை பெரும்பான்மையினரான சிங்கள இனமக்களிடம் கையளித்துச் சென்றிருந்தனர். தமிழ் அரசியல் தலைவர்கள் “ஒரு ஒன்றுபட்ட இலங்கையினுள் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு,கிழக்கில் தமிழர்களுக்கு சமஷ்டி முறையிலான சுயாட்சி உரிமையை” பிரித்தானியர்களிடம் கோரிஇருந்தனர். ஆனாலும், பிரித்தானியர்கள் தமிழ் தலைவர்களின் கோரிக்கைகளை நிராகரித்திருந்தனர். இவ்வாறாக, பல தசாப்தங்களாக தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழ் தமது நாகரீகத்தினைக் கட்டிஎழுப்பி வாழ்ந்திருந்த இலங்கைத்தீவின் தமிழ் இனமக்கள், பிரித்தானியர்களினால் தமது தனியாட்சியினை இழந்தது மட்டுமல்லாமல், ஒரு ஒன்று பட்ட இலங்கைக்குள்ளான தமது சுயாட்சிக்கான அரசியல் அபிலாசைகளையும் அவர்களினால் நிராகரிக்கப்பட்ட நிலைமையில், பிரித்தானியர்களினால் தீவின் பெரும்பான்மையினரான சிங்கள இனமக்களிடம் அடிமைப்படுத்தப்பட்டுப் போயினர்.

