Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

URGENT: Send War crime Photo's & Video's to Justice Vikramajit Sen

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் மீதான தடையால் இலங்கைத் தமிழர்களுக்கு கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாதிட்டார்.

மேலும், புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில், தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மிக விரிவான விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். அதில், 'குற்றம் சாட்டுகிறேன்' என்ற அவரது ஆங்கில நூலையும் இணைப்பாக சேர்த்து இருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு நேற்று நீதிபதி விக்ரம்ஜித்சென் தலைமையிலான தீர்ப்பாயம் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் வக்கீல் ஏ.எஸ்.சந்திர், தமிழக அரசு சார்பில் வக்கீல் தனஞ்சயன் மற்றும் மனுதாரர் சார்பில் வைகோ ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

வைகோ தனது வாதத்தின்போது எடுத்துரைத்தது:

விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்து இருப்பதால், அவர்களது கொள்கையை ஆதரித்துப் பேசினால், அரசாங்கம் வழக்குப்போடுகிறது. இப்படிப் பேசியதற்காக, என்மீது இரண்டு தேசத்துரோக வழக்குகளை அரசு போட்டு இருக்கிறது. அந்த வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிப்பதற்கு மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை.

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காகவும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காகவும் சேர்த்து தனி தமிழ் ஈழ நாடு கோருவதால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. தனி ஈழம் என்பது இலங்கைத் தீவில் உள்ள வடக்கு, கிழக்குப் பகுதி. அது அவர்களின் தாயகம்.

வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அவர்கள் அரசாண்ட பூமி. தமிழகத்தின் ஒரு அங்குல இடத்தைக்கூட அவர்கள் தனி ஈழத்தோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. இதற்கு மத்திய அரசு ஆதாரத்தை காட்ட முடியுமா? புலிகள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த மத்திய அரசு செய்யும் திட்டமிட்ட பிரசாரமாகும்.

நான் இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்ல. நாட்டுப்பற்றில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தனித்தமிழ் ஈழ நாட்டை ஆதரிக்கிறோம். அதை அமைப்பதுதான் எங்களின் குறிக்கோள்.

இனப்படுகொலையால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி, தமிழ்நாட்டுக்கு வந்தால், அவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி, சிறை முகாமுக்கு அனுப்புகிறார்கள். அல்லது, இலங்கைக்கே திருப்பி அனுப்புகிறார்கள்.

புலிகளின் மீதான தடையால், ஈழத்தமிழர்களுக்கு இப்படிப்பட்ட கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது. இந்தக் காரணத்துக்காகவே, தடையை நீட்டிக்கக் கூடாது என்கிறேன்.

உலகம் முழுவதும் இணையதளத்தில் புலிகளுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளார்கள். மனித உரிமைகளைக் காக்க உலகில் எழுகின்ற குரல் அது. தமிழர்களுக்கு துன்பம் விளைவிப்பதற்காகவே புலிகள் மீதான தடையை அரசு பயன்படுத்துகிறது. எனவே, புலிகள் மீதான தடையை நீட்டிக்க அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு வைகோ வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து, 'உங்கள் மனுவின் மீதான ஆணை பின்னர் பிறப்பிக்கப்படும்' என்று கூறி, நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

அதன்பின், இந்த வழக்கின் அடுத்த விசாரணை, அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையிலும், 20 ஆம் தேதி, ஊட்டியிலும் நடைபெறும் என்று நீதிமன்றப் பதிவாளர் அறிவித்தார்.

ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், இந்த விசாரணையில், வைகோவுடன் கலந்து கொண்டார்.

http://www.vikatan.com/news/news.asp?artid=4985

http://www.hindu.com/2010/09/25/stories/2010092563190900.htm

Download Photo's from foll. Links

Srilanka: If this isn't GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?

http://www.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is

Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People

http://salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php

=====

Send War crime & Genocide Photo's & Video's to "Justice Vikramajit Sen"

Also Say how Indian Government, Media & Intelligence hide this issue in india

Constitutes the One-Man Tribunal set up to go into the ban on the Liberation Tigers of Tamil Eelam (LTTE)

JUSTICE VIKRAMAJIT SEN

HIGH COURT OF DELHI

Tel: 011-23382628 (o)

E-mail: vikramajit_sen@rediffmail.com, delhihighcourt@nic.in

=====

Muthamizh

Chennai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.