பிரித்தானியரிடம் இருந்து இலங்கைத்தீவானது சுதந்திரம் அடைந்த பின்னர், பெரும்பான்மை சிங்கள இனத்தினைச் சேர்ந்த அரசியல் தலைவர்களினால், இலங்கைத்தீவு முழுவதும் ”சிங்கள-புத்த தேசியத்தினைக்” கட்டியெழுப்பும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் பட்டன. தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு,கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களின் ஊடாக, தீவின் சிறுபான்மையின மக்கள், குறிப்பாக தமிழர்கள் சிறிது சிறிதாக சிங்களத்தினுள் “உள்வாங்கப்படும்” முயற்சிகள் சிங்கள அரசாங்கங்களினால் ஊக்குவிக்கப்பட்டன. (மலையக) தமிழர்களின் குடியுரிமையினைப் பறித்தல், தமிழ் மொழியினை நீக்கி, சிங்கள மொழியினை மட்டும் அரசமொழி ஆக்கல், சிங்களவர்களின் புத்தமதத்திற்கு அரச விசேட அந்தஸ்து கொடுத்து அதனை ஊக்குவித்தல், மற்றும் கல்வித் தரப்படுத்தல் மூலமாக சிங்கள மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் போன்றவற்றின் ஊடாக தமிழர்களை புறக்கணிப்பதன் மூலமாக, தமிழர்களின் வாழ்வாதாரங்களை சிறிது சிறிதாகப் பறித்தெடுத்து , தமிழர்களின் மொழி, மத, பண்பாட்டு, கலை, கலாச்சாரங்களை அடியோடு அழித்தொழித்து, இறுதியில் தமிழர்களை முழுச் “சிங்களவர்கள்” ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில்தான், தமிழ் இனமக்கள் சிங்கள இனவாத அரசாங்கங்-களின் கொள்கைகளை எதிர்த்து, முதன் முதலாக அகிம்சை முறை-யிலான போராட்டங்களை அவர்களுக்கு எதிராக முன்னெடுத்திருந்த-னர். தமிழினத்தினை இனஅழிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள இனவாத அரசியல் தலைவர்-களிடம், “ஒரு ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர் பிரதேசங்களான வடக்கு,கிழக்கில் சமஷ்டி முறையிலான சுயாட்சியைக்” கோரி நின்றனர். தமிழ் தலைவர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்த சிங்களத் தலைவர்கள், தமிழர்களின் அமைதி வழிப் போராட்டங்களை தமது ஆயுதப் படைகளைக் கொண்டு அடக்கி, ஒடுக்க முற்ப்பட்டனர். பல தமிழ் இளைஞர்கள் சிங்கள ஆயுதப்படையினரால் கொல்லப்பட்டனர், இன்னும் பலர் காணாமல் போயினர். ஒரு கால்-நுற்றாண்டு கால தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்கள் பயனளிக்காத தருணத்தில்தான், தமிழ் இளைஞர்கள், வேறு வழியின்றி, இறுதியாக, தமிழினத்தை அதன் அழிவிலிருந்து காப்பாற்றுவதற்-காகவும், தமது மக்களின் அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், சிங்கள இனவாத அரசாங்கங்களை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் இறங்கினர். மீண்டும் ஒரு கால்-நுற்றாண்டுகாலமாக நடைபெற்ற இந்த உள்நாட்டு யுத்தத்தின் போது, இரு தரப்பினராலும் பல வகையான மனித உரிமை மீறல்கள் நடந்தேறின. இறுதியாக, கடந்த வருடம் நடைபெற்ற போரின்போது, தமிழ் இனமக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்த தமிழர்களின் ஆயுதக்குழுவான தமிழீழ விடுதலைப் புலிகள், துரதிஷ்டவசமாக, உலக வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போட்டிகளுக்கு மத்தியில் சிக்குண்டு, இந்நாடுகளின் உதவிகளைக் கொண்டு, ஸ்ரீ லங்காவின் ஆயுதப்படைகளினால் சிறிதும் மனிதாபிமானமற்றதும், சர்வதேச போர் விதிமுறைகளை மீறியதுமான, ஒரு கடும் போரின் மூலம் அநீதியான முறையில், தோற்கடிக்கப் பட்டார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர், சர்வதேச சமூகத்தினரால் ஸ்ரீ லங்காவின் அரசதலைவர்களுக்கு, “அதிகாரப்பகிர்வு மூலம் தமிழ் இனமக்களுக்கான ஒரு நியாயமான அரசியல் தீர்வினை” வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை முற்றுமுழுதாக உதாசீனப்படுத்திய ஸ்ரீ லங்காவின் சிங்கள இனவாத அரசாங்கமானது மீண்டும், முன்னெப்போதையும் விட, மிக அதி தீவிரமாக, தமிழ் இன,மொழி,மத,பண்பாடு,கலை,கலாச்சார அழிப்பில் தன்னை ஈடு படுத்தியுள்ளது. ஸ்ரீ லங்காவின் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் போக்கானது, அவர்கள் அங்கு வாழும் சிறுபான்மை இனத்தவர்களை, குறிப்பாக தமிழர்களை, எதிர்ப்பவர்களை அழித்தும், மற்றவர்களை சிங்களத்தினுள் உள்வாங்கியும் ஒரு நீண்ட காலப்போக்கில் சிங்களமயமாக்கலின் ஊடாக ஒரு “சிங்கள-புத்த தேசியத்தை” முழு இலங்கைத்தீவிலும் கட்டியெழுப்புவதில் அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார்கள் என்பதனை மிகத்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இப்போரின் முடிவினில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஸ்ரீ லங்காவின் இனவாத அரசின் ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதி ஆக்கப்பட்டுள்ளனர். இன்னும்பலர் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்-கானோர் அகதிகளாக்கப்பட்டு, தமது வாழ்வாதாரங்களை இழந்து அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இன்றும் கூட, ஆயிரக்கணக்கான தமிழர்களும், முன்னாள் போராளிகளும் சிங்களத்தின் சிறைக்கூடங்களில் சித்திரவதைப்பட்டும், இன்னும் பல கொடுமை-களுக்கு ஆளாகியும் வருகின்றனர்.

இந்தப் பின்னனியில்தாம், புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களாகிய நாங்கள், புலத்தில் வலுவிழந்து, நொந்து, செயலற்று, சொந்தங்கள் சொத்துபத்துக்கள் அனைத்தையும் இழந்து, நம்பிக்கை அற்று, அடிமைப் பட்டு, இனஅழிப்பின் விளிம்பினில் நின்று கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் “குரலாக” நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை சர்வதேச அளவினில் உருவாக்கி இருக்கின்றோம். உண்மை – நேர்மை – அகிம்சை போன்ற சத்திய நெறிகளை தனது தார்மீகக் கோட்பாடுகளாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தோற்றம் பெற்றுள்ளது. மற்றும் ஜனநாயக முறைமைகள், தனி மனித உரிமைகள், வெளிப்பாட்டுத்தன்மை போன்றவை, நாடு கடந்த அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாக விளங்குகின்றன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது முழுக்க முழுக்க புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களினால், புலத்தில் வாழும் ஈழத்தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள “ஒரு மக்கள் இயக்கம்” ஆகும். புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களினால் சுயாதீனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கம் பெற்றுள்ள ஒரு “மக்களின் அரசாங்கமாக” இது விளங்குகின்றது. இதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தனித்தன்மையாகவும் விளங்குகின்றது. சிங்களப் பேரினவாத அரசின் தமிழினப்படுகொலைக்கும், தமிழினஅழிப்பிற்கும், தமிழருக்கெதிரான போர்க்குற்றங்களுக்கும் காரணமானவர்களை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதன் மூலமாக, ஈழத்தமிழினத்தினை சிங்களப் பேரினவாதத்தின் இன, மொழி, மத, பண்பாடு, கலை, கலாச்சார அழிவுகளிலிருந்து காப்பாற்றுவதும், மற்றும் ஈழத்தமிழினத்தின் அடிப்படை மனித உரிமையான சுயநிர்ணய உரிமையினை, தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு-கிழக்கில், சர்வதேச சமூகத்தினரின் அங்கீகாரத்துடன் வென்றெடுப்பதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதான குறிக்கோள்கள் ஆகும்.

ஈழத்தமிழர்களாகிய நாம் அனைவரும் எமக்குள் காணப்படும் கருத்து வேறுபாடுகளையும், மற்றும் எமக்குள் நடந்து முடிந்த கடந்த கால கசப்பான அனுபவங்களையும் மறந்து, ஒருவரை ஒருவர் மன்னித்து, நாம் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்ட ”ஒரு தமிழ் தேசியமாக” நின்று எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தருணம் இது. கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளுக்காக, எங்களது மலையக, இஸ்லாமிய மற்றும் தாழ்த்தப்பட்ட தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவரிடமும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது எமது மக்களின் சார்பில், நேர்மையுடனும் பெருமையுடனும் திறந்த மனத்துடன் இவர்களின் மன்னிப்பைக் கோருகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுத்துச் செல்லப்படும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு, நாங்கள் உங்கள் அனைவரையும் நோக்கி எங்கள் நேசக்கரங்களை அன்புடனும், திறந்த மனத்துடனும் நீட்டுகின்றோம். மேலும், ஈழத்தமிழ் மக்களு-க்கு பேரினவாத ஸ்ரீ லங்காவின் அரசாங்கங்களினால் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன என்பதனையும், தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளையும், மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்ளும் சிங்கள முற்போக்கு அரசியல் தலைவர்களுடனும், சிங்கள பொதுமக்களு-டனும் நட்புறவையும், சகோதரத்துவத்தையும் வளர்த்தெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது நேர்மையுடன் பாடுபடும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைகளின் பின்னனியில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது சர்வதேச சமூகத்தினரிடம் ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கு-மாறு வேண்டி நிற்கின்றது:-

1. இலங்கையில் வாழும் தமிழர்கள் தனித்தன்மையான இன, மொழி, மத, பண்பாட்டு, கலை, கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான ஒரு தேசிய இனம்.

2. இலங்கையின் வடக்கு-கிழக்கு பிரதேசங்கள் தமிழர்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய தாயகம்.

3. இலங்கைத்தீவினை கைப்பற்றும் போது, தமிழர்களின் தனியாட்சி-யினை அவர்களிடமிருந்து பறித்தெடுத்திருந்த பிரித்தானியர், தீவினை விட்டுச் செல்லும் போது, தமிழ் அரசியல் தலைவர்களின் ”தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு-கிழக்கில் தமிழருக்கான சமஷ்டி முறையிலான சுயாட்சிக்கான” குறைந்த பட்சக்கோரிக்கைகளைக் கூட நிராகரித்திருந்தனர்.

4. சிங்கள பேரினவாத அரசாங்கங்களின் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து தமிழர்களின் ஒரு கால்-நுற்றாண்டுக்கும் மேலான அகிம்சை முறையிலான அமைவழிப் போராட்டங்களும், தமிழ் தலைவர்களின் ஒரு “ஒன்று பட்ட இலங்கைக்குள்ளான, தமிழர்களின் தாயகமான வடக்கு-கிழக்கில், தமிழர்களுக்கான சுயாட்சி உரிமைக்கான” கோரிக்கைகளும், சிங்களப் பேரினவாத அரசாங்கங்களினால் அரச ஆயுதப் படைகளின் உதவியுடன், பலாத்காரமாக அடக்கி ஒடுக்கப்பட்டன.

5. கடந்த அரை-நுற்றாண்டுக்கும் மேலாக, தமிழர்களின் நீதியான கோரிக்கைகள் ஸ்ரீ லங்கா இனவாத அரசாங்கங்களினால் மறுக்கப்பட்டதுடன், இலங்கையில் தமிழர்கள், நீண்ட காலமாக, ஸ்ரீ லங்காவின் பேரினவாத அரசாங்கங்களினால் இனப்படுகொலைக்கும், இனஅழிப்பிற்கும், இனச்சுத்திகரிப்பிற்க்கும், போர்குற்றங்களுக்கும், மற்றும் கொடுமையான அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கும் தொடர்ந்தும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமுகம் அங்கீக-ரிக்கும் பட்சத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது சர்வதேச சமூகத்தினருக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்க-ளில் உறுதி மொழிகளை வழங்குகின்றது:-

1. மலரவிருக்கும் தமிழீழமானது ஜனநாயக முறைமைகளைத் தழுவியதும், பல்வேறு பட்ட மக்கள் குழுக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் வண்ணம் பல அரசியல் கட்சிகளை உள்ளடக்கியதுமான ஒரு மக்கள் ஆட்சியைக் கொண்டிருக்கும்.

2. தமிழீழத்தில், சட்டத்தின் முன் பல்தரப்பட்ட அனைத்து மக்களும் சமமாகக் கருதப்பட்டு நடத்தப் படுவார்கள்.

3. தமிழீழம் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இருக்கும்.

4. சர்வதேச சமூகத்தினரால் ஏற்று, அங்கீகரிக்கப் பட்டுள்ள அனைத்து தனி மனித உரிமைகளும், தமிழீழத்தின் அரச சாசனத்தில் உறுதி செய்யப்படுவதோடு, அவை நடை முறைப்படுத்தப்படும்.

5. தமிழீழத்தில் வறுமையின் கொடுமைகள் அறவே இருக்காது. ஜாதி-மத, ஆண்-பெண், மற்றும் வர்க்க வேறுபாடுகள் இருக்காது. அது ஒரு சமதர்மம் உள்ள நாடாக இருக்கும். தமிழீழத்தின் வளங்கள் அனைத்தும் தமிழீழ மக்கள் அனைவருக்கும் நீதியான முறையில் பங்கிட்டுக் கொடுக்கப்படும். ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கான சம உரிமைகள் உறுதி செய்யப்படும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமைகள் உறுதி செய்யப்படும். தகுந்த நஷ்டஈடுகள் வழங்கப்படுவதன் மூலம், இவர்களின் நிலைமைகள் சமுதாயத்தில் மற்றவருக்கு ஈடாக உயர்த்தப்படும்.

6. தமிழீழத்தின் சிறுபான்மையினரின் உரிமைகள் யாவும், மனித உரிமை சட்டங்களின் ஊடாக, தமிழீழ அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்படும். இவர்கள் விரும்பும் பட்சத்தில், மக்கள் வாக்கெடுப்புகள் நடாத்தப்பட்டு இவர்களின் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு ஏற்ப, தமிழீழத்தின் இறைமைக்கு உட்பட்டு, இவர்களுக்கு சுயாட்சி உரிமை உறுதி செய்யப்படும். எதிர்காலத்தில், துரதிஷ்டவசமாக, இவர்கள் பெரும்பான்மையினரின் இனப்படுகொலைக்கும், இனஅழிப்பிற்கும் மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கும் உட்படுத்தப் படுவார்களேயானால், இச் சூழ்நிலையில் மட்டும் இவர்களுக்கு பிரிந்து சென்று தனியாட்சி செய்து கொள்ளும் உரிமை தமிழீழ அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்படும்.

7. மலரவிருக்கும் தமிழீழமானது சர்வதேச அளவில் உலக வறுமைக்கும், கொடுங்கோலர்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும், பயங்கரவாதத்திற்க்கும் எதிராகவும்; அதேசமயம் உலக அமைதிக்கும், உலக சமாதானத்திற்கும், உலக மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்க்காகவும் மற்றும் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆதரவாகவும் உலக நாடுகளு-டன் தோளோடுதோள் நின்று பாடுபடும்.

தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஈழத்தமிழினத்தின் அடிப்படை மனித உரிமைகளுக்கான, நீதிக்கான, சத்தியத்திற்க்-கான ஒரு போராட்டம்:-

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை நாம் சர்வதேச சமூகத்திடம், தமிழினத்தின் உயிர்வாழ்தலுக்கான ஒரு அடிப்படை மனித உரிமையாகவோ அல்லது, தமிழினத்தின் மொழி, மத, பண்பாட்டு, கலை, கலாச்சாரங்களுக்கான ஒரு ஜனநாயக உரிமையாகவோ மட்டும் அல்லாமல்; எமது ஈழத்தமிழினம் கடந்த அரை-நுற்றாண்டுக்கும் மேலாக ஸ்ரீ லங்கா பேரினவாத அரசாங்கங்களின் இனப்படுகொலைக்கும், இனஅழிப்பிற்கும், இனசுத்திகரிப்பிற்கும், போர்குற்றங்களுக்கும், கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ள ஒரு சிறுபான்மை தேசிய இனம் என்ற வகையினில், இவற்றை ஈடு செய்யும் உரிமையாகவும் வேண்டி நிற்கின்றோம். எமக்கு நீதி கிடைக்கும் வரையினில், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை சர்வதேச சமுகம் அங்கீகரிக்கும் வரையிலும், உலகெங்கினும் எங்களது அகிம்சை முறையிலான, அமைதிவழி, அறப்போராட்டங்கள் ஓயாது என்று நாம் உறுதியுடன் கூறிக்கொள்கின்றோம்.

கடந்த அரை-நுற்றாண்டுக்கு மேற்ப்பட்ட காலத்தில், ஸ்ரீ லங்காவின் பேரினவாத சிங்கள அரசாங்கங்களிடம் இருந்து ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் கற்றுக்கொண்டவை யாதெனில்; இலங்கையில் எமது ஈழத்தமிழினம் ஸ்ரீ லங்கா பேரினவாத அரசாங்கங்களின் இனப்படுகொலையிலிருந்தும், இனஅழிப்பிலிருந்தும், இனச்சுத்திகரிப்பிலிருந்தும், கொடூரமான சித்திரவதைகளிலிருந்தும் காக்கப்பட வேண்டுமானால்; சர்வதேச சமூகத்தினராலும், சர்வதேச சட்டங்களினாலும் உறுதி செய்யப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் உயிர்வாழ்தலுக்கானஅடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால்; அதே சர்வதேச சட்டங்களினால் உறுதி செய்யப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையானது, சர்வதேச சமூகத்தினரால் தமிழர்களுக்கு ஈடு செய்யும் உரிமையாக, அங்கீகரிக்கப் படுவது மட்டுமல்லாமல், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சர்வதேச சமூகத்தினர் செயல் வடிவமும் கொடுத்துதவ வேண்டும். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு-கிழக்கில் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக, சர்வதேச சமூகமானது உலகெங்கினும் உள்ள கொடுங்கோலர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்ப வேண்டும். சர்வதேச சமுகத்தின் இச் செயலானது, இனிவரும் காலங்களில் உலகின் சிறுபான்மை இனமக்களை இனப்படுகொலைகளிலிருந்தும், கொடூரமான மனித உரிமை மீறல்களிலிருந்தும் காப்பாற்றுவது மட்டும் அன்றி, பல எதிர்கால உள்நாட்டுப் போர்களை தவிர்ப்பதன் மூலமாக பல அப்பாவி மனித உயிர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றவும் உதவும். இவ்வாறாக, இலங்கையில் சர்வதேச சமுகத்தின் அங்கீகாரத்துடன் உறுதி செய்யப்படும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையானது, எதிர்காலத்தில் உலக சமாதானத்திற்கும், உலக அமைதிக்கும் கூட வழிவகுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நன்றி.

அன்புடன்,

ஜெயசங்கர் முருகையா.

jeya_shanker@hotmail.com

http://meenakam.com/2010/09/25/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